‘என்ன உறவோ, என்ன பிரிவோ!’

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள் கையில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளா தாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையி லும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பது தான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தர வாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறு வனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

ஆட்சி மாற்றமும்! விலைவாசி உயர்வும்!

1967-ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முதன்மையான காரணங்களில் விலைவாசி உயர்வும் ஒன்றாகும். 1964-ல் தமிழ்நாட்டில் உண வுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற் றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வை முன்வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி’ ‘காமராஜ் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி’ ‘கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண் டடிப்பட்டு செத்தான் அத்தான்’ ‘கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தோற்று, திமுக வெற்றியும் பெற்றது. ஆனால் இன்று அதே திமுக அதே காங்கிரஸமூடன் கூட்டணி சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வை நியா யப்படுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அன் பழகன் விலைவாசி ஏற்றத்திற்கு ஆட்சி யாளர்கள் பொறுப்பில்லை என்றும், பூகம் பம், வெள்ளம் வருவதைப் போன்றுதான் விலைவாசி உயர்வும் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் ‘ஐந்தாம் தர டீ’ போன்றது!

“காங்கிரஸ் ‘ஐந்தாம் தர’ டீ போன் றது”. இது விசித்திரமான தலைப்பாகத் தோன்ற லாம். காங்கிரஸ் கட்சி பற்றி மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் எப்பொழுதுமே குறை சொல் பவர்கள் தான்! ஆனால் காங்கிரஸை இவ்வ ளவு மோசமானதாக வர்ணித்த சிறப்புக்குரிய வர்கள் இடதுசாரிகள் அல்ல. கலைஞர் நாள் தோறும் பேச்சிலும், எழுத்திலும் யாரைத் தன் னுடைய ஆசான் என்று குறிப்பிடுகிறாரோ, அந்த ஆசான் தான், அதாவது திமுக தலை வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் காங் கிரஸைப் பற்றி 1.2.1962 ல் ‘நம் நாடு’ இதழில் வெளிவந்த தனது உரைக்கு இந்தத் தலைப் பைக் கொடுத்திருக்கிறார்!

இன்றைய கார்ட்டூன்