சிறந்த இந்தியா உருவாக தேர்தலைப் பயன்படுத்துவோம்

பதினாறாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணை அறிவிக்கப் பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தி படு கொலை அல்லது கார்கில் யுத்தம் போன்ற சமயங்களில் சீர்குலைவு மற்றும் தாமதம் ஏற்பட்டதைத் தவிர்த்துவிட்டுப் பரிசீலனை செய்தோமானால் இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இப்போது தேர்தல்களுக்கு நீண்ட காலம் திட்டமிடப்பட்டுள்ளது.ஏப்ரல் 7 அன்று தொடங்கி மே 12 முடிய ஐந்துவாரங்களில் ஒன்பது கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகஎண்ணிக்கையிலானதாகும். தேர்தல்நடத்திட நீண்டகாலம் திட்டமிடப்பட்டிருப் பதற்கு சிலர் மத்தியிலிருந்து சில முறையீடுகள் இருந்தபோதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 முதல்329ஆவது பிரிவுகளின் கீழ் “நாடாளுமன் றத்திற்கான அனைத்துத் தேர்தல்கள் குறித்தும் மேற்பார்வை, தேர்தல் வாக்காளர் பட்டி யல்களைத் தயார் செய்வதற்கான கட்டுப்பாடு மற்றும் தேர்தலை நடத்தும் விதம் ஆகியவை குறித்து’’ தேர்தல் ஆணையம் மட்டுமே அதிகாரம் படைத்திருக்கிறது. எனவே, நாட்டிலுள்ள வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்துவாக்காளர்களும் நியாயமாகவும் நேர்மை யாகவும் வாக்களிக்கக்கூடிய விதத்திலும், அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திடக்கூடிய விதத்திலும் தேர் தலை நடத்திட வேண்டியதும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துக்குட்பட்ட கடமையாகிறது. நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, தேர்தல்களை சீர்குலைப்பதற்கான அச்சுறுத்தல்கள் எழக்கூடும் என கமுக்கமான முறையில் தகவல்களைப் பெறக்கூடிய அதி காரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்பதாலும், அவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அத்தகைய இடங்களில் அமைதியான முறையில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல்களை நடத்திடுவதற்காக, அந்த இடங்களுக்கு தேவையான அளவிற்குப் பாதுகாப்புப் படையினரை அனுப்பி வைப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றிருக்கிறது.

எனவே, தேர்தல் ஆணையம் மட்டும்தான் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகக் கட்ட மைப்பைக் கட்டிக்காத்திட, நம் நாட்டில் எத்தனைக் கட்டங்களாகத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பது குறித்தும், தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரசிய லமைப்புச்சட்டத்தின்படியான கடமையை நிறைவேற்றுவதற்குத் தங்களுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதைக் கணிப்பது குறித்தும் தீர்மானித்திட முடியும். எனவே, தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின் மீதுஅதிகமான அளவில் தகராறு செய்ய வேண்டிய தேவை இல்லை. நம் நாட்டில் நடைபெறும் தேர்தல்கள் என்பவை உலகி லேயே மிகப்பெரிய ஜனநாயக ரீதியானநடைமுறையாகும். 15வது மக்களவைக் கான பொதுத்தேர்தல்களைவிட இப்போது நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மிகஅதிக அளவில் வேட்பாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 15வது மக்களவைக்கான தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 இடங்களுக்காக, நாட்டிலுள்ள 300க்கும் மேற் பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட் பாளர்களின் எண்ணிக்கை 8070 ஆகும். இவர்களின் விதியை நாட்டின் மொத்தம் உள்ள வாக் காளர்களான சுமார் 71 கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் 58.4 சதவீதத்தினர் வாக்களித்து நிர்ணயித்திருந்தார்கள். தேர்தல் நடத்துவதற்கான நிர்வாக அமைப் பும் கூட கேட்டால் தலைசுற்றக்கூடிய அள விற்கு இருக்கும். இத்தேர்தல்கள் நாடு முழுதும் உள்ள 8 லட்சத்து 28 ஆயிரத்து 804வாக்குச் சாவடிகளில் 13 லட்சத்து 68 ஆயிரத்து 430 மின்னணு வாக்கு எந்திரங் களை 65 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர் கள் மூலம் ஒரு மாத காலத்தில் ஐந்து கட்டங்களாகப் பயன்படுத்தி நடத்த இருக் கிறார்கள். தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்காக 11 லட்சம் பாதுகாப்புப்படை வீரர்கள் ஆயத்தமாய் நிறுத்திவைக்கப்பட இருக்கிறார்கள்.
