சமச்சீர் கல்வி என்றால் என்ன?

அரசுகள் தயாரித்த ஆய்வறிக்கை களை படித்தால் “தரமிகு கல்வி, தரமிகு போதனை முறைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, ஏழைகளும் தர மான கல்வியைப் பெற வாய்ப்பு களை ஏற் படுத்துவது, அதாவது இந்திய பெண் ணும், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதி யினரும், ஆதிவாசியினரும், சிறுபான்மை யினரும் தேடுகல்வியைப் பெற சம வாய்ப் புகளை உருவாக்குவது,
இன்னும் கூர் மையாக சொல்வதென்றால் தேச மொத்த வருவாயில் 6 சதவீதம் கல்விக்கென ஒதுக்கி, கூரை இல்லா பள்ளி, கழிப்பிட வசதி இல்லாத பள்ளி, பாடத்திற்கேற்ற ஆசிரியர்கள் இல்லாத பள்ளி என்ற நிலையை மாற்றுவதில் தொடங்குவது, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்றுவது, ஆசிரி யர்களுக்கு பயிற்சி முகாம், தேவைக் கேற்ற எண்ணிக்கையில் ஆசிரியர்களை திட்டமிட்டு உருவாக்க தேவையான வசதிகளைக் கொண்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையங்கள், பயிற்றுவிக்கும் முறைகளை மேம்படுத்த ஆய்வு மையங் கள், தேவைப்பட்டால் பிற நாடுகளின் அனுபவங்களை பெற ஆசிரியர்களை அனுப்புவது, இவைகளோடு தரமிகு கல்வியை இணைப்பதே சமச்சீர் கல்வி எனப்படுகிறது” போன்ற எண்ணற்ற விபரங்களைக் காண முடியும்.

தரமிகு கல்வி என்றால் என்ன? ஒவ்வோர் மனிதனிடமும் உள்ளார்ந்து கிடக்கும் திறமைகளை வளர்ப்பதோடு சக மனிதர்களுக்கு தான் கடமைப்பட்டி ருப்பதை உணரவைக்கும் முயற்சியாக வும், உடலுழைப்பை நேசிக்கவும், கருத் துழைப்போடு இணைக்கவும் வல்ல கல்வி முறை அமைந்தால் அதுவே தர மான கல்வி எனப்படும் என்பதும் அந்த அறிக்கைகளிலே தெளிவாகக் காண முடியும்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள கல்வி அறிக்கைகள் எல்லாவற்றிலும் சோசலிச மணம் கமழும். இப்பொழு தைய அறிக்கைகளில் எல்லாம் தாராள மயம் கமழும். படிப்பதற்கு இனிக்கும் கல்வி பற்றி விழித்துக் கொண்டே கனவு காண்பதற்கு சிறந்த வழி இந்த அறிக்கை களை படிப்பதே!

ஆனால் இன்றும் சமச்சீர்கல்வியை இந்த அரசுகளால் தரமுடியவில்லையே, எழுத்தறிவற்றவர்களின் எண்ணிக்கை 35 கோடியை எட்டி நிற்கிறதே ஏன்? கீழ் படிப்பு, மேல்படிப்பு எல்லாமே பள்ளத் தில் கிடக்கிறதே ஏன்? ஒரு இந்தியனது அறிவு மிளிர வேண்டுமானால் மேல்படிப் பிற்கு மேல்நாடு செல்லுகிற ஒரு வழி தானே உள்ளது ஏன்?

