இடதுசாரி அரசுகளை காப்போம்!

உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் மீது நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இத் தகைய காலகட்டத்தில் கவனிக்கத்தக்க முக் கிய அம்சமாக, வலதுசாரிக் கொள்கைகள் தீவிரமாக தலைதூக்கி வருகின்றன. உலகின் எந்தப்பகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல. இத் துடன், அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதி யாகவும் இடதுசாரி எதிர்ப்பு மற்றும் தொழி லாளி வர்க்க எதிர்ப்புக் கருத்துக்களும் தீவிர மாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இது, மேற்குவங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களுக்கு எதி ரான தாக்குதலாக கூர்மைப்படுத்தப்பட்டுள் ளது. இந்தப்பின்னணியில், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்த லோடு மேற்குவங்கம் மற்றும் கேரள சட்ட மன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்தத் தேர்தல், நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்திற்கும், ஜனநாயக இயக்கத்திற்கும் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் கொண்டது என்பதை சிஐடியு பொதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

நவீன தாராளமயக் கொள்கைக்கு மாற்று

இந்திய நாட்டில் உழைக்கும் வர்க்க மக்க ளின் நலன்களை இடதுசாரி சக்திகளே எப் போதும் பாதுகாத்து வந்திருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக நவீன தாராளமயக் கொள் கைகளின் அமலாக்கத்தால் ஏற்பட்ட கடும் விளைவுகளுக்கு எதிராக இந்தியத் தொழி லாளி வர்க்கம் தொடர்ச்சியாக போராட்டங் களை நடத்திவருகிறது. 

தேசிய அளவிலும் சரி, பிராந்திய அளவி லும் சரி ஒவ்வொரு கட்சியும் நவீன தாராளமய கொள்கைகளோடு இயைந்தே செல்ல விரும் புகின்றன. இந்த காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகளோடு தொழிலாளி வர்க்கத் தின் அனுபவம் அதுவே. 

இதில் விதிவிலக்காக இருப்பவை மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய இடது சாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் மட்டுமே. இந்த அரசாங்கங்கள், நாட்டு மக்கள் முன்பு ஒரு மாற்றுக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்துள்ளன. கேரளத்தில் 1957 முதல் 1959வரை ஆட்சியில் இருந்த முதல் கம்யூ னிஸ்ட் அரசாங்கத்தில் துவங்கி, மேற்குவங் கத்தில் ஐக்கிய முன்னணி அரசுகள், கேரளத் தில் 1967 - 69 காலத்தில் இருந்த அரசு மற் றும் 1977முதல் மேற்குவங்கத்தில் தொடரும் இடது ஜனநாயக முன்னணி அரசு, கேரளத் தில் நீடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசுகள் மற்றும் திரிபுராவில் தொடர்ந்து ஆட் சிப் பொறுப்பில் இருக்கும் இடது முன்னணி அரசு ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கே மாற்றுக் கொள்கைத்திட்டத்தின் பொருள் என்ன என்பதை செயல்படுத்திக் காட்டியி ருக்கின்றன. தொடர்ந்து பலவீனப்பட்டு வரும் இந்த நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் கீழ், குறைந்த அதிகாரங்களோடு மட்டுமே இயங்குகிற மேற்கண்ட மாநில அரசுகள், துன்ப துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அணிதிரட்டப்பட்ட மற்றும் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், சிறு தொழில் முனைவோர்கள் மற்றும் சில்லரை வணிக வியாபாரிகள் என அனைத் துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் கையிலெடுத்துள்ளன.

நிலச்சீர்திருத்தம்

கேரளத்தில் 1957ல் துவங்கியும், மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி துவங்கி யது முதலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலச் சீர்திருத்தங்கள், இவ்விரண்டு மாநிலங்களி லும் கிராமப்புற சமூகத்தின் முகத் தோற்றத் தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. மேற்கு வங்கத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்ற நிலச் சீர்திருத்தத்தின் விளைவாக, நிலமற்ற ஏழை களுக்கு 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் விநியோ கிக்கப்பட்டுள்ளன. மிக எளிய முறையில் கணக்கிட்டுப் பார்த்தாலும் கூட, ரூ.13 ஆயிரம் கோடி பெறுமான நிலங்கள் ஏழை விவசாயத் தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 30 லட்சத்திற்கும் அதிகமான நிலமற்ற மற்றும் சிறு விவசாயக் குடும்பங்கள் பலனடைந்துள்ளன. 

கேரளத்தில் நடந்துள்ள நிலச்சீர்திருத்தங் கள், நில உச்சவரம்புச் சட்டத்தின்படி இந்த மாநிலத்தில் இனிமேல் விநியோகிப்பதற்கு கூடுதலாக எந்த நிலமும் இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.

இடதுசாரிகள் தலைமையிலான இந்த மூன்று மாநிலங்களைத் தவிர, கிராமப்புற மக் களிடம் உண்மையான அதிகாரத்தை கொண்டு சேர்க்கும் விதத்தில், உண்மையான நிலச் சீர் திருத்தத்தை இந்திய நாட்டில் வேறு எந்த மாநில அரசுகளாவது செய்து காட்டியுள் ளனவா? 

