விசாரணை வலை முழுமையாய் விரியட்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கு மாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்ன ணியில், அருண்ஷோரியிடமும் விசாரணை நடத்தவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இந்த ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் அமைச்சர் ஆ.ராசா ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்று முந்தைய ஆட்சியில் உரு வாக்கப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததாக திரும்பத்திரும்பக் கூறிவந்தார். பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் இந்த நடைமுறையை துவக்கி வைத்தது. அப்போது அந்தத்துறைக்கு பொறுப்பாக இருந்த வர் ‘மகா யோக்கியரான’ அருண்ஷோரிதான்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறை முற்றிலும் தவறான ஒன்று என்று இந்த ஊழல் குறித்து விசாரிக்க அரசினால் அமைக்கப்பட்ட சிவராஜ்பாட்டீல் குழுவும் கூறி யுள்ளது. பாஜகவினரை வாயடைக்கச்செய்வதற் கான தந்திரமாக அன்றி, உண்மையில் ஒட்டு மொத்த ஊழலையும் தோண்டி எடுக்கும் வகை யில் சிபிஐயின் செயல்பாடு அமைய வேண்டும்.

2ஜி ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூ னிகேசன் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டது. இப்போது டாடா நிறுவன அதிகாரிகளிட மும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. ஆ.ராசாதான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக வரவேண் டும் என்று அதீத ஆர்வம் காட்டியவர்கள் அம் பானியும் டாடாவும். அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிப்பது அவசியமாகும்.

நீரா ராடியா-டாடா உரையாடல் டேப் வெளி யானபோது, இந்த விவரங்களை வெளியிடு வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தின் கதவைத் தட்டினார் டாடா. அந்த டேப் பில் உள்ள விஷயங்கள் தவறு என்று அவர் கூறவில்லை. மாறாக, அந்த விவரங்களை வெளி யிடக்கூடாது என்றுதான் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பலன்பெற்ற வர்கள் டாடா மற்றும் அம்பானி. அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவேண் டும். ராசாவின் ‘திறமை’ குறித்து முதல்வர் கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுத வேண்டிய தன் தேவை என்ன என்பதும் விசாரணை வளையத்திற்கு உட்பட்டதே.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து எஸ்-பேண்ட் ஊழல் வெளிவந்துள்ளது. இது பிரத மரின் நேரடிப்பொறுப்பில் உள்ள துறையில் நடந் துள்ள ஊழலாகும். ஆ.ராசா, பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று திரும்பத் திரும்பக் கூறினார். இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியுடன் பேசிய வகையில்தான் காரியங் கள் நடக்கின்றன என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஆ.ராசாவுக்கு தாங்கள் கூறிய ஆலோசனை என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப் முகர்ஜியோ வாய்திறக்க மறுக்கிறார் கள். பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்று கூறிய பிரதமர் பிறகு, பின்வாங்கி விட்டார். நாட்டையே உலுக்கிவரும் இந்த தொடர் ஊழல் குறித்து பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்.

தோண்டத்தோண்ட புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் முன்னுக்கு வருகிறது.

இன்றைய கார்ட்டூன்