சாயத்தொழில் நெருக்கடி: சிக்கலும் தீர்வும்

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

திருப்பூரில் உள்ள அனைத்து சாய, சலவை ஆலைகளையும், சுத்திகரிப்பு நிலை யங்களையும் உடனடியாக மூடிவிட வேண் டும் என்று கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித் தது. இதையடுத்து திருப்பூர் சாயத்தொழில் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

திருப்பூர் சாயத்தொழில் துறையினர் மறு சுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, 2010ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் ஒரு சொட்டு கழிவுநீரைக் கூட நொய்யல் ஆற்றில் விடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தீர்ப்புக் கூறியிருந்தது.

திருப்பூர் சாயத்தொழில் துறையினர் இதைப் பின்பற்றாததால் நொய்யல் நதி தொடர் ந்து மாசுபட்டு வருகிறது என்று சொல்லி, இதைத் தடுக்கத் தவறிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் தொடுத் தது. இதன் அடிப்படையில்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த நடவடிக் கையை மேற்கொண்டது.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கடந்த 20 நாட்களில் கிட்டத்தட்ட அனைத்து சாய, சல வைஆலை, சுத்திகரிப்பு நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. சட்டவிரோதமாக இயங் கிய ஒருசில சாயஆலைகளைக் கண்டறிந்து அவற்றின் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே மறு சுழற்சித் தொழில்நுட்பத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருவதாக நீதிமன்றத் தில் உறுதியளித்து, தனியார் சாய சுத்திகரிப்பு நிலையம் ஒன்று மீண்டும் இயங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளது. இதேபோல் வேறு சில நிறுவனங்களும் நீதிமன்றத்தை அணுகத் தொடங்கின. நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்பு கொள்ளும்படி அறிவுரை கூறினர். மாசுக் கட் டுப்பாட்டு வாரியமும், கண்காணிப்புக் குழு வும் ஆய்வு செய்து இசைவளித்தால், நிறுவ னங்களைத் திறக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்கிடையே தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்குத் தீர்வு காண தொழில் அமைப் புகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண் டுள்ளன. இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி, இடதுசாரி கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். எனினும் தமிழக அரசு அவசர உணர்வோடு, ஆக்கப்பூர் வமாக எந்த நடவடிக்கையும் மேற்கொண்ட தாகத் தெரியவில்லை.

பின்னலாடைத் தொழிலின் பிரிக்க முடி யாத அங்கமாகத் திகழும் சாயத்தொழில் நெருக்கடிக்குத் தீர்வு காணாவிட்டால் திருப் பூரின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி, பரவலாக விவாதிக்கப்பட்டு பலவித அனுமானங்கள் வெளியிடப்பட்டு வரு கின்றன.

தொடரும் கேள்விகள்

அத்தோடு, சாயக்கழிவுகளால் நீர்நிலை கள் மாசுபடக் கூடாது என்றால், சாயமேற்றப் படும் பிற ஊர்களின் நீர்நிலைகள், விவசாயம் ஆகியவையும் பாதிக்கப்படாமல் இருக்குமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. கூடவே சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு மறுசுழற் சித் தொழில்நுட்பம் சாத்தியமா? இல்லையா? டிடிஎஸ் கழிவுத்தன்மையை பூஜ்ஜியம் அள வுக்குச் சுத்திகரிப்பதா, டிடிஎஸ் அளவு 2100 பிபிஎம் இருக்கலாமா, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கடலில் கொண்டு சென்று கலக் கலாமா, கூடாதா என்பன போன்ற வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் நடந்து கொண் டிருக்கும்போதே, இன்னமும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் வந்து கொண்டு தான் இருக்கிறது என்ற செய்தியும் நாளிதழ்களில் வருகின்றன. அத்தோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இசைவு தெரிவித்து, தனியார் சுத்தி கரிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கினா லும் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க முடி யுமா? நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப் பதை முற்றிலும் தடுக்க முடியுமா? என்று மற் றொரு கோணத்திலும் விவாதம் நடந்து வரு கிறது. தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன் றன்பின் ஒன்றாக அனுமதி பெற்று இயங்கத் தொடங்கி, பொது சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமானால் ஒரு கட் டத்தில் சிறு,குறு சாய, சலவை ஆலைகளின் தொழில் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற நியாய மான அச்சமும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள் மட் டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புப் பெறும் சிறு, குறு சாயஆலைகள் முடக்கப் படும் அச்சுறுத்தலும் இதில் அடங்கியிருக் கிறது. அப்போதும் கூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று இயங்கும் சுத்தி கரிப்பு நிலையங்கள் சாயக்கழிவுநீரை முழு மையாகச் சுத்திகரித்து வெளியேற்றுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

