சர்வாதிகாரமும் வெளியேறட்டும்

அரசியல் உணர்வுடன் ஒன்றுபட்டுப் போரா டுகிற மக்களின் முன் எப்பேர்ப்பட்ட அடக்கு முறை ஆயுதமும் அடிபணியத்தான் வேண்டும். எகிப்து மக்களின் எழுச்சி இதைத்தான் காட்டு கிறது. முப்பதாண்டுகால சர்வாதிகார பீடத்திலி ருந்து ஹோஸ்னி முபாரக் வெளியேறியது ஒரு முக்கியமான வெற்றி. தாக்குதல்களுக்கு அஞ்சா மல் தெருக்களில் இறங்கியதற்கான இந்த முதல் கட்ட பலனைக் கொண்டாடுகிற எகிப்து மக்கள் உலகத்தின் வாழ்த்துக்கு உரியவர்கள்.

1967ம் ஆண்டிலிருந்து அவசர நிலை ஆட்சி தான் இருந்து வந்திருக்கிறது என்பதிலிருந்தே அங்கே எந்த அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகத்திற்கு ஜனநாயக மாண்புகள் பற்றிப் பாடம் நடத்துகிற அமெரிக்க அரசு, இந்த அத்துமீறல்களைக் கண்டுகொண்டதில்லை. ஏனென்றால் அதன் உலகப் பொருளாதார ஆளு மை நோக்கங்களுக்கு ஒத்துழைத்தவர் முபாரக். தட்டிக் கேட்க முடியாத சர்வாதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்ட உள்நாட்டு - வெளி நாட்டு முதலாளிகளின் கொள்ளை, வாழ்க்கை யைக் கடினமாக்கிய விலைவாசி, எங்கும் எதி லும் ஊழல், எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடூரங்கள் என அனுபவித்த எகிப்து மக்கள் கொதித்துப் போயிருந்தார்கள்.

ஒட்டுத் துணியும் மேலாடையும்

எப்பொழுதெல்லாம் எங்கள்

மேலாடை கந்தலாகிறதோ,

அப்பொழுதெல்லாம் நீங்கள்

ஓடி வந்து முழங்குகிறீர்கள்...“இது இனியும் நீடிக்கக் கூடாது”

முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக எஜமானரிடம் ஓடுகிறீர்கள்.

நாங்கள் காத்துக்கொண்டு இருந்தோம்.

நீங்கள் வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று வந்ததைக்

காட்டுகிறீர்கள், ஒரு துண்டுத் துணியை!

காவி உடைக்குள் ஒரு புரட்சியாளர்

அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் ஸ்தாபகர் சஹஜானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் 19ஆம் நூற்றாண்டில் அதாவது 1889இல் ஐக்கிய மாகாணங் களின் கிழக்குப் பகுதியிலிருந்த காசிபூர் மாவட்டத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பெற்றோருக்குப் பிறந்த ஆறாவது பிள்ளை. சகோதரிகள் யாரும் கிடையாது. சஹஜானந்தா ஸ்வாமி களின் இயற்பெயர் நவ்ரங் ராய் என்ப தாகும். இவர் சிறுவயதாக இருக்கும் போது தாயை இழந்தவர். அவரது அத்தைதான் அவரை வளர்த்தார். அவரது தந்தை ஒரு பிராமணராக இருந்தபோதிலும் அடிப்ப டையில் அவர் ஒரு விவசாயிதான். எனவே அவருக்கு அனைத்துப் பிரா மணர்களும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் கூட கிடையாது. நவ்ரங் ராயின் தாத்தா காலத்தில் அவர்களது குடும்பம் ஒரு சிறு ஜமீன்தார் குடும்பமாக இருந்தது. எனவே அந்தக் காலத்தில் நிலத்திலிருந்து வந்த வருமானம் அவர்களது குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் குடும்பம் பெருகப் பெருக, நிலங் கள் பிரிக்கப்பட்டு, வளம் குன்றி, அவர் களே குத்தகைக்கு நிலங்களைப் பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆயினும் குடும்பம் அப்படி ஒன்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுவிடவில்லை.


