காவி உடைக்குள் ஒரு புரட்சியாளர்

அகில இந்திய விவசாயிகள் சங்கத் தின் ஸ்தாபகர் சஹஜானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் 19ஆம் நூற்றாண்டில் அதாவது 1889இல் ஐக்கிய மாகாணங் களின் கிழக்குப் பகுதியிலிருந்த காசிபூர் மாவட்டத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தன் பெற்றோருக்குப் பிறந்த ஆறாவது பிள்ளை. சகோதரிகள் யாரும் கிடையாது. சஹஜானந்தா ஸ்வாமி களின் இயற்பெயர் நவ்ரங் ராய் என்ப தாகும். இவர் சிறுவயதாக இருக்கும் போது தாயை இழந்தவர். அவரது அத்தைதான் அவரை வளர்த்தார். அவரது தந்தை ஒரு பிராமணராக இருந்தபோதிலும் அடிப்ப டையில் அவர் ஒரு விவசாயிதான். எனவே அவருக்கு அனைத்துப் பிரா மணர்களும் உச்சரிக்கும் காயத்ரி மந்திரம் கூட கிடையாது. நவ்ரங் ராயின் தாத்தா காலத்தில் அவர்களது குடும்பம் ஒரு சிறு ஜமீன்தார் குடும்பமாக இருந்தது. எனவே அந்தக் காலத்தில் நிலத்திலிருந்து வந்த வருமானம் அவர்களது குடும்பத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் குடும்பம் பெருகப் பெருக, நிலங் கள் பிரிக்கப்பட்டு, வளம் குன்றி, அவர் களே குத்தகைக்கு நிலங்களைப் பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆயினும் குடும்பம் அப்படி ஒன்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டுவிடவில்லை.


நவ்ரங் ராய் தன் கல்வியைத் தொடரக் கூடிய வகையில் வசதியுடன்தான் இருந் தது, எனவே, அவர்தம் ஆரம்பக் கல்வி யையும், உயர்நிலைக் கல்வியையும் மிக வும் சிறப்புடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார். உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். பள்ளிப்பருவத்திலேயே அவர் கல்வியில் மிகவும் சிறந்து விளங்கினார். அக்காலத்திய மூடப்பழக்க வழக்கங்களை அப்படியே கண்மூடி ஏற்றுக்கொள்ள அவர் துணியவில்லை, பழம் பஞ்சாங்கங் களின் ஏமாற்றுத்தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்காகவே அவர் அவற்றை ஆழமாகப் படித்தார். நவ்ரங் ராய் கடவுள் நம்பிக்கையின்றி வளர்வதையும், சாமியார் களைக் கலங்கடிக்கக்கூடிய வகையில் கேள்விகள் கேட்பதையும் கண்டு அதிர்ச்சியுற்ற அவர்தம் குடும்பத்தினர், அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்க முயற்சித்தார்கள். ஆனால் திருமணம் முறையாக நடைபெறுவதற்கு முன்னதாக அச்சிறுமி இறந்துவிட்டார், இதன்மூலம் அவரைக் குடும்பக் கட்டுக்குள் கட்டிப் போடுவதற்கு அவர்தம் குடும்பத்தார் மேற்கொண்ட முயற்சிகளிலிருந்து அவர் விடுதலை பெற்று, சன்னியாசியாகத் துற வறம் மேற்கொண்டார். இதன் பின்னர்தான் அவரது பெயர் ஸ்வாமி சஹஜானந்த சரஸ் வதி என்று மாறியது, இவ்வாறு அவர் சன்னியாசம் மேற்கொண்டதனால் அவ ரால் தன் கல்வியைத் தொடர்ந்து, மெட்ரிக்கு லேசன் தேர்வை முடிக்க முடியவில்லை. ஆயினும் அவர் தம் அறிவுத்தாகம் குறைந்து விடவில்லை. அரசியல், சமூகம் மற்றும் மதங்கள் குறித்து ஏராளமாகப் படித்தார். இதன் விளைவாக அவர் வெளிப்பார் வைக்கு உடலின் மேல் காணப்படும் காவித் துணிகள் அவரை ஒரு சன்னியாசியைப் போல் காட்டியபோதிலும், உண்மையில் உள்ளத்தில் அவர் ஒரு புரட்சியாளராக விளங்கினார்.சஹஜானந்த ஸ்வாமிகள் இவ்வாறு ஒரு புரட்சியாளராக மாறுவதற்கு முன்னர் அவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடான ஒன்றேயாகும். முதலில் அவர் மக் களுடன் தொடர்பு கொண்ட அமைப்பு என் பது ஒரு சாதிய அமைப்புதான். பின்னர் படிப்படியாக உயர்ந்து, இத்தகைய சாதிய அமைப்பில் செயல்படுவதைக் கைவிட்டு, தேசிய அளவில் காங்கிரஸ் அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். அத னைத் தொடர்ந்து பீகார் மாநிலம் பாட்னா வில் முற்போக்கான விவசாய இயக்கங்களி லும், பின்னர் நிறைவாக நாடு முழுதும் செயல்படத் தொடங்கினார்.

விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர் பாக தீர்வு காண்பதற்கும் முதலில் சஹ ஜானந்த ஸ்வாமிகள் காந்தியின் தலைமை யிலிருந்த காங்கிரசினுடைய அரசியல் பள்ளி மூலமாகவே முயற்சிகளை மேற் கொண்டார். உண்மையில், ஸ்வாமியும், மகாத்மா காந்தியும் மிகவும் அரிதான வகை யில் குடும்ப உறவினர்களைப் போல் பழகி வந்தார்கள். சஹஜானந்தா காங்கிரசில் காந்தியின் அனைத்துக் கொள்கைகளிலும் முழுமையாக உருகி, அவரது சீடராக மிக வும் அர்ப்பணிப்புடன் செயல்படத் தொடங்கினார்.