நிலச் சீர்திருத்தம் மட்டுமல்ல, பஞ்சாயத் துராஜ் அமைப்பு முறையின் மூலமாக அதி காரத்தை பரவலாக்கியுள்ளன இடதுசாரி அரசுகள்; 17 ஆண்டுகளுக்கு முன்பே அரசிய லமைப்புச் சட்டத்தில் 73வது மற்றும் 74 வது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரப் பரவல் உண்மையான உணர்வுடன் அமலாக் கப்பட்டது. 

ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலன்

தொழிலாளர்களைப் பொறுத்தவரை இடது சாரிகள் தலைமையிலான அரசுகள் மிகத் தெளிவான முறையில் தொழிலாளி வர்க்கச் சார்புடைய கொள்கைகளையே பின்பற்றின. தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள், அவர்களின் நலன் களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் என முறைசாராத் தொழிலாளர்கள், அணிதிரட்டப் பட்ட தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு தொழிலாளி வர்க்க மக்க ளின் நலனை காக்க இந்த அரசுகள் செய்த சாதனைகளை எழுத பக்கங்கள் போதாது. எத்தகையச் சூழலிலும் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று இந்த நாட்டில் பிரகடனம் செய்த அரசுகள் இவை மூன்று மட்டுமே. அதுமட்டுமின்றி நாட்டின் மதச்சார்பின்மையையும் மத நல்லிணக்கத் தையும் பாதுகாப்பதற்காக உறுதியாக போராடி யவை இடதுசாரிகள் தலைமையிலான அரசு களே. இதனால் மக்கள் இடதுசாரிகளோடு உறுதியாக நிற்கிறார்கள்.

இத்தகைய பின்னணியில்தான் பல்வேறு சீர்குலைவு சக்திகள் விஷக்கொடுக்குகளாய் அழிவுச் செயல்களை நடத்த முயல்கின்றன. 

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சத வீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தயங் கிக் கொண்டிருக்கும் சூழலில் மேற்குவங்கமும், கேரளமும் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியுள்ளன. தொடர்ச்சியாக அதிகாரத் தில் இருந்த மத்திய அரசுகள் நவீன தாராள மய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை சூறையாடுகிறபோது, அந்த மக்களின் உரி மைகளை பாதுகாக்க சக்திவாய்ந்த மக்கள் இயக்கங்கள் மூலம் போராட்டக் களத்தில் முன்னணியில் நிற்பது இடதுசாரி அரசாங் கங்களே. 

திட்டமிட்ட தாக்குதல்

ஒட்டுமொத்தத்தில் ஏகாதிபத்தியக் கொள் கைகளுக்கு எதிரான உறுதிமிக்க போராட் டத்தை இடதுசாரிகள் தொடர்ந்து நடத்தி வருவதால், இந்த நாட்டில் உள்ள அனைத்து ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளும் இடதுசாரி களுக்கு எதிராக ஒன்றுசேர்ந்துள்ளனர். இது இடதுசாரி அரசாங்கங்களுக்கு எதிரான தாக்குதல்களாக பிரதிபலிக்கிறது. வலதுசாரி பிற்போக்கு சக்திகள் முதல் இடது தீவிரவாத சக்திகள் வரை அனைத்து பிற்போக்கு சக்தி களும் கைகோர்த்துள்ளனர். மேற்குவங்கத் தில் இவர்கள் திட்டமிட்டு நடத்திய மிகக் கொடிய படுகொலைகளால் இடதுசாரிக் கட்சிக ளும் வெகுஜன இயக்கங்களும் சுமார் 400 தோழர்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பறி கொடுத்துள்ளன. இவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட அடங்குவர். 

தொடர்ந்து முன்னேறுவோம்

இடதுசாரிகள் தலைமையிலான அரசாங் கங்கள் என்பவை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் மிகப் பிரம்மாண்டமான போராட்டங்களால் மலர்ந்தவை. இந்த அரசுகளே, உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கான உண்மையான பாதுகாவலர்கள். இந்த அரசு களை பலவீனப்படுத்துவது இந்தியாவின் இடதுசாரி இயக்கத்தையே பலவீனப்படுத்து வதற்கு சமமாகும்; இது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு ஏற்படும் கடுமையான அச் சுறுத்தலாகும். 

எனவே புறப்படுங்கள் தோழர்களே! மார்ச் 21 ந் தேதி முதல் 27ந் தேதி வரை ஒரு வார காலம் நாடு முழுவதும் சிஐடியுவின் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. நாட்டின் அனைத் துப் பகுதிகளிலும் இடதுசாரி அரசுகளுக்கு ஆதரவான அரசியல் செய்தியை இந்த பிரச் சாரத்தில் எடுத்துச் செல்வோம்!

நாட்டின் அனைத்துப் பகுதி தொழிலாளி வர்க்க மக்களும் இடதுசாரி அரசுகளுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என்ற அரசியல் செய்தியை எடுத்துச் செல்வோம்! 

சுரண்டலற்ற ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்தில், துன்ப துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்திய தேசத்து மக்களின் வாழ்வை மலரச் செய்யும் பயணத்தில் மாற்று கொள்கைகளை முன் வைத்து நமது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வோம்!

(தி ஒர்க்கிங் கிளாஸ், மார்ச் 2011)

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

இன்றைய கார்ட்டூன்