திமுவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா : மேலூருக்குள் காரில் போன ரூ. 5 கோடி எங்கே?

மதுரையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்தனர். 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்க ளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் திமுகவினரை விட்டு விட்டனர்.

விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என அனைத்துத்துறை களிலும் தோல்வியடைந்த திமுக, எப்படி யாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு வகை யில் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கியுள்ளது.

சாதனைகள் செய்ததாகக் கூறினா லும் அவற்றைக் கூறி வாக்குகேட்க வழி யில்லாத திமுகவினர், மதுரை மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் வாக்காளர்க ளுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். வாக்களிக்க பணமோ அல்லது பொருளோ கொடுப்பதோ அல்லது வாங்குவதோ கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா

மதுரை 66வது வார்டு பைக்காராவில் உள்ள முத்துராமலிங்கபுரத்தில் உள்ள வீடு களுக்கு திங்களன்று அதிகாலை 5 மணி யளவில் திமுக அவைத்தலைவர் ராஜேந் திரன், இளைஞரணி செயலாளர் ராஜேஸ், நிர்வாகிகள் காசிமாயன், பாண்டி, தங்கப் பாண்டி, மோகன், பஞ்சமராஜன், எபி, மாயாண்டி உள்ளிட்ட பலர் வாக்காளர்களி டம் திமுகவிற்கு வாக்களிக்கக்கோரி பணத்தை லஞ்சமாகக் கொடுத்துள்ளனர்.

இதையறிந்ததும் அதிமுக வட்டச் செயலாளர் சின்னமுருகன் தலைமை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர் வாகிகள் மாரியப்பன், சசிக்குமார், ராஜேந் திரன், கிருஷ்ணன் மற்றும் தேமுதிக தலைவர்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் கொடுப்பதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத் துள்ளனர். ஆனால், அவர்கள் வர கால தாமதமானதால் முத்துராமலிங்கபுரம் மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதிமுக வட்டச்செயலாளர் சின்னமுருகன் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து திமுக அவைத்தலை வர் ராஜேந்திரன், இளைஞரணி செயலா ளர் ராஜேஸ், நிர்வாகிகள் காசிமாயன், பாண்டி, தங்கப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரிசுப்பொருட்கள் பறிமுதல்

மதுரை 33 வது வார்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சுயஉதவிக்குழு வினர் மகளிர்தினவிழாவை ஞாயிறன்று நடத்தியுள்ளனர். தேர்தல் நேரத்தில் திரு மண மண்டபங்களில் விழா நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. ஆனால் ஆணையத்தின் நடைமுறையை உதாசீனப்படுத்தி விட்டு நடத்தப்பட்ட இவ்விழாவில் ஒரு வங்கியின் மேலா ளர், காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியுள்ளனர். இந்த விழா விற்கு காவல்துறை அனுமதி கோரி மார்ச்20 ந்தேதி தான் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொண்ட சுய உதவிக்குழுவினருக்கு பரிசுப்பொருட்கள் மட்டுமின்றி ஜாம், ஊறுகாய் ஆகியவை யும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தக வல் அறிந்த அதிமுக 3-ஆம் பகுதிக் குழுச்செயலாளர் பி.எஸ்.கண்ணன், வட் டச்செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோரும், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ரமேஷ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். வங்கி மேலாளரிடம், தேர்தல் காலத்தில் எப்படி சுயஉதவிக்குழு கூட் டத்தில் கலந்து கொள்ளலாம் எனக் கேள்வி எழுப்பினர். மாற்றுத்திறனாளிகள் என்றதால் கலந்து கொண்டதாக அவர் கூறினார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் வந்து பரி சுப்பொருட்கள் உள்ளிட்டவைகளை பறி முதல் செய்தனர். சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த 4 பேரை பிடித்து காவல்துறை யினர் விசாரணை நடத்தி, விட்டுவிட்டனர்.

பணம் பறிமுதல்

திருமங்கலம் தொகுதிக்குட்பட்டது சிக்கம்பட்டி. இந்த ஊரில் உள்ள பூவரசம்பட் டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுரேஷ்(36) என்பவர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் அடிப் படையில் அங்கு விரைந்து சென்ற அதிகா ரிகள், அவரிடமிருந்த 24ஆயிரத்து 870ஐ கைப்பற்றினர். சிறிது நேரத்தில் சுரேஷை விடுவித்து விட்டனர்.

மேலூர் தொகுதிக்குள் போன

ரூ.5 கோடி

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தொகுதியை குறிவைத்து பல பணிகளைச் செய்து வரும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, தனது கட்சியைச் சேர்ந்தவ ருக்கு தொகுதியை வாங்கித்தராமல், காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜமாணிக்கத்தின் மனைவி ராணியை திமுகவில் சேர்த்து, அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளார்.

இத்தொகுதியில் உள்ள வாக்காளர்க ளுக்கு பணப்பட்டுவாடா செய்ய ஞாயிறன்று 5 கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட் டுள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட கார் களில் சென்ற திமுகவினரை ஒரு மேலூர் செக்போஸ்டில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால், அந்த கார்கள் நிற்காமல் வேகமாக சென்று விட்டன. இதுகுறித்து அனைத்து செக் போஸ்டிற்கும் காவல்துறையினர் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனா லும் ஒரே ஒரு கார் மட்டும் காவல்துறை யிடம் சிக்கியதில் அதில் ஏராளமான சால்வைகள் மட்டும் இருந்துள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.சின் னச்சாமி, என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங் கள் என கையைப் பிசைந்துள்ளார். நட வடிக்கை எடுக்க வேண்டியவர்களே, நட வடிக்கை எடுக்க முடியாமல் கையைப் பிசைந்துள்ளதால் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர் தல் ஆணையத்திற்கும் எதிர்க்கட்சியினர் புகார்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

இன்றைய கார்ட்டூன்