சோனியா குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்யம்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் இப்போது 2 ஜி என்றால் ஒரு ஜி சோனியா என்றும் இன்னொரு ஜி ராகுல் என்றும் உண்மை வெளிப்பட்டு விட்டது. ஆக, இதிலும் காங்கிரசும் திமுகவும் கூட்டணி சேர்ந்தே கொள்ளையடித்துள்ளன. 1.76 லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்ததில் அறுபதாயிரம் கோடி ரூபாய் கமிசன் பெறப்பட்டு பங்கு போட்டுள்ளதாய் செய்திகள் வருகின்றன. அதனால்தான் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களும் மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைத்திருப்பர்.

       ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த பணத்தை சோனியாவின் இரு தங்கைகள் (நாடியா, நெமீலியா) பெயரில் பத்து நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப் பதாக சுப்பிரமணியசாமி அம்பலப்படுத்தியுள்ளார். அதில் ஒரு சொத்தாக 7000 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை மலேசியாவில் வாங்கியுள்ளாராம்.
அதை கடந்த மாதம் ராகுல்காந்தி ரகசியமாய் சென்று அந்த ரப்பர் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்ததை மலேசிய அரசு செய்தியாக வெளியிட்டு அம்பலப்படுத்தியது. சோனியாவின் உறவினர் குட்ரோச்சி போபர்ஸ் ஊழலில் 41 கோடி ரூபாய் கமிசன் பெற்றுள்ளதற்கு வருமானவரி செலுத்த வேண்டுமென்று இந்திய வருமான வரித்துறை கிளப்பியுள்ளது. ஆனால், நேர்மைப் பிரதமர் மன்மோகன் சிங் “குட்ரோச்சிக்கு நாம் ஏற்கெனவே பல தொந்தரவு கொடுத்து விட்டோம்” என்று புலம்பியுள்ளார். மறுநாள் சிபிஐ, குட்ரோச்சி மீதான வழக்கு வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தது. மத்திய அமைச்சர் கபில்சிபல், ஸ்பெக்ட்ரமில் ஒரு பைசா கூட நஷ்டமில்லை என்று அறிவித்தார். இது சோனியா சொல்லாமல் நடக்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் கபில்சிபலை அவரது அறிக்கைக்காக கண்டனம் செய்துள்ளது.

       பொருளாதார நிபுணர் குருமூர்த்தி, சோனியா குடும்பமே ஊழல் குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன்பே போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி வாங்கிய பத்தாயிரம் கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கியில் ராகுல் பெயரில் போடப்பட்டுள்ளதைத் தெரிவித் துள்ளார். ஊரை ஏமாற்ற சோனியாவும் ராகுலும் ஊழலுக்கு எதிரான வர்கள் போல நடிக்கிறார்கள். கூடவே கலைஞரும் நடிக்கிறார். ஆனால் முக மூடிகள் கிழியும் காலமிது.

நாவலன் படுகொலை

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான தோழர் நாவலன் 19.1.2011 அன்று இரவு திமுகவின் சாராய ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவருடன் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச் செயலாளர் ராஜா வெட்டுக் காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.

       இந்தப் படுபயங்கரச் செயலை பேரளம் திமுக நகரச் செயலாளரும், பிரபல சாராய வியா பாரியுமான பன்னீர்ச்செல்வம் கும்பல் செய்துள் ளது. திமுக ஆட்சியில் இது போன்ற சாராய வியா பாரிகள் நடத்தும் படுகொலைச் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. 53 வழக்கு களில் குற்றவாளியாக உள்ள பன்னீர்ச்செல்வம் திமுகவின் நகரச் செயலாளரானதில் வியப்பில்லை. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனையே கொலை செய்த கட்சிதானே அது. கொலை வழக்கில் விடுதலை செய்யப்படும் முன்பே கொலை வழக்கில் எதிரியான மு.க.அழகிரிக்கு தென் மண்டல திமுக செயலாளர் பதவியும் பின்பு மத்திய அமைச்சர் பதவியும் வழங்கிய கட்சிதானே திமுக. அந்தக் கலைஞரின் ஆட்சியில் இதுவும் நடக்கும், எதுவும் நடக்கும்.

       தோழர் நாவலனைக் கொலை செய்த பன்னீர்ச்செல்வம் கும்பல் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒய்ய வந்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு ஊராட்சித் தலைவராக இருந்தபோது பன்னீர்ச் செல்வம் நடத்திய ஊழல்களை அவ்வூர் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளை அம்பலப்படுத்தி நடவ டிக்கை எடுக்க வைத்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு அங்கு மார்க்சிஸ்ட் கட்சித் தோழர் பழனி என்பவரைக் கொலை செய்து விட்டு பன்னீர்ச் செல்வம் கும்பல் பேரளத்திற்குத் தப்பியோடியது. அங்கு கடந்த பத்தாண்டுகளில் தங்கள் சாராய சாம் ராஜ்யத்தை விரிவுபடுத்தியது. திமுக ஆட்சி, போலீஸ் ஒத்துழைப்பு தைரியத்தில் ஒரு மிகச் சிறந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் நாவலனைப் படு கொலை செய்துள்ளது. இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுகவும் அக்கட்சியைச் சேர்ந்த வர்களும் பல படுகொலைகளையும், பாதகங்களையும் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சி என்பதால் தப்பியும் விடுகின்றனர். வரும் தேர்தலில் திமுகவுக்குச் சரியான பாடம் புகட்ட தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இன்றைய கார்ட்டூன்