மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர்

என்னுடைய உரையை மார்க்சியம் பற்றி அம்பேத்கர் என்றும், அம்பேத்கர் பற்றி மார்க்சியம் என்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் விஷயத்தைப் பொறுத்தவரை மார்க்சியம் பற்றிய தனது கருத்துக்களை அம்பேத்கர் ஆங்காங்கே பேசியிருந்தாலும் “புத்தரா? கார்ல் மார்க்சா?” எனும் நெடுங்கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே அலசியிருக்கிறார்.
மார்க்சியத்தில் இப்போதும் காலப்பொருத்தம் உள்ளவையாக இருப்பவை என்று அவர் நான்கு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒன்று - இதுவரை தத்துவஞானிகள் எல்லாம் உலகு பற்றிய பல்வேறு வியாக்யானங்களைத் தந்துள்ளார்கள், செய்ய வேண்டியது என்னவோ உலகை மாற்றுவதுதான். இரண்டு - ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே அவற்றின் நலன்களில் முரண்பாடு உள்ளது. அதாவது, வர்க்கப் போராட்டம் நடக்கிறது. மூன்று - தனியுடைமை யின் காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், இன்னொரு வர்க்கத்துக்கு சுரண்டலினால் வரும் துன்பமும் ஏற்படுகின்றன. நான்கு - சமுதாயத்தின் நன்மைக்காக தனியுடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.

தமிழால் என்ன பயன்? தமிழன் கேட்கிறான்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-27 தேதிகளில் நடக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருவதாக நாளும் செய்திகள் வருகின்றன. நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. தமிழுக்கு மாநாடு எனும் போது தமிழ் உள்ளங்கள் எல்லாம் மகிழத்தான் செய்யும்.

உண்மை. கடந்த ஆண்டு இதே மே மாதத்தில்தான் இலங்கையில் யுத்தம் தனது உச்சமான கோரமுகத்தைக் காட்டியது. குறிப்பாக, முள்ளிவாய்க்கால்  தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். நமது இதயங்கள் ரத்தக்கண்ணீர் வடித்தன. யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாக இலங்கை அரசு குதூகலத்தோடு அறிவித்தது. ஆனால் யுத்தம் முடிந்து ஓராண்டான பிறகும் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படவில்லை. பலாத்காரத்தால் எட்டப்படும் வெற்றி தற்காலிகமானதே என்பதையும், நியாயமான அரசியல் தீர்வே நிரந்தர வெற்றியைக் கொண்டு வரும் என்பதையும் அந்த நாட்டு அரசு உணர வேண்டும். தற்காலிக வெற்றி மதர்ப்பில் இருக்கும் அந்த அரசு இந்த உண்மையை உணருவதாகத் தெரியவில்லை.

ஸ்ரீஸ்ரீரவிசங்கரா... ஆர்.எஸ்.எஸ். ரவிசங்கரா?

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.

பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

கட்டுக்குள் விலைவாசி- அதிசயம் நடந்தது அலாவுதீன் ஆட்சியில்!

"உயர்ந்தவன் யார்?

கிராமவாசி? நகரவாசி?

இல்லை, விலைவாசி!"

-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.

மாக்சிம் கார்க்கி - வாழ்வும் இலக்கியமும்

மாக்சிம் கார்க்கி - உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள்.
இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.

இந்து மதம்!

இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

இன்றைய கார்ட்டூன்