1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!

1,20,000 கோடி ரூபாய் கேஸ் ஊழலை அம்பலப்படுத்திய கெஜ்ரிவால்!டெல்லி ஆட்சி கவிழ்ந்ததன் பின்னணி!

வீட்டுக்கு சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் உண்மையான விலை 850 ரூபாய். மத்திய அரசு இதற்கு 450 ரூபாய் மானியம் தந்து, வெறும் 403 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதனால்தான் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுவின் விலை 1200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இப்படி மானியம் தந்து, விலை குறைத்து விற்பதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று மத்திய அரசு சொல்லி வந்தது.

இதை எல்லோரும் உண்மை என்றுதான் நம்பி வந்தார்கள் ஆனால் உண்மையில் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை. இப்போதுள்ள விலையை விட 3 மடங்கு விலை குறைத்து விற்கலாம். இப்படி பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் உயர்த்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனமும், சில மத்திய மந்திரிகளும் சேர்ந்து கொள்ளையடித்து வந்தார்கள்.

இதை டெல்லி முதல்வர் #கெஜ்ரிவால் கண்டறிந்து தற்போதைய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, ஹைட்ரோ கார்பன் முன்னாள் தலைமை இயக்குனர் வி.கே.சிபல் மற்றும் பலர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய டெல்லி ஊழல் ஒழிப்பு, மற்றும் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.

கிருஷ்ணா, கோதாவரி டி-6 படுகைகளில் #இயற்கை எரிவாயு உற்பத்தியாகிறது. அரசு நிறுவனத்தை வைத்து, இங்கு உற்பத்தியாகும் கேஸை எடுத்து விற்பனை செய்தால் மக்களுக்கு 100 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டரை சப்ளை செய்ய முடியும். இப்படி சப்ளை செய்தால் மக்களுக்கு அதன் பயன் கிட்டுமே தவிர, ஆளும் கட்சிக்காரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாக்கெட்டுகளுக்கு பணம் போகாது.

அதனால் இந்த படுகையில் கேஸ் எடுக்க ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. அதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் 2.3 டாலர்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என விலையும், காலமும் நிர்ணயித்து மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தமே கூட மக்களை ஏமாற்றும் ஒப்பந்தம் தான்.

கோதாவரி படுகையில் ஒரு யூனிட் எரிவாயு எடுக்க 1 டாலருக்கு குறைவாகத்தான் செலவாகும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு 2.3 டாலருக்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்று சொன்னால் மக்கள் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளையடிக்கும். இதில் மத்திய மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட அளவு கமிஷன் கொடுத்து விடும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

இப்படி கோடி கோடியாக கொள்ளையடித்து ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போதவில்லை போலும்! அதனால்தான் மத்திய மந்திரிகளோடு கூட்டுச் சதி செய்தி ஒரு யூனிட் சமையல் எரிவாயுவை 2.3 டாலரிலிருந்து 4.2 டாலராக உயர்த்தி கொண்டது. அதாவது ஒரு யூனிட் கியாஸ் விலையை 142 ரூபாயிலிருந்து 262 ரூபாயாக உயர்த்தி கொண்டது ரிலையன்ஸ் நிறுவனம்.

இதன் பிறகும் #ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் #காங்கிரஸ் மந்திரிகளின் கொள்ளை நோக்கம் அடங்கவில்லை. இன்னும் இதில் எப்படி கொள்ளையடிக்கலாம்? என்று இவர்கள் திட்டம் போட்டனர். இந்தத் திட்டத்தின் விளைவாக 8 கோடி யூனிட் கேஸ் உற்பத்திக்கு திட்டமிட்டிருந்த இவர்கள், அதில் வெறும் 18 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்தனர். இதனால் நாட்டில் செயற்கையான கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த கேஸ் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதாக சொல்லி, இந்த கேஸ் வெளிநாடுகளில் இருந்து சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்தனர். இதனால் இந்தியப் பணம் வெளிநாடுகளுக்கு போய் நாட்டில் பண வீக்கம் ஏற்பட்டது. அதனால் இங்கு விலைவாசி தாறுமாறாக எகிறியது.

இந்நிலையில் கோதாவரி படுகையில் எடுத்த கேஸை ரிலையன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான நிக்கோ மூலம் வங்காள தேசத்திற்கு ஒரு யூனிட் 2.34 டாலர் விலைக்கு விற்று வந்துள்ளது.

ஆனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு 4.2 டாலருக்கு விற்றுள்ளது. இந்திய மக்களின் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனமும், மத்திய அரசும் சேர்த்து கொள்ளையடித்ததற்கு இது தெளிவான ஆதாரமாகும்.

