மதுரை ஆலய நுழைவுப் போராட்டம் : ஒற்றுமையால் விளைந்த வெற்றி

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் இன்று எவர் வேண் டுமானாலும் சென்று வரலாம். ஆனால், ஒரு நூறு ஆண்டுக ளுக்குமுன் நிலைமை அப்படியா?

மதுரை மீனாட்சி கோவில் என் றில்லை. இந்து ஆலயங்கள் எதி லும் நிலைமை கிட்டத்தட்ட ஒன் றாகத்தானே இருந்தது? பிராமணர் களில் பட்டர்கள் என்ற பிரிவினர் தான் கோவிலுக்குள் கருவறை வரை செல்ல அனுமதி. பிற பிரா மணர்கள் அர்த்த மண்டபம் வரை யிலும், சூத்திரர்கள் எனப் பட்டோர் மகாமண்டபம் வரையிலும் செல்ல அனுமதியுண்டு. நாடார்களும் அரிசனங்கள் என்று அன்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தீண்டப்படாத மக்களும் ஆலயத் தினுள் நுழையவே கூடாது என்றல் லவா இருந்தது. இந்த நிலை மையை எதிர்த்து 19ஆம் நூற்றாண் டிலேயே சமர் துவங்கி விட்டிருந் தது. இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி இருபதாம் நூற்றாண் டில்தான் அதன் குறிப்பிடத்தக்க வெற்றியினை எட்டியது.

மகாத்மா காந்தி தமது இயக் கத்தவரை தாழ்த்தப்பட்ட மக்க ளுக்குத் தொண்டாற்றும்படி பணிக் கும் காலச்சூழல் கனிந்தது. தீண் டாமையை ஒரு பெரும் பாவம் என்று காந்தி பிரகடனம் செய்தார். அந்தப் பாவத்தைக் களைவது சாதி இந்துக்களின் கடமை என்றார். குற்றாலத்தில் அரிசன சகோதரர் கள் குளிக்க அனுமதிக்கப்படாத தைக் கேள்விப்பட்ட அவர், தானும் அங்கே குளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். மதுரை வந்த போது மீனாட்சியம்மனைத் தரி சிக்க விரும்பினார். அப்போது அரி சனங்கள் அந்தக் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா என்று கேட்டு, அவர்கள் அனுமதிக்கப் படாததை அறிந்து, தனக்கும் அந்த ஆலயத்தினுள் செல்ல விருப்ப மில்லை என்று கூறிவிட்டார். சாதா ரண மக்களின் மத்தியில் காந்தி யின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவ ரின் இந்தப் பிடிவாதம் காங்கிரஸ் இயக்கத்தில் சலசலப்பை உண்டு பண்ணியது. அரிசன சேவா சங் கங்கள் உதயமாக இதுபோன்ற சம்பவங்கள் தூண்டுகோலாயின.

தமிழ்நாடு அரிசன சேவா சங் கத்தின் தலைவராக அன்றைக்கு இருந்த வைத்தியநாத அய்யர் மிகப் பெரிய வழக்கறிஞர். விடுதலைப் போராட்டத்தில் ஆர்வத்தோடு ஈடு பட்டு தனது தொழில் வருமானம், சொத்துக்களையெல்லாம் துறந்தார். தனது மதுரை வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்க ளுக்கு அடைக்கலம் தந்துவந்தார். அதனால் சனாதனப்பிடிப்புமிக்க பிற பிராமணர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கநேர்ந்தது.

அவரது தீவிர ஈடுபாட்டின் கார ணமாக ஆலய நுழைவுப் போராட் டத்துக்கு அவரே தலைமையேற்க மதுரையில் நடந்த ஆலய நுழைவுப் போராட்ட மாநாட்டில் முடிவானது. அன்றைய சென்னை ராஜதானி யின் பிரதமராக இருந்த ராஜாஜியின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்குக் கிடைத்தது. பசும்பொன் முத்துராம லிங்க தேவர் இந்தப் போராட் டத்தை ஆதரித்து நின்றார். இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத் தையும் அவசியத்தையும் விளக்கி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத் தில் முழங்கினார் தந்தை பெரியார். ஆலயப்பிரவேசத்தை விரும்பாத பிற்போக்குவாதிகள், பெரியார் பேசிக்கொண்டிருந்தபோதே அவரது மேடைக்குத் தீயிட்டுவிட்ட னர். அதைக் கண்ட வைத்தியநாத அய்யர், பெரியாரைத் தமது காரில் பாதுகாப்பாக ஏற்றிச்சென்றார்.

