மம்தாவின் வேதனை மிகுந்த ஆட்சி!

மேற்கு வங்கத்தில் தனது தலைமை யிலான அரசாங்கம் 100 நாட்களில் பல சாத னை களை செய்துவிட்டதாக மம்தா பானர்ஜி தம் பட்டம் அடித்துக்கொள்கிறார். ஆனால் உண்மை என்ன? மம்தாவின் சாத னைகள் என்ன?

இடதுசாரி ஊழியர்கள் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மீது கடுமை யான தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட் டுள்ளன. தாக்குதல்களின் கொடூரம் குறித்து சில விவரங்கள்:

படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் 33 பேர் (31-மார்க்சிஸ்ட் கட்சி, 2- ஆர்.எஸ்.பி), சித்ரவதை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டோர் 7 பேர், தாக்குதலுக்கு உள்ளான பெண் தோழர்கள் 684, பாலியல் துன்புறுத்த லுக்கு உள்ளானோர் 508, வன்புணர்ச்சி கொடுமைக்கு உள்ளான பெண் தோழர்கள் 23 (பள்ளிக்குச் செல்லும் 16 வயது மாணவி உட்பட), படுகாயமடைந்து மருத்துவமனை யில் சிகிச்சை பெறுவோர் 3785 பேர், தாக்கு தல் மற்றும் கொள்ளைக்கு உள்ளான தோழர் களின் இல்லங்கள் 2064, தமது இருப்பிடங் களிலிருந்து விரட்டப்பட்ட தோழர்கள் 40000 பேர், கட்சியின் முகாம்களில் தங்க வேண்டிய நிலைக்கு ஆளானவர்கள் 14081 பேர், அழிக் கப்பட்ட கட்சி மற்றும் வெகுஜன அமைப்பு களின் அலுவலகங்கள் 758, திரிணாமுல் குண்டர்களால் கைப்பற்றப்பட்ட மாணவர் சங்க அலுவலகங்கள் 77, எரித்தும் இடித்தும் அழிக்கப்பட்ட கணசக்தி இதழின் விளம்பரப் பதாகைகள் 241, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் 1500 (தற்சமயம் சட்ட மன் றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன் னாள் அமைச்சரும் இதில் அடக்கம்) திரிணா முல் குண்டர்களால் கட்சி ஆதரவாளர்களிட மிருந்து கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் கைப் பற்றப்பட்ட பணம் 27.7 கோடி ரூபாய். இவ்வா றாக கட்சி மீது கொலை வெறித்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது மம்தா அரசாங்கம். இது இந்த அரசாங்கத்தின் காட்டுமிராண்டித் தனமான சாதனை எனில் மிகை அல்ல! ஆனால் ஜனநாயகத்திற்கு இது மிகப்பெரிய அடி என்பது மறுக்க முடியாத ஒன்று.

நிலங்களை பறிக்கும் நிலப்பிரபுக்கள்

இடது முன்னணி ஆட்சியில் நிலங் களை இழந்த நிலப்பிரபுக்கள் தமது நிலங் களை கைப்பற்றிட மம்தா ஆட்சி பொன்னான தருணம் என கணக்கிடுகின்றனர். திரிணா முல் ஊழியர்கள் அவர்களுக்கு அடியாட் களாக செயல்படத் தயாராக உள்ளனர். இவர் களின் நிலப்பறி கூட்டு ஏற்கெனவே செயல் பட ஆரம்பித்துவிட்டது.

* 3418 குத்தகை விவசாயிகள் 9200 ஏக்கர் நிலத் திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

* 26,838 சிறு விவசாயிகளின் சுமார் 9222 ஏக்கர் நிலம் பறிக்கப்பட்டு நிலப்பிரபுக்களிடம் தரப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சுமார் 18400 ஏக்கர் நிலத்தை ஏற்கெனவே விவசாயிகள் இழந் துள்ளனர்.

நிலங்களை இழந்த விவசாயிகள் வாய் மூடி மவுனிகளாக இருந்துவிடுவர் என நிலப் பிரபுக்களோ அல்லது அவர்களுக்கு அடியாட் களாக செயல்படும் திரிணாமுல் குண்டர் களோ எண்ணினால் அது மிகப்பெரிய முட் டாள்தனமான தவறு! பல இடங்களில் விவசாயிகள் மீண்டும் போராடி