சிறுபான்மையினர் வளர்ச்சியும் இடது முன்னணி அரசும்

எந்தவொரு சமூகத்திலும் சிறுபான்மை யினர் உரிமைகளைப் பாதுகாத்திடாமல் ஜன நாயகத்தை ஒருங்கிணைத்து விரிவாக்கிட முடியாது. சிறுபான்மையினருக்கு சம உரிமை கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம் உலகின் பலநாடுகளிலும் இன் றளவும் தொடர்கிறது. இப்போது அது வெகு ஜன இயக்கங்களின் பிரிக்க முடியாததொரு பகுதியாகவும் மாறி இருக்கிறது. சிறுபான்மை யினருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதன் மூலமே ஓர் அரசு தன் கடமை களை முழுமையாகச் செய்ததாகக் கூற முடியும்.

சுமார் நூறு மாவட்டங்களில் முஸ்லிம்கள் அங்குள்ள மக்கள்தொகையில் 25 விழுக்காடு இருக்கின்றனர். மொத்தத்தில் நாட்டில் சுமார் 15 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். தற் போது நடைபெற்றுவரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். நாட்டின் சமூக, பொரு ளாதார வளர்ச்சிப் பணிகளில் இவர்களை முழுமையாக ஈடுபடுத்தாமல் நாட்டை முன் னேற்றப் பாதையில் செலுத்திட முடியாது.

நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்து நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கு சம அந்தஸ்து கிடைத்திட இன்னமும் பலவழிகளில் போரா டிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் முன்னேற்றம் தொடர்பாக மத்திய அரசு எண் ணற்ற ஆணையங்களையும் குழுக்களையும் அமைத்ததுண்டு. அவையும் அறிக்கைகள் சமர்ப்பித்ததுண்டு. ஆனால் அவற்றின் மீதான நடவடிக்கைகள் என்பதுதான் அநேக மாக எதுவும் இல்லை. அவை காலப்போக் கில் காற்றோடு காற்றாகப் பறந்துபோயின.

சச்சார் குழு மற்றும் ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் சமீபத்தில் அளிக்கப்பட்டவைகளாகும். முஸ்லிம் மக்க ளின் சமூக- பொருளாதார நிலைமைகள் மிக வும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக சச்சார் குழு அறிக்கை குறிப்பிடுகிறது. சில இடங்களில் முஸ்லிம்களின் அவல நிலை மை, மோசமாக உள்ள தலித்துகளின் நிலை மைகளை விட மிகவும் மோசமாக இருப்ப தாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவற்றை உடனடியாகச் சரிப்படுத்தக்கூடிய நடவடிக் கைகள் சிலவற்றையும் அது பரிந்துரைத் திருந்தது. சச்சார் குழு அறிக்கையை ஒட் டியே ரங்கனாத் மிஸ்ரா ஆணையமும் பல பரிந்துரைகளைச் செய்திருந்தது. மேலும் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடுகளுக்கும் பரிந் துரைத்திருந்தது. ஆனால் சச்சார் குழு மற்றும் ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்ற மத்திய அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுத் திடவில்லை. நாட்டின் மக்கள்தொகையில் 14 விழுக்காடு முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால் அரசின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஒரு விழுக்காடு அளவிற்குக்கூட அவர்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கிடவில்லை.

மேற்கு வங்க நிலைமை

இந்தப் பின்னணியில்தான் மேற்கு வங் கத்தின் நடவடிக்கைகளை நாம் ஆய்வு செய் திட வேண்டும். கடந்த 34 ஆண்டுகளாக, மேற்குவங்க இடது முன்னணி அரசாங்கம் ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக வும், அவர்கள் மத்தியில் கல்வி கற்றோரை அதிகரிப்பதற்காகவும், சமத்துவத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகவும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந் திருக்கின்றன. இவற்றால் முஸ்லிம்களும் கணிசமான அளவிற்குப் பயனடைந்திருக் கிறார்கள்.

நாட்டில் ஒரு கோடி முஸ்லிம் மக்களுக் கும் அதிகமாக உள்ள நான்கு மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும். மேற்கு வங்கத் தில் இரண்டு கோடிக்கும் மேலான முஸ்லிம் கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான் மையோர் மிகவும் வறிய நிலையில் வாடுபவர் கள். அவர்களின் சமூக- பொருளாதார நிலை மைகள் மிகவும் பரிதாபகரமானது. இடது முன் னணி அரசாங்கத்தின் வறுமை ஒழிப்புத் திட் டங்கள் இவர்களுக்குப் பெரிய அளவில் உதவி இருக்கின்றன.

சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பே இடது முன்னணி பல திட்டங்களை முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக மேற்கொண் டது. சில குறிப்பிட்ட துறைகளில் இதன் வெற்றி குறிப்பிடத்தக்கது. நாட்டில் வேறெங்கும் இல் லாத அளவில் சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் இதுபோன்று உள்ள கார்ப்பரேஷன்கள் உருப்படியாக எதுவும் செய்யாத அதே சமயத்தில், மேற்கு வங்கத் தில் இயங்கும் கார்ப்பரேஷன், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருஞ்சாத னைகள் புரிந்தமைக்காக பலமுறை பாராட் டுக்களைப் பெற்றிருக்கிறது. மற்ற பல பணிக ளோடு வக்ப் டிரிப்யூனல் அமைக்கப்பட்டமை, ஹஜ் குழுவினரின் உறுதியான வேலைகள், முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் கட்டப் பட்டமை ஆகியவை சிறுபான்மையினர் வலுப்பெறவும் சுயநம்பிக்கைகொள்ளவும் பெரிய அளவில் உதவியிருக்கின்றன.

