எதற்கு இந்த நாடகம்?

மக்கள் நல்ல படங்களை வெகுவாக வரவேற்கின்றனர். ஆனால் “இளைஞன்” அந்த வகையில் எந்த விதத்திலும் அமையவில்லை. தொலைக்காட்சிகளில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் செய்யப்பட்டபோதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியபோதும் எந்த இளைஞனும் அந்தப் பக்கம் திரும்பிக்கூட படுக்கவில்லை.

லாட்டரி அதிபர் கொடுத்த பணத்தில் திரைக்கதை எழுதப்பட்டதால் என்னவோ “அவருக்கு” நட்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தலைவர் வசனம் எழுதிய படம் டப்பாவிற்குள் சீக்கிரமே போய்விடக்கூடாது என்பதற்காகவும் கழக கண்மணிகள் இப்போது புது வழிகளில் திரையரங்குகளை நிரப்ப முயற்சி எடுக்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை நகரத்தில் முக்கிய தனியார் பள்ளிகளுக்கு பரிவோடு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் வலுக்கட்டாயமாக இளைஞன் படத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். “பாவம் பிஞ்சுகள்”.

மற்றொரு புறத்தில் கழகத்தின் முக்கிய பெரும்புள்ளிகள் தங்கள் சார்பில் டிக்கெட்டுகளை வாங்கி மொத்தமாக தொண்டர்களிடத்தில் வழங்குகின்றனர். எல்லா வார்டுகளிலும் இலவச டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. அப்படி கொடுத்தும் கூட தொண்டர் படையை தியேட்டரில் காணோம். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் புதுப்படம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். காரணம், குறைந்தபட்சம் மூன்று வாரமாவது படம் ஓட வேண்டுமாம். இல்லையென்றால் தலைவர் கடுமையாக கோபம் கொள்வார்.

இதே காலத்தில் நம்முடைய நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் பல ஊர்களில் திரையிட முடியாமல் இருக்கின்றது. அரசின் சார்பாக வெறும் கண்துடைப்புக்கு வரிவிலக்கு என்று அறிவித்துவிட்டு படம் திரையிடாமல் இருப்பதற்கு மறைமுகத்தடைகள் எனும் பட்டியல் நீளுகின்றது.

தமிழகம் முழுவதும் அம்பேத்கர் படம் திரையிடப்படுவதற்கு இடது சாரி இயக்கங்கள், கலை இலக்கிய அமைப்புகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.

விந்தை என்னவென்றால், இளைஞன் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என விளம்பரத்தில் பேசும் சில தலைவர்கள் அம்பேத்கார் படத்தை திரையிட மக்கள் வந்து பார்க்க என்ன முயற்சி எடுத்துள்ளனர் என்ற கேள்வி எழுகின்றது.




ஏழைகளுக்கு நிலம் தர தயக்கம் ஏன்?

தமிழ்நாட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாகவும் அதை நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் வழங்க இருப்பதாகவும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வாக்குறுதி யளித்தது. ஆட்சிக்கு வந்த சில மாதங் களிலேயே, தமிழ்நாடு அரசு 12.9.06 அன்று வெளியிட்ட அரசாணை எண். 241ன்படி நடைமுறைப்படுத்தவும் துவங் கியது.

அடுத்த சில மாதங்களில் வழக்கம் போல் பின்வாங்கி, 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இல்லை. கையளவு நிலமாக இருந் தாலும் ஏழைகளுக்குத்தான் என சத்தி யம் செய்யாத குறையாக சட்டமன்றத் தில் தெரிவித்தார் முதல்வர். தமிழ்நாட் டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் என்பது 2001ம் ஆண்டு கணக்குதான். 2004-05ல் அது 23.96 லட்சம் ஹெக்டேர், அதா வது சுமார் 60 லட்சம் ஏக்கராக தரிசு நிலத் தின் பரப்பளவு அதிகரித்திருக்கிறது. தற் போது இன்னும் கூடுதலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
முதல்வரின் கருத்துக்கு கடும் ஆட் சேபணையை அப்போதே தெரிவித்தோம். உடனே, யாருடைய ஆக்கிரமிப்பிலும் இல்லாத தரிசு நிலத்தைத்தான் நாங்கள் தருவதாகச் சொன்னோம் என்று புதிய தன்னிலை விளக்கத்தை அளித்தார். அதாவது அரசியல் செல்வாக்குள்ளவர் கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள், பெரும் தொழிலதிபர்கள், நீதிபதிகள், அரசாங்கத் தில் உயர் பதவியில் உள்ளவர்கள் அர சுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங் களை எத்தனை ஆயிரம் ஏக்கர்களை வேண்டுமானாலும் வளைத்துப்போட்டு வைத்துக் கொள்ளலாம். அத்தகைய நிலங்களை நாங்கள் கைப்பற்ற மாட் டோம் என்பதே முதல்வரின் பதிலுக்கான தெளிவுரையாக இருக்க முடியும்.
 