ஆக, எந்த நோக்கத்தில் நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்ததோ, அது நிறைவேறுகிறதா என்றால், அதற்கு எதிர்மறையான போக்குத் தான் தென்படுகிறது! உண்மையில் நொய்யல் நதியையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மாறாக அந்த பாதிப்பு தீர்க்கப்படாமல் தொடர்வதோடு, தொழிலும் பாதிக்கப்பட்டு, பல லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பும் பறிபோய், இந்தப் பிராந்தியத் தின் சமூகப் பொருளாதார வாழ்வு விரிவான சிக்கலுக்குள் தள்ளப்படும் நிலைதான் தோற்றுவிக்கப்படுகிறது.

பல லட்சம் தொழிலாளர் வாழ்வு, பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வு, சிறு தொழில் முனைவோர், விவசாயம், தொழில் வளர்ச்சி, குடிநீர் ஆதாரம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு இந்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசின் கைகளி லேயே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அக் கறையோடு கவனித்தால் மட்டும்தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பதும் உறுதி.

என்ன செய்ய வேண்டும்?

எனவே இந்த சிக்கலுக்குத் தீர்வு காண தமிழக அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சாயக்கழிவு சுத்திகரிப்புப் பிரச்ச னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், தற் போதைய நெருக்கடியில் இருந்து சாயத் தொழில் துறையினர் உடனடியாக வெளிவரு வதற்கும் இது முதல் தேவையாகும். நீதிமன் றத்தில் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் இதைச் செயல்படுத்த வேண்டும். சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்சனையில் மறுசுழற்சித் தொழில்நுட்பம் சாத்தியமா, இல்லை வேறு வழிமுறை இருக்கிறதா, கடலில் கொண்டு கலக்கும் திட்டம் உகந்ததா, இல்லையா? உலக அளவில் என்ன மாதிரியான நிலை உள் ளது என பல கோணங்களில் ஆராய்ந்து, இங் குள்ள நிலைமைக்குப் பொருத்தமான தீர்வை முன்வைப்பதற்கு நீர்மேலாண்மை, சுற்றுப் புறச் சூழல் பேரறிஞர்கள், தொழில்நுட்ப வல் லுநர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண் டும். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இக்குழுவின் பரிந்துரையைப் பெற்று, விவ சாய, தொழில் துறைப் பிரதிநிதிகள் ஆகியோரு டன் கலந்தாய்வு செய்து, அவர்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்தி நிரந்தரத் தீர்வுக்கான திட் டத்தை அரசு முன்வைக்க வேண்டும். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து குறிப்பிட்டக் காலத்துக்குள் அதற்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

நிவாரண நடவடிக்கைகள்

அந்தத் திட்டம் முழுமையடைந்து செய லுக்கு வரும்வரை சாயக்கழிவு நீரால் பாதிக் கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயி களின் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயப் பாசனம், குடிநீர் ஆதாரத்துக்கு மாற்றுத் திட்டங்களை ஏற்படுத் தித் தர வேண்டும். அத்துடன் திருப்பூர் சாய ஆலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள சுத்திகரிப்பு ஏற்பாட்டை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண் டும். சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுநீர் வெளியேற்றப்படுவதைக் கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமின்றி விவசாயிகள், தொழில்துறையினர், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கொண்ட குழு அமைத்து தொடர் கண்காணிப்புச் செய்ய வேண்டும். தவறிழைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பன்முக நட வடிக்கைகள் மூலமே சமூகச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மாற்ற வேண்டிய அணுகுமுறை

மத்திய, மாநில அரசுகள் தாராளமயப் பாதை யில் செல்வதால் பல்வேறு சமூகப் பொறுப்பு களைக் கை கழுவி வருகின்றன. எனவே விவ சாயம், தொழில், மக்கள் வாழ்வாதாரம், சுற்றுப் புறச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரச்சனையில் ஆட்சியாளர் கள் பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவரை இன்றைய சிக்கல் என் பது நீறுபூத்த நெருப்பாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கும். எனவே தொழிலாளர், விவசாயிகள், சிறு தொழில் துறையினர் உள்ளிட்டோர் ஒன்றுபட் டுப் போராடி ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் செலுத்துவதன் மூலமே அரசின் அணுகு முறையை மாற்ற முடியும்.

இன்றைய கார்ட்டூன்