மதரசா கல்வி

முஸ்லிம்களுக்காக, நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதரசா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றபோதிலும் மற்ற மாநி லங்களில் உள்ள மதரசா கல்வி நிறுவனங் களுக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள நிறு வனங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. மேற்குவங்கத்தில் உள்ள மதரசா கல்வி நிறுவனங்கள் முஸ்லிம் களுக்கு மதம் சார்ந்த கல்வியை மட்டுமோ அல்லது அதனைப் பிரதானமாகவோ அளித் திடவில்லை. அவர்களுக்கு நவீன கல்வியை மிகப்பெரிய அளவில் அளித்து வருகிறது. மற்ற மாநிலங்களில் மதரசாவிலிருந்து வெளி வரும் மாணவர்கள் மற்ற மாணவர்களைவிட குறைவாகவே மதிப்பிடப்படுவார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் அந்த நிலை கிடையாது. மதரசா கல்வி நிறுவனங்களுக்கு, மற்ற கல்வி நிறுவனங்களுக்கு இணையான அந்தஸ்து அனைத்து மட்டங்களிலும் அளிக்கப்பட்டி ருக்கின்றன.

1976-77இல் மதரசாக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை வெறும் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இது 2009-10இல் 610 கோடி ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டிருக் கிறது. 1978இல் 1565 மாணவர்கள் மட்டுமே பயின்றார்கள். இப்போது அந்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரங்களாகும். தரமான ஆசி ரியர்களை உத்தரவாதப்படுத்துவதற்காக ஒரு மதரசா தேர்வு ஆணையம் உருவாக்கப்பட்டி ருக்கிறது. மதரசா வாரியத்திற்கு சுயாட்சி (யரவடிnடிஅடிரள) அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கி றது. மேலும் மதரசாக்களுக்கு அரசியலமைப் புச் சட்டத்தின் 30ஆவது பிரிவின்கீழான சிறு பான்மை நிறுவனங்களுக்கான அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதன் பொருள், சிறுபான்மையினரின் சமூகக் கலாச்சார உரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றன என்ப தாகும். இந்த அந்தஸ்து நிலையை 599 மதர சாக்கள் பெற்றிருக்கின்றன. இது 1499ஐ எட்ட இருக்கின்றன. மேலும் பத்து புதிய மதரசாக் கள் உருவாக்குவதற்கான செயல்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதரசாக் களில் பயிற்று மொழி ஆங்கிலமாகும். மேற்கு வங்கத்தில் இயங்கிடும் மதரசாக்கள் அடிப் படையில் மதச்சார்பற்ற நிறுவனங்களாகும். எனவேதான் அங்கே உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் களில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள் அல் லாதவர்களாக இருக்கின்றனர். மேற்கு வங்கத் தில் உள்ள மதரசாக்கள் மருத்துவர்கள், பொறி யாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் போன்றோரை உருவாக்கக்கூடிய நவீன கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.

நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த கல்கத்தா மதரசா, அலியா பல்கலைக் கழகமாக 2007ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அதற்கான சட்டம் அதே ஆண்டில் நிறை வேற்றப்பட்டது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையம்

முதல்வர் புத்ததேவ்வின் தூண்டுதலை அடுத்து பிரதமர், அலிகார் முஸ்லிம் பல் கலைக்கழகத்தின் வளாகங்களை முர்ஷிதா பாத் உட்பட மேற்கு வங்கத்தில் ஐந்து இடங் களில் அமைத்திட கேட்டுக்கொள்ள, பல் கலைக்கழகத்தினரும் அவ்வாறு அமைத்திட தீர்மானித்திருக்கின்றனர். இதற்குத் தேவை யான நிதியை மத்திய நிதி அமைச்சரும் ஒதுக்கியிருக்கிறார்.

முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட தன் மைக்கு, அவர்களுக்கு முறையான கல்வி வச திகள் இல்லாதது முக்கிய காரணமாகும். எனவேதான், அவர்களைச் சிறந்த கல்வி மான்களாக மாற்றிட இடது முன்னணி அர சாங்கம் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை அமைத்திட நடவடிக்கைகளை மேற்கொண் டிருக்கிறது.

இட ஒதுக்கீடு

ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக் கை நாடாளுமன்றத்தில் 2009இல் தாக்கல் செய்யப்பட்டது. முஸ்லிம் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்குப் பல்வேறு பரிந்துரை களை அது செய்திருந்தது. ஆயினும் மத்திய அரசு இதுநாள்வரை இதன்மீது உருப்படியான நடவடிக்கை எதையும் எடுத்திடவில்லை. ஆனால் மேற்கு வங்க இடது முன்னணி அரசு இதில் அமைதிப் பார்வையாளராக இருந்திட விரும்பவில்லை. 2010 பிப்ரவரி 8 அன்று ரங்கனாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை களை ஏற்று, வேலைவாய்ப்பில் இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள முஸ்லிம் சிறு பான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித் துள்ளது. முன்பு இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு 7 விழுக்காடு என்ற அளவில் இட ஒதுக்கீடு இருந்தது. இப்போது அது 17 விழுக் காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர் கல்வி யிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப் பதற்கான நடைமுறைகள் உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு மிகவும் பின்தங்கிய நிலையி லிருந்த முஸ்லிம் சிறுபான்மையினர் - குறிப் பாக இளைஞர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மற்றும் வளர்ச்சிமிகுந்த கட்ட மைப்பு வசதிகளிலும் முன்னேற்றமடைய இடது முன்னணி அரசாங்கம் எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

நன்றி : தமிழில்: ச.வீரமணி

இன்றைய கார்ட்டூன்