விவசாயிகள் தற்கொலை : அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்

காங்கிரஸ் மற்றும் பிஜேபியினர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மூலம்அனைத்து ஊடகங்கள் மற் றும் பொதுக் கூட்டங்களில் தங்கள் ஆட்சிகளின் சாதனைகளாய் பல்வேறு விஷயங்களைப் பட்டியலிடுகின்றனர். இவர்களின் சாதனைப் பட்டியல் அகில இந்திய அள வில் மட்டுமல்லாது தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் தொடர்வதாய் பறைசாற்றுகின்றனர். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றை இவ்விரு கட்சிகளின் அரசாங்கங்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதை காணலாம்.
இந்தியப் பொருளாதாரத்தில் முது கெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவ சாயத்துறை பல்வேறு ஆண்டுகளாக கடும்நெருக்கடிகளைச் சந்தித்து வருவது நாம்அறிந்த ஒன்று. இந்த நெருக்கடிகள் மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதன் தொடக்கத்தி லிருந்தே பெருகி வருகின்றன என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிக் கொண்டு வந்துள்ளன. ஒரு புறம் வேளாண்நெருக்கடிகளும் மறுபுறம் அவ்வேளை களில் உதவ வேண்டிய அரசின் செயல்படாத தன்மை மட்டுமல்லாது விவசாயி களுக்கு எதிரான கொள்கை முடிவுகளும் விவசாயிகளை விரக்தியின் விளம்பில் தள்ளுகின்றன. இதன் விளைவாக விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாட் டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

விவசாயிகளின் தற்கொலை களை களைவதற்காக பல்வேறுசெயல்பாடுகளை முடுக்கிவிட்டுள்ள தாகவும்; மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, ஊரகமேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளதாகவும் ஆளும் அரசுகள் கூறிக்கொள்கின்றன. ஆனால், இவற்றின் விளைவாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தடுக்கப் பட்டுள்ளதா அல்லது ஓரளவாவது குறைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது.நாட்டில் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற தற்கொலைகள் தொடர் பான புள்ளி விபரங்கள் `தேசிய குற்றப் பதிவு நிறுவனத்தின் (சூஊசுக்ஷ) ஆண்ட றிக்கைகளில் தரப்படுகின்றது. இந்த ஆண்டறிக்கைகள் தற்கொலை செய்து கொள்பவர்களின் பாலினம், வயது, கல்வி, தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் அவர்கள் செய்து வந்த தொழில்களைப் பற்றிய விபரங்களைத் தருகின்றது. இந்த ஆண்டறிக்கைகள், 1997ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மேற்கூறிய தகவல்களைத் தருகின்றன. சமீபத்திய ஆண்டறிக்கை என்பது 2012ஆம் ஆண் டுக்கான அறிக்கையாகும்.
1997 முதல் 2012 வரை 16 ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகளின் போக்கை பார்க்கலாம்.இந்த 16 ஆண்டுகளில் 14 ஆண்டு கள் காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் தலை மையிலான அரசுகள் இருந்துள்ளன.விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப் பவர்கள் தற்கொலைகள் செய்து கொள் வதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அபரிமிதமாக அதிகரித் திருப்பதும், குறிப்பாக சில பகுதிகளில் இவை மையம் கொண்டுள்ளதையும் சேர்த்துப் பார்க்கையில், வேளாண் நெருக்கடியும் அதற்குக் காரணமான அரசுக் கொள்கை களும் மூலக் காரணங்கள் என்பது தெளி வாகும்.என்சிஆர்பி ஆண்டறிக்கைகளின்படி 1997 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான 16 ஆண்டுகளில் இந்தியாவில் 18,78,119 தற்கொலைகள் நடைபெற்றுள் ளன. இதில், 2,64,388 பேர் விவசாயி கள் ஆகும். இது தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்தத் தொகையில் 14 சதவீதம் ஆகும். அதாவது தற் கொலை செய்து கொள்பவர்களில் ஆறுபேரில் ஒருவர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்.
