* உயிரைப் பறிக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது திரிணாமுல்

கொல்கத்தா, பிப். 14-

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி நடத்தி வரும் வன் முறை அரசியலுக்கு முடிவு கட்டு வோம் என்றும், உழைக்கும் மக்க ளின் வாழ்வை பாதுகாக்க இடது முன்னணியை மீண்டும் ஆட்சி யில் அமர்த்துவோம் என்றும் முத லமைச்சர் புத்ததேவ்பட்டாச் சார்யா அறைகூவல் விடுத்தார்.

 

கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இடது முன்னணியின் பிரம் மாண்ட பேரணி - பொதுக்கூட் டம் பிப்ரவரி 13 ஞாயிறன்று நடை பெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சார்யா, மேற்குவங் கத்தில் திரிணாமுல் கட்சியும், மாவோயிஸ்ட்டுகளும் கூட்டு வைத்துக் கொண்டு நடத்தி வரும் கொடிய வன்முறைகளுக்கு, மத்தி யில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆதரவு அளித்து வருவதை கடுமையாக சாடினார். இத்துணை வன்முறையை ஏவி னாலும் இடது முன்னணியிடமி ருந்து ஒரு சிறு அளவிற்கு கூட மக்களை இவர்களால் பிரிக்க முடியவில்லை என்பதையே இப் பேரணி உணர்த்துகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
 இடது முன்னணி ஆளும் இந்த மாநிலத்தில், ஆட்சி அதி காரத்திலிருந்து இடதுசாரிகளை வெளியேற்றியே தீர வேண்டு மென கங்கணம் கட்டிக் கொண்டு சில வெளிநாட்டு சக்திகள் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின் றன என குற்றம் சாட்டிய புத்த தேவ், உலகில் எங்கெல்லாம் செங்கொடி பறக்கிறதோ, அந்த இடங்களையெல்லாம் பார்த்து அந்த சக்திகள் அஞ்சி நடுங்கு கின்றன என்று குறிப்பிட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெயரை குறிப்பிடாமல் மேற்கண் டவாறு கூறிய முதலமைச்சர், எமது மாநி லத்தில் தலையிடு வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இடது முன்னணி அரசை மாற்றுங்கள் என்று கூறி மம்தா கட்சி பிரச்சாரம் நடத்தி வரு வதை குறிப்பிட்ட புத்ததேவ், “அவர்கள் மாற்ற விரும்புகிறார் கள்; எத்தகைய மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள்? நாம் ஏழை விவசாயிகளுக்கு நிலம் கொடுத்திருக்கிறோம்; குத்தகை விவசாயிகளின் உரிமைகளை உறுதிபடுத்தியிருக்கிறோம், இதையெல்லாம் மாற்றப்போகிறார் களா? 38 ஆயிரம் கிராமங்களை வளர்ச்சியடைந்த கிராமங்களாக உருவாக்கியிருக்கிறோம்; அதை மாற்றப்போகிறார்களா? நமது இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறோம்; அதை மாற்றப் போகிறார்களா?” என்று கேள்விக் கணை தொடுத்தார்.


ஊழல் முடைநாற்றம் எடுத்து நாட்டு மக்களிடையே அப்பட்ட மாக அம்பலமாகிக் கிடக்கும் காங் கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மிகக் கடுமையாக சாடிய புத்த தேவ், இந்த நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு, ஒட்டுமொத்த நாட் டின் பொதுச் சொத்தும் மிகக் கடுமையான முறையில் சூறை யாடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதன் கூட் டாளிகளும் அதிகார வர்க்கத்தின ருடன் சேர்ந்து கொண்டு நாட்டு மக்களின் சொத்துக்களை ஊழல் கள் மூலம் அபகரித்துக் கொண்டி ருக்கிறார்கள் என்று கூறிய அவர், அனைத்துப் பொருட்களின் விலை களையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை சிதைத்து அவர்களின் வாழ்க்கையை கொடூ ரமாக சீரழித்துக் கொண்டிருக்கி றார்கள் என்று சாடினார்.

