கதாநாயகன் வில்லனாகிய கதை

2006 சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதனை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பலரும் கதாநாயகன் என வர்ணித்தனர்.

அதில் ‘சொன்னதைச் செய்வோம் ; செய்வதைச் சொல்வோம்’ என்று வாய் ஜம்பம் அடித்தனர்.

சாதித்த சாதனைகளாக தமிழர் களின் 150 ஆண்டு கால கனவான சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப் பட்டது. தமிழ்ச் செம்மொழி ஆக்கப் பட்டது. நோக்கியா யூனிட் துவக்கப் பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும் திட்டம் அமலாக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு அறிக்கை அமலாக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் வீதம் தரப்பட்டது. 55 லட்சம் ஏக்கர் நிலம் தரப்படும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என பல சாதனைகளை சாதித்து விட்டதாகவும் இன்னமும் சாதிக்க உள்ளதையும் தெரிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி, இலவச சமையல் அடுப்பு, அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்புதல் உட்பட ஏராளமான வாக்குறு திகள் அந்த கதாநாயக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன.

இவை அனைத்தையும் அமல் படுத்திவிட்டது போலவும் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்தார் கலைஞர் என்று மணலைக் கயிறாகத் திரிக்கின்றனர். 2011 தேர்தலுக்கான திமுக அறிக்கையில் செய்யப் போவதாக பலவற்றையும் சொல்லி இதனை கதாநாயகி தேர்தல் அறிக்கை எனச் சொல்லி உலாவருகின்றார்கள். ஆனால் 2006 ல் சொன்னதை எதையும் முழுமை யாகச் செய்யாமல், மாதிரியாக (ளுயஅயீடந) செய்துவிட்டு அனைத்தையும் செய்து விட்டதாக வாய்ப்பந்தல் போடுகிறார்கள்.

150 ஆண்டு கால கனவான சேது சமுத்திரத்திட்டம் பகட்டாக பெருவிழா வாக துவக்கப்பட்டது. பல நூறு கோடி ரூபாய் அத்திட்டத்தில் செலவிடப் பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு இன்னமும் கனவாகவே உள்ளது.

அடுத்து தமிழ்ச் செம்மொழி ஆக்கப் பட்டதை நினைவுகூரும் விதத்தில் கோவையில் செம்மொழி மாநாடு ரூ.400 கோடிக்கும் மேலாக செலவிடப்பட்டு படாடோபமாக நடத்தப்பட்டது. அம் மாநாடு தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடும் மாநாடாக இருக்கும்; ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் படிக்கப்படும் எனவும் அனைவரும் எதிர்பார்த்தனர். அது கலைஞரையும் அவர் தம் குடும்பத்தினரையும் புகழ் பாடும் மாநாடாகவே அமைந்தது. இது அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

அடுத்து நோக்கியா யூனிட் சென்னை அருகே கொண்டுவரப்பட்டதை பெரு மையாக அவ்வறிக்கை கூறுகின்றது. நோக்கியா மட்டுமல்ல. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பல பன்னாட்டு நிறுவனங்கள் கொணரப் பட்டுள்ளன. ஆனால் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் வெளிப்படையாக போடப் படுவதில்லை. என்ன என்பதும் யாருக்கும் புரியாது. ஆனால் ஒன்று மட்டும் நடக்கின்றது. அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக அரசு விளங்கு கின்றது. தொழிலாளர்துறை உட்பட்ட அனைத்து துறைகளும் அந்நிறுவனங் களுக்கு ஆதரவாகவே உள்ளது. தொழிற் சங்க உரிமைகள், சட்டங்கள் அமல் படுத்துவதில்லை. அதனை அரசும் தட்டிக்கேட்பதில்லை. தமிழக அரசும் அதன் துறைகளும், காவல்துறையும் கண்ணையும், காதையும், வாயையும் மூடிக்கொண்டு ஏவல்புரிவதையே தொழி லாகக் கொண்டுள்ளது.