இன்னும் தெளி வாகக் கூறவேண்டுமானால் ஒரு வருடத்திற்கு 16,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது நாள் ஒன்றிற்கு 45 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். (அரை மணிக்கொரு விவசாயி. தற்கொலை செய்துகொள்கின்றார்). விவசாயம் செய்வதற்கு எப்படி ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் கிடையாதோ அதேபோல் இந்த 45 பேர் என்பதும் விடுமுறை இல்லாமல் 365 நாட்கள் நடைபெறுவதாக எடுத்துக் கொள்ளப்பட் டுள்ளது.மேலே சொன்ன மதிப்பீடுகள் `குறைந்தபட்சமாக’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் என்சிஆர்பியின் புள்ளிவிபரப் பட்டியலில் `விவசாயி’ என்பவர் தான் பயிர் செய்யும் நிலத்தைத் தனது பெயரில் கொண்டவர் மட்டுமே. எனவே, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயம் செய்பவரின் நிலம் தந்தை அல்லது சகோதரர் அல்லது கணவர் அல்லது மனைவி பெயர்களில் இருந்தால், அவரை விவசாயி என்று கணக்கிடப் படமாட்டாது. மேலும், இந்த புள்ளி விபரங்கள் காவல்நிலையங்களில் உள்ள பதிவேடுகளிலிருந்து திரட்டப்படுகின்றன. எனவேதான், மேற்கூறிய கணக்கீடுகளை குறைந்தபட்சமாக 45 விவசாயிகள் நாள் ஒன்றிற்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மை நிலையில் இவைகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவே தவிர குறைக்க முடியாது.நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 1997 முதல் 2012 வரையிலான 16 ஆண்டுகளில் வருடத்திற்கு 1.12சதவீதம் அள விற்கு விவசாயிகளின் தற்கொலைகள் வெளிவந்துள்ளன. இந்த 16 வருடங்களை ஐந்து ஐந்து வருடங்களாக பிரித்துப் பார்க்கையில் 2002-2006ஆம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 17,513 விவசாயிகள் ஒவ் வொரு வருடமும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த அளவீடு அதற்கு முந்தைய 1997-2001 மற்றும் 2007-2011ம் ஆண்டுகளைவிட அதிகமானதாகும். 1997-2001ல் வருடத்திற்கு 15,747 விவசாயிகளும், 2007-2011ல் வருடத்திற்கு 16,362 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.நாம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ள 16 வருடங்களில், இருமுறை (2001 மற்றும் 2011) மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாட்டில் உள்ள விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை தரப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் விவசாயி களின் தற்கொலை அளவை (அதாவது ஒருலட்சம் விவசாயிகளில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது) பெற முடியும். இந்த விவசாயிகளின் தற்கொலை அளவு 2001 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் எவ்வளவு இருந்துள்ளது என்பதையும், இவற்றை மொத்த தற் கொலை செய்பவர்கள் அளவுகளை (அதாவது, ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர்தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது) ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
நாம் இங்கு முக்கியமான மற்றொரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள்தொகைக் கணக் கெடுப்பின்படி விவசாயி என்பவர் விவசாயத்தைத் தொழிலாகச் செய்பவர் என்பவரே. இவரின் பெயரில் நிலம் இருத்தல் வேண்டும் என் பது கட்டாயமில்லை. எனவே, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான விவசாயிகள் என்பவர்கள் என்சிஆர்பியில் கூறப்பட்டுள்ள விவசாயி(அதாவது, நிலம் தனது பெயரில் உள்ளவர் மட் டுமே) என்பவரைவிட பரவலாக பெறப்பட் டுள்ளவர். ஆகவே, இந்த `விவசாயிகள் தற்கொலை அளவு’ என்பதையும் நாம் `குறைந்தபட்சமாக’ கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.விவசாயிகளின் தற்கொலை அளவு 2001ல் 12.9சதவீதமாக இருந்தது. 2011ல் 13.2சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த தற்கொலை செய்பவர்களின் அளவு 2001ல் 10.6சதவீதமாகவும், 2011ல் 11.2சதவீதமாகவும் இருந்துள்ளது. இவற்றிலிருந்து விவசாயிகளின் தற்கொலை அளவு என்பது 2001லிருந்து 2011ல் சற்றே அதிகரித்துள்ளது என்ப தும், இவை மொத்த தற்கொலை செய்பவர்களின் அளவைவிட இரு காலக் கட்டத்திலும் அதிகமாய் உள்ளன என்பதும் தெளிவாகின்றது.
எனவே, இந்திய அளவில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. இவை நடைபெறும் வேகம் குறையவில்லை என்பதும் அறிய முடிகின்றது.ஒட்டுமொத்த இந்தியாவில் பார்க்கின்றபோது விவசாயிகள் தற்கொலை களின் அளவுகள் தொடர்ந்து குறிப்பிடத் தகுந்தவைகளாக இருந்து வருகின்றன. அடுத்து, இந்த தற்கொலைகள் எவ்வாறு மாநிலங்களிடையே பரவியிருக்கின்றன என்று பார்ப்போம்.விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் பஞ்சாப், கேரளா மற்றும் சமீபகாலமாக மேற்குவங்கம் என்றுஊடகங்களில் வந்தால் கூட, இவை ஆங் காங்கே நடைபெறும் ஒரு சில நிகழ்வுகளே. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த 16 ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைகள் என்பது மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் என்று 5 மாநிலங்களில் விரவியிருக்கின்றன. (மத்தியப்பிரதேசத்தில் ஏனைய நான்கு மாநிலங்களைப் போல் அதிகளவில் விவசாயிகளின் தற்கொலைகள் இல்லாவிட் டாலும் கூட, சத்தீஸ்கர் மாநிலம் மத்தியப் பிரதேசத்தோடு 2001 வரை இணைந்து இருந்தது.