1949ல் ஐன்ஸ்டீன் எழுதியது இன் றும் நமக்குப் பொருந்தும். “தனிநபரை முடக்கிவிடுவதுதான் முதலாளித்துவத் தின் மிக மோசமான தீமையாக நான் கருதுகிறேன். நம்முடைய கல்வி முறை முழுவதும் இந்த தீமையால் பிணைக்கப் பட்டு துன்புறுகிறது. மாணவர்களுக்கு அளவிற்கு மீறிய போட்டி மனப்பான்மை புகட்டுகிறது. எதிர்கால வேலை வாய்ப் பிற்கு தேவையானதை அடைவதில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையை பூசிக்கவே பயிற்றுவிக்கப்படுகிறது. வெற் றியையும், அதிகாரத்தையும் போற்றி பூசிப் பதற்குப் பதிலாக ஒவ்வோர் மனிதனிட மும் உள்ளார்ந்து கிடக்கும் இயல்பான திறமைகளை வளர்ப்பதோடு, சகமனிதர் களுக்கு தான் கடமைப்பட்டிருப்பதை உணரவைக்கும் முயற்சியாகவும் கல்வி அமைய மக்களின் கண்காணிப்பையும் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் அச் சாக கொண்ட சோசலிசம் வேண்டும்” என்றார்.(ஹடநெசவ நுiளேவநin, 1949, டீn நுனரஉயவiடிn )

1934ல் ஐன்ஸ்டீன் பள்ளிக் குழந்தை களை பார்த்து பேச நேர்ந்த பொழுது, அன்புமிகு குழந்தைகளே! உங்களை பார்க்க மகிழ்ச்சி மிகுகிறது. நீங்கள் பள்ளி யில் படிக்கிற விந்தை விஷயங்கள் உல கத்திலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் தலை முறை தலைமுறையாக ஆர்வமிகு முயற் சியாலும், எல்லையில்லாத உழைப்பா லும் வந்தது என்பதை மனதில் கொள்க. இந்த ஞானம் பரம்பரை சொத்தாக உங் களது கைகளிலே தரப்படுகிறது. அதை மதிக்கவும், அதனை வளர்க்கவும் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு நாளில் உங்களது குழந்தைகளிடம் கொடுங்கள். இப்படி யாக அழியும் நாம் கூட்டாக முயற்சித்தே அழியாத ஒன்றை அடையமுடியும் என் பதை மனதில் இருத்திக் கொண்டால்தான் வாழ்வதின் அர்த்தம் புரியும், பணியின் பொருள் புரியும், பிற நாடுகளைப் பற்றியும், பிற காலகட்டத்தை பற்றியும் சரியான பார் வையை பெறமுடியும் என்றார். அநேகமாக எல்லா நாட்டு கல்வியாளர்களும், ஐன்ஸ் டீன் குறிப்பிட்ட சோசலிசம் என்ற சொல் லைத் தவிர மற்றதை அப்படியே ஏற்றுக் கொள்வர். நமது நாட்டு கல்வியாளர்களும் இதனை ஏற்பர். இங்குள்ள நிலவர மென்ன?

நமது நாட்டில் சமச்சீர் கல்வி என்ற கோட்பாட்டை இதுவரை ஆட்சியில் அமர்ந்தவர்கள் விரும்பி ஏற்கவில்லை. இடதுசாரிகளின் அரசியல் நிர்ப்பந்தம், மக்களின் போராட்டங்கள், இவைகளை சமாளிக்கும் நோக்கத்தோடு முதலில் சோசலிச மணமும், பின்னர் தாராளமய மும் கமழும் சொற்களால் அறிக்கை களை தயாரிக்கின்றனர். மக்களை ஏமாற் றவும், அதிகாரத்தை கைப்பற்றவும் அல் லது நழுவவிடாமல் காக்கவும் ஒரு கரு வியாக அவைகளை பயன்படுத்தி வரு கின்றனர்.

ஆய்வறிக்கைகளை புரட்டினால் இந்த சமச்சீர் கல்விக் கோட்பாடு எப்படி உருவானது? எதற்குப் பயன்படுகிறது? என்பது புலப்படும். இந்திய-சீன எல்லை மோதலில், இந்தியா தோற்றநிலையில் கல்விமுறையில் உள்ள கோளாறே இந்தியாவின் பலகீனத்திற்கு காரணம் என்ற முடிவிற்கு வந்தனர். கல்வியை மேம்படுத்த நிபுணர்கள் குழு (1964- 66) மத்திய அரசு நியமித்தது. 1949ல் நம்மை விட கீழ் நிலையில் கிடந்த சீனக் கல்வி உயர்ந்தது எப்படி என்பதை அந்த குழு நேர்மையாக ஆய்வு செய்து அரசு செய்ய வேண்டியதை அறிக்கையாக தயாரித்து கொடுத்தது. அதன் முக்கிய சிபாரிசு, தேச மொத்த வருவாயில் 6 சதவீதம் கல்விக் காக மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பதே, இந்த சிபாரிசுகளின் மிகப் பெரிய ஒரே பலகீனம், தாய் மொழி வழிக் கல்வியை புறக்கணித்து மும்மொழிக் கொள்கையை சிபாரிசு செய்தது தான்.