நவ்ரங் ராய் தன் கல்வியைத் தொடரக் கூடிய வகையில் வசதியுடன்தான் இருந் தது, எனவே, அவர்தம் ஆரம்பக் கல்வி யையும், உயர்நிலைக் கல்வியையும் மிக வும் சிறப்புடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார். உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். பள்ளிப்பருவத்திலேயே அவர் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கினார். அக்காலத்திய மூடப்பழக்க வழக்கங்களை அப்படியே கண்மூடி ஏற்றுக்கொள்ள அவர் துணியவில்லை, பழம் பஞ்சாங்கங் களின் ஏமாற்றுத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே அவர் அவற்றை ஆழமாகப் படித்தார். நவ்ரங் ராய் கடவுள் நம்பிக்கையின்றி வளர்வதையும், சாமியார் களைக் கலங்கடிக்கக்கூடிய வகையில் கேள்விகள் கேட்பதையும் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்தம் குடும்பத்தினர், அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்கள். ஆனால் திருமணம் முறையாக நடைபெறுவதற்கு முன்னதாக அச்சிறுமி இறந்துவிட்டார், இதன்மூலம் அவரைக் குடும்பக் கட்டுக்குள் கட்டிப் போடுவதற்கு அவர்தம் குடும்பத்தார் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து அவர் விடுதலை பெற்று, சன்னியாசியாகத் துற வறம் மேற்கொண்டார். இதன் பின்னர்தான் அவரது பெயர் ஸ்வாமி சஹஜானந்த சரஸ் வதி என்று மாறியது, இவ்வாறு அவர் சன்னியாசம் மேற்கொண்டதனால் அவ ரால் தன் கல்வியைத் தொடர்ந்து, மெட்ரிக்கு லேசன் தேர்வை முடிக்க முடியவில்லை. ஆயினும் அவர் தம் அறிவுத்தாகம் குறைந்து விடவில்லை. அரசியல், சமூகம் மற்றும் மதங்கள் குறித்து ஏராளமாகப் படித்தார். இதன் விளைவாக அவர் வெளிப்பார் வைக்கு உடலின் மேல் காணப்படும் காவித் துணிகள் அவரை ஒரு சன்னியாசியைப் போல் காட்டியபோதிலும், உண்மையில் உள்ளத்தில் அவர் ஒரு புரட்சியாளராக விளங்கினார்.

பெட்ரோலுக்கு வரி விதிக்காமல் இருக்க முடியாதா?

பெட்ரோலிய கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் தொடர்ந்து ஏறிவருவதையும் அதனைக் காரணமாகக்காட்டி இந்திய அரசு பெட்ரோலின் விலையை அடிக்கடி ஏற்றிவருவதும் அதன் தொடர் விளைவாக அனைத்துப்பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவருவதும் நமது அன்றாட அனுபவமாக இருந்து வருகிறது.இதே பிரச்சனையை வியட்நாம் அரசு எவ்வாறு அணுகி வருகிறது என்பது ஒருமக்கள் நல அரசுக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை படம் பிடித்துக்காட்டுகிறது. கச்சா எண்ணெய்யைத் தூய்மைப்படுத்துவதற்கான வசதிகள் இல்லாத ஒரு நாடு வியட்நாம் என்ற உண்மையையும் சேர்த்துப்பார்த்தால் இந்த வேறுபாட்டைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.கச்சா எண்ணெய்யின்விலை ஒரு பீப்பாய் 101 டாலர் என்ற அளவை எட்டியவுடன் மக்களின் மீது சுமை ஏறாமல் பாதுகாப்பதற்காக வியட்நாம் அரசு இரண்டு முடிவுகளை எடுத்தது. ஒன்று, பெட்ரோல் விற்பனையாளர் களுக்கு லிட்டருக்கு 600 டாங் அளவுக்கு இழப்பீட்டை நேரடியாக வழங்கியது. விலையை நிலைப்படுத்து வதற்கான நிதி என்ற ஒன்றும் அந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் வாங்கும் போதும் நுகர்வோர் அளிக்கும் விலையில் 300 டாங் இந்த நிதிக்கு செல்கிறது.

வியட்நாம் அரசு எடுத்த மற்றொரு முக்கிய நடவடிக்கை வரிக்குறைப்பு .இறக்குமதி செய்யப்படும் தூய்மைப்படுத்தப்பட்ட பெட்ரோலின் மீதான வரி (பூஜ்யம் ) என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது.பெட்ரோலுக்கு முதலில் 20 சதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இது பின்னர் 6 சதமாகவும் தற்போது 0 சதமாகவும் குறைக்கப்பட்டு விட்டது. இதேபோல டீசலுக்கு விதிக்கப்பட்ட வரி 15 சதத்திலிருந்து 2 சதமாகவும் பின்னர் 0 சதமாகவும் குறைக்கப்பட்டுவிட்டது.

மொழிகளின் மரணம்

26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.

2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.

இன்றைய கார்ட்டூன்