எனவே, ஏனைய நான்கு மாநிலத்தோடு சேர்த்து மத்தியப் பிரதேசத்தையும் கணக்கிட வேண்டியுள்ளது). இந்த ஐந்து மாநிலங்களும், ஒட்டுமொத்த இந்தியாவின் விவசாயிகளின் தற்கொலைகளில் 63சதவீதம்- 2001லும், 67 சதவீதம் 2011லும்பெற்றுள்ளன. இந்த புள்ளி விவரங்கள் மேற் கூறிய 5 மாநிலங்களின் பங்கு அபரிமிதமாய் இருப்பதையும், அவற்றின் பங்கு அதிகரித்து வந்திருப்பதையும் விளக்குகின்றன. மேற்கூறிய 5 மாநிலங்களிலும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் அரசுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தொடர்ந்து ஆட்சி புரிகின்றன என்பது முக்கியமாகும். கர்நாடகத்தில் மட்டும் 1997-1999ல் பிஜேபி மற்றும் காங்கிரஸ் பங்கில்லாத ஜனதா தள அரசு இருந்தது.மகாராஷ்டிரா, ஆந்திரம், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 1997-2012ஆம் ஆண்டுகளில் 1,65,640 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். இவை அந்த மாநிலங்களில் நடைபெற்ற மொத்த தற்கொலைகளில் 20 சதவீதமாகும்.
அதாவது, இந்த ஐந்து மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களில் ஐவரில் ஒருவர் விவசாயி. அகில இந்திய அளவில் ஒரு நாளைக்கு தற்கொலை செய்து கொள்கின்ற 45 விவசாயிகளில் 28 பேர் மேற்கூறிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.இதே ஐந்து மாநிலங்களில் விவசாயி களின் தற்கொலை அளவை `மொத்த தற்கொலை அளவோடு’ தொடர்புபடுத்திப் பார்க்கலாம். மொத்த தற்கொலை அளவானது 2001ல் மற்றும் 2011ல் 16/17 ஆக இந்த ஐந்து மாநிலங்களில் இருந்தது. ஆனால் விவசாயிகளின் தற்கொலை அளவு 2001ல் 25 ஆகவும், மேலும் அதி கரித்து 2011ல் 27 பேராகவும் உள்ளது. எனவே விவசாயிகளின் தற்கொலை என்பது ஒட்டுமொத்த தற்கொலை புரிபவர் களில் 60சதவீதத்துக்கும் மேல் உள்ளது.மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள விவசாயிகளில் ஏறக் குறைய 30சதவீதம் பேர் மேற்கூறிய ஐந்துமாநிலங்களில் வசிக்கின்றனர். ஆனால் நாட்டின் மொத்த விவசாயிகளின் தற் கொலைகளில் 60சதவீதத்திற்கும் மேல் இங்கே நடைபெறுகின்றது. இவைகள், விவசாயிகளின் துயரமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
கடந்த 16 ஆண்டுகளில் விவசாய நெருக்கடிகளின் காரணமாகவும், அரசு களின் விவசாயிகளுக்கு எதிரான கொள் கைகளின் காரணமாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் தற்கொலைகளின் அளவுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவைகள், மகா ராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் உள்ளிட்ட மண்டலத்தில் மையம் கொண்டுள்ளன. இவற்றின் போக்கு 16 ஆண்டுகளில் குறையவில்லை என்பதும், மேற்கூறிய 5 மாநிலங்களின் பங்கு அதிகரித்துள்ளன என்பது இங்கே புலப்படுகிறது.இவ்வாறு, இந்திய மக்களின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றான விவசாய நெருக்கடிகளை கையாள்வதில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகள் மெத்தனமாய் செயல்படுவதை நாம் உணர முடியும். மேலும் 2004-2005 முதல் 2013-14 ஆகிய காலக்கட்டங்களில் விவசாயம் சுமார் 4சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக நிதியமைச்சர் கூறுகின்றார். ஆனால் தொய்வின்றித் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகள், விவசாய வளர்ச்சி அனைத்து தரப்பு விவசாயிகளையும் சென்றடைந்துள்ளதா என்பதை கேள்விக் குள்ளாக்குகின்றது.(கட்டுரையாளர் பொருளாதார ஆய்வாளர்)

இன்றைய கார்ட்டூன்