தொழிலாளர் விரோத திமுக அரசு தூக்கியெறியப்படும்: அ.சவுந்தரராசன்

மதுரை, பிப்.14-

பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதக மாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படும் தமிழக அரசை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய மக்கள் தயாராகி விட் டார்கள் என சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கூறினார்.

தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்றக்கோரி மதுரை மாநகரில் சிஐடியு சார்பில் 7 இடங்களில் பிரச்சாரப்பயணம் நடைபெற்றது. இதன் நிறைவாக தெற்கு வாசல் மார்க்கெட் அருகே பொதுக்கூட் டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.சவுந்தரராசன் சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:

தேர்தலை முன்வைத்து பல கட்சிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலை யில், தொழிலாளர்களுக்கான தொழிற் சங்க அங்கீகார சட்டத்தை அமல்படுத்தக் கோரி சிஐடியு தமிழகம் முழுவதும் பிரச் சாரத்தை மேற்கொண்டுள்ளது. கடுமை யான விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என முதல் வர் கருணாநிதி கூறுகிறார். அப்படியென் றால் முதல்வராக அவர் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

மின்வாரியத்தில் பணியாற்றும் முறை சாரா தொழிலாளிக்கு சத்துணவு ஊழிய ருக்கு இணையான ஊதியம் வழங்க வேண் டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு நிறைவேற்றாமல் உள்ளது. டாஸ்மாக் தொழிலாளிக்கு மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டும் அவர்கள் வாங் கும் ஊதியம் 2800 ரூபாய் தான். அரசின் அனைத்துத்திட்டங்களுக்கும் பணம் கொட்டும் இத்துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் இல்லை. நூல் விலை உயர்வால் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான தொழி லாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் சலுகையை தமிழக அரசு வழங்கி யுள்ளது. ஆனால், தமிழகத் தொழிலாளர் களுக்கு சமவேலை சமஊதியம் வழங்க மறுக்கிறது. கேரளா, மேற்குவங்கம், சத் தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற் சங்க அங்கீகார சட்டம் இயற்றப்பட் டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அச்சட் டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுக் கிறது என அவர் பேசினார்.

இன்றைய கார்ட்டூன்