அவர் சிறையிலிருந்த காலத்தில் தங் களைக் காந்தியவாதிகள் என்று சொல் லிக்கொண்ட காங்கிரசாரின் சுயரூபத்தை நன்கு தெரிந்துகொண்டார். அவர்களின் சுக போக வாழ்க்கையை நேரில் கண்டார். பதி னைந்து ஆண்டு காலத்திற்குள் காந்தியின் இரட்டுற மொழிதலையும் தெரிந்து தெளிந் தார். செயலில் அவர் சொத்துடை வர்க்கத் துடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைப் புரிந்துகொண்டார். ஆயினும் காங்கிரசி லிருந்து அவர் தன்னை முழுமையாகக் கத் தரித்துக் கொள்ளவில்லை. அதற்கான நேர மும் வந்துவிட்டது.

1934இல் பீகாரில் மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஸ்வாமிகள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப் பதற்காக மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளில் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டார். அப்போது அவர் ஓர் உண்மையைத் தெரிந்து கொண்டார். உண்மையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட வர்களை விட, நாள்தோறும் விவசாயிக ளும், விவசாயத் தொழிலாளர்களும் நிலப் பிரபுக்களின் நுகத்தடியின் கீழ் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு வருவதை அறிந் தார். நிலப்பிரபுக்களினால் ஏவப்படும் கொடுமைகள் சொல் லிமாளாத அளவுக்கு இருப்பதைக் கண்டு வெகுண்டார். இவற்றைக் கண்டு குமுறிய ஸ்வாமிகள் இதற்கு எப்படியாவது தீர்வு கண்டாக வேண்டும் என்று கருதி, அந்த சம யத்தில் பாட்னாவிற்கு வந்திருந்த மகாத் மாவைப் போய்ச் சந்தித்து, இது தொடர்பாக விவாதித்தார். அப்போது காந்தி மிகவும் சாந்தமாக, தனக்கேயுரிய புன்னகையுடன், ஜமீன்தார்கள் விவசாயிகளின் சிரமங் களைக் களைந்திடுவார்கள் என்றும், ஜமீன் தார்களின் மேலாளர்கள், காங்கிரசார் என் றும், எனவே நிச்சயமாக அவர்கள் ஏழைக ளுக்கு உதவுவார்கள் என்றும் கூறினார். ஆயினும் ஜமீன்தார்களாலும், அவர்களது மேலாளர்களான காங்கிரசாராலும் விவசா யிகள் மீதான ஒடுக்குமுறைகள் குறைந்த பாடில்லை. காந்தியின் உரைகள் வெற்று ரைகள் என்பதை ஸ்வாமிகள் உணர்ந்து மிக வும் அருவருப்படைந்தார். அதன்பின்னர் அவரால் காந்தியின் சீடராகத் தொடர முடி யவில்லை. எனவே, மகாத்மாவுடன் பதி னான்கு ஆண்டு காலம் இருந்த தன்னு டைய தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொண்டு வெளியேறி விட்டார். சொத்துடை வர்க்கத்தாரைக் காப்பதற்கான வஞ்சகம் நிறைந்த ஓர் அரசியல்வாதியே காந்தி என் றும், அவர் கடைப்பிடிக்கும் ஆன்மீகம், அஹிம்சை எல்லாம் ஏமாற்றுவித்தையே என்றும் நன்கு தெரிந்துகொண்டார்.

காந்தியுடன் ஸ்வாமிகள் தொடர்புகளை முறித்துக்கொண்ட பின்னர், காங்கிரஸ் கட்சியில் பெயரளவில் உறுப்பினராக நீடித் துக்கொண்டு, கட்சி அரசியலில் ஈடுபடாது ஒதுங்கிக் கொண்டார். ஆயினும் அதன் பின்னர் விவசாயிகளின் நலன் காப்பதற் காக விவசாய சங்கத்தின் பணிகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, இந்தியாவின் முன்னணி விவ சாயிகள் சங்கத் தலைவராக உயர்ந்தார். நாடு முழுவதுமுள்ள விவசாயிகளை அணிதி ரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் கலந்து பேசி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார். இவ்வாறு நாடு தழுவிய அளவில் விவசாயிகள் சங்கம் உரு வாவதில் சஹஜானந்த ஸ்வாமிகள் முதலில் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளுடன் கை கோர்த்தார். பின்னர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து பிரிட்டிஷார் மற்றும் காங்கிரசுக்கு எதிராக சமரச எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தினார். பின்னர் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சம யத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டார். இறுதியாக அனைவரிடமிருந்தும் தன்னை முறித்துக் கொண்டு, சுயேட்சையான விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார். இவ்வாறு அவர் பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டிருந்தபோதிலும், அடிப்படையில் அவர் எந்தக் கட்சியுடனும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட தில்லை. அவரது சிந்தனை, செயல் அனைத்தும் விவசாயிகள் நலன் ஒன் றையே குறிக்கோளாகக் கொண்டு அமைந் திருந்தது

1950 ஆம் ஆண்டு சஹஜானந்தா மறைந் தாலும் அவர் கட்டியெழுப்பிய விவசாயி கள் இயக்கம் கிளைகள் விரித்து தேசம் முழுவதும் வியாபித்திருக்கிறது.

இன்றைய கார்ட்டூன்