மின்சாரக்கனவு: மாயையும் உண்மையும்

மின்சாரம் குறித்து பாரதப் பிரதமர் கவ லையாம்! ஆய்வு நடத்துவதற்காக மாநிலங் களின் மின்துறை அமைச்சர்களை அழைக் கப் போகிறாராம். நல்லது! இந்தியா முழுவதும் மின்வெட்டு! என்ன செய்வார்? பாவம். மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியாருக்கு விடவேண்டும் என்ற தேசிய மின்கொள்கையை வகுத்தவர் அல்லவா அந்தப் புண்ணியவான்!
டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் கொண்டுவந்த தேசிய மின்கொள் கையை மாற்றி புதிய தேசிய மின்கொள்கை யைக் கொண்டு வந்தவர் ஆயிற்றே. அன்றி லிருந்து தில்லி, மும்பை நகரங்களில் தனி யார்தான் மின்விநியோகம் செய்கின்றனர். மின்வெட்டு இல்லாமல் மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்களாம். அதிகமில்லை ஜென்டில் மென்ஸ், ஒரு நாளில் வெறும் ஏழு மணி நேர மின்வெட்டுதான்!

அனைவருக்கும் மின்சாரம் என்ற தாரக மந்திரம் இதற்காக உருவாக்கப்பட்டது. இப் படிப்பட்ட தொழிலில் முதலாளிகள் ஆதாயம் இல்லாமல் இருந்தால் உடனடியாக இறங்கு வார்களா? ஆதாயத்தை செய்து தர அரசு முன் வந்தது. மின் உற்பத்தியில் ஈடுபடும் முதலா ளிகளுக்கு நிதி ஏற்பாடு, வரிச்சலுகை, பத்து ஆண்டுகளுக்கு லாப உத்தரவாதம், சந்தை யை அரசு ஏற்படுத்திக் கொடுத்தல், மாநில அரசுகள் வாங்கிய மின்சாரத்திற்கு பணம் அளிக்கவில்லை என்றால், மாநில அரசின் வங்கிக் கணக்கையே பிணையாக வைத்தல் என எண்ணற்ற சலுகைகளை அளித்தது. வெளிநாட்டு முதலாளிகள் மின்உற்பத்தியில் முதலீடு செய்தால் மத்திய அரசே பிணையை அளித்தது.

இக்கொள்கை உருவான நாளிலிருந்து மத்திய அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்வ தற்கு தனியாரை மட்டுமே நம்பியது. அதற் காக ஏழைகள் மின்சாரத்தை வாங்கி பயன் படுத்துகின்ற அளவிற்கு மின்சார விலை இருக்க வேண்டுமென்றால், மின்சாரத் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதற்காக இயற்றப் பட்ட “இந்திய மின்வழங்கல் 1948ஆம் ஆண்டு சட்டம்” தனியாரும் மின்உற்பத்தி, மின்விநியோகம் செய்து கொள்வதற்கான வகையில் மின்சார சட்டம் திருத்தி அமைக் கப்பட்டது. அனல் மின்நிலையத்திற்கு தேவையான எரிபொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள புதிய எரிபொருள் கொள்கை உருவாக்கப்பட்டது. தனியாரும், அரசும் ஒரே துறையில் செயல் படும் பொழுது முதலாளிகளுக்கு சாதகமான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒழுங்குமுறை ஆணையம் என்ற பெயரில் ஒரு இடைநிலை அமைப்பு அமைக்கப் பட்டது.

இவற்றையெல்லாம் செய்து முடித்த பின் னால் மாநில மின்சார வாரியத்தின் செயல் பாடுகளைப் பற்றியும், 2012 ஆம் ஆண்டிற் குள் மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விவா திக்கப்பட்டது. “மாநிலத்தை ஆளும் கட்சி கள் மக்கள் மத்தியில் இருந்து வாக்குகளை பெறுவதற்காகவே இலவச மின்சாரம், குறைந்த கட்டணத்தில் வீடுகளுக்கு மின் சாரம்; போன்ற சலுகைகளை வழங்குவதன் மூலம் மின்வாரியங்களை நட்டத்தில் நடத்தி வருகிறார்கள்” -என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு செய்தது. அனைவருக்கும் மின்சாரம் வழங்கிட வேண்டுமெனில் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அதன் பொருட்டு புதிய மின் நிலையங்களை அமைக்க அரசிடம் பணமில்லை. தனியாரி டம்தான் மூலதனம் குவிந்துள்ளது. எனவே தனியார்தான் மின்உற்பத்தி செய்ய முடியும் என்று தனியாரிடம் மின்உற்பத்தியை செய்வ தற்கான பொறுப்பை மத்திய அரசு ஒப் படைத்தது.

முதலாளிகள் லாபமில்லாமல் காரியத் தில் இறங்கமாட்டார்கள். துவக்கத்தில் எரி வாயு மற்றும் டீசல் எண்ணெய்யினால் இயங் கும் 100 மெகாவாட் அளவிற்கான மின்நிலை யங்கள் தனியாரால் துவக்கப்பட்டன. இதன் மின்உற்பத்தியை மாநில மின்வாரியங்களே பெற்றுக் கொள்ளும் வகையில் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட் டன. அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் தாபோலில் அமெரிக்காவின் கம்பெனியான என்ரான், திரவ எரிவாயுவினை வைத்து மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் போட் டது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் மகாராஷ்டிரா மின் வாரியத்தையும் அரசையும் அந்தக் கம் பெனி திவாலாக்கியது என்பது அனைவருக் கும் தெரியும். சிஐடியு தலைமையிலான மக் கள் எதிர்ப்பு என்ரான் கம்பெனியை நாட்டை விட்டே துரத்தியது. ஆனால் மக்களின் பணம் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் மேல் என்ரான் கம் பெனி கொள்ளையடித்துச் சென்றதை உட னடியாக மீட்க முடியவில்லை. இதுகுறித்து சிஐடியு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத் தில் நடந்து வருகிறது. தனியார்கள் தாங்கள் ஒப்புக்கொண்டதற்கு ஏற்ப மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கவில்லை. இந்தியா வின் தற்போதைய மின்பற்றாக்குறை 15 சத வீதம் முதல் 20 சதவீதமும் வரை உள்ளது. அதாவது 38 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதாக ஒப்புக் கொண்ட தனியார் முதலாளிகள் அந்த இலக்கை முடிக்கவில்லை.

