இன்னும் ஒரு 2ஜி ஊழல்

2005-06 துவங்கி தொடர்ந்து வந்த ஆறு வருடங்களாக இந்திய அரசு தயாரித்த நிதிநிலை அறிக்கைகளில் காங்கிரஸ் தள்ளு படி செய்த கார்ப்பரேட் நிறுவன வருமான வரி யின் அளவு எவ்வளவு தெரியுமா? 3,74,937 கோடி ரூபாய். இது 2ஜி மெகா ஊழலின் கிட் டத்தட்ட மூன்று மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படி எழுதித்தீர்க்கும் தள்ளுபடி யின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது என்றே தகவல்கள் (நிறைய) கூறுகிறது. 2005-06ல் ரூ.34,618 கோடியாக இருந்தது, இந்தாண்டு 155 சதமானம் உயர்ந்து ரூ.88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அரசு, “நிறுவன வருமான வரியிலிருந்து நாளொன்றுக்கு ரூ.240 கோடியை தள்ளுபடி செய்கிறது. இந்தப்பணம் இந்தியாவிலிருந்து அப்படியே வெளிநாட்டு வங்கிகளுக்கு கறுப் புப்பணமாக தினசரி செல்கிறது” என்று வாஷிங்டன் சர்வநிதியத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய நிதி நிலை அறிக்கை, கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு பிரம்மாண்டமான தள்ளுபடியை அளித்த நிலையில், இந்திய விவசாயத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற் படுத்தி இருக்கிறது. 

விவசாயத்துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5,568 கோடி வெட்டப்பட்டிருக்கிறது. பயிர் வேளாண்மையில் மட்டும் அதிகப்படியாக 4,477 கோடி ரூபாய் வெட்டிக் குறைக்கப்பட் டுள்ளது. இந்திய வெட்டிக்குறைப்பு, இந்திய விவசாயம் மற்றும் அதைச் சார்ந்தவர்கள், சேவைகளையும் சவக்குழிக்கு கொண்டு செல்லும் என்று குறிப்பிடுகிறார் கூஐளுளு (கூயவய ஐளேவவைரவந டிக ளுடிஉயைட ளுஉநைnஉந) சார்ந்த ஆர்.ராம் குமார், உண்மையில் பொருளாதாரத் துறையில் அதிகப்படியான வெட்டிக்குறைப்பு என்பது விவசாயம் மற்றும் சேவைகளில்தான் செய் யப்பட்டுள்ளது.

வருவாய் இழப்புக்கு எதிரான ஒரு கருத்து கூட சொல்லாத ஆளாக கபில்சிபல் கூட இருக்கிறார். காரணம், இது சாதாரண விஷ யமே. இம்மாதிரியான எண்ணிக்கைகள் எல் லாம் ‘முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இனங்கள்’ எனப் பட்டியலிடப்படுவதுதான். சுங்க மற்றும் தீர்வை இனங்களைப் பொறுத்த வரையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகுந்த பயன் பெறுவதும், சமூகம் அதிர்ச்சிக்குள்ளா வதையும் மேலும் காண முடியும். உதாரண மாக, சுங்க இனங்களிலிருந்து தீர்மானிக்கப் பட்ட வருவாயினமாக எது கருதப்படுகிற தென்றால் தங்கமும் வைரங்களும். ஏழை, எளிய மக்களை வாய்மூடி மவுனிகளாக இருக்க வைக்கிற விஷயமிது. இவ்வகையில் இந்த வருட நிதிநிலை அறிக்கையில் 48,798 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்த 48,798 கோடி ரூபாய் என்பது ஒவ்வொரு வரு டமும் பொது விநியோக திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த தேவைப்படும் நிதியின் பாதி அளவிற்கு சமமாகும். மூன்று ஆண்டுக ளில் தங்க, வைர ஆபரணங்கள் மீதான வரி விலக்கு மூலம் உயர்ந்த தொகை எவ்வளவு என்று பார்த்தால் அது மொத்தமாக 95,675 கோடி ரூபாய் ஆகும்.

சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டிய பணம் தனி யார் நிறுவனத்தின் கொள்ளை லாபங்களுக் காக வேட்டையாடப்படுகிறது. தங்க, வைர நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் லட் சக்கணக்ாகன ஏழை, எளிய மக்களின் வேலையைக் காப்பாற்றுவதற்குத்தான் இத்து றைக்கான சலுகைகள் என சிலர் கூறுவர். ஆனால் உண்மை என்னவெனில் சூரத் நக ரிலோ அல்லது வேறு எந்த நகரிலோ ஒரு தொழிலாளியின் வேலையைக் கூட இது காப்பாற்றவில்லை.

தங்க, வைரத் தொழில் நகரமான ஒரிசா, சூரத்தின் கஞ்சம் (ழுயதேயஅ) நகரின் ஏராள மான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வெறுங்கையோடு தங்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், சில தொழிலாளர்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்துள்ளனர். 2008ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியால் இத் துறை சீரழிந்தது. இதில் நிறுவனங்கள் மட் டுமே சீராக்கப்பட்டுள்ளது. தொழிலாளிகள் பாதுகாக்கப்படக்கூடவில்லை. மகாராஷ்டிர மாநில நிறுவனமொன்று மத்திய அரசின் “கார்ப்பரேட் சோசலிசம்” மூலம் மிகப்பெரிய அளவில் லாபம் அடைந்தது. அதே மாநிலத் தில் 2005-08 ஆகிய மூன்றாண்டுகளில் தினந்தோறும் 1800 தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என்பதுதான் “கார்ப்பரேட் சோசலிச”த்தின் கோரமுகம்.

மீண்டும் நிதிநிலை அறிக்கைக்குள் வரு வோம்.

சுங்கவரியின் மூலம் கார்ப்பரேட் நிறு வனங்கள் பெறுகின்ற சலுகைகள் மிக மிக அதிகம். அதி நவீன மிக அதிக வசதியான மருத்துவ உபகரணங்களை ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இறக்குமதி செய்கிற கார்ப் பரேட் மருத்துவமனைகள் பெறுகிற சலுகை கள் இதில் அடங்கும். இத்தகைய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் 30 சதமான படுக்கை கள் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்து (செய்யாமலேயே, செய்ததாக காட்டப் பட்டு) அதற்குரிய செலவுகளை அரசிடமே திரும்பப் பெற்றுக்கொள்வது என்பது கார்ப் பரேட் நிறுவனங்கள் அடித்து வருகிற சமீபத் திய கொள்ளை. இந்தாண்டு நிதிநிலை அறிக் கையில் இப்படியான வகைகளுக்காக மக்கள் விரோத காங்கிரஸ் அரசு, மக்களது வரிப்பணத் திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிற சலுகைகள் எவ்வளவு தெரியுமா? 1,74,418 கோடி ரூபாயாகும்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருட்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டால் அப் பொருட்களின் விலை குறையும் எனக் கூறப் பட்டுவருகிறது. 2ஜி அலைக்கற்றை விவகா ரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்தது உலக மறிந்தது. ஆனால் எவ்விதமான ஊழலுமே நடக்காதது போல செல்போன் அழைப்புக்கட் டணம் எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் இலவச அழைப்பு வசதி கூட தருகிறார்கள் என தமிழகத்தின் கிராமங் களில் ஏன் நகரங்களில் பேசப்படுவதே ஒரு நல்ல உதாரணம்.

தீர்வைக்குறைப்பால் நேரடியாக பயன் பெறுபவர்கள் நிறுவனங்களும் வியாபாரி களுமே என்பதே உண்மை. போகிற போக் கில் சிற்சில பலன்கள் பயனாளிகளுக்கும் கிடைக்கிறது. இது கண்ணுக்குத் தெரியாது. இதுகூட வெறும் கற்பனையே. இந்தப் பல னைக்கூட பலன் தான் என நிரூபிக்கவும் முடியாது. இப்படியான தீர்வை குறைப்பின் மூலம் நிறுவனங்கள் அடைந்த லாபம் எவ்வ ளவு இருக்கும் என நினைக்கிறீர்கள். 1,98,291 கோடி ரூபாய். கண்ணுக்குத் தெரியாத 2ஜி அலைக்கற்றையில் அடித்த கொள்ளையை விட அதிகமாகும் இது. சென்ற ஆண்டு 1,69,121 கோடி ரூபாய் ஆக இருந்த தீர்வைக் குறைப்பு 197 சதமானம் உயர்ந்திருக்கிறது.

