எல்லாமே நினைவுக்கு வருகிறது

“சினிமாவில் ஃபிளாஷ்பேக் வருவ தைப்போல, கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியிலே என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.”

-மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம் பரம் (சிவகங்கையில் ஊழியர் கூட்டத்தில் பேசி யது) ஜூனியர் விகடன் 06.04.2011

வாஸ்தவம்தான். ப.சி. சொல்லுவது போல 5 வருடங்களாக திமுக ஆட்சியில் என்ன நடந் தது என்பது நமக்கும் ஒவ்வொன்றாக நினை வுக்கு வருகிறது.

* 2006ல் திமுக பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் ‘எப்படியாவது’ ஜெயிக்க வேண்டுமென்று திமுக நடத்திய வன்முறை வெறியாட்டமும், மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் தேவி உள்பட மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் மீது ஆளும் கட்சியினர் நடத்திய கொலைவெறித் தாக்குதலும் நினைவுக்கு வருகிறது. மக்கள் ஒட்டுமொத்த மாக வெகுண்டெழுந்ததின் பின்பாக மறுதேர் தல் நடத்த வேண்டிய நிலைக்கு திமுக அரசு தள்ளப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

* கருணாநிதியின் குடும்பத்திற்குள் நிகழ்ந்த உட்பூசலால் தினகரன் நாளிதழில் பணியாற்றிவந்த அப்பாவி இளம் பொறியா ளர்கள் மூன்று பேர் படுகொலைக்கு ஆளான கொடுமை நினைவுக்கு வருகிறது. தங்கள் தொழிலுக்குப் பாதிப்பு என்றவுடன் 600 கோடி ரூபாய் கொடுத்து மாறன் சகோதரர்கள் சரண்டர் ஆனதும் நினைவுக்கு வருகிறது. கருணாநிதியின் கண்கள் பனித்ததும், இதயம் இனித்ததும், தினகரன் அலுவலக தீ வைப்பு வழக்குக்கு சமாதி எழுப்பப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

* கந்துவட்டிக்கொடுமையைத் தட்டிக்கேட்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர் நாமக்கல், பள்ளி பாளையம் வேலுச்சாமியும், கள்ளச்சாராய கும்பலின் அட்டகாசங்களையும், அராஜகங் களையும் அம்பலப்படுத்திய பேரளம் தோழர் நாவலனும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. கருணாநிதி கையில் வைத்திருக்கும் காவல்துறை இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நினைவுக்கு வருகிறது.

* ஃபாக்ஸ்கான், ஹூண்டாய் என்று பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைக்க முயன்றதற்காக தொழிலாளர்கள் பந்தாடப்பட்டு பழிவாங்கலுக்கு ஆளான கொடுமை நினைவுக்கு வருகிறது. காவல் துறையின் துணைகொண்டு தொழிலாளரை நசுக்கியும், பன்னாட்டு முதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசியும் கருணாநிதி நடத்திய அராஜகம் நினைவுக்கு வருகிறது.

சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் பணி யாளர்கள், அங்கன்வாடியில் வேலை செய்யும் பெண்கள், வேலைகேட்டுப் போராடிய இளை ஞர்கள், காலிப்பணியிடங்களை நிரப்பச் சொல்லி போராடிய அரசு ஊழியர்கள் என்று அனைவர் மீதும் தாக்குதலை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்த கொடுமை நினைவுக்கு வருகிறது.

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் காளியப்பனை திமுக எம்எல்ஏ மாலைராஜா, ஒரு விழாவின்போது மேடையிலேயே அடித்ததும், கருணாநிதியின் தூண்டுதலின்பேரில் அந்தப்பிரச்சனையை காவல்துறை அப்படியே கிடப்பில்போட்டதும் நினைவுக்கு வருகிறது.

பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ப.சிதம்பரத்துக்கு வேண்டுமானால் ‘செலக்டிவ் அம்னீசியா’ இருக்கலாம். தமிழக மக்கள் திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்கள். ஏப்ரல் 13 பொதுத்தேர்தல் மூலம் கருணாநிதி ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

இன்றைய கார்ட்டூன்