சொன்னதையே திரும்பச் சொல்லும் உரை மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி தாக்கு

ஒவ்வொரு ஆண்டும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, செல்லும் திசை தெரியாது அரசு தத்தளித்துக் கொண்டிருக் கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று (பிப்.23) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சீத்தாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இத்தீர்மானத்தின் மீது மிகவும் மன உளைச்சலுடன் எழுந்து நின்று பேசத் தொடங்கியிருக்கிறேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டுத் தொட ரில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிப்பதற்காக விவாதத்தை இங்கே தொடங்கியிருக்கக்கூடிய அதே நேரத்தில், தில்லி வீதிகளில் வெளியே லட்சக்கணக் கான தொழிலாளர்கள் நாடாளுமன்றத்தை வேண்டிக்கேட்டுக்கொள்ளக்கூடிய விதத் தில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோரி அணிதிரண்டு வந்திருக்கக்கூடிய பின்னணி யில் நான் பேசிக் கொண்டிருப்பதே மன உளைச்சலுக்குக் காரணமாகும்.

நம் நாட்டு மக்களின் வாழ்நிலைமை மிக வும் மோசமான முறையில் சீர்கேடு அடைந் திருக்கிறது.

அரசின் மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஒரேயொரு நல்ல காரியம் நடந்திருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டிருக்கின்றன. இதற்காகவாவது இந்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

குடியரசுத் தலைவர் அவர்கள் ஆரோக்கிய மான மற்றும் வளமான இந்தியா குறித்துப் பேசியிருக்கிறார்கள். தொழிலாளர்கள் மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் வாழ்நிலைமைகள் மேம்பாடு அடையாமல் இது சாத்தியமில்லை. எனவேதான் மிகவும் மன உளைச்சலுடன் இங்கே பேசத் தொடங்கி இருக்கிறேன்.

குடியரசுத் தலைவர் தன் உரையின் தொடக்கத்தில், “இப்புதிய பத்தாண்டின் நாடா ளுமன்றத்தின் இரு அவைகளின் முதல் கூட்டத்தொடரில் குழுமியிருக்கும் உங்க ளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” (ஆல பசநநவiபேள வடி லடிர யள லடிர யளளநஅடெந ாநசந வடினயல கடிச வாந கசைளவ ளுநளளiடிn டிக bடிவா ழடிரளநள டிக ஞயசடயைஅநவே in வாந நேற னநஉயனந) என்று தெரிவித்திருக் கிறார். “இப்புதிய பத்தாண்டின் முதல் கூட்டத் தொடருக்கு உங்களை வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சென்ற ஆண்டு அவர் ஆற்றிய உரையிலிருந்த இதே வாக்கியத்தை அவர் மீளவும் பயன்படுத்தி இருக்கிறார்.

அரசு ஒருவிதமான மயக்கத்தில் இருக் கிறது என்பதையே குடியரசுத் தலைவரின் உரை பிரதிபலிக்கிறது. புதிய பத்தாண்டு (னநஉயனந) எப்போது தொடங்குகிறதென்றே அர சால் தீர்மானிக்க முடியவில்லை. இது மிக வும் வியப்பாக இருக்கிறது. குடியரசுத் தலை வரின் உரையானது, உண்மையில் செல்ல வேண்டிய திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருக்கும் அரசின் செயலற்ற தன்மை யையே பிரதிபலிக்கிறது.

அரசின் முன்னுரிமைகளாக ஐந்து அம் சங்களைக் குடியரசுத் தலைவர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அவையும் சென்ற ஆண்டு குறிப்பிட்டவைதான். முதலாவதாகக் குறிப் பிடப்பட்டிருப்பது, “பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவது, அதிலும் குறிப்பாக உயர்ந்து வரும் உணவுப்பொருள்களின் விலை உயர் விலிருந்து சாமானியர்களைப் பாதுகாப்பது” என்பதாகும்.

இந்த அரசு 2009இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, குடியரசுத் தலைவர் உரையில், “என்னுடைய அரசாங்கம் குறைந்த பணவீக்கத்துடன் அதிலும் குறிப்பாக அத்தி யாவசிய வேளாண் மற்றும் தொழில் பண்டங் கள் தொடர்பாக, உயர்ந்த வளர்ச்சியைக் கொண்டுவர, உறுதி பூண்டிருக்கிறது” (“ஆல ழுடிஎநசnஅநவே ளை கசைஅடல உடிஅஅவைவநன வடி அயiவேயiniபே ாiபா பசடிறவா றவைா டடிற iகேடயவiடிn, யீயசவiஉரடயசடல in சநடயவiடிn வடி யீசiஉநள டிக நளளநவேயைட யபசiஉரடவரசயட யனே iனேரளவசயைட உடிஅஅடினவைநைள.”) என்று குறிப்பிடப்பட் டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூறிய அதே உறுதிமொழியை இப்போதும் கூறுகிறீர்கள்.