16வது மக்களவைக்கான தேர்தல் களுக்காக தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களில் 81 கோடியே 40 லட்சம் வாக்காளர்களுக்கும் அதிகமாக இருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறது. இது 15வது மக்களவையின் போது இருந்ததைவிட 10 கோடி அதிகமாகும். அதேபோன்று வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்து 30 ஆயிரமாக இருந்திடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது முந்தைய எண்ணிக்கையை விட 10 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.நாட்டில் நடை பெறவிருக்கும் இமாலயப்பணிதான் இது. தேர்தல்களை நேர்மையாகவும் நியாய மாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர், “ஊறு விளைவிக்கக்கூடிய பகுதிகளில் எந்த சமயத் திலும் எவராலாவது தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படக்கூடும் என்ற நிலையில் உள்ளவர்கள்கூட, அச்சம் எதுவுமின்றி வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில் மிகவும் கவனமாக நடவடிக் கைகளை மேற்கொண்டிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
இதனை உத்தரவாதப்படுத்தக்கூடிய விதத்தில், “பல்வேறுவகைப்பட்டவர்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு போதுமான எண்ணிக்கையில் தேர்தல் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிற போதிலும், சமீபத்தில் மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல்களின்போது நடைபெற்ற தைப்போல வாக்காளர்களை மிகப்பெரிய அளவில் மிரட்டி வாக்களிக்கவிடாமல் தடுக்கக்கூடியதைத் தவிர்க்கக்கூடிய விதத்தில் இதனை மிகவும் விழிப்புடனிருந்து அமல்படுத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல்கள் என்பவை தேர்தல் ஆணையத்தின் வரம்பெல்லைக்குள் வராது என்ற போதிலும், இந்த அனுபவத்தை மனதில் கொண்டு தேர்தல் ஆணையம் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும். வாக்காளர்களை அச்சப்படுத்தி அவர்களின் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை அவர்கள் மேற்கொள்ளாதபடி அவர்களைத் தடுக்கக்கூடிய விதத்தில் பயங்கரவாத பிரச்சாரத்தைத் தடுக்கக்கூடிய விதத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர், “தேர்தல்களின் போது பணம் புரள்வதைத் தடுப் பதற்கும் சிறப்பு அழுத்தம் கொடுக்கப்படும்,’’ என்று மேலும் கூறியிருக்கிறார். பணப லம் உபயோகப்படுத்தப்படுவது அதிகரித் திருப்பது குறித்து போதுமான அளவிற்கு சிறப்புக் கவனம் கொடுக்கப்பட வேண்டும். பல மாநிலங்களில் செலவினங்களுக்கான உயர்வரம்பு, ஒவ்வொரு வேட்பாளர்/தொகுதிக்கும் 70 லட்சம் ரூபாய் என்று உயர்த்தப்பட் டிருந்தபோதிலும், உண்மையில் வேட்பாளர் கள் செலவுசெய்யும் தொகையுடன் ஒப்பிடு கையில் இது மிகவும் ஏளனத்திற்குரிய ஒன்றாகும். மேலும், குறைந்த அளவில் செலவுசெய்யக் கூடிய கட்சிகள்/வேட்பாளர்கள் மிகவும் அனுகூலமற்ற நிலையில் வைக்கப் படக்கூடாது. அவ்வாறு அவர்களைத் தள்ளி அவர்களின் ஜனநாயக உரிமையை அடிப்படையில் மறுதலித்திடக்கூடாது.
