பிரதமர் அறியாத பெரிய ஊழல்கள்!

“நாங்கள் ஊழலுக்கு எதிரிகள்; லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க அவ தாரமெடுத்திருப்பவர்கள்” என்று அடிக் கடி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பேசுகிறார். ஏற்கெனவே போபர்ஸ் ஊழ லைப் பந்தாடியவர். தனது உறவினரான குவாத்ரோச்சியை ஊழல் வழக்கிலிருந்து ஓட ஓட விரட்டியடித்தவர்.

பிரதமர் மன்மோகன் சிங் ஒரு அதிச யப்பிறவி. எத்தனை பெரிய ஊழலானா லும் ‘எனக்குத் தெரியாது’ என்று ஒரே போடாய் போடுவார். 1.76 லட்சம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் பற்றி அது நடந்த போதே, பிரதமருக்குத் தெரிந்தே நடந்தது என்ற உண்மை வெளிவந்து விட்டது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வுக்கும் பிரதமருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட் டிக்கு அநியாயமாக ரூ.76 ஆயிரம் கோடி செலவுக்கணக்கு எழுதப்பட்டது. இதில் நேரடியாய் ஈடுபட்ட காங்கிரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடி தற்போது திகார் சிறையில் உள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல் பற்றியும் முதலிலேயே பிரதமர் எச் சரிக்கப்பட்டார் என்ற செய்தியும் தற் போது வெளியாகியுள்ளது.

கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் படுகையில் எரிவாயு எடுப்பதற்கு அம் பானிகளின் ரிலையன்ஸ் கம்பெனிக்கு உரிமம் வழங்கியது மத்திய அரசு. இதில் ரிலையன்ஸ் கம்பெனிக்கு அநீதியான முறையில் பல சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. அடிமாட்டு ரேட்டுக்கு உரி மம் வழங்கி பெரும் முறைகேடு நடந் துள்ளது. இந்த ஊழலில் ரூ.45 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட் டுள்ளதாய் கூறப்படுகிறது. இதை மத்திய அரசின் தணிக்கைத்துறை அறிக்கை யாக வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் குறித்துப்பிரதமர் அலுவலகத்திற்குப் பல கடிதங்கள் எழுதி எச்சரித்ததாக ஓய்வு பெற்ற ஒரு வருவாய்த்துறை செயலாளர் கூறியுள்ளார். பலமுறை எச்சரித்தும் பிரதமர் அலுவலகம் தனது கடிதங்கள் வந்ததாகக்கூடக் காட்டிக்கொள்ள வில்லை என்று அந்த அதிகாரி மிகுந்த மனவேதனையை வெளிப்படுத்தியுள் ளார்.

ஆக மிகப்பெரிய ஊழல்கள் எல்லாம் பிரதமர் அலுவலகத்திற்கு முன்கூட்டித் தெரிந்தே நடந்திருக்கிறது. ஆனால் பிரதமருக்கு மட்டும் தெரியாது. அதாவது பிரதமர் பெயர் போட்டுப் பிரதமர் அலு வலகத்திற்கு வரும் எச்சரிக்கைக் கடி தங்கள் மட்டும் பிரதமருக்குத் தெரியாது. இப்போது இதெல்லாம் நாட்டுக்கே தெரிந்துவிட்டது. இவற்றை தனது பார் வைக்கு வரவிடாமல் தடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க லாமே பிரதமர்? அப்படி எவரும் மறைக் கவில்லை என்றால் அனைத்தும் பிரதம ருக்குத் தெரிந்துதானே நடந்திருக்கிறது?

2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடு பட்டது திமுக அமைச்சர். கூட்டணி தர் மம் காக்க பிரதமர் தலையிடவில்லை என்றால் கூட, காமன்வெல்த் விளை யாட்டு ஊழல், எரிவாயு ஊழல்களிலா வது தலையிட்டுத் தடுத்திருக்கலாம். பல ஊழல்கள் பற்றித் தெரிந்தாலும் பிரதம ரின் தலையிடாமைக்குக் காரணம் ஊழல் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்பது தான்!