தமிழ்நாட்டில் வடசென்னை அனல் மின்நிலைய பகுதியில் வீடியோகான் 1000 மெகாவாட், சிவசக்தி 1000மெகாவாட், ஸிபிக் ஜெல் 1000மெகாவாட், ஜெயங்கொண்டான் பகுதியில் 1500மெகாவாட் என தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட எந்த ஒரு திட்டமும் நிறை வேற்றப்படவில்லை. அதன் விளைவுதான் தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் மின்வெட்டாகும். இத்தகைய சூழல் ஏற்படும் என்று தெரிந்தும் “மின்சார சட்டம் 2003”- ஐ நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த பொழுது இடதுசாரிக் கட்சி களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர பிற கட்சிகளைச் சார்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை ஆதரித்து சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

தாராளமயக் கொள்கையை உருவாக்கிய மேலை நாட்டினர் கூட மின்சார உற்பத்தி மற்றும் மின்சார விநியோக சேவையை தனி யாரிடம் விட்டது தவறு என்று அனுபவரீதியாக பதிவு செய்த பின்னரும், இந்தியாவில் இந்த காலாவதியான கொள்கையை உயர்த்திப் பிடித்தது காங்கிரஸ் கட்சி தான்!

உலகத்தின் சராசரி தனிமனித மின்சார நுகர்வு 2300 யூனிட் என்றால் இந்தியாவில் 700 யூனிட்தான். இதில் மும்பையில் முகேஷ் அம்பானி கட்டியுள்ள வீட்டின் ஒரு நாளைய மின்சார செலவான 80 ஆயிரம் யூனிட்டும் அடங்கும்.

இப்பொழுதும் திருவாளர் மன்மோகன்சிங் தவறை உணரவில்லை. மேலும் முதலாளி களின் நலனுக்காக திட்டங்களை உருவாக்கு கின்றார். நீண்டு கிடக்கும் தமிழக, ஆந்திரா கடற்கரையோரங்களில் மின்உற்பத்தி நிலை யங்களை அமைத்துக் கொள்ளவும், அதற்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளத் தேவையான துறைமுகங்களை அமைத்துக் கொள்ளவும் மத்திய அரசு தனியார்களை அனுமதித்துள்ளது. இதன் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு முதலாளி களுக்கு மற்றுமொரு வாய்ப்பினை காங்கிரஸ் அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மின்சாரத் தை தேவைக்கும் அதிகமாக இல்லாமல் பற்றாக்குறையாகவே வைத்துக் கொள்வதே முதலாளிகளின் திட்டம். அப்பொழுதுதானே வணிகச் சந்தையில் மின்சாரம் அதிகவிலை போகும். இப்பொழுது மின்சாரத்தின் விலை யை அரசு நிர்ணயிக்காது. சந்தைதான் தீர் மானிக்கும்.

இன்னும் மின்சாரம் செல்லாத கிராமங்கள் ஒருலட்சம் உள்ளன. 16 கோடி மின் இணைப் புகள்தான் உள்ளன. தேவையோ அதிகமாகிக் கொண்டே வருகின்றது. அனல் மின்நிலை யங்களுக்கு தேவையான நிலக்கரி நமது நாட்டில் போதுமான அளவிற்கு இல்லை. நிலக்கரி இறக்குமதியில் வெளிநாடுகளையும் முழுமையாக நம்பமுடியாது. அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதிலும் மனிதகுலத் திற்கு தீராத ஆபத்து உள்ளதை அனுபவங்கள் காட்டுகின்றன. ஆனால் மின்சக்தி தவிர்க்க வியலாத தேவையாக உள்ளது. காற்றாலை, சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்தல் போன்ற மரபு சாரா மின்உற்பத்தியில் அரசு ஈடுபடவேண்டும். இதனால் புவிவெப்பமா வதும் தடுக்கப்படும். முதலாளிகளிடம் மின் உற்பத்தியையும், மின்விநியோகத்தையும் ஒருபோதும் கொடுத்து விடக்கூடாது.

இருபதாண்டு கால அனுபவங்களை திருவாளர் மன்மோகன்சிங் ஆய்வு செய்யும் பொழுது முதலாளிகள் கையில் மின்துறை யை ஒப்படைத்த காரணத்தினால்தான் மின்வாரியங்கள் திவாலானது என்பதை உணர வேண்டும். நமது மாநில மின்வாரி யங்கள் நல்ல முறையில் செயலாற்றுவதற் கான அனுபவங்களை பெற்றுள்ளன. நமது தேசிய அனல் மின்கழகம் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கை உற்பத்தி செய்கின்றது. சேவைத் துறையான மின்துறை அரசின் கைகளில் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் மின் சாரம் கிடைக்கும். இல்லையென்றால் 2017ம் ஆண்டில் கூட இதே நிலைதான் நீடிக்கும்.

கட்டுரையாளர், தலைவர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு

இன்றைய கார்ட்டூன்