இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள்!

விஜயசிம்ஹா எனும் வலைதள எழுத்தாளர் ளுஐகுலு.ஊடீஆ எனும் வலை தளத்தில் சுதந்திர இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் குறித்த ஒரு பட்டியல் வடிவமைத்துள்ளார். இந்தியாவில் இதுவரை 344 முதல்வர்கள் இருந்துள்ளனர் என்கிறார் விஜயசிம்ஹா. அப் பட்டியலில் முதல் இடத் தைப் பிடித்தவர் தோழர் ஜோதிபாசு ஆவார். தலைசிறந்த முதல்வர்கள் முதல் பத்து பேர் பட்டியலில் தோழர் ஜோதிபாசுவுடன் தோழர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டும் மாணிக்சர்க்காரும் இடம் பிடித்துள்ளனர்.
அந்த பட்டியல் :1.ஜோதிபாசு/மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி (மேற்கு வங்கம்)2. கிருஷ்ண சின்கா/ காங்கிரஸ் (பீகார்)3. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்/மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (கேரளா)4. ஷேக் அப்துல்லா/ தேசிய மாநாடு (காஷ்மீர்)5. பி.சி.ராய்/ காங்கிரஸ்.(மேற்கு வங்கம்)6. சி.என்.அண்ணாதுரை /தி.மு.க (தமிழகம்)7. லால்டெங்கா/ மிசோ தேசிய முன்னணி (மிசோராம்)8. கே.என். கட்ஜூ / காங்கிரஸ் (மத்திய பிரதேசம்)9.மாணிக் சர்க்கார்/ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (திரிபுரா)10. என். ரெங்கசாமி /என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி)இந்த பட்டியல் உருவாக்கியதில் உள் ளடங்கிய அடிப்படை அம்சங்கள் என்ன? விஜய சிம்ஹா குறிப்பிடுகிறார் :8 தன்னைவிட மக்கள் மற்றும் தேசம் உயர்ந்தது என எண்ணியதும் செயல் பட்டதும்.8மதம்/சாதி/பிரதேசம்/வசதி அல்லது ஆண்/பெண் எனும் வேறுபாடுகளை தவிர்த்தது.8 எல்லா மதங்களையும் சமமாக பாவித்தது மட்டுமின்றி அரசியல் கொள்கைகளில் மதத்தை ஈடுபடுத்தாமல் இருந்தது.8 எளிய மக்களை முதலில் அணுகுவது; முன்னேற்றத்தில் அனைவரையும் அரவணைத்துக் கொண்டது.

