சுமைகள், துன்பங்களைத் தரும் கொள்கையை தடுத்திட...

நாட்டின் தலைநகர் தில்லியில், முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் திரண்டு வந்தார் கள். மிகவும் கட்டுப்பாட்டுடன் லட்சக்கணக் கான தொழிலாளர்கள், தங்களது ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்து வந்தார்கள். 1. விலை வாசியைக் கட்டுப்படுத்து, பொது விநியோக முறையை வலுப்படுத்து; 2. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக நடைமுறைப்படுத்து; 3. கார்ப்பரேட்டுகளுக்கு அளித்திடும் ஊக்கு விப்பு உதவிகள் தொழிலாளர்களுக்கான வேலைப் பாதுகாப்புடன் இணைக்கப்பட வேண்டும்; 4. முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப்பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் தேசிய நிதியம் உருவாக்கு; 5. பட் ஜெட் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காகப் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக் குத் தாரை வார்ப்பதை நிறுத்திடு.

ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் தொழிலா ளர் விரோதக் கொள்கையானது, நாட்டில் உள்ள அனைத்து மத்தியத் தொழிற்சங்கங் களையும் அனைத்து சுயேச்சையான சம் மேளனங்களையும் இப்போராட்டத்தில் ஒன்றுபடுத்திவிட்டது. ஒரு சில ஆண்டு களுக்கு முன் இத்தகையதோர் ஒற்றுமை சூல்கொள்ளவில்லை. இத்தகைய ஒன்று பட்ட போராட்டத்திற்கான தயாரிப்புப் பணிகள் 2009 செப்டம்பரில் நடைபெற்ற ஒரு தேசியக் கூட்டு சிறப்பு மாநாட்டிலிருந்து தொடங் கியது. அடுத்து 2010 பிப்ரவரியில் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ நாடு தழுவிய அளவில் நடைபெற்றது. அதனை அடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க அகில இந்திய வேலைநிறுத்தம் 2010 செப்டம்பர் 7 அன்று நடைபெற்றது. இந் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இப்போது நாடாளுமன்றம் நோக்கி அணிவகுப்பு நடை பெற்றுள்ளது. செங்கொடிகளுடன் வந்த இடது சாரித் தொழிற்சங்கங்களைச் சார்ந்த பல லட் சக்கணக்கான தொழிலாளர்கள், மூவர்ணக் கொடிகளுடன் வந்த காங்கிரஸ் சார்பு ஐஎன் டியுசி மற்றும் பல அமைப்புகளுடன் கரம் கோர்த்தார்கள்.

இந்த உண்மையான இந்தியா, 2011-12 பட்ஜெட் சமர்ப்பிக்கப்படக்கூடிய சமயத்தில் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுத்து வந்திருக்கிறது. ஐ.மு.கூட்டணி அரசாங்கம் பின்பற்றும் நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு எதிராகக் கடுமையான முறையில் இவர்கள் முழக்கமிட்டு வந்தனர். ஐ.மு.கூட்டணி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் குரலை செவிமடுக்காவிடில் (அது காதுகொடுத்துக் கேட்காது என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாகும்), பின்னர் நிச்சயமாக அது இதைவிட மேலும் வலுவான, மேலும் ஒன்றுபட்ட போராட்டங்களை எதிர்காலத் தில் சந்திக்க வேண்டியிருக்கும். அரசின் கொள்கைத் திசைவழியை சரியான முறை யில் மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் தொழி லாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் எதிர் காலத்தில் அமைந்திடும்.

நவீன தாராளமயக் கொள்கையைத் தூக் கிப் பிடிக்கும் பண்டிதர்கள், உலகப் பொருளா தார மந்தம் என்கிற புயல் நம் நாட்டைப் பாதிக் காத அளவிற்குத் தடுத்து நிறுத்திவிட்டோம் என்று தங்கள் முதுகுகளைத் தாங்களே தட் டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயி னும் நாட்டு மக்களில் பெரும்பகுதியினரை ஓரங்கட்டிவிட்டுத்தான் நாட்டின் ‘வளர்ச்சிக் கதை’ அமைந்திருக்கிறது. நாட்டில் உள்ள ‘டாலர் பில்லியனர்’களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 26இலிருந்து 52ஆக இரட் டிப்பாகி இருக்கிறது. அவர்களுடைய சொத்து மதிப்பு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத் தியில் 25 விழுக்காட்டிற்குச் சமமானதாகும். சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்க ளின்படி, இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 69ஆக உயர்ந்திருக்கிறது.