மேற்குவங்கத்தில் இடது முன் னணி அரசு ஏழை - எளிய மக்க ளுக்கு உணவை உத்தர வாதப்படுத்தும் விதத்தில் அனை வருக்கும் பொதுவிநியோக முறை யை உறுதிபட பின்பற்றி வருகிற நேரத்தில், மத்திய ஆட்சியாளர் களோ வரலாறு காணாதவிலை வாசி உயர்வுக்கும், உணவு பண வீக்கத்திற்கும் காரணமான பெரும் வர்த்தக கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவான வேலைகளை செய் துக் கொண்டிருக்கிறார்கள் என கூறிய புத்ததேவ், நாட்டு மக்கள் மீது கிஞ்சிற்றும் இரக்கமில்லாத, கொடூரமான தாக்குதலை காங் கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று சாடினார்.

உணவு தானியங்களை பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற் றுக் கொண்டிருப்பவர்களை ஆத ரித்து வருகிற மத்திய அரசு, சர்க் கரை, வெங்காயம், என அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட் களையும் ஏழைகளின் கைகளுக்கு எட்டவிடாமல் செய்துள்ளது என் றும் குற்றம் சாட்டினார்.

மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், மேற்குவங்க மாநிலத் தில் இடது முன்னணி அரசு சிறு பான்மை முஸ்லிம் மக்களின் நலன்காக்க ஏராளமான திட்டங் களை முழுமையாக அமல்படுத் தியுள்ளது என்று குறிப்பிட்ட முத லமைச்சர் புத்ததேவ், மேற்கு வங்க கிராமங்களில் விவசாயத் தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் மக்கள் மற்ற மாநிலங்களை விட மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள் என்றும், கல் வித்துறையிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் அடைந் திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

மாநிலத்தில் அராஜக அரசி யல் நடத்தி வரும் வன்முறை கட்சியான திரிணாமுல் காங்கி ரஸ், கடைசி வரைக்கும் வன் முறையில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், திரிணாமுல் தலைவர்கள், இடது முன்னணி ஊழியர்களையும், அப்பாவி பொது மக்களையும் குறி வைத்து உயிரை பறிக்கிற மாவோ யிஸ்ட்டுகள் உயிர்வாழ்வதற்கு தேவையான ஆக்ஸிஜனை வழங் கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

வடக்கு வங்காளத்தில், டார் ஜிலிங் மலைப் பகுதிகளில் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா வன்முறை யை ஏவியிருக்கிறது. இந்த வன் முறையாளர்களோடு, திரிணா முல் காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது என்று குறிப் பிட்ட முதலமைச்சர், வருகிற சட்டமன்றத் தேர்தல் இவர்களது வன்முறை அரசியலுக்கு சரியான பாடம் கற்பிக்கும் என்று கூறினார்.

இப்பேரணியில் மிகப் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்த இளைஞர்களுக்கும், மாணவர் களுக்கும் பாராட்டுத் தெரிவித்த புத்ததேவ், ரயில்வே அமைச்ச கத்தை கையில் வைத்திருக்கிற மம்தா பானர்ஜி அந்த துறையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார் என்றும், ரயில்வேத்துறையில் காலியாக உள்ள அனைத்து பணி யிடங்களையும் நிரப்புவதற்கு தயா ராக இல்லை என்றும், மம்தாவால் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு வேலைவாய்ப்பைக் கூட புதிதாக உருவாக்க முடியாது என்றும் கூறி னார்.

இத்தகைய வன்முறையாளர் களிடமிருந்து, மக்கள் விரோத சக்திகளிடமிருந்து, இத்தனை ஆண்டுகாலமாக மேற்குவங்கத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடது முன் னணி உருவாக்கியுள்ள மகத்தான சாதனைகளை, மக்கள் நலத் திட் டங்களை பாதுகாக்க சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இடது முன் னணியை தேர்ந்தெடுப்பதே மக் கள் முன்னால் உள்ள ஒரே வழி என்று கூறிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் - மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை இத்தேர்தலில் முறி யடிப்போம் என்றும் அழைப்பு விடுத்தார்.

இன்றைய கார்ட்டூன்