கார்ப்பரேட் வருமானவரி, சுங்கவரி, தீர் வைவரி என்ற இந்த மூன்று இனங்களிலும் வழங்கப்பட்ட விலக்குகளினால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த லாபம் வியப்பூட்டுகிற அளவில் இருக்கிறது. 

2005-06ல் 2,29,108 கோடி ரூபாயாக இருந்த கொள்ளை லாபம், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமாக 4,60,972 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

2005-06 முதல் 2010-11 முடிய ஐ.மு. கூட்டணி-2 ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்த மொத்த வருவாய் எவ்வளவு தெரியுமா? தலைச்சுற்றல் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். 21,25,023 கோடி ரூபாய்தான். இது அரை டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு சமம்.

2ஜி மெகா ஊழலின் 12 மடங்கிற்கும் மேலாகும். 

1948ல் 462 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியாவில் இருந்து சட்டத்திற்கு புறம்பான பணம் வெளிநாட்டு வங்கிகளுக்கு சென்றது. அது இன்று 21 லட்சம் கோடியாக உயர்ந்த தற்கு இம்மூன்று இனங்களும் “வடிகுழா யாக” மாறி இருக்கிறது. இந்த வடிகுழாய் கூட ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்த 2005-06ல் இருந்துதான் உருவாகியுள்ளது. மேற்குறிப் பிட்ட மூன்று இனங்கள் மூலமாக நிறுவன கொள்ளை லாபத்தின் அளவு 2005-06ல் இருந்ததைக் காட்டிலும் 101.2 சதமானம் உயர்ந்திருப்பதை பட்டியல் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.

வெளிநாடுகளுக்கு சட்டத்திற்கு புறம் பான பணம் செல்கிறது என்பது மட்டுமல்ல. அதுவும் சட்டரீதியாகவே நடைபெறுகிறது. இது ஏதோ ஒரு சிலரின் தனிப்பட்ட குற்றமல்ல. மத்திய அரசின் (குற்றக்) கொள்ளையாகவே இருக்கிறது.

உலகில் அதிக அளவிற்கு, பட்டினியோடு போராடுகிற ஏராளமான ஜனத்தொகையைத் தன்னகத்தே கொண்டிருக்கிற இந்தியாவில், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பய னளிக்கிற பொது விநியோகத் திட்டத்தை நல்ல நிலையில் நடத்திட பணமில்லை என்று சொல்கிறது மத்திய அரசு. மேலும் உணவுக் காக வழங்கி வருகிற குறைந்த அளவேயான மானியத்தைக் கூட கிஞ்சித்தும் யோசிக்கா மல் வெட்டுகிறது. ஆனால், அதே நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு என்ற பெயரில் எவ்வளவு வருவாயை உயர்த் தித் தருகிறது பார்த்தீர்களா? நூறு சதவீதத் துக்கும் மேல்!

விண்ணமுட்டுகிற விலைஉயர்வு ஒரு பக்கம். மிகப்பெரிய அளவிலான உணவு நெருக்கடி இன்னொரு பக்கம் என இந்திய மக்களை மேலும் மேலும் வாட்டி வதைக்கிற திட்டம்தானே இது? 

அரை நூற்றாண்டுக்கு முன்பு 1955-59 ஐந்து ஆண்டில் இருந்த உணவுப் பயிர்க்கான தினசரி நிகர தனிநபர் வருமானத்திற் கும் குறைவான அளவே 2005-09 ஐந்தாண்டு களிலும் இருந்தது என்பதை நமது நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கைகள் வெளிப் படுத்துகின்றன.

நன்றி: ‘தி இந்து’ (7.3.11)

தமிழில் : வேல.கணபதி

இன்றைய கார்ட்டூன்