கிராமப்புற மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் நிலம் என்பதை அனை வரும் அறிவோம். தமிழக கிராமப்புறங் களில் வசிக்கும் பெரும்பகுதியான மக்கள் நிலமற்றவர்களாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் நிலமற்றவர்களாக இருக்கிறார் கள். நில உச்சவரம்புச் சட்டமும் தமிழ கத்தில் பெயரளவுக்கே அமல்படுத்தப்பட் டுள்ளது. நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 31.3.09 வரை 1,90,003 ஏக்கர் மட்டுமே 1,50,416 பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட் டத்திலும் 31.5.09 வரை 2,10,534.68 ஏக்கர் மட்டுமே 1,75,511 பேருக்கு வழங்கப் பட்டுள்ளது. இதில் நடைபெற்றுள்ள மோசடி தனிக்கதை. மொத்தத்தில் தமிழ் நாட்டில், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது என்பது பெயரளவுக்கான, மக்களை அரசே ஏமாற்றும் ஒரு திட்ட மாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
 
இந்த நிலையில்தான், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் காவேரி ராஜபுரத்தில் அரசுக்கு சொந்தமான பலநூறு ஏக்கர் தரிசு மற்றும் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களையும், நீர் நிலைகளையும் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளார் என்று 11.9.2009 அன்று தமிழக அரசின் தலை மைச்செயலாளரிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மனு அளித் தோம். பிறகு, திருவள்ளூர் மாவட்ட ஆட் சியர், திருத்தணி வட்டாட்சியர் என அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் மனு அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலை மை நீதிபதிக்கும் மனு அனுப்பப்பட்டது. அரசிடம் கொடுக்கப்பட்ட மனு கிணற் றில் போட்ட கல்லாக இருந்த நிலையில், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பிறகு இறுதி யாக நிலமீட்பு இயக்கத்திற்கும் அறை கூவல் விடுக்கப்பட்டது. நிலமீட்பு இயக்கத்தை முறியடிப்பதற்கு அரசு 144 தடை உத்தரவு போட்டு, அந்த கிராம மக்கள் அனைவரையும் ஒருநாள் முழுக்க வீட்டுச்சிறையில் வைத்திருந்தது. ஆயி ரக்கணக்கான காவலர்களை கொண்டு வந்து குவித்து மாவட்டம் முழுவதையும் பெரும் பதட்டத்திற்குள்ளாக்கியது. அர சின் அடக்குமுறைகளை மீறி அணி வகுத்தவர்களை, இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் அரசின் திட்டத்தை செயல்படுத்த சென்றவர்களை கைது செய்தது.
 
இதற்கிடையில், உயர்நீதிமன்ற தலை மை நீதிபதியே சட்டவிரோதமாக அரசு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார் என்பது பொது விவாதத்திற்கு உள்ளானதை யொட்டி, உச்சநீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பக்கோரியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் முழுமையாக ஆய்வு செய்து 199.47 ஏக்கர் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றத்திற்கும், தமிழக அரசுக்கும் அறிக்கை அளித்தார். நீதிபதி தினகரன் தரப்பில் ஆட்சியரின் அறிக் கையை ஏற்க மறுப்பு தெரிவித்த நிலை யில் இந்திய நில அளவைத்துறையின் சார்பில் அளவை செய்து அறிக்கைக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டது. இந்திய நில அளவைத்துறையின் அதிகாரிகள் குழு முழுமையாக ஆய்வு செய்து 199.78 ஏக்கர் அரசு நிலம் நீதிபதி யால் வளைக்கப்பட்டிருக்கிறது என்று கூடுதலாக 31 சென்ட்-ஐ சேர்த்து, ஆட்சியரின் அறிக்கைக்கு வலு சேர்த் தது. ஆனால், புறம்போக்கில் 10க்கு 10 குடிசை கட்டி குடியிருப்பவனை அப்புறப் படுத்த போலீஸ் மற்றும் அதிகாரிகள் சகிதமாக பொக்லைன் இயந்திரத்தோடு படையெடுக்கும் அரசு, தனக்கு சொந்த மான சுமார் 200 ஏக்கர் நிலத்தை மீட்ப தற்கு எள்முனையளவு கூட இதுவரை முயற்சிக்கவில்லை. மீண்டும் அரசுக்கு நினைவூட்டும் விதமாக சென்னையில் உண்ணாவிரதம், திருவள்ளூரில் தொடர் உண்ணாவிரதம், வருவாய்த்துறைச் செய லாளரிடம் மனு என விடாது முயற் சித்தோம்.
 