தொலைபேசியிலும் செல்போனிலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு ரூபாயில் பேசுவதை பெருமைப்பட்டுக் கொள்கின்றது. அதே துறையில் உலகமே இப்படிப்பட்ட ஊழலும் நடக்குமா என அண்ணாந்து பார்த்து அதிர்ச்சியுறும் விதத்தில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசு பணத்தை விழுங்கிவிட்டு முக்கிய அமைச்சரும் அதிகாரிகளும் சிறைச்சாலையில் கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்து யார் யார் படையெடுக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

தனது ஊழியர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் ஆறாவது ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொள்கின்றது. ஆனால் நடைமுறையில் அடிப்படை ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் , அங்கன்வாடி ஊழியர்கள், ஓட்டுநர்கள், அமைச்சகப் பணியாளர்கள், ஆரம்பப் பள்ளி, இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என அனைத்துப் பிரிவினர்களும் தங்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாக போராடு கின்றார்கள். டெஸ்மா, எஸ்மாவை ஒழித்ததாகக் கூறி, அவையில்லாம லேயே கடுமையாக சத்துணவு ஊழியர் களை தண்டித்துள்ளது தமிழக அரசு. அப்படியென்றால் அமல்படுத்திய பணம் எங்கே போயிற்று. இதிலும் ஊழல் தலைவிரித்தாடி பெரிய பெரிய அதிகாரி களுக்கே பலன் கிடைத்துள்ளது. ஓய்வூதி யத்தில் .இதுவரை சமமாக இருந்ததில் வித்தியாசம் படிகளில் பல ஆயிரக் கணக்கில் நஷ்டம். சம்பள விகிதங்களில் வித்தியாசம்.

ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் தருவதாகவும் 55 லட்சம் ஏக்கர் நிலம் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் 2010-11 நிதி நிலை அறிக்கையில் 1,78,976 பேருக்கு 2,12,946 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கூறியது 55 லட்சம் ஏக்கர் நிலம், தந்ததோ 2,12,946 ஏக்கர் நிலம். கேட்டால், உள்ளங்கை அளவு நிலமாவது தருவேன் என வாய்வீச்சு. இதுதான் சொன்னதை செயல்படுத்தும் லட்சணம்.

விசாரித்தால், குடும்பப் பிரிவினை யில் பங்கிடும் நிலமும் இதில் அடங்கும்.

அனைவருக்கும் வண்ணத் தொலைக் காட்சி வழங்க அரசு பணம் ரூ. 3716 கோடியில் 1,62,80,000 வாங்கப்பட்டுள் ளது. அப்படியென்றால் ஒரு தொலைக் காட்சியின் விலை ரூ 2283. ஆனால் ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப் பாக மாதம் ஒன்றுக்கு ரூ. 150 எனக் கணக்கிட்டால் வருடத்திற்கு ரூ. 2930 கோடி. ஐந்து வருடத்திற்கு ரூ. 14650 கோடி. இது யாருக்குப்போய் சேர்ந்தி ருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. அரசின் முதலீடு ரூ. 3716 கோடி. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் தனியொரு குடும்பத்திற்கு ரூ. 14650 கோடி. சொன்னதை செய்துவிட்டு சொல்லாமல் 5 மடங்கு கொள்ளையடித்த விந்தையை என்னவென்று சொல்வது?

அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப் படும் என்றதில், உண்மையாக இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதற்கு சாட்சியம் சமீபத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச் சித் துறை அலுவலர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்கள் தங்கள் துறைகளில் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ள இடங்களை பூர்த்திசெய்ய நடத்திய வேலைநிறுத்தமே.

2006ன் திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன், வில்லனாக மாறி தங்களையே தாக்குகின்றது. தாங்கள் கடந்துவந்த பாதை தாங்கள் சொன்ன எதையும் முழுமையாக நிறைவேற்றாமல் மாதிரிகளாக (ளுயஅயீடந) செயல்படுத்தி பிரம்மாண்டமாக விழா நடத்தியதும் மாநாடு நடத்தியதும்தான் மிச்சம். ஆகவேதான் 2011ல் கதாநாயகி என்று பீற்றிக்கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடுகின்றார்கள்.

கடந்த 2006 வில்லனே 2011 கதாநாயகியை விரட்டி அடிப்பது சர்வ நிச்சயம்.

இன்றைய கார்ட்டூன்