மக்களின் கோபம் மாற்றத்தை உருவாக்கும்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர் தல் பிரச்சாரத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, ஜனநாயக உரிமைகள் பறிப்பு, படுகொலை அரசியல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. அனைத்துப் பகுதி மக்களையும் வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சனையாக மக்களால் பேசப் படுகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக கோபாவேசமாக எழுந்துள்ளது. அதற்கு நியாயமான பதில் கூற முடியாமல் ஏப்ரல் 4ம் தேதி முரசொலியில் கலைஞரே கேள்வி எழுப்பி, பதில் கூறும் பகுதியில் விலைவாசி உயர்வு பற்றி விசித்திரமான விளக்கம் அளித்துள்ளார்.

“ஆளும் கட்சி மீது குறை சொல்வ தற்கு வேறு எதுவும் காரணம் கிடைக்க வில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சி யினர் சொல்லக்கூடிய ஒரே குற்றச் சாட்டு விலைவாசி உயர்வுதான்! யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தக் குற்றச் சாட்டைத்தான் எதிர்க்கட்சியினர் வழக் கமாக கூறுவார்கள்”

1967க்கு முன்னால் காங்கிரஸ் தமிழ கத்தில் ஆட்சியில் இருந்தபோது அண் ணாவின் தலைமையில் திமுக நடத்திய விலைவாசி உயர்வு போராட்டம், தேர்தல் காலங்களில் ‘பக்தவச்சலம் அண் ணாச்சி பருப்பு விலை என்னாச்சு? காம ராசர் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு’ என்று கோஷம் எழுப்பிய தெல்லாம் சும்மாதானா?

பழைய விஷயங்கள் போகட்டும், இதற்கு முன்னால் அஇஅதிமுக ஆட்சி யில் இருந்தபோது திமுக விலைவாசி உயர்வு பற்றி பேசியதும், போராட்டங்கள் நடத்தியதும் வெறும் நாடகம் தானா?

முன்பு கலைஞர் ஆட்சியில் இருக் கும்போது விலைவாசி உயர்வு பற்றி கேட் டால், மத்திய அரசுதான் காரணம் என்று சொல்லுவார். அது உண்மைதான். விலைவாசி உயர்விற்கு பிரதான குற்ற வாளி மத்திய அரசும் அதன் கொள்கை களும் தான்.

இப்போது முரசொலியில் கலைஞர் அளித்துள்ள பதிலில் மத்திய அரசு பற்றி ஒரு வரி கூட இல்லை. மத்திய அரசில் திமுக அங்கம் வகிப்பதால் மத்திய அர சின் அனைத்து கொள்கை முடிவுகளுக் கும் திமுக மத்திய அமைச்சர்கள் தலை யாட்டுவதால் மத்திய அரசுதான் காரணம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. காங்கிரசின் கோபம் மேலும் அதிகரித்து 63 டிகிரியையும் தாண்டினால் இந்தக் கோடையில் தாங்க முடியாது.

விலைவாசி உயர்விற்கு மத்திய அர சின் தாராளமய, தனியார்மய, உலகமய கொள்கைகள்தான் அடிப்படை காரணம். பெட்ரோல் விலையை அரசின் கட்டுப் பாட்டில் இருந்து விலக்கிவிட்டார்கள். பெட்ரோலிய கம்பெனிகள் தங்கள் விருப்பம் போல் விலையை ஏற்றிக் கொள் ளலாம் என சுதந்திரம் கொடுத்துவிட்டார் கள். அவர்களும் வாராவாரம், மாதந் தோறும் விலையை ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதன் விளைவு என்ன? பரந்துவிரிந்த நம்நாட்டில் ஒரு மாநிலத் தில் விளையும் உணவுப் பொருள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். உற் பத்தியாகும் பொருட்கள் நாட்டின் பல் வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை யால் சரக்கு கட்டணம் உயர்கிறது. அது எல்லாப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போல அனைத்து பொருட்களின் விலை யையும் உயர்த்துகிறது. இது கலைஞருக்கு தெரியாதா?

போதாக்குறைக்கு ஆன்-லைன் வர்த்தகம். பொருட்களை பார்க்காமலே கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து விலையை நிர்ணயிக்கும் (உயர்த்தும்) வர்த்தகச் சூதாட்டம். குரவரசந கூசயனiபே என்ற பெயரில் உணவு தானியங்கள் உள்ளிட்ட பொருட் களை உற்பத்தி செய்வதற்கு முன்பே விலையை நிச்சயித்து விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது, பொருட்களை பதுக்கி வைத்து விலையை ஏற்றி கொள் ளை லாபம் அடிக்கும் கறுப்புச் சந்தை. இதற்கெல்லாம் மத்திய அரசுதான் பொறுப்பு.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு என்றார்கள். சட்டம் வருகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வறுமைக் கோட்டிற்குக் கீழ், மேல் என பிரித்து சுமார் 60 சதவீத மக்களுக்கு மட்டும் குடும்ப அட்டை மூலம் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. தற்போது மொத்தம் 6 கோடி டன் தானியம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை 8 கோடி டன்னாக உயர்த்தினால் அனை வருக்கும் குடும்ப அட்டை மூலம் அரிசி, கோதுமை வழங்க முடியும். வெளிமார்க் கெட்டில் விலையை கட்டுப்படுத்த முடியும். இருக்கும் உணவுப் பொருட் களையே ஏழைகளுக்கு வழங்காமல் எலிகளுக்கு வழங்கி உச்சநீதிமன்றத்தில் குட்டுப் பெற்றவர்கள் ஆயிற்றே.