அன்றைய இந்திரா அரசு இந்த அறிக்கையை துவக்கத்தில் தொட்டுக் கூட பார்க்கவில்லை. 1967 தேர்தலில் பல மாநில அரசுகளை இழந்த நிலையில் காங்கிரஸ் அரசு சமச்சீர் கல்வி கோட் பாட்டை ஏற்றதாக 1968ல் அறிவித்தது. இதன் நோக்கம் சமச்சீர் கல்வியை புகுத்துவதல்ல, அதைக்காட்டி மாநில அதிகாரப்பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டுவந்து மாநில அரசுகளின் அதிகார வரம்பை சுருக்குவதுதான்.

வேதனை என்னவெனில், 6 சதவிகித நிதி ஒதுக்கீடு என்பதை மத்தியிலிருந்த எந்த ஆட்சியாளர்களும் பட்ஜெட்டில் ஒதுக்கியது கிடையாது. 2011-12 பட்ஜெட் டிலும் ஒதுக்கவில்லை. மாநில அரசுக ளும் நிதி ஆதாரக் குறைவைக் காட்டி ஒதுக்குவதில்லை. இது தமிழகத்திற்கும் நன்றாகவே பொருந்தும். ஆனால் நடப்ப தென்ன?

நிபுணர்களும், ஆசிரியர்களும், பெற் றோர் ஆசிரியர் அமைப்புகளும் அக்கறை காட்ட வேண்டிய பாடத்திட்டங்களை சிதைத்து, சீரழித்துவிட்டு திமுக சமச்சீர் கல்விக்காக புலம்புவது வேடிக்கையாக உள்ளது.

ஊடகங்களும் நிதி ஒதுக்கீட்டிற்கும், தாய் மொழி வழிக் கல்விக்கும் குரல் கொடுக்காமல் பாடத்திட்டத்தை வைத்து மோதிக்கொள்வதை சுற்றி சுற்றி வருவது இவையெல்லாம் சமச்சீர் கல்வியை காலில் போட்டு மிதிப்பதாகும். தானும் நிதி ஒதுக்காமல் 6 சதவீதம் ஒதுக்க மறுக்கும் மத்திய அரசையும் வற்புறுத்தா மல் சமச்சீர் கல்வியைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது.

மத்திய அரசு, மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டுபோனதே மாநில அதிகாரத் தைப் பறிக்கும் நோக்கமே தவிர நாடு தழுவிய சமச்சீர் கல்வியை கொண்டு வர அல்ல என்பதை வருடா வருடம் சமர்ப் பிக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை கள் சாட்சியம் கூறும். தேச மொத்த வரு வாயில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்ற சிபாரிசை ஏற்று 50 ஆண்டுகள் கடந்த பிறகும் ஒதுக்காமல் சமச்சீர் கல்வியைப்பற்றி பேசுவதை மக் கள் கவனிக்காமலா இருப்பார்கள்? அதி கார அரசியலுக்கு நன்றாகவே பயன் பட்டு வருவதை பார்க்காமலா இருப்பார் கள்? சமச்சீர் கல்வியை ஏட்டளவில் வைக்க மேல்தட்டு வர்க்கமும், அதிகார வர்க்கமும், புதுப்பணக்கார வர்க்கமும் சதிவலை பின்னியுள்ளன. விரிவடைந்த வலுவான மக்கள் இயக்கங்கள் மூலமே உண்மையான சமச்சீர் கல்வியை உத்தர வாதப்படுத்த முடியும்.

கட்டுரையாளர்,

மாநிலக்குழு உறுப்பினர் - சிபிஐ (எம்)

இன்றைய கார்ட்டூன்