ஊழலை மறைப்பதில் மன்மோகன் சிங்கை யாரும் மிஞ்ச முடியாது என்று நிரூபித்துவிட்டார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத் திற்கும் உள்ள உறவு அம்பலமாகி விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி முனைப்பாக இருக்கிறது. முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்குக்குழுவின் முடிவுகளை மூடி மறைக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ்-திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக ஜோஷியைத் தலைவர் பதவி யிலிருந்து நீக்கிவிட்டு புதிய தலை வரைத் தேர்வு செய்தனர். இந்தத் தில்லு முல்லை சபாநாயகர் ரத்து செய்து, மீண் டும் ஜோஷியைத் தலைவராக நியமித் தார். எனினும் ஊழலை வெளிக்கொணர முடியாமல் பொதுக்கணக்குக்குழு முட மாக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி முழு விசா ரணை செய்ய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடின. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காங்கி ரஸ் எம்.பி.யான பி.சி.சாக்கோ தலைமை யில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இப்போது சாக்கோ, 1990 முதல் விசா ரிக்க வேண்டும் என்று கூறி 21 ஆண் டுகள் பின்னோக்கித் தாவிக்குதிக்கிறார். இதன் நோக்கம் இப்போதைய ஸ்பெக்ட் ரம் ஊழலை கைகழுவி விடுவதுதான்.

பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் ஜோஷி 2ஜி அலைக்கற்றை ஊழலால் நாட்டுக்கு ரூ.1.9 லட்சம் கோடி நட்டம் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போ தைய மத்தியஅமைச்சர் கபில்சிபல், நஷ்டம் ஒரு பைசா கூட இல்லை என்று புளுகி காங்கிரஸ் தலைமையைக் காப் பாற்ற முயற்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி சாக்கோ மூலம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவையும் செயல்படவிடாமல் முடக்க முயற்சிக்கிறது.

தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல கோடி ரூபாய் ஊழல் செய்த ராசாவையும், தயாநிதி மாறனையும் மத் திய அமைச்சர்களாக்கி, மந்திரி சபையில் இடமளித்தவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாதான். உச்சநீதிமன்றம் தலை யிட்டிருப்பதால் ஒன்றும் செய்ய முடியா மல் விழிப்பதும் அவர்தான். இல்லை யேல் இந்த மாபெரும் ஊழல்களை போபர்ஸ் பீரங்கி மூலம் சுடப்பட்டு ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியும்.

“பொழுதெல்லாம் எங்கள் செல்வம்

கொள்ளை கொண்டு போகவோ?

நாங்கள் சாகவோ?” என்று பாடினான் பாரதி.

சோனியா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த கடந்த ஏழாண்டு காலத்தில் நம் நாட்டின் செல்வ வளம் மத்திய அமைச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஊழல்கள் உலகப்புகழ் பெற்றுவிட்டன. உலகிலேயே மாபெரும் ஊழல் என்ற பட்டம் 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு கிடைத்துள்ளது.

இந்த ஊழல் கும்பல் வெளிநாடு களில் சொத்துக்களை வாங்கிக்குவித் துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந் தியப் பணம் பல லட்சம் கோடி பதுக்கப் பட்டுள்ளது. வருமான வரித்துறையை ஏமாற்றி கடத்தப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு தனது சுண்டுவிரலைக் கூட அசைக்கத் தயா ராக இல்லை. அதில் பெரும்பகுதி கருப் புப்பணம் காங்கிரஸ் தலைவர்களின் பணம் என்றும் அதனால் திரும்பக் கொண்டுவர மத்திய அரசு எந்த முயற் சியும் செய்யாது என்று மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார். சோனியா தனது மகன் ராகுல் பெயரில் சுவிஸ் வங்கியில் பல்லா யிரம்கோடி ரூபாய்களைப் பதுக்கியிருப் பதாக பிரபல பொருளாதார நிபுணர் குரு மூர்த்தி ஆதாரங்களுடன் செய்தி வெளி யிட்டார். இது அம்பலமாகிவிட்டதால் அப்பணத்தை வேறு முதலீட்டுக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் செய்திகள் வந் துள்ளன.

கோடிக்கணக்கான மக்கள் வறுமை யில் வாடும் நாட்டில் சிலர் கையில் கோடி கோடியாய் குவிந்துள்ளது. இவர்களது கருப்புப்பணத்தையும், சொத்துக்களை யும் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஊழலை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளும் இதில் பங்கேற் கின்றன.

பாஜக ஆட்சியில் இருந்தபோது ஊழல், கருப்புப்பணத்திற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை. இப்போது எதிர்ப்பதாக நாடகமாடுகிறது. அரசின் மீது வளர்ந்துவரும் அதிருப்திகளை ஆதாயமாக்க முயற்சிக்கிறது. இது மக்களுக்கு நன்கு புரியும்.

இடதுசாரிகளின் ஊழலுக்கு எதிரான எழுச்சி நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய கார்ட்டூன்