இத்தனை களேபரங்களோடும் 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பு ஆலய நுழைவுப் போராட்டக் காரர்கள் குவிந்தனர். வைத்தியநாத அய்யரோடு கரம்கோர்த்து நின்றவர் கள் தலித் சமூகத்தைச்சேர்ந்த ஐந்து பேரும், நாடார் சமூகத்தவர் ஒருவருமாவர். அவர்களில் முதலா மவர் தும்பைப்பட்டி தந்த காங்கிரஸ் தலைவர் கக்கன். அவரோடு முரு கானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன சேவாலய ஊழியர் முத்து ஆகியோரும் பங்கேற்றனர். இவர் களோடு விருதுநகர் நகராட்சி உறுப் பினர் எஸ்.எஸ்.சண்முக நாடாரும் இணைந்துகொண்டார்.

வைத்தியநாத அய்யருக்குக் கொலை மிரட்டல் வந்தது. அவர் மீது சாக்கடை நீரை ஊற்றினார்கள். எதற்கும் அஞ்சாத அந்தக் குழுவி னர் ஆலயத்துள் நுழைந்து வழிபட் டனர். தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஒரு கோவிலின் உள்ளே சென்று தலித் மக்களும் நாடார் சமூகத்தவரும் அதன் அழ கைக் காணவும், இறைவன் திரு மேனியைத் தரிசிக்கவும் வாய்ப் பேற்படுத்தியது இந்த நிகழ்வு. இத னால் சாதி விலக்கம் செய்யப்பட் டார் வைத்தியநாத அய்யர். மீனாட்சி யம்மன் தீட்டுப்பட்டுவிட்டதால் அந்த ஆலயத்திலிருந்து தெய்வம் வெளியேறிவிட்டது என்று கூப்பாடு போட்ட வைதீகர்களின் எதிர்ப்புகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. ஜூலை 22 ஆம் நாள் தமது அரிஜன் இதழில் இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தைப் பாராட்டி எழுதி அகமகிழ்ந்தார் காந்தி. அரிசனங் கள் ஆலய நுழைவுக்கு எதிராக இருந்த சட்டத்தைத் திருத்தி இந்தப் போராட்டத்திற்குச் சட்ட அங்கீகாரம் தந்தது ராஜாஜி அரசு.

சாதியத்தின் இறுக்கங்களை வரலாறு இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக்கொண்டு வந்திருக்கிறது, வருகிறது. அதற் காகப் பாடுபட்டவர்களை எல்லோ ரையும் நினைவில் வைத்துப்போற் றுவது அவசியமானது. வர்ணாசிர மத்துக்கு எதிரான போராட்டமும், தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரி மைகளுக்கான போராட்டங்களும் சாதிகளைக் கடந்த மக்கள் ஒற்று மையைக் கட்டவும் உதவியிருக் கிறது. அதே நேரத்தில் தலித் மற்றும் பிற சமூகத்தினரின் ஒற்றுமையினா லேயே இதுபோன்ற முயற்சிக ளுக்கு முழு வெற்றி கிட்டியிருக்கிறது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலய நுழைவுப்போராட்டம் ஒரேயொரு வைத்தியநாத அய்யரால் மட்டும் சாத்தியப்பட்டிருக்குமா? அல்லது தலித் மக்கள் மட்டுமே தனித்து நின்று இதனை ஈடேற்றியிருக்க முடியுமா? மாறாக, இதன்பின்னே பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தலைவர் ஒருவர் உறுதி காட்டியி ருக்கிறார் என்பதும், பகுத்தறிவு கொள்கைக்குச் சொந்தக்காரர் ஒரு வர் இந்தப் போராட்டத்தின் நியாயத் தை புரிந்துகொண்டு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார் என்பதும் வெற்றிக் கனி பறிக்க அவசியமானது. சாதி கடந்த மக்கள் ஒற்றுமை என்பதை நமக்கு இன்றும் உணர்த்துகிற தல்லவா?

- சோழ. நாகராஜன்

இன்று (ஜூலை 8, 1939)

மதுரை ஆலய நுழைவுப் போராட்டத்தின் 72 வது நினைவு நாள்.

இன்றைய கார்ட்டூன்