அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்

அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த வழக்கில், விதிமுறைகளை மீறி எழுதப்பட்ட விடைத்தாள்கள் எதற்காக திருத்தப்பட்டன என்பது குறித்து தேர் வாணையம் உரிய காரணத்தை சொல்ல வில்லை என்றும் இதன் மூலம் தேர்வா ணையம் உரிய நடைமுறைகளை பின் பற்றவில்லை என்பதும்; தெரியவருகிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வாணையம் ஒரு சிலரின் விருப்பத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது அதன் பொருளாகும். இப்படி பணிநியமனம் செய் யப்பட்டவர்கள் அரசுப் பணியில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும், பதவி உயர்வு பெற்று இருந்தாலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தேர்வாணையம் இந்த தீர்ப்பினை அமல்படுத்த தயாராக உள் ளதா என்பதே இப்போது நம்முன் எழுந் துள்ள கேள்வியாகும். ஏனெனில் சமீப காலமாக தேர்வாணையத்தின் நடவடிக் கைகள் தேர்வு எழுதும் போட்டியாளர் களின் அதிருப்திக்கு ஆளாகி, நீதிமன்றத் தில் வழக்குகள் தொடரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற தேர்வாணையம் முன்வரவேண்டும்.

இந்நேர்வில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தி னை மட்டும் நீதிமன்றம் சொல்லியுள்ளது. இந்த தவறுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை கண்டறிந்தும், இத் தகைய பணி நியமனம் பெற்றவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என் பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இவ்வாறு தவறான வழியில் நியமனம் பெற்றவர்கள், பணி நியமனத் திற்காக தாங்கள் இழந்தவைகளை வட்டி யும் முதலுமாக திரும்பப் பெறும் ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்பதே பெரும்பாலானோர் கருத்தாகும்.. இவர்களின் பின்னால் உள்ள செல்வாக் குப் பெற்ற அந்தப் புள்ளிகள் யார் என்ப தையும் அறிய தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஒரு நேர்வில் மட்டு மல்லாமல் இதற்குப் பின்னர் நடைபெற் றுள்ள தேர்வுகள் குறித்தும் ஒரு திறந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் தமி ழக அரசின் பல்வேறு துறைகளில் கொல் லைப்புற வழியாக நியமனம் பெற்ற அதி காரிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடு கிறது. வணிகவரித்துறை போன்ற துறை களில் தவறான சான்றிதழை கொடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் மீது நடவடிக் கை எடுக்க அரசு தயங்கிவருகிறது. பதவி உயர்வை இரத்து செய்ததே போதுமானது என அரசு கருதுகிறது போலும். சமீபத் தில் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு வந்த பைலட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக 4000-க்கும் மேற்பட்ட பைலட்டுகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வரப்படு கின்றன என்ற செய்தியும் வெளியாகி யுள்ளது. இத்தகைய நெஞ்சுறுதி தமிழக அரசிற்கு மட்டும் ஏன் இல்லை?

யாரை வேண்டுமானாலும் அவர்க ளின் செல்வாக்கைப் பொறுத்து எந்தப் பணியிலும் நியமனம் செய்யலாம் என்பது தானே தேர்வாணையத்தின் தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது? குரூப்-1 குரூப்-2 ல் தேர்வு செய்யப்படக் கூடியவர்கள் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றக் கூடியவர்களாக உள்ளனர். இவர்களின் நியமனத்தில் குறுக்கீடுகள், குளறுபடிகள் என்றால் அது எங்கே போய்முடியும்? தேர்வாணை யத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நேர்காணலும் நியாயமான முறையில் தான் நடைபெறுகிறதா என்பதை மக்க ளுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்வாணையத்தின் மீது தற்போது விழுந்துள்ளது. 

ஏனெனில் சமீபகாலமாக தேர்வா ணையத்தின் நடவடிக்கைகளில் தடு மாற்றம் காணப்படுகிறது. அரசுப் பணி யாளர் தேர்வாணையம் ஒரு சுயேச் சையான அதிகாரம் பெற்ற ஒரு அமைப் பாகும். ஆனால் சமீபகாலமாக அதன் நடவடிக்கைகள் தமிழக அரசின் கீழ் உள்ள ஒரு துறை நடவடிக்கை போன்றே இருந்து வருகிறது. அதனால்தான் என்னவோ தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தேர்வாணையமும் தப்பவில்லை. தற்போது 30 விழுக்காட் டிற்கு மேல் அங்கு பணியிடங்கள் காலி யாகவுள்ளது. அரசுப் பணிக்கு தேர்வு செய்யும் தேர்வாணையத்திலேயே பணி யிடங்கள் காலியாகவுள்ளன என்பது விந்தையிலும் விந்தையாகும். 

இதனால் தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இன்றைக்கு போட்டியாளர்களை நீதிமன்றத்திற்கு தள்ளியுள்ளது. சமீபகாலமாக தேர்வா ணையம் மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் அது குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்களை முதலில் தேர்வு எழுத அனுமதித்துவிட்டு, தேர்வு செய்தபின், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு பணி நிய மனம் வழங்க முடியாமல் தேர்வாணை யம் திணறிக்கொண்டு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசின் பல்வேறு துறைகளில்; பணியாற் றிய தற்காலிக ஊழியர்களை பணி நிரந் தரம் செய்ய குரூப்-4 சிறப்பு தேர்வு நடத் தப்பட்டு, 9000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, நாளதுவரை 1000க் கும் மேற்பட்டோருக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு குரூப்-2 க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு இதுவரை முழுமையாக முடிவு வெளி யிடப்படாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ஒரு குரூப்-2 தேர்வினை தேர்வாணையம் நடத்திட அறிவிக்கை செய்துள்ளது. சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிக்கையில், வருவாய்த்துறை, வணிகவரித்துறைப் போன்ற துறைக ளில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங் கள் தமிழக அரசின் ஸ்டாப் கமிட்டியின் முடிவிற்கு உட்பட்டது என அறிவித்துள் ளது. ஸ்டாப் கமிட்டி என்பது தமிழக அரசு பிறப்பித்துள்ள மறைமுக பணிநியமன தடை ஆணையின் ஷரத்துகளில் ஒன் றாகும். இதற்கு தேர்வாணையமும் கட்டுப் பட்டது என்பதே அறிவிக்கையில் வெளி யிடப்பட்டுள்ள செய்தியாகும். சென்ற ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை நிரப்பிட அறிவிக்கை செய்யப்பட்டு, மேலும் அரசின் அறிவுறுத் தலின்படி கால நீட்டிப்பு செய்து இது வரை தேர்வினை நடத்த முடியாமல் தேர் வாணையம் திணறி வருகிறது. முரண் பாடுகளின் மொத்த உருவமாக இப்போது தேர்வாணையம் உள்ளது. அரசுப் பணிகளுக்கு பணி நியமனம் செய்யும் தேர்வாணையம் மக்களின் நம்பிக் கையை இழந்து வருகிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 70 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தேர்வாணையம் விளையாடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இன்றைய கார்ட்டூன்