"வங்காள தேசத்திற்கு ஒரு யூனிட் 2.34 டாலருக்கு விற்கப்பட்டால் அதை விடக் குறைந்த விலைக்குத் தானே மத்திய அரசுக்கு விற்க வேண்டும். ஆனால் மத்திய அரசோ 4.2 டாலர் கொடுத்து வாங்கி, இமாலய ஊழல் செய்துள்ளது.

இந்திய நாட்டின் வளம், முதலில் இந்திய மக்களுக்கு பயன்பட வேண்டும். இந்தியாவே வெளிநாடுகளில் இருந்து சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது என்றால் கோதாவரி படுகையில் கிடக்கும் சமையில் எரிவாயுவை வங்கதேசத்திற்கு விற்கக்கூடாது என்று மத்திய அரசு தடைச்சட்டம் போட்டிருந்த வேண்டுமல்லவா? அவர்கள் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டியதை வாங்கி விட்டார்களே! பிறகு எப்படி தடைச்சட்டம் போடுவார்கள்?

இப்படி ரிலையன்ஸ் நிறுவனம் 1.25 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளது என்று மத்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேஸ் விலையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தந்துள்ளார். இதையும் மத்திய அரசு கண்டு கொள்ள மறுத்து விட்டது.

இப்போது பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கு செலவு செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பணம் வேண்டும். இதனால் 1 யூனிட் சமையல் எரிவாயுவை 8.4 டாலருக்கு (சுமார் 524 ரூபாய்) வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் முதல் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக அதிகரித்து மக்களின் பணம் சுரண்டப்படும். இவ்வளவு பணம் கொடுத்து கேஸ் வாங்கினால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும். இவை அனைத்தும் மக்கள் பணம். இப்படி கேஸ் விற்பனை என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களிடம் கொள்ளையடித்து காங்கிரஸ் கட்சிக்கு பணம் கொடுக்க, அந்தப்பணத்தை தேர்தல் நேரத்தில் மக்களுக்கு லஞ்சமாக கொடுத்து மீண்டும் மத்திய ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என காங்கிரஸ் கட்சி கனவு கண்டு காய் நகர்த்தியுள்ளது.

இந்த இமாலய ஊழல் குறித்து மத்திய மந்திரி சபையின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியன், கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் தஹிலியானி, மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாஸ், மத்திய அரசின் முன்னால் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா ஆகியோர் டெல்லி மாநில அரசின் ஊழல் ஒழிப்புப் பிரிவிடம் புகார் கொடுக்க, இந்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தற்போது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி "அரசு நடத்தும் விதம் குறித்து கெஜ்ரிவாலுக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

ஊழல் பணத்தில்தான் அரசுகள் நடந்து வருகின்றன என்று கெஜ்ரிவாலுக்கு மட்டுமல்ல.... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு தெரியும். இவர்கள் மீது ஊழல் வழக்கு பதிவானதில் கெஜ்ரிவாலுக்கு எந்த பங்குமில்லை. ஏனெனில் கெஜ்ரிவால் புகார் கொடுக்கவில்லை. மாறாக அரசு உயர் பணிகளில் பல்லாண்டு காலம் சேவை புரிந்த முன்னாள் அரசு உயர் அதிகாரிகள்தான் கேஸ் ஊழலை அம்பலபடுத்தி, புகார் கொடுத்துள்ளனர்.

கெஜ்ரிவால் செய்ததெல்லாம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு கேஸ் விலையை உயர்த்தக் கூடாது. அப்படி உயர்த்தினால் போக்குவரத்து, மின் கட்டண உயர்வு, கேஸ் விலை உயர்வு ஆகியவை ஏற்பட்டு, சாமானிய மக்கள் சிரமப்படுவார்கள். அத்தோடு ரிலையன்ஸுக்கு வழங்கிய எண்ணெய் வயல்களையும் திரும்பப் பெற வேண்டும் என பிரதமருக்கும், பெட்ரோலிய துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் நிதி கொடுக்கவில்லை. பாடி.ஜ.க.வுக்கு அதை விட அதிகமாகவே நிதி கொடுக்கிறது. எனவே இவ்விரு கட்சிகளும் சேர்ந்து கெஜ்ரிவாலையும், அவரது ஆம் ஆத்மி ஆட்சியையும் கவிழ்த்து விட்டார்கள்.

இதற்கிடையே டெல்லி சட்டமன்றத்தில், ஜன லோக்பால் மசோதா கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசும், பாஜகவும் கூட்டு சேர்ந்து ரணகளம் செய்து கெஜ்ரிவாலை பதவி விலகச் செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

இன்றைய கார்ட்டூன்