எல்ஐசி முகவர்களை ஒழித்துக்கட்ட முயலுவதா?

ஐஆர்டிஏ என்று அழைக்கப் படும் இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் 1.7.2011 முதல் நிலைத்த பராமரிப்பு (ஞநுசுளுஐளுகூநுசூஊலு ஞடீடுஐஊலு) என்ற பெயரில் முகவர்கள் மேல் புதிய தாக்குதலை துவக்கியுள்ளது.

இதன்படி 1.7.2012ல் ஒரு முக வரிடம் உள்ள 50 சதவீத பாலிசிக ளும், அடுத்த இரண்டு ஆண்டு களிலும் அதே 50 சதவீதம் காலா வதியாகாமல் முகவர்களே பரா மரிக்க வேண்டும்.

மேலும் நான்காவது ஆண்டில் 75 சதவீதம் நடப்பில் பராமரிக்கப் பட வேண்டும். இது பாலிசி மற்றும் பிரீ மியம் இரண்டிலும் தொடர வேண் டும். இல்லையெனில் முகவரின் லைசென்ஸ் பறிக்கப்படுவதோடு அவரின் தொடர் கமிஷனும் நிறுத் தப்படும்.

இது ஆழமாகப் பரிசீலிக்கப்படாத மேலோட்டமான ஒரு விதிமுறை. முகவர்களைப் பொறுத்தவரை கமி ஷன்தான் அவர்களது அடிப் படை வருமானம். நிரந்தரமான குறைந்த பட்ச மாத வருமானம் என்பது கூடக் கிடையாது.

எனவே, தொடர் கமிஷனைப் பெறுவதற்காக அவர்கள் ஒவ்வொரு நாளும் பாலிசிகளை புதுப்பிப்பதி லும் பராமரிப்பதிலும் செலுத்தும் மனித உழைப்பு விவரிக்க இயலா தது. காலாவதிக்குக் காரணம் மத் திய அரசின் சமச்சீரற்ற புதிய பொரு ளாதாரக்கொள்கை, விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயிப்பு போன்றவைதான்.

ஆனாலும் இன்று 14 லட்சம் முகவர்கள் இந்த தொழிலில் ஈடுபட் டுள்ளனர். வருடத்திற்கு ஒரு லட் சம் முகவர்கள் பணி நெருக்கடி தாங்காமல் வெளியேறினால் புதி தாக வேலையில்லாப் பட்டாளத்தி லிருந்து ஒரு லட்சம் இளைஞர்கள் உள்ளே வருகிறார்கள். முகவர்களுக் கென்று 1972 சட்டம் (ஹபநவேள ஹஉவ-1972) உள்ளது. இதைப் பலமுறை திருத்தி இன்று ஆண்டிற்கு 12 பாலிசிகளும் ஒரு லட்சம் பிரிமீயமும் என்று மாற் றியதால் சென்ற ஆண்டில் லட்சக் கணக்கான முகவர்கள் வெளியேற் றப்பட்டனர். இதை எதிர்த்து கொல் கத்தா உயர்நீதிமன்றத்தில் ‘லிகாய்’ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த லட் சணத்தில் ஸ்வரூப் கமிட்டி பரிந் துரை ஒன்று, நாடாளுமன்ற நிலைக் குழுவால் நிராகரிக்கப்பட்டும் கத்தி போல் தொங்கிக்கொண்டிருக்கிறது.

வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்சூரன்ஸ் திருத்த மசோதாக்கள் விவாதத்திற்கு எடுக் கப்படுமென நிதியமைச்சர் அறிவித்து, தனியார் நிறுவனங்கள் வயிற்றில் பால்வார்த்துவிட்டார். இந்த மசோ தாக்கள் நிறைவேறினால் எல்ஐ சியே பாதிக்கப்படும். இதை எதிர்த்து ஊழியர்களும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். ஆனால், அதிக மாக பாதிக்கப்படப்போவது முகவர் கள்தான். சட்டப்பூர்வமாக வாங்கிக் கொண்டிருக்கும் கமிஷன், தொடர் கமிஷன் எல்லாமே கேள்விக்குறி தான். இந்த மசோதாக்கள் நிறை வேறிவிட்டால் பின்பு உச்சநீதிமன் றத்தில் கூட தீர்வு கிடைக்காது.

எல்ஐசியைப் பாதுகாப்பதும், பொதுத்துறையில் நீடிக்கப்போராடு வதும், ஒரு தேசபக்திமிக்க நம்மைப் போன்ற தொழிற்சங்கங்களின் அடிப்படைக்கொள்கை. அத்துடன் முகவர்களுக்கான உரிமைகளுக் குத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலமும், போராட்டங்கள் மூலமும் தீர்வுகண்டு வருவது “லிகாய்” மட் டுமே தொழிற்சங்க விதிகளின்படி பதிவு செய்யப்பட்டு, அகில இந்திய மத்திய தொழிற்சங்கத்துடன் இணைந்து செயல்படும் ஒரே சங்கம் லிகாய். எனவேதான் ஒரு தொழிற்சங்கத்திற்குரிய பொறுப் போடு கோரிக்கை சாசனம் முன் வைத்து, பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள், நீதிமன்றம் என அனைத்து வழிகளிலும் முகவர் களின் தலைநிமிர்ந்த நல்வாழ்விற் காக வழிகாட்டிவருகிறது.

கட்டுரையாளர், மாநிலப் பொதுச்செயலாளர்

அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம், தமிழ்நாடு

இன்றைய கார்ட்டூன்