மின் வெட்டு : தி.மு.க அரசே குற்றவாளி!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 10,214 மெகாவாட் டாகும். நடைமுறையில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அதிகபட்ச அளவு 8000 மெகாவாட்டாகும். சுமார் 2000 மெகாவாட் பற்றாக்குறை உள்ள வாரியமாக தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுகிறது. மின்சார பற்றாக்குறையினால் மின் வெட்டு, அதையொட்டி ஏற்படும் பாதிப்பு கள் தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு தொழில்கள் துவங்கி விவசாய உற்பத்தி வரையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார பற்றாக்குறையை ஓரளவிற்கேனும் சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் அரசிற்கும் மின்சார வாரிய நிர்வாகத் திற்கும் ஏற்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களிலிருந்தும் தனி யார் மின்உற்பத்தி நிறுவனங்களிலிருந் தும் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கி குறைந்த விலைக்கு விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய நஷ்டத்தில் தனது ஊழியர் களுக்கு மாதச் சம்பளம் கூட கடன் வாங்கி வழங்கும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தற்போதைய திமுக அரசாங் கம் பதவி ஏற்றவுடன் புதிய மின்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆர்க்காடு வீராசாமி அவர்களை சந்தித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக 19.5.2006 அன்று கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் பெருகி வரும் புதிய மின்இணைப்புகளுக்கு ஏற்ப தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்திட கூடுதலாக மின்சார உற்பத்தி நிலையங்களை அமைத்திட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத் திலும், வடசென்னை அனல் மின்நிலை யத்திலும் கூடுதலாக தலா 1000 மெகா வாட் மின்உற்பத்திக்கும், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கூடுதலாக 500 மெகாவாட் மின்உற்பத்திக்கும், நாகப்பட்டி ணத்தில் 1000 மெகாவாட் மின்உற்பத்திக் கும், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் புதியதாக அமைய உள்ள அனல் மின் திட்டத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் கூடுதலாக கிடைக்கும் நில வாயுவை பயன்படுத்தி 1000 மொகாவாட் மின்உற்பத்திக்கும், பெரம்பலூர் மாவட் டம் ஜெயங்கொண்டத்தில் திட்டமிடப் பட்டுள்ள புதிய அனல் மின்திட்டத்தை துவக்குவதற்கும், திருநெல்வேலி மாவட் டம் கூடங்குளத்தில் முதற்கட்டமாக 1000 மெகாவாட் மின்சார உற்பத்தியை 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடித்திட வும், இரண்டாம் கட்டமாக 1000 மெகாவாட் மின்உற்பத்தியை 2008ஆம் ஆண்டுக் குள் முடித்திடவும் உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திடுமாறு சங்கத்தின் சார் பாக மின்துறை அமைச்சரிடம் வலியு றுத்தி பேசப்பட்டது. அமைப்பின் கோரிக்கை மீது கவனம்செலுத்தி புதிய மின்நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு ஓராண்டு காலம் திமுக அரசு காலம் கடத்தியது. இந்த ஓராண்டு காலம் தாமதமே இன்று பெரிய அளவிற்கு மின் வெட்டு ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.

ஒரு அனல் மின்நிலையத்தை அமைப்பதற்கு சராசரியாக மூன்று ஆண்டு காலம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சங்கத்தின் சார்பாக மேலே கொடுக் கப்பட்ட கூடுதல் மின்உற்பத்திக்கான புதிய அனல் மின்நிலைய திட்டங்களை ஆளும் திமுக அரசாங்கம் அமல்படுத்தி யிருந்தால் தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின்பற்றாக்குறையை சரிசெய்தி ருக்க முடியும். தமிழக அரசாங்கம் புதிய மின்உற்பத்திக்கான நடவடிக்கை எடுப் பதில் காட்டிய அலட்சியப் போக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக திறமையின்மையே தற்போதைய நெருக் கடிக்கு காரணமாகும். சமீபத்தில் தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் கோயம்புத் தூரில் பேசும் போது மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால் உங்க ளுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு மின்சாரத்தை வழங்குவேன் என்று பேசி யுள்ளதை கேட்கும்போது, தமிழக மக் களை எந்த அளவிற்கு ஏமாற்ற முயற்சிக் கிறார் என்றுதான் நினைக்கத் தோன்று கிறது. இதுவரையில் பதவியில் இருந்த போது செய்யாதவர், இனிமேல் செய்வேன் என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்கு?.

தமிழக அரசாங்கத்தின் கட்டுப்பாட் டில் உள்ள 58 பொதுத்துறை நிறுவனங் களில் பொன்விழா கொண்டாடிய மிகப் பெரிய நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்று கூறுகளாக்கி எதிர் காலத்தில் தனியார் மயமாக்குவதற்கான வழிகளை அமைத்துக் கொடுத்து, மின்சார உற்பத்தியில் பற்றாக்குறை மாநிலமாக்கி, மின்கட்டண உயர்வுக்கு வழி வகுக்கும் தமிழகத்தில் விவசாயத்தை தொழில் வளத்தை இருளில் தள்ளி வேலை வாய்ப்பிற்கு உலைவைக்கும் திமுக அரசாங்கத்தை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்.

இன்றைய கார்ட்டூன்