சர்வாதிகாரமும் வெளியேறட்டும்

அரசியல் உணர்வுடன் ஒன்றுபட்டுப் போரா டுகிற மக்களின் முன் எப்பேர்ப்பட்ட அடக்கு முறை ஆயுதமும் அடிபணியத்தான் வேண்டும். எகிப்து மக்களின் எழுச்சி இதைத்தான் காட்டு கிறது. முப்பதாண்டுகால சர்வாதிகார பீடத்திலி ருந்து ஹோஸ்னி முபாரக் வெளியேறியது ஒரு முக்கியமான வெற்றி. தாக்குதல்களுக்கு அஞ்சா மல் தெருக்களில் இறங்கியதற்கான இந்த முதல் கட்ட பலனைக் கொண்டாடுகிற எகிப்து மக்கள் உலகத்தின் வாழ்த்துக்கு உரியவர்கள்.

1967ம் ஆண்டிலிருந்து அவசர நிலை ஆட்சி தான் இருந்து வந்திருக்கிறது என்பதிலிருந்தே அங்கே எந்த அளவுக்கு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டிருந்தன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகத்திற்கு ஜனநாயக மாண்புகள் பற்றிப் பாடம் நடத்துகிற அமெரிக்க அரசு, இந்த அத்துமீறல்களைக் கண்டுகொண்டதில்லை. ஏனென்றால் அதன் உலகப் பொருளாதார ஆளு மை நோக்கங்களுக்கு ஒத்துழைத்தவர் முபாரக். தட்டிக் கேட்க முடியாத சர்வாதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்ட உள்நாட்டு - வெளி நாட்டு முதலாளிகளின் கொள்ளை, வாழ்க்கை யைக் கடினமாக்கிய விலைவாசி, எங்கும் எதி லும் ஊழல், எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடூரங்கள் என அனுபவித்த எகிப்து மக்கள் கொதித்துப் போயிருந்தார்கள்.
அரசியல் கைதி களாக சுமார் 30,000 பேர் எகிப்து சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தலை நகர் கெய்ரோவில் கூடியிருந்த மக்களிடையே, முபாரக் ஆட்கள் புகுந்து வன்முறைகளில் ஈடு பட்டதில் கிட்டத்தட்ட 2,000 பேர் படுகாயம் அடைந்தார்கள். எத்தனை பேர் கொல்லப்பட் டார்கள் என்ற முழுத்தகவல் இனிமேல்தான் வரவேண்டியிருக்கிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்டுவதாக தற்போ தைய மாற்றம் முழு வடிவம் பெற்றாக வேண் டும். சர்வாதிகாரி வெளியேறிவிட்டாலும், சர் வாதிகாரம் வெளியேறிவிட்டதாகச் சொல்லிவிட முடியாது. ஆட்சியதிகாரம் இப்போதும் ராணுவத் தின் கையில்தான் இருக்கிறது. எகிப்தின் பல் வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் ராணுவத் தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவற் றிற்கு அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்ட கன் ஆண்டுதோறும் நிதியுதவி அளித்து வந்திருக்கிறது. முபாரக்கால் துணை அதிபராக நியமிக்கப்பட்ட வரான ஒமர் சுலைமான் முன்னாள் உளவுத்துறை தலைவர். அமெரிக்க அரசுக்கு நெருக்கமானவர்.

இத்தகைய பின்னணியில், ஜனநாயகம் நிலைநாட்டப்படும் வரையில் போராட்டம் ஓயப் போவதில்லை என்று ஜனநாயக வாதிகள் அறி வித்திருக்கிறார்கள். சிலர், முழுமையான மக் களாட்சி ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் ராணுவமும் இணைந்த கூட்டாட்சியை இடைக் கால ஏற்பாடாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். ராணுவத் தலைவர்களோ, குடியாட்சி முறை கொண்டுவரப்படும் என்று பொதுவாக அறிவித்துக்கொண்டிருந்தாலும், அதற்கான திட்டவட்டமான நடவடிக்கைகள் தொடங்கப்படுகிற அறிகுறிகள் தென்படவில் லை. இதனிடையே, மதவாத வலதுசாரி அரசியலை அடிப்படையாகக் கொண்ட ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ என்ற அமைப்பு, மக்களின் அதிருப் தியையும் ஆவேசத்தையும் தனக்குச் சாதகமாக்கிக்கொள் ளும் முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை என்கிற ஆக்கப்பூர்வ வளர்ச்சிப்போக்கும் இருக்கிறது.

எகிப்து மக்களது எழுச்சி ஆள்பவரை மட் டும் மாற்றுவதாக அல்லாமல், ஆட்சிமுறை யையே மாற்றுவதற்கு இட்டுச் சென்றாக வேண் டும். ஏகாதிபத்தியக் கூர் விரல்களிலிருந்து விடு பட்ட, பிற்போக்குவாதிகளின் திசைதிருப்பல் களுக்கு வழியற்ற, குடியாட்சி நிலைநாட்டப்பட வேண்டும். தற்போதைய வெற்றிக் கொண் டாட்டம் அப்போதுதான் அர்த்தமுள்ளதாக நிறை வடையும்.

இன்றைய கார்ட்டூன்