போஸ்கோ ஆலைக்கு செல்லும் சாலையில் கிராம மக்கள் தடுப்பு ஏற்படுத்தினர்

தின்கியா, பிப். 14-

போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் சாலைப் பகுதியை ஆத்திர மடைந்த கிராம மக்கள் சேதப்படுத்தினர்.

ஒரிசா மாநிலத்தில் பார தீப் துறைமுகத்திற்கு அரு காமையில் உள்ள சாலை யை ஜகதீஷ்பூர் மாவட்டத் தின் தின்கியா கிராம மக்கள் சேதப்படுத்தினர். இந்த சாலை, போஸ்கோ உருக்கு ஆலையை இணைக்கும் வழியாகும்.

கடந்த 2005ம் ஆண்டு ஒரிசாவில் போஸ்கோ உருக்கு ஆலை அமைப்ப தற்கு முடிவு செய்யப்பட் டது. தென்கொரியாவின் பன்னாட்டு நிறுவனம் அமைக்கும் இந்த உருக்கு ஆலையால் கிராம சுற்றுச் சூழல், காற்று மாசடைதல், கடல்நீர் மாசடைதல் ஏற் படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த ஆலை அமைவதை போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதி அமைப்பு, அபே சாகு தலை மையில் எதிர்த்து வருகிறது.

இந்த அமைப்பினரு டன் தின்கியா கிராம மக்கள் 150 பேர் சாலையை சேதப் படுத்தினர். கடந்த சனிக்கிழ மையன்று தொழில்துறை உள்கட்டமைப்பு மேம் பாட்டுக் கழக தலைவர் மற் றும் மாநில டி.ஜி.பி. ஆகி யோர் இதே சாலைவழியாக வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆலைக் கான நிலம் கையகப்படுத்து தல் நடவடிக்கையை ஒரிசா மாநில அரசு நிறுத்திவைத் தது. மத்திய சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச்ச கம் பிறப்பித்த உத்தரவு கார ணமாக நில கையகப்படுத்து தல் நிறுத்தப்பட்டது. சமீ பத்தில் சுற்றுச்சூழல் அமைச் சகம் நிபந்தனை அனுமதி அளித்தது. இதனால் போஸ்கோ உருக்கு ஆலை அமைவதற் கான தடைகள் நீங்கின.

இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல”: பெண்கள் ஆவேசம்

நாடு பல்வேறு சவால் களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாலியல் விவ காரங்களில் அதிகமான அக்கறை காட்டி வரும் இத் தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு எதி ராக அந்நாட்டு மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங் களை நடத்தியுள்ளனர்.

ஞாயிறன்று நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் கலந்து கொண்டவர் களில் பெரும்பாலானவர் பெண்களாவர். இத்தாலி யில் உள்ள 200 நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தங்கள் இயக்கத்திற்கு, இப்போது இல்லாவிட்டால்.. எப் போது? என்று மக்கள் பெய ரிட்டிருக்கிறார்கள். சுக போக விழாக்கள், கோலா கலக் கொண்டாட்டங்கள் என்று தனது நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் சில்வியோ பெர்லுஸ் கோனி, பெண்களை வெறும் போகப் பொருட்களாகச் சித்தரிக்கும் கருத்துகளை யும் தெரிவித்து வருகிறார்.

தனது பொறுப்பைக் கவனிக்காமல் களியாட் டங்களில் பெர்லுஸ்கோ னி ஈடுபடுவதால் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆர்ப் பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெர்லுஸ்கோனியின் ஆத ரவாளர்களைக் கொண்டு எதிர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட் டது. பிரதமருக்கு எதிராகப் பத்து லட்சத்திற்கும் மேற் பட்ட மக்கள் ஆர்ப்பாட் டங்களில் கலந்து கொண் டதே எதிர் ஆர்ப்பாட்டங் கள் முறியடிக்கப் பட்டதற்குக் காரணமாகும்.

இத்தாலியின் பெருமுத லாளிகளில் பெர்லுஸ் கோனியும் ஒருவர். இதற்கு முன்பாக நான்கு முறை பிரதமராக இருந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் மீது ஏராளமான குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டுள் ளன. தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அண்மைக்காலங்களில் இத்தாலியில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட மாக ஞாயிறன்று நடை பெற்றதைக் கூறலாம் என் கிறார்கள் அரசியல் நோக் கர்கள்.

ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பங்கேற்பு மிக வும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி ஒன்றும் விபச்சார விடுதியல்ல என்ற முழக்கத் துடன் கூடிய அட்டை களைத் தாங்கிக் கொண்டு நாடு முழுவதும் பெண்கள் வலம் வந்துள்ளனர். பெண் கள் பற்றி மோசமான கருத் தைக் கொண்டுள்ள பிரதமர் அப்பதவியில் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் ஆவேச முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

விசாரணை வலை முழுமையாய் விரியட்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண்ஷோரிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 2001ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்கு மாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்ன ணியில், அருண்ஷோரியிடமும் விசாரணை நடத்தவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இந்த ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள முன் னாள் அமைச்சர் ஆ.ராசா ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்று முந்தைய ஆட்சியில் உரு வாக்கப்பட்ட நடைமுறையின் அடிப்படையில் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததாக திரும்பத்திரும்பக் கூறிவந்தார். பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தான் இந்த நடைமுறையை துவக்கி வைத்தது. அப்போது அந்தத்துறைக்கு பொறுப்பாக இருந்த வர் ‘மகா யோக்கியரான’ அருண்ஷோரிதான்.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறை முற்றிலும் தவறான ஒன்று என்று இந்த ஊழல் குறித்து விசாரிக்க அரசினால் அமைக்கப்பட்ட சிவராஜ்பாட்டீல் குழுவும் கூறி யுள்ளது. பாஜகவினரை வாயடைக்கச்செய்வதற் கான தந்திரமாக அன்றி, உண்மையில் ஒட்டு மொத்த ஊழலையும் தோண்டி எடுக்கும் வகை யில் சிபிஐயின் செயல்பாடு அமைய வேண்டும்.

2ஜி ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூ னிகேசன் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் பட்டது. இப்போது டாடா நிறுவன அதிகாரிகளிட மும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. ஆ.ராசாதான் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக வரவேண் டும் என்று அதீத ஆர்வம் காட்டியவர்கள் அம் பானியும் டாடாவும். அவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிப்பது அவசியமாகும்.

நீரா ராடியா-டாடா உரையாடல் டேப் வெளி யானபோது, இந்த விவரங்களை வெளியிடு வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன் றத்தின் கதவைத் தட்டினார் டாடா. அந்த டேப் பில் உள்ள விஷயங்கள் தவறு என்று அவர் கூறவில்லை. மாறாக, அந்த விவரங்களை வெளி யிடக்கூடாது என்றுதான் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய பலன்பெற்ற வர்கள் டாடா மற்றும் அம்பானி. அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவேண் டும். ராசாவின் ‘திறமை’ குறித்து முதல்வர் கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுத வேண்டிய தன் தேவை என்ன என்பதும் விசாரணை வளையத்திற்கு உட்பட்டதே.

ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து எஸ்-பேண்ட் ஊழல் வெளிவந்துள்ளது. இது பிரத மரின் நேரடிப்பொறுப்பில் உள்ள துறையில் நடந் துள்ள ஊழலாகும். ஆ.ராசா, பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று திரும்பத் திரும்பக் கூறினார். இதுதொடர்பாக பிரணாப் முகர்ஜியுடன் பேசிய வகையில்தான் காரியங் கள் நடக்கின்றன என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஆ.ராசாவுக்கு தாங்கள் கூறிய ஆலோசனை என்ன என்பது குறித்து பிரதமரோ, பிரணாப் முகர்ஜியோ வாய்திறக்க மறுக்கிறார் கள். பொதுக்கணக்குக்குழு முன்பு ஆஜராகத் தயார் என்று கூறிய பிரதமர் பிறகு, பின்வாங்கி விட்டார். நாட்டையே உலுக்கிவரும் இந்த தொடர் ஊழல் குறித்து பிரதமர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்.

தோண்டத்தோண்ட புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என்பதே மீண்டும் மீண்டும் முன்னுக்கு வருகிறது.

நுண்நிதி நிறுவனங்கள் - வரமா? சாபமா?

இலாப நோக்கில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் - பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றனவா அல்லது பெண்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறுகின்றனவா? என்ற பொருளில் வேலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய கருத்துப் பரி மாற்றத்தில் கிடைத்த படிப்பினைகள்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் (கடன் வாங்கிய பெண் மற்றும் கடன் வாங்கியவரின் மனைவி)இறந்தது குறித்த விசாரணைக்கு வலியுறுத்தியும், உண் மையை கண்டறியும் நோக்குடனும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்ற குழுவுடன் நானும் சென்றேன். எனக்கு தெரிந்தவரையில் இவ்விஷயத்தில் தலையீடு செய்து விசாரணையை மேற் கொண்ட முதல் மாதர் அமைப்பு, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்கொலை செய்துகொண்ட லட்சுமி பற்றிய தகவல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லட்சுமியும் அவரது கண வரும் வேலூர் நகரின் சத்துவாச்சாரி பகுதி யில் வசித்து வந்தனர். இவர்கள், தெருக் களில் உள்ள குப்பைகளை பொறுக்கி தங் களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். 3-4 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதித்து தங்க ளது 7 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். பார்ப்பதற்கு 15 வயதுடையவர் போலத் தோன்றும் லட்சுமியின் முதல் பெண்ணிற்கு வயது 20 என சொல்கிறார்கள். இவர் திரு மணமாகி கைக்குழந்தையுடன் இருக்கிறார். 3-4 வயதுடைய பெண்குழந்தை இவர்கள் வீட்டின் கடைக்குட்டியாகும். இந்நிலையில், ஒப்பந்தத் தொகையாக 75000 ரூபாயை உட னடியாகச் செலுத்திய நிறுவனம் ஒன்றிற்கு, குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் மாநக ராட்சி, டவுன் பஞ்சாயத்தால் அளிக்கப்பட் டது. இதனால், லட்சுமி மற்றும் அவரது கண வரின் வருமானம் நாளொன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் எனக் குறைந்தது. எனவே, இவர் கள் தங்களது குடும்பத்தின் பசியைப் போக்கி டவும், குழந்தைகளுக்கு கல்வியை அளித் திடவும் ஒரு நுண்நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கினர். முந்தைய கடனை திருப்பிச் செலுத்திட வேறொரு நிறுவனத் திடம் கடன் வாங்கினர். மஹாசேமம், ஷேர், ஸ்பன்டனா, எப்எப்சிஎல், முன்ஜீவன், காவேரி மற்றும் கிராம விடியல் ஆகிய ஏழு நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு கடன் வாங்கிய இவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கினர்.