தேவைப்படும்போது தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதும் இல்லை. ஏற்றுமதி செய்வதும் இல்லை. இதன் விளைவாக வெங்காயம் முதல் பருத்தி வரை கடும் விலை உயர்வும், தட்டுப்பாடும் ஏற்பட்டதும் வெங்காயத் தை இனிமேல் நகைக்கடை வீதியில் தான் விற்பார்கள்; வெங்காயம் வாங்கி யோர் மீது வருமானவரித்துறை கண் காணிப்பு என நகைச்சுவை துணுக்கு கள் வெளியிட்டு மானத்தை வாங்கிவிட் டார்கள். தக்காளி விலை திடீரென உயரும், பிறகு படுபாதாளத்திற்கு வரும்.

சரி, மாநில அரசிற்கு எந்தப் பொறுப் பும் இல்லையா? மத்திய அரசின் இந்த கொள்கைகளுக்கு மத்தியிலும் மாநில அரசுகள் சில நடவடிக்கைகள் மேற் கொண்டால், பொது விநியோக முறையை பலப்படுத்தினால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியும், மேற்குவங்கம், கேரளம், திரிபுரா அரசுகள் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக் களை பாதுகாக்கின்றது.

இங்கு திமுக அரசு என்ன செய்கி றது? சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி குழு தலைவர் பாலபாரதி பிரச்சனையை எழுப்பியபோது, அன்பழகன் பதில் என்ன? எல்லோரும் வசதியாக உள்ள னர். அதிக காசு கொடுத்து பொருட்களை வாங்கி அதிகம் சாப்பிடுகிறார்கள். விலை வாசியை குறைக்க கம்யூனிஸ்டுகளிடம் ஏதும் மந்திரம் உள்ளதா? என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.

முரசொலியில் கலைஞர் கூறுவது என்ன? ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தருகிறோம். 10 மளிகைச் சாமான்களை ரூ. 50க்கு தருகிறோம். மொத்தம் ரூ. 4000 கோடி உணவுப் பொருட்களுக்கு மானியம் அளிக்கிறோம் என அடுக்குகிறார். தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களையும் வழங்கிவிட்டதுபோல வும், வெளி மார்க்கெட்டில் வாங்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடப்பது போலவும் சித்தரிக்கிறார். ரேசன் அரிசி கடத்தப்படுவதும் வெளிமார்க்கெட்டில் விலைவாசி விஷம் போல் ஏறுவதும் கலைஞருக்கு தெரியாது போலும். ஒதுக் கப்படும் ரூ. 4000 கோடி நேரடியாக நுகர் வோருக்குச் செல்லாமல், கொள்முதல், சேமிப்புக் கிடங்கு செலவிற்கும் சேர்த் துத்தான் இந்த மானியம்.

உரம், பூச்சி மருந்து ஆகிய விவசாய இடுபொருட்கள், இரும்பு, சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட் கள், துணி, சோப்பு, பவுடர், எண்ணெய் போன்ற இன்றைய தேவைப் பொருட்கள் அனைத்தும் விலை உயர்வால் எட்டாத உயரத்தில் உள்ளன. இந்த விலை உயர் வை தடுத்து நிறுத்த தமிழக அரசு என்ன செய்தது?

கலைஞர் தன் பதிலை மிகவும் அடக் கமாகத்தான் முடித்துள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தலைமைச் செயலகத்தில் அவர் தலைமையில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட் டுள்ளதாம். அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்யவும், விலைவாசியை கட்டுப்படுத் தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாம். முன்பெல்லாம் விலைவாசி பற்றி பேசி னால், முந்தைய ஆட்சியில் என்ன விலை? என்னுடைய ஆட்சியில் என்ன விலை? தமிழ்நாட்டில் என்ன விலை? பிற மாநிலங்களில் என்ன விலை என்று பட்டியல் போட்டு புள்ளி விபரங்களை அள்ளிவீசுவார். இப்போது “ எனவே விலைவாசியை குறைப்பதற்கான நட வடிக்கைகள் கழக அரசில் இதய சுத்தி யோடு எடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை” என முடித்துக் கொண்டார்.

ஆனால், உண்மை மிக வலிமை யானது. மக்களுக்கு அந்த வலி தெரியும். வரும் தேர்தலில் மக்களின் கோபம் மாற்றத்தை உருவாக்குவதை தடுக்க முடியாது.

இன்றைய கார்ட்டூன்