8 மாநில முதல்வராக இருந்தாலும் தேசிய உணர்வை பெற்றிருந்தது.8 நல்லது செய்தோரை ஊக்கப்படுத்தியது- தீயது செய்தோரை தண்டித்தது.8விமர்சனங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டது.8அரசு இயந்திரத்தை செம்மைப்படுத்தி யது.8 தன்னைத்தானே புதுப்பித்துக் கொண் டது8 அரசு இயந்திரம் மக்களுக்கு இன்னல் களை தராமல் சேவை மட்டுமே தருவதை உத்தரவாதப்படுத்தியது8 ஆட்சி நிர்வாகத்தில் சாதனை படைத்தது.8 வாழ்க்கையில் மிகவும் பாதகமான, சிறிதும் நியாயமற்ற அநீதி நிகழ்ந்த பொழுதும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்களுக்காக செயல்பட்டது.
இந்த அடிப்படையில் தோழர் ஜோதிபாசுவிடம் காணப்பட்ட குணங்கள் என்ன?
சதி படைத்த குடும்பத்தில் பிறந்து இலண்டனில் உயர்ந்த கல்வி பெற்றிருந்தாலும், உழைப்போருக்காக தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்.8 அரசாங்க நிர்வாகத்தில் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட்டார்.8 இந்திராகாந்தி படுகொலை செய்யப் பட்ட பொழுது தேசத்தின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்ற பொழுது, மேற்கு வங்கத்தில் ஒரு கலவரம் கூட நடக்காமல் உத்தர வாதப்படுத்தினார்.8 மேற்குவங்கத்தில் சுமார் 20 சதவீதம் பேர் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்தபொழுதும் பாபர்மசூதி இடிப்பிற்கு பின்னர் ஒரு கலவரம் கூட நடக்காமல் இருப்பதை உத்தர வாதப்படுத்தினார்.8அவருடைய 23 ஆண்டுகால ஆட்சியினால், கொல்கத்தா நகரில் உலகிலேயே குறைந்த விலையில் உணவும், போக்குவரத்து வசதியும் உருவானது.8 மேற்குவங்கத்திலும் சரி, கொல்கத்தா நகரிலும் சரி எவர் ஒருவரும் வந்து வாழலாம்! எவரும் சாதி அல்லது மதம் அல்லது மொழியின் பெயரால் ஒதுக்கப்படுவது இல்லை.8 தனது குடும்ப சொத்தின் பெரும் பகுதியை கட்சிக்கு கொடுத்துவிட்டார்.8தனது உடலையும் தானமாக கொடுத்தார்.8 அவரது கட்சி பிரதமர் ஆகும் வாய்ப்பை அவருக்கு மறுத்த பொழுதும் அதற்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை.இந்த காரணங்களால் ஜோதிபாசு தலைசிறந்த முதல்வராக முதல் இடத்தை பிடிக்கிறார்.தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் மூன்றாம் இடத்தைப் பிடிக்க காரணங்கள் :8காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அமைப்பாளர்.8இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர்.8 இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர்.8 இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வர்.8உலகிலேயே தேர்தல் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் முதல்வர்
.8நிலச்சீர்திருத்தத்தை முதலில் அமல் படுத்தியவர். இதனால்தான் கேரளா ஒரு முன்மாதிரியாக இன்றும் உள்ளது.8கல்வியையும் மருத்துவத்தையும் கேரளாவின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்றார். இதனால்தான் கேரளா சமூக முன்னேற்றத்தில் இன்றும் முதல் இடத்தில் உள்ளது.8 சட்டம் - ஒழுங்கை கண்காணிப்பதுதான் காவல்துறையின் பணி. நிலப்பிரபுக்களுக் கும் விவசாயிகளுக்கும் அல்லது முதலாளி களுக்கும் தொழி லாளர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடக்கூடாது எனும் கொள்கையை முதலில் உருவாக்கினார்.
8 தம் சொத்து முழுவதையும் கட்சிக்கு அளித்தார்.8 தமது தேவைகளை (துணி துவைப்பது உட்பட) தானே கவனித்துக்கொண்டார்.8 அவர் எழுதி குவித்த அளவுக்கு வேறு எந்த முதல்வரும் எழுதவில்லை.8 நேருவுக்கும் அவருக்கும் நடந்த கருத்து மோதல்கள் இந்திய அரசியலின் புகழ் பெற்ற அரசியல் பாடங்கள். எனவே தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறார்.
தோழர் மாணிக் சர்க்கார் ஒன்பதாவது இடத்தைப் பிடிக்க காரணங்கள் :
இந்தியாவின் மிகவும் ஏழையான முதல்வர். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் ரூ.1080 மட்டும்தான்.8 அவருக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட கிடையாது.8 அவரிடம் அலைபேசி கிடையாது.8 முதல்வராக அவர் பெறும் ஊதியத்தை கட்சியிடம் கொடுத்துவிட்டு கட்சி தரும் ரூ.5000/- மட்டுமே பெறுகிறார்.8 மாணிக் சர்க்காரின் திறமை மற்றும் பொறுமை காரணமாக ஒரு எல்லை மாநிலத்தில் பூரண அமைதி நிலவுகிறது.8 காலம் காலமாக ஆதிவாசி மக்களும் ஆதிவாசி அல்லாதோரும் ஒற்றுமையுடன் திரிபுராவில் வாழ்கின்றனர்.8 திரிபுராவைப் பற்றி எவரும் கவலைப்படத் தேவையே எழவில்லை.
இதுவே மாணிக் சர்க்காரின் மிகப்பெரிய சாதனை.81950களில் ஒருவர் நாணயமான அரசியல் வாதியாக இருந்ததைவிட இன்று அவ்வாறு இருப்பது மிகவும் கடினம். அக்கடின மான தேர்வில் மாணிக் சர்க்கார் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.எனவே தோழர் மாணிக்சர்க்கார் ஒன்ப தாவது இடத்தை பிடிக்கிறார். இவ்வாறு தனது ஆய்வை விவரிக்கிறார் விஜய்சிம்ஹா.தான் தனது பட்டியலை 10 என்பதற்கு பதிலாக 20 என உருவாக்கினால் கீழ்கண்ட 10 பேர் மேலும் இணைவர் என்கிறார் விஜய்சிம்ஹா.அந்த அடுத்த 10 பேர் :11. ஹரேகிருஷ்னா மெஹெதாப்12. காமராஜர்13. கோபிநத் போர்டொலொய்14. ஜி.பி.பந்த்15. ஒய்.பி.சவாண்16. இராமகிருஷ்ண ஹெக்டே17. பிரதாப்சிங்க் கைரோன்18. பிஜூபட்நாயக்19. என்.டி..ராமராவ்
20. மோடி.குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு இதைவிட வேறு ஒரு இடம் தகுதியில்லை என்கிறார் விஜய்சிம்ஹா .ஒரு நியாயமான அடிப்படை வகுத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் வர்கள் சிறந்த இடத்தை பிடிப்பர் என்பதை இது மீண்டும் ஒருமுறை தெளிவாக்குகிறது. இது அந்த பதவி வகித்த தோழர்களின் சாதனை மட்டுமல்ல. அவர்களை உருவாக்கிய கட்சியின் சாதனையும் கூட! ஒவ்வொரு தோழரும் பொதுவாழ்வில் இத்தகைய சாதனைகளை படைத்திட வேண்டும் என்பதே கட்சியின் நோக்கமாக உள்ளது. கட்சியின் செயல்முறையும் தோழர்கள் பெறும் பயிற்சியும் அதை நோக்கியே உள் ளது எனில் மிகை அல்ல.

இன்றைய கார்ட்டூன்