விவசாயிகளுக்கு சமூகப் பாதுகாப்பு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுதில்லி, பிப். 25-

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த சமூக பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்க வேண் டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அகில இந்திய விவசாயி கள் சங்கம் இதுதொடர் பாக வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிகரித்துவரும் விவ சாய இடுபொருட்களின் விலைகள், விளை பொருளுக் குக் கட்டுபடியான விலை கிடைக்காதது, விவசா யத்தின் மூலம் வரும் வரு மானம் குறைவது போன்ற காரணங்களால் விவசாயி கள் சமூகத்திற்கு காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சி மற் றும் நிதியமைச்சர் போது மான முன்னுரிமை அளிக்க வில்லை என்று இந்தியாவின் மிகப்பெரிய விவசாயிகளின் அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம் கருதுகிறது. நாட்டின் 70 சதவீதம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி யாகவோ மறைமுகமா கவோ விவசாயத்தைச் சார்ந்தே உள்ளனர். மத்திய அரசின் பட்ஜெட்டில் விவ சாயத்திற்கான ஒதுக்கீடு 2006-07ம் ஆண்டு 1.4 சத வீதம் என்று மிகக் குறை வாகவே உள்ளது. அது மேலும் குறைந்து 1.27 சத வீதமாக 2010-11 பட்ஜெட் டில் உள்ளது.

நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப் படும் கடன் குறைந்து வரு கிறது. அதன்விளைவாக கந்து வட்டிக்காரர்கள், வியா பாரிகள் மற்றும் முறை சாரா ஆதாரங்கள் மூலம் வாங்கப்படும் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒட்டுமொத்த மாக விவசாயம் கட்டுபடி யாகாத தொழிலாக மாறி வருகிறது. உரங்களுக்கான விலைக்கட்டுப்பாட்டை நீக்கியது, அடிக்கடி உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை, ரயில் மூலம் சரக்கு களை அனுப்புவதற்கான கட்டணம் போன்றவை விவசாயிகளையும் சாமா னிய மக்களையும் துன்பத் திற்குள்ளாக்கி வருகிறது. அரசு கொள்கை முடிவுக ளின் காரணமாக பன் னாட்டு நிறுவனங்கள் விவ சாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் குரல்வளையை நெரித்து லாபம் பார்க்கின் றன. கிடைத்துள்ள தகவல் களின் அடிப்படையில், நம் நாட்டில் நாளொன்றுக்கு 50 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 1997ம் ஆண்டு முதல் 2,16,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2009ம் ஆண்டில் மட்டும் 17,368 விவசாயிகள் தற் கொலை செய்து கொண் டுள்ளனர். மத்திய அரசு மற் றும் மாநில அரசுகள் அமல் படுத்தி வரும் புதிய தாரா ளமயக் கொள்கைகளின் விளைவு என்பது தெளிவா கப் புலனாகிறது.

எனவே, இச்சூழ்நிலை யில் அகில இந்திய விவசாயி கள் சங்கம் நிதியமைச்சரின் பார்வைக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக் கிறது. பட்ஜெட் தயாரிப் பின்போது நிதியமைச்சர் இக்கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.

1. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குக் குறைந்த பட்சம் 35 சதவீத பட்ஜெட் ஒதுக்கீடு அளிக் கப்பட வேண்டும்.

2. தேசிய விவசாயிகள் ஆணைய பரிந்துரைகளை உடனே அமல்படுத்தவேண்டும்

3. வேளாண் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கம் போன்றவைகளுக்கான ஒதுக்கீட்டை அதிகப் படுத்த வேண்டும்.

4. தரமான விதைகளைக் குறைந்த விலைக்கு அளிக் கும் பொதுத்துறை நிறுவ னங்களுக்குப் போதுமான ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

5. 4 சதவீத வட்டி அடிப் படையில் நிறுவனங்களிலி ருந்து கடன் அளிக்க வேண் டும். அதை விரிவுபடுத்த வேண்டும்.

6. ஒட்டுமொத்த பயிர் பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

7. பெரு நிறுவனங்க ளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் மற்றும் மானி யங்களை வெட்ட வேண்டும்.

8. ரசாயன மற்றும் இயற்கை உரங்களுக்கு மானியத்தை அதிகப்படுத்த வேண்டும்.

9. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறு தித்திட்டத்திற்கான ஒதுக் கீட்டை அதிகப்படுத்த வேண் டும். சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கான தொழிலாளர் மானியத்தை விரிவுபடுத்த வேண்டும்.

10. விவசாயிகளுக்கு ஒட்டு மொத்த சமூகப் பாதுகாப் புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

11. விலை ஏற்ற இறக்கங் களிலிருந்து விவசாயிக ளைப் பாதுகாப்பதற்காக விலை உறுதி நிதி அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

12. விலைவாசி உயர் வைக் கட்டுப்படுத்தத் தேவை யான உறுதியான நடவடிக் கைகள் எடுக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளின் நிலைமையை நிதியமைச் சர் கண்டுகொள்ளாமல் விடமாட்டார் என்று நம் புகிறோம். விவசாயிகளின் நலனை பாதிக்கும் அனைத்து முயற் சிகளையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அதன் அனைத்துக் கிளைகளும் ஒற்றுமையாக விழிப்போடு கண்காணித்து எதிர்க்கும்.

இன்றைய கார்ட்டூன்