தொழிலாளர் விரோத திமுக அரசு தூக்கியெறியப்படும்: அ.சவுந்தரராசன்

மதுரை, பிப்.14-

பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதக மாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படும் தமிழக அரசை ஆட்சியில் இருந்து தூக்கியெறிய மக்கள் தயாராகி விட் டார்கள் என சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கூறினார்.

தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்றக்கோரி மதுரை மாநகரில் சிஐடியு சார்பில் 7 இடங்களில் பிரச்சாரப்பயணம் நடைபெற்றது. இதன் நிறைவாக தெற்கு வாசல் மார்க்கெட் அருகே பொதுக்கூட் டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.சவுந்தரராசன் சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:

தேர்தலை முன்வைத்து பல கட்சிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலை யில், தொழிலாளர்களுக்கான தொழிற் சங்க அங்கீகார சட்டத்தை அமல்படுத்தக் கோரி சிஐடியு தமிழகம் முழுவதும் பிரச் சாரத்தை மேற்கொண்டுள்ளது. கடுமை யான விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என முதல் வர் கருணாநிதி கூறுகிறார். அப்படியென் றால் முதல்வராக அவர் இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள் என எடுத்துக் கொள்ளலாமா?

மின்வாரியத்தில் பணியாற்றும் முறை சாரா தொழிலாளிக்கு சத்துணவு ஊழிய ருக்கு இணையான ஊதியம் வழங்க வேண் டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அரசு நிறைவேற்றாமல் உள்ளது. டாஸ்மாக் தொழிலாளிக்கு மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டும் அவர்கள் வாங் கும் ஊதியம் 2800 ரூபாய் தான். அரசின் அனைத்துத்திட்டங்களுக்கும் பணம் கொட்டும் இத்துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் இல்லை. நூல் விலை உயர்வால் கோவை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏராளமான தொழி லாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் சலுகையை தமிழக அரசு வழங்கி யுள்ளது. ஆனால், தமிழகத் தொழிலாளர் களுக்கு சமவேலை சமஊதியம் வழங்க மறுக்கிறது. கேரளா, மேற்குவங்கம், சத் தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழிற் சங்க அங்கீகார சட்டம் இயற்றப்பட் டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அச்சட் டத்தை திமுக அரசு நிறைவேற்ற மறுக் கிறது என அவர் பேசினார்.

* உயிரைப் பறிக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குகிறது திரிணாமுல்

கொல்கத்தா, பிப். 14-

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி நடத்தி வரும் வன் முறை அரசியலுக்கு முடிவு கட்டு வோம் என்றும், உழைக்கும் மக்க ளின் வாழ்வை பாதுகாக்க இடது முன்னணியை மீண்டும் ஆட்சி யில் அமர்த்துவோம் என்றும் முத லமைச்சர் புத்ததேவ்பட்டாச் சார்யா அறைகூவல் விடுத்தார்.

 

கொல்கத்தா பிரிகேட் பரேட் மைதானத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இடது முன்னணியின் பிரம் மாண்ட பேரணி - பொதுக்கூட் டம் பிப்ரவரி 13 ஞாயிறன்று நடை பெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சார்யா, மேற்குவங் கத்தில் திரிணாமுல் கட்சியும், மாவோயிஸ்ட்டுகளும் கூட்டு வைத்துக் கொண்டு நடத்தி வரும் கொடிய வன்முறைகளுக்கு, மத்தி யில் ஆளும் காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆதரவு அளித்து வருவதை கடுமையாக சாடினார். இத்துணை வன்முறையை ஏவி னாலும் இடது முன்னணியிடமி ருந்து ஒரு சிறு அளவிற்கு கூட மக்களை இவர்களால் பிரிக்க முடியவில்லை என்பதையே இப் பேரணி உணர்த்துகிறது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இன்றைய கார்ட்டூன்