திமுக- திறந்த புத்தகத்தில் மறைக்கப்படும் பக்கங்கள்

புதுதில்லிப் பயணம் அரசியல் ரீதியாக வும், அரசு ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது என்று சென்னை திரும்பிய முதல்வர் கலை ஞர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதற்கு அடுத்த நாளே புதுதில்லியில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சென்னை யில் கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறி முதல்வருக்கு நன்றி பாராட் டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை திமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அந்த கட்சிக்காரர்களே கூட நம்ப மாட்டார்கள்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல்-இல் சங்க அங்கீகாரத் திற்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி முதல் தேதியன்று நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல், இதுவரை நான்குமுறை நடந் துள்ளது. 2002ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது தேர்தல் நீங்கலாக, மற்ற மூன்று தேர்தல்களிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாகை சூடி “ஹாட்ரிக்” அடித்துள்ளது. 2,47,000 ஊழியர்கள் வாக் களித்த 2009 தேர்தலில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கு எதிராக ஏஐடியுசி சார்புடைய என்எப்டிஇ சங்கமும் ஐஎன் டியுசியில் இணைந்துள்ள எப்என்டிஓ சங்கமும் இணைந்து ஒரு ‘மெகா’ கூட் டணி அமைத்துப் போட்டியிட்டன. இருப் பினும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் மகத் தான வெற்றி பெற்றது.

5வது சங்க அங்கீகாரத் தேர்தல்

நடக்கவுள்ள 5வது சங்க அங்கீகாரத் தேர்தலில் 2, 29,906 ஊழியர்கள் வாக்க ளிக்க உள்ளனர். மாதா மாதம் சந்தா கொடுக்கும் 1,24,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர் சங் கம், 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இருப்பினும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மெத்தனமாக இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், நாக் பூரில் விரிவடைந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தை நடத்தி அதில் தனது தேர் தல் பணிகளை திட்டமிட்டது. இதன்படி கடந்த மூன்று மாதங்களாக நாடு முழு வதும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இத்தேர்தலில் தங்க ளது தோல்வி உறுதியென புரிந்து கொண்ட என்எப்டிஇ மற்றும் எப்என்டிஓ சங்கங் கள், தேர்தலுக்குத் தடை வாங்க நீதிமன் றங்களுக்குப் படையெடுத்தன. இதிலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது.

அறிவியல் கதிர்: விளைச்சலைப் பெருக்க `ஃபெர்டிகேஷன்’ முறை

“மானியங்களையும் உதவித் திட் டங்களையும் விட நிலத்திலிருந்து கிடைக்கும் உத்தரவாதமான வருமா னமே ஒரு விவசாயியை வேளாண்துறை யில் தொடர்ந்து நீடிக்க வைக்க முடியும் ; இளைஞர்களிடம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். ஒரு விஞ்ஞானமோ, தொழில்நுட் பமோ விவசாயிகளுக்கு நல்ல வருமானத் தைத் தருமானால் அந்த முறையைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் தயாரா கவே இருப்பார்கள்” என்கிறார் திரு வெண்ணைநல்லூரில் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநராக இருக்கும் டேவிட் ராஜா பியூலா.

விழுப்புரம் மாவட்டம் ஓகையூர் கிரா மத்தைச் சேர்ந்த திருமதி கோகிலா குமார் தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்திலி ருந்து 26,000 கிலோகிராம் மஞ்சளை அறுவடை செய்து ஒன்பதே மாதங்களில் 11 லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந் தது என்றால், அவர் `ஃபெர்டிகேஷன்’ முறையை மேற்கொண்டதுதான் கார ணம். இதைப் பார்த்ததும் அப்பகுதியி லுள்ள ஏராளமான விவசாயிகள் அதே முறையைப் பயன்படுத்தி மஞ்சள் சாகுபடி யில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

எகிப்து: மக்கள் வரலாறு படைக்கிறார்கள்

எகிப்து மக்களின் பேரெழுச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் ஆவ லுடன் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். ஜனவரி 25இலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலான பதினைந்து நாட்களில் இப் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான எகிப்தி யர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், சாமானிய ஆண்கள் - பெண்கள் என அனைத்துப் பிரிவினரும், ஹோஸ்னி முபாரக் கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். முபாரக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார் கள். கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில் (கூயாசசை ளுளூரயசந) குழுமிய மக்கள் காட்டிய வீராவேசம் மற்றும் உள்ள உறுதி அவர்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப் போராட்டத் தில் இதுவரை சுமார் முன்னூறு பேர் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத் திருக்கிறார்கள்.

எகிப்து, எட்டு கோடியே 82 லட்சம் மக்கள் கொண்ட மாபெரும் அரபு நாடாகும். வரலாற்று ரீதியாக, இது அரபு நாடுகளின் அரசியல் மற்றும் கலாச்சார மையமாகும். எகிப்தில் நடைபெறும் நிகழ்ச்சிப் போக்குகள் இப்பிராந்தியத்திலேயே முக்கியமான தாக் கத்தை ஏற்படுத்தும்.

மிகவும் பழமையான சீர்கேடடைந்து கொண்டிருந்த முடியாட்சியை 1952இல் நடைபெற்ற அலுவலர்கள் புரட்சி தூக்கி எறிந்தது. நாசர் மற்றும் ராணுவத்தின் தலை மையின்கீழ் ஒரு மதச்சார்பற்ற குடியரசு அங்கே அமைக்கப்பட்டது. அது, அரபு தேசிய வாதத்திற்கான ஒளிவிளக்காக மாறியது. சூயஸ் கால்வாயைக் கைப்பற்றித் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர எத்தனித்த மேற்கத்திய ஏகாதிபத்திய வல்லரசுகளின் மத்தியில் அது சீற்றத்தை ஏற்படுத்தியது. நாசரின் தலைமையில் எகிப்து, அணிசேரா இயக்கத்தின் ஒரு முன்னணி உறுப்பு நாடாக மாறியது. ஆனால், எழுபதுகளில் நிலைமை கள் முற்றிலுமாக மாறின.

இன்றைய கார்ட்டூன்