ஏற்கனவே, சுவர் விளம்பரங்கள், போஸ் டர்கள் முதலானவற்றிற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவந்திருப்பதன் மூலமாக குறைந்த செலவில் பிரச்சாரம் மேற்கொண்ட கட்சிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், அதிக வளமுள்ள கட்சிகள் ஊடகங்களின் விளம்பரங்கள், சாலையோரம் உள்ள மின்விளக்குப் பகட்டு விளம்பரங்கள் போன்ற அதிக செலவு பிடிக்கக்கூடிய முறைகளில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. அதேபோன்று காசு வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் போக்குகளுக்கு எதிராகவும், காசு வாங்கிக்கொண்டு கருத்துக்கணிப்பு வெளியிடும் இழிசெயல்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துத்தரப்பினரும் தங்கள் கருத்துக் களையும் பிரச்சாரங்களையும் சமமான முறையில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத் தில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து ராணுவங்களுமே அனைத்துப் போர்க்களங்களையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மேற் கொள்கின்றன. அதேபோன்று, அரசியல் களத்திலும் அனைத்து அரசியல்கட்சி வேட் பாளர்களும், கட்சிகளும் மக்கள் ஆதரவைப் பெற ஒன்றுக்கொன்று போட்டி போடும், போராடும். ஆயினும், இறுதி வெற்றி என்பது மக்கள் சேனைக்குத்தான் இருக்க வேண்டுமே யொழிய, அரசியல் கட்சிகள் கட்டவிழ்த்துவிடும் பண பலத்திற்கோ, புஜ பலத்திற்கோ இருந்துவிடக் கூடாது
.நடை பெறவிருக்கும் 16வது மக்கள வைக்கான தேர்தல்களிலும், தங்கள்மீது நாளும் ஏற்றப்படும் பொருளாதாரச் சுமைகளிலிருந்து தேவைப்படும் நிவாரணத்தை யார் அளிப்பார்கள் என்ற அடிப்படையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும். சிறந்த தோர் வாழ்க்கையைத் தங்களுக்கு யார் அளிப்பார்கள்? தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்ததோர் எதிர்காலத்தை யார் அளிப் பார்கள்? என்றும் நாட்டு மக்கள் தீர்மானித்தாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வ தானால், சிறந்ததோர் இந்தியாவை யார் உரு வாக்குவார்கள்? நாட்டில் உள்ள மக்கள் சக்தியை முழுமையாக யார் பயன்படுத்த முன் வருவார்கள்? இவை அனைத்தையுமே காங்கிரஸ் கட்சியோ அல்லது பாஜகவோ பின் பற்றும் கொள்கைகளால் தர முடியாது என் பதும், மாற்றுக் கொள்கைத் திசைவழியை நாடு பின்பற்றினால் மட்டுமே இவற்றை நிறைவேற்றிட முடியும் என்பதும் தெள்ளத் தெளிவாகும்.
பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தியதிலும் சரி அல்லது ஊழல்சேற்றில் புரண்டதிலும்சரி காங்கிர சுக்கும் பாஜகவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் கிடையாது. பாஜகவைப் பொறுத்தவரை அதற்கும் கூடுதலாக, நம் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் சமூக நல்லிணக்கத்தையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில் மதவெறி நஞ்சைப் பரப்பக்கூடியமுறையிலும் மதவெறித்தீயை விசிறிவிடக்கூடிய விதத்திலும் ஆர்எஸ்எஸ்/பாஜகவின் கடுமையான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலையும் பெற்றிருக்கிறது. இவை அனைத்தையும் நாட்டு மக்கள் நன்கு அலசி ஆராய்ந்து வரவிருக்கும் தேர்தலில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கி நாட்டு மக்களுக்கு தரமான வாழ்க்கையைத் தரக்கூடிய விதத்தில் மாற்றுத் திசைவழியைப் பின்பற்றுவோரைத் தேர்ந்தெடுத்திட முன்வர வேண்டும்.

இன்றைய கார்ட்டூன்