இறுதியாக 2010 நவம்பர் 9ந் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் தீர்வு காணப்படாமல் உள்ள பல்வேறு நிலப் பிரச்சனைகள் குறித்து பேசினோம். அப் போது, காவேரிராஜபுரம் நிலம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரோடு கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். இரண்டு மாத காலமாகிவிட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்து பேசப்பட்டதா என்பது கூட நமக்கு தெரியவில்லை. துணை முதல்வர், தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத் தையும் நிறைவேற்றி முடித்துவிட்டு, ஐந்தாறு மாத காலமாக, செய்வதற்கு எதுவுமே இல்லாமல், சும்மா இருக்க வேண்டாமே என்று அடிக்கல் நாட்டு விழா, திறப்புவிழா என்று சுற்றிக் கொண்டி ருக்கிறார் என்று நமக்கு தெரியும். அதனால் ஆட்சியரோடு பேச அவகாசம் இல்லையோ என்னவோ?
 
இப்பொழுது, தரிசு நிலத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வேலிகள் (பென்சிங்) முற்றிலும் நீதிபதி தரப்பால் அகற்றப் பட்டுவிட்டது. பிரச்சனைக்குரிய இந்த நிலம் தொடர்பாக இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. வேறு எவரும் உரிமைகோரவும் இல்லை. தற்போது நிலம் அனாமத்தாகக் கிடக்கிறது. அந்த கிராமத்தைச் சார்ந்த தலித் மற்றும் பழங்குடி மக்கள், மற்ற சமூகத்தை சார்ந்த ஏழைகள் பலர் நிலம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து காத்துக் கிடக்கிறார்கள். அரசோ கல்லுப் பிள்ளையாரைப் போல் ஆடாமல் அசையாமல் இருக்கிறது.
 
இந்த நிலையில்தான், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிப்ரவரி 10ந் தேதி நிலவிநியோக இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. அரசு வழங்கவில்லையென் றால் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று மக்கள் தயாராகியிருக்கிறார்கள். பெரிய மனிதர்கள் மேலும் தங்களின் சொத்தைப் பெருக்கிக் கொள்ள அரசு நிலத்தை வளைத்தால் வேடிக்கை பார்க்கும் அரசு, ஏழைகள் தங்கள் வாழ்வா தாரத்திற்காக, ஏழ்மையிலிருந்து மீள்வதற் காக அரசு நிலத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதை அநியாயம் என்று சொல்ல முடியுமா? திமுக அரசு யார் பக்கம் நிற்கப் போகிறது?
 
நிலம் கேட்டு, நியாயம் கேட்டு பிப்ரவரி 10ந் தேதி காவேரிராஜபுரத்தில் நடைபெற இருக்கும் நிலவிநியோக இயக்கம் வெற்றிபெற அனைவரின் ஆதரவையும் கோருகிறோம்.
 
“கணவனை இழந்ததாலே கண்ணகி யின் சீற்றம் நியாயம்

மனைவியை இழந்ததாலே ராமனின் யுத்தம் நியாயம்

அனைத்தையும் இழந்ததாலே நமது போராட்டம் நியாயம், நியாயம்”

என்ற கவிஞனின் வரிகளுக்கொப்ப நியாயத்தை நிலைநாட்ட ஆவேசமாய் அணிதிரள்வீர்!

“வெல்ல முடியாதது நம் வலிமை” என்பதை பறைசாற்றுவோம்!!

கட்டுரையாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்

 


இன்றைய கார்ட்டூன்