குடியரசுத் தலைவர் உரை என்பது அரசு சார்பில் அமைச்சரவை தயாரித்து அளிக்கும் உரை என்பது அனைவருக்கும் தெரியும். அப் படியெனில் அமைச்சரவைதான் ஒரே உரை யைத் திரும்பத் திரும்ப ஒவ்வோராண்டும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இப்போது 2 வகையான மக்கள்தான் வசிக்கின்றனர். ஒரு பிரிவினர் ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி யை நடத்தும் அளவுக்கு ஏலத்தில் கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவிடும் சக்தி உள்ளவர்கள்). மற்றவர்கள் பி.பி.எல்., (வறு மைக்கோட்டுக்கும் கீழே வாழ்கிறவர்கள்). 2,25,000 கோடி ரூபாய் மதிப்புக்கு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் பணக்காரர் களுக்கும் ஓராண்டில் வரிச்சலுகை அளித் திருக்கிறீர்கள். இந்தக்கொள்கையை உடனே கைவிட்டு ஏழை, பணக்காரர் இடையிலான ஏற்றத்தாழ்வைப் போக்க முற்போக்கு நட வடிக்கைகளை எடுங்கள்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? ஏதாவது உருப்படியான நடவடிக்கை ஒன் றையாவது சொல்ல முடியுமா? அத்தியாவசி யப் பொருள்கள் மீதான ஊக வணிகத்தை அரசு தடை செய்யப் போகிறதா என்று நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஓராண்டில் 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இது நடை பெற்றிருக்கிறது. உங்கள் ஆண்டு பட்ஜெட் டின் தொகையைவிட இது ஒன்றரை மடங்கு அதிகமாகும். ஊக வர்த்தகத்தில் ஈடுபடு வோர் லாபத்தை இலக்காக வைக்காமல் விலையை நிர்ணயிப்பார்களா? இது குறித்து ஒரு வார்த்தைகூட குடியரசுத் தலைவர் உரை யில் இல்லை. விலைகள் உயராவிட்டால் அவர்களால் லாபம் ஈட்ட முடியாது. அரசு ஊக வர்த்தகத்திற்குத் தடை விதிக்காவிட் டால், வேகமாக வீங்கிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்ப தும் சாத்தியமில்லை. இது தொடர்பாக ஒரு வார்த் தைகூட குடியரசுத் தலைவர் உரையில் இல்லை.

அதேபோன்று பொது விநியோக முறை யை வலுப்படுத்துவது குறித்தும் ஒன்றும் கூறப்படவில்லை. நம்முடைய கிடங்குகளில் வழக்கமாக வைக்கப்படும் உணவு தானியங் களைவிட இரண்டரை மடங்குக்கு தற்போது உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டி ருக்கின்றன. “உங்களால் தானியங்களை உருப்படியாக பாதுகாப்புடன் சேமித்து வைக்க முடியாவிட்டால், அவற்றைப் பசித் திருப்போருக்குப் பங்கிடுக” என்று உச்ச நீதிமன்றம் அரசைக் குட்டியிருக்கிறது. இவை குறித்து எதுவும் குடியரசுத்தலைவர் உரையில் இல்லை.

மக்கள் பட்டினியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருள்க ளின் விலைகள் உயர்ந்துகொண்டிருக்கின்றன.

பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதிருந்த கட்டுப்பாடுகளை அரசு நீக்கியது தொடர்பாகக்கூட எதுவும் கூறப்படவில்லை. கடந்த எட்டு மாதங்களில் ஏழு தடவை பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை அரசு நீக்கிய சமயத் தில் நாடாளுமன்றத்தில் அரசுத்தரப்பில் ஓர் உறுதிமொழி அளிக்கப்பட்டது. அதாவது இது தொடர்பான வரிக் கட்டமைப்பு (வயஒ ளவசரஉவரசந) பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆயி னும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான மதிப்புக் கூட்டுவரி (யன எயடடிசநஅ வயஒ) தொடர் கிறது.

பெட்ரோலியத் துறை மூலமாக மட்டும் அரசுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக வந்து கொண்டிருக்கிறது. பெட் ரோலியப் பொருட்களின் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியதன் மூலம் விலைகள் உயர்ந்து, மக்கள் மீதான சுமைகளை மேலும் அதிகரித்துள்ளன.இது தொடர்பாகவும் குடிய ரசுத் தலைவர் உரையில் எதுவும் இல்லை.

குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட் டுள்ள ஐந்து முன்னுரைகள் குறித்து அரசு உண்மையாக இருக்கிறதென்றால், இவை தொடர்பாக பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஊக வர்த்தகத்தைத் தடைசெய்வீர்களா? என்ப தற்கு பதில் சொல்ல வேண்டும்.

உணவுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு இது தொடர்பாகக் கூறுகையில், உணவுப் பொருள்களின் உலக அளவிலான விலை உயர்வில் 70 விழுக்காடு ஊக வர்த்தகத்தால் தான் என்று கூறியிருக்கிறது. குறைந்தபட்சம் இதிலிருந்தாவது நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே, ஊக வர்த்தகத்தை அரசு தடை செய்யுமா? கிடங்குகளில் மிகுதியாக உள்ள உணவு தானியங்களை பொது விநியோக முறையில் வறியவர்களுக்கு விநியோகிப்பீர் களா? பெட்ரோலியத் துறையில் வரிக் கட் டமைப்பை மாற்றி அமைப்பீர்களா?

இவை எதையும் செய்யவில்லை எனில் குடியரசுத் தலைவர் அளித்துள்ள உறுதி மொழிகளில் பொருளேதும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(ந.நி.)

இன்றைய கார்ட்டூன்