நுண்நிதி நிறுவனங்கள் - வரமா? சாபமா?

இலாப நோக்கில் செயல்படும் நுண் நிதி நிறுவனங்கள் - பெண்களுக்கு அதிகாரமளிக்கின்றனவா அல்லது பெண்கள், ஏழைகள், தலித்துகள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறுகின்றனவா? என்ற பொருளில் வேலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய கருத்துப் பரி மாற்றத்தில் கிடைத்த படிப்பினைகள்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் (கடன் வாங்கிய பெண் மற்றும் கடன் வாங்கியவரின் மனைவி)இறந்தது குறித்த விசாரணைக்கு வலியுறுத்தியும், உண் மையை கண்டறியும் நோக்குடனும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்ற குழுவுடன் நானும் சென்றேன். எனக்கு தெரிந்தவரையில் இவ்விஷயத்தில் தலையீடு செய்து விசாரணையை மேற் கொண்ட முதல் மாதர் அமைப்பு, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம்தான். தற்கொலை செய்துகொண்ட லட்சுமி பற்றிய தகவல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக லட்சுமியும் அவரது கண வரும் வேலூர் நகரின் சத்துவாச்சாரி பகுதி யில் வசித்து வந்தனர். இவர்கள், தெருக் களில் உள்ள குப்பைகளை பொறுக்கி தங் களது வாழ்க்கையை நடத்தி வந்தனர். 3-4 ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள் நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பாதித்து தங்க ளது 7 குழந்தைகளையும் பராமரித்து வந்தனர். பார்ப்பதற்கு 15 வயதுடையவர் போலத் தோன்றும் லட்சுமியின் முதல் பெண்ணிற்கு வயது 20 என சொல்கிறார்கள். இவர் திரு மணமாகி கைக்குழந்தையுடன் இருக்கிறார். 3-4 வயதுடைய பெண்குழந்தை இவர்கள் வீட்டின் கடைக்குட்டியாகும். இந்நிலையில், ஒப்பந்தத் தொகையாக 75000 ரூபாயை உட னடியாகச் செலுத்திய நிறுவனம் ஒன்றிற்கு, குப்பை அகற்றும் பணிக்கான ஒப்பந்தம் மாநக ராட்சி, டவுன் பஞ்சாயத்தால் அளிக்கப்பட் டது. இதனால், லட்சுமி மற்றும் அவரது கண வரின் வருமானம் நாளொன்றுக்கு 100 முதல் 150 ரூபாய் எனக் குறைந்தது. எனவே, இவர் கள் தங்களது குடும்பத்தின் பசியைப் போக்கி டவும், குழந்தைகளுக்கு கல்வியை அளித் திடவும் ஒரு நுண்நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கினர். முந்தைய கடனை திருப்பிச் செலுத்திட வேறொரு நிறுவனத் திடம் கடன் வாங்கினர். மஹாசேமம், ஷேர், ஸ்பன்டனா, எப்எப்சிஎல், முன்ஜீவன், காவேரி மற்றும் கிராம விடியல் ஆகிய ஏழு நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு கடன் வாங்கிய இவர்கள் மீள முடியாத கடன் வலையில் சிக்கினர்.


படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கட்ட ணம் அல்லது முதல் தவணை அல்லது நிர் வாக செலவுகள் என்ற பெயரில் கடன் தொகையைக் கொடுக்கும்போதே பிடித்தம் செய்யப்படும் தொகையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடன் தொகைக்கு இவர்கள் வசூலிக்கும் வட்டியின் விகிதம் 48 முதல் 56 சதம் வரை இருக்கும் என்பது, இறந்து போன லட்சுமியின் மகள் தரும் விவ ரங்களிலிருந்து தெரிய வருகிறது. ஒரு கடனை திருப்பி செலுத்த வாங்கப்படும் மற் றொரு கடன் என்பதனைத் தாண்டி, ரேசன் அட்டையை அடமானம் வைப்பது (இது உண வுப் பாதுகாப்பில் பெரிய பாதிப்பினை ஏற் படுத்துகிறது), சமையல் எரிவாயு சிலிண் டரை அடகு வைப்பது (இதனால் எரிசக்தி பாதுகாப்பு இழக்கப்படுவதுடன் எரிசக்திக் கான இவர்களது செலவும் அதிகரிக்கிறது), வீட்டிலுள்ள தட்டு முட்டு சாமான்களை விற்பது (அல்லது நுண்நிதி நிறுவனங்களால் இவை பறிமுதல் செய்யப்படுவது), குழந்தை களை பிச்சையெடுக்க வைப்பது ஆகிய வழி முறைகளில் இவர்கள் தங்களின் வருமானத் தைப் பெறவும்; தவணைத் தொகையைத் தந் திடவும் முயன்றுள்ளனர்.

லட்சுமி இறந்த தினத்தன்று அவரது வீட் டிற்கு மகாசேமம், கிராம விடியல் ஆகிய இரண்டு நுண்நிதி நிறுவனங்களைச் சார்ந்த வர்கள் வந்துள்ளனர். அவரது மகளை மிகக் கேவலமான சொற்களால் திட்டி துன்புறுத்தி யுள்ளனர். ஒரு நிறுவனத்திலிருந்து வந்தவர் கள் காலை முதல் மாலை வரை அவரது வீட் டிலேயே முகாமிட்டபோது எப்படியோ சிரமப் பட்டு லட்சுமியின் மகள் தவணைத் தொகை யைச் செலுத்தினார். மாலையில் வந்த மற் றொரு நிறுவனத்தினரும் லட்சுமியின் மகள் வீட்டின் முன்பு முகாமிட்டபோது அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி அவரது மகள் கூறினாள். இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய லட்சுமிக்கு தனது மகள் நுண்நிதி நிறுவனத்தை சார்ந்தவர்களால் அவமானப் படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதைத் தாங்க முடியாத லட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்ததால் வாந்தி எடுத்தார். இதனையறிந்த அவரது மகள் அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் மன்றாடி 50 ரூபாயை கடனாகப் பெற்று தாயைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். எனினும், அவர் கள் மருத்துவரை சென்றடைந்தபோது காலம் கடந்திருந்தது.

ஒரு நிதி நிறுவனம் இறுதிச் சடங்கு செலவுகளுக்காக 2000 ரூபாயைக் கொடுத்து இயற்கையாக ஏற்பட்ட மரணம் என பதிவு செய்யும்படிக் கூறினர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தொகைக்கு பெறப் பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடனாகக் கொடுத்த தொகையை முழுமை யாகப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந் நிறுவனங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. அதிர்ஷ்டவசமாக இது பற்றி தெரிய வந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், லட்சுமியின் மகளை காவல் துறையிடம் இது குறித்து புகாரைப் பதிவு செய்ய வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இது போன்ற இன் னும் பல வடிவங்களிலான துன்புறுத்தல்கள் பற்றி மாதர் சங்கத்திற்கு தெரிய வந்தது. இத் தகைய கொடுமைகள் காரணமாக சில தற் கொலைகள் நிகழ்ந்துள்ளன. சிலவற்றில் கணவன்- மனைவி பிரிய நேர்ந்துள்ளது. பெண்களை பலவந்தமாகக் கடத்திடும் சில முயற்சிகளும் கூட நடைபெற்றுள்ளன. நுண் நிதி நிறுவனங்களும், குழுத் தலைவர்களும் கடன் வாங்கிய பெண்களிடம் “உங்களது உட லை விற்றாவது கடனை திருப்பிச் செலுத் துங்கள்” என சொல்வதாகவும் பெண்களை வாங்கி விற்று விபச்சாரத்திற்கு துணை புரியும் படி அவரது கணவரிடம் சொல்வதாகவும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த சில பெண்கள் புகார் கூறினர். கடனைத் திருப்பிச் செலுத்திட இயலாத ஆண்களிடம் அவர் களது மனைவியே கூட “கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நீயெல்லாம் ஒரு ஆம்பி ளையா, சம்பாதிச்சு உன்னால கடன திருப் பிக் கட்ட முடியாதா” என கேட்ட நிகழ்வுக ளும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக திருமண உறவு முறிவும் நடைபெற்றுள்ளன. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரு தற் கொலை மற்றும் இறப்பு நிகழ்வுகளில் இறந்த வர்கள் இருவருமே தலித் குடும்பங்களைச் சார்ந்தவராவர். இது போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட அனைவரும் தலித் பிரிவைச் சார்ந்தவர்களா என்பது குறித்து இறுதி முடி வுக்கு வருவதற்கு ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் திரும்ப வீட்டிற்கு சென்றால் கிராமத்திலுள்ள தலித் பிரிவினரல்லாத குழுத்தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனத் தைச் சார்ந்தவர்களால் அச்சுறுத்தப்படலாம் என தகவல் வந்தது கவலையை அளித்தது. எனவே, மாதர் சங்க குழுவினர் சேண்பாக் கத்திற்கு சென்றபோது நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது அங்கிருந்த குழுத் தலைவர்கள் (பெண்கள்) இடுப்பில் கை வைத்துக் கொண்டு “எதற்கு நீங்கள் வந்திருக் கிறீர்கள்? வங்கிகள் எங்களுக்கு கடன் கொடுக்காதபோது இவர்களாவது எங்களுக்கு கடன் கொடுக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்திட முடியாதவர்கள் எதற்கு கடன் வாங்குகிறார்கள்” என்றெல்லாம் கூறினர்.

தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதற் காக விவசாய நிலங்கள் விற்பனை செய்யப் படுவது, தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டம் மிக மோசமாக செயல்படுத்தப்படுவது, நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் மகளிர் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படாதது, வறுமையை ஒழிப்பதற்கான போதிய திட்டங்கள் இல்லா தது அல்லது திட்டங்களை நடைமுறைப் படுத்துவதில் உள்ள பலவீனம் ஆகியன பற் றிய விவரங்கள் வெளிப்பட்டன.

இத்தகைய கொடிய நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடமும் காவல் துறையிடமும் பரிந்துரைத்துள்ளது.

* நுண்கடன் வழங்கும் நிறுவனங்க ளின் துன்புறுத்தலால் நிகழ்ந்திருக்கும் மர ணங்கள், ஊரை விட்டு வெளியேற்றம் போன்ற சம்பவங்களை முழுமையாக விசாரித்து உண் மையை அறிந்திட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

* இத்தகைய மரணங்களை வறுமை யால் நடைபெற்ற தற்கொலை என காவல் துறை பதிவு செய்வதை தடுத்து உண்மை யான காரணத்தை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை அந்த பரிந்துரைகள்.

நுண்நிதி நிறுவனங்கள் தோன்றியது என் பது ஏதோ தற்செயலான நிகழ்வல்ல. நவீன தாராளமயச் சூழலில் நிதித் துறைச் சீர் திருத்தங்கள் இவற்றின் தோற்றத்திற்கு வழி கோலின. நுண்நிதி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு பதிலாக வரவுள்ள புதிய மசோதா அல்லது ஆந்திர மாநிலத்தின் அவ சரச் சட்டம் ஆகிய இரண்டுமே இத்தகைய நுண்நிதி நிறுவனங்கள் விதிக்கும் வட்டி விகிதத்திற்கு உச்சவரம்பினை விதித்திட மறுத்துவிட்டன. இந்த குறிப்பிட்ட பிரச்சனை யை எடுப்பதுடன், மத்திய அரசு பின்பற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையையும் விவாதத்திற்கு உள்ளாக்கிப் போராட வேண்டும்.

கட்டுரையாளர், சுயேச்சையான ஆராய்ச்சியாளர்.

இன்றைய கார்ட்டூன்