உண்மையில் இந்தியா, நாட்டின் ஒரு சிறு பகுதியினருக்கு, ஒளி வீசிக் கொண்டிருக் கிறது. அதே சமயத்தில் மறுபக்கத்தில் கொடும் வறுமை காரணமாக நம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பதும் தொடர்கிறது. தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் விவசாயிகளுடன் தற்போது குறுநிதி (அiஉசடிகiயேnஉந) நிறுவனச் சுரண்டலா லும், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட் டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய நியாயமான கூலி கிடைக்காததாலும் பாதிக்கப்பட்டவர்க ளும் சேர்ந்து கொண்டிருப்பது மேலும் மோச மாகும். நாட்டு மக்களில் மிகப்பெரும்பான் மையோருக்கு விலைவாசி உயர்வு முன்னெப் போதும் இல்லாத அளவிற்குக் கூடுதல் சுமைகளை ஏற்றியுள்ளது.

நவீன தாராளமயக் கொள்கைகள், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதன் மூலமாக அவர்களை ஊக்குவிப் பதன் மூலம் வளர்ச்சியை மேம்படுத்த முயற் சிக்கிறது. தற்போதைய உலக நெருக்கடிக்குக் காரணமான நிதி ஜாம்பவான்களுக்கும், கார்ப் பரேட்டுகளுக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக அவர் களுக்கு அளிக்கப்படும் நிதி உதவியைப் போன்றே நம் நாட்டிலும் இவ்வாறு கொடுக் கப்பட்டிருக்கிறது. விளைவு, இவ்வாறு கார்ப்பரேட் திவால்கள் அந்தந்த நாடுகளின் அரசின் திவால்களாக மாற்றப்பட்டன. ஏனெ னில் இந்நாட்டு அரசாங்கங்கள் தங்கள் கார்ப் பரேட்டுகளைக் காப்பதற்காக ஏராளமான தொகை கடன் வாங்கியிருக்கிறது. வாங்கிய கடனை அடைப்பதற்காக, இந்நாடுகள் பல வற்றில் தொழிலாளி வர்க்கம் பெற்று வந்த பயன்கள் மற்றும் உரிமைகள் ஈவிரக்கமின்றி தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. சமூக நலத் திட்டங்களுக்கு அரசுகள் அளித்து வந்த செலவினங்கள் கடுமையாகக் குறைக் கப்பட்டன. இவை மக்களின் மீது சுமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமத்தியுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகளை இந்திய அரசும் எடுக்க வேண்டும் என்கிற குரல் அதி கார மட்டத்தில் கேட்க முடிகிறது. அரசால் இப்போது அளிக்கப்பட்ட ஊக்குவிப்புத் தொகைகள் மூலம் பில்லியனர்களின் பட்டிய லில் சேர்ந்த ஆளும் வர்க்கத்தினர், இவ்வாறு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கடுமையாக நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர். வேறு வார்த்தைக ளில் சொல்வதானால், சமூக நலத் துறை களில் அரசு செலவிட்டு வந்த செலவினங் கள் வெட்டிக் குறைக்கப்பட வேண்டும் என் பதற்கும், வறியவர்களுக்கு அளித்து வந்த மானியங்களையும் முற்றிலுமாக அழித் தொழிக்க முடியாவிட்டாலும் குறைத்திட வேண்டும் என்பதற்கும் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர். இவை, இப்போது தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏற்றப்பட்டுள்ள சுமைகளை மேலும் கூடுதலாக்கிடும்.

சென்ற ஆண்டு பட்ஜெட் தாள்களுடன் ‘கைவிடப்பட்ட வருவாய் குறித்த அறிக்கை’ (ளுவயவநஅநவே டிக சுநஎநரேந குடிசநபடிநே) ஒன்றும் இருந்தது. 2008-09ஆம் ஆண்டில் அரசுக்கு வரவிருந்த 4 லட்சத்து 14 ஆயிரத்து 099 கோடி ரூபாய்க்கான வரி வருவாய் கைவிடப் பட்டது என்று அது தெரிவிக்கிறது. 2009-2010இல் இது 5 லட்சத்து 2 ஆயிரத்து 299 கோடி ரூபாயாகும். அரசு வரவேண்டிய வரு வாயில் 79.54 விழுக்காட்டு அளவிற்கு வரிச் சலுகைகள் அளித்ததன் மூலம் அரசுக்கு வரவேண்டிய இவ்வளவு பெரிய தொகை வராமல் கைவிடப்பட்டிருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு இத்தகைய கலால் வரி மற்றும் சுங்கத் தீர்வைகளில் வரிச் சலுகைகள் உத வும் என்பதை ஒப்புக்கொண்டாலும்கூட, கார்ப்பரேட்டுகளுக்கும் உச்சபட்ச அளவில் வருமானவரி அளிப்போருக்கும் அளிக்கப்பட் டுள்ள சலுகைகள் என்பது 2008-2009ஆம் ஆண்டில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 471 கோடி ரூபாயும், 2009-2010ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 483 கோடி ரூபாயுமா கும். இவ்வாறு அரசுக்கு வரவேண்டிய நியாயமான தொகையான சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் கைவிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு கைவிடப் படாமல் இவை வசூலிக்கப்பட்டு, பொது முத லீட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால், கணிச மான அளவில் வேலைவாய்ப்பைப் பெருக்கி நம் நாட்டுக்குத் தேவையான கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கும் இட்டுச் சென்றிருக்கும். அரசால் சமர்ப்பிக்கப் படவிருக்கும் பட்ஜெட் இந்தத் திசைவழியில் அமைந்திடுமா?

சென்ற ஆண்டு நம் நாட்டிற்குள் பாய வேண்டிய அந்நிய மூலதனத்தில் 31 விழுக் காட்டு அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் பெருமளவில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு முதலாளிகளைத் திருப்திப்படுத்த வேண் டும் என்பதற்காக, சமர்ப்பிக்கப்படவிருக்கும் பட்ஜெட்டில் பன்னாட்டு முதலாளிகளுக்கு மேலும் சலுகைகள் அளிக்கப்படலாம், இன்சூ ரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற் கான உச்சவரம்பு அதிகரிக்கப்படலாம், வங்கிச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட லாம், ஓய்வூதிய நிதியங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்படலாம். இத்தகைய தாராள மய நடவடிக்கைகள் உலகத்தில் ஏற்பட் டுள்ள பொருளாதார நெருக்கடியோடு நம் நாட் டையும் இணைத்திடவே இட்டுச் செல்லும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்தை இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாது இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத் தியதால்தான், உலகப் பொருளாதார மந்தத் தின் கடும் பாதிப்பிலிருந்து நாட்டைப் பெரு மளவில் பாதுகாக்க முடிந்தது.

ஆட்சியாளர்கள் நாட்டைச் சரியான திசைவழியில் செலுத்திட வலுவான போராட் டங்கள் மூலம் நிர்ப்பந்தித்திட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்திற்கு மேலும் சுமை களையும் துன்பங்களையும் கொண்டுவரக் கூடிய தாராளமயக் கொள்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

தில்லி நோக்கி அணிதிரண்டு வந்தி ருந்த இந்திய நாட்டின் தொழிலாளர் வர்க்கத் திற்கு நாம் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் அதே சமயத்தில், ‘‘மேலும் வலுவான போராட் டங்களை முன்னெடுத்துச் செல் வோம்’’ என்றும் தெரிவித்துக் கொள்வோம்.

இன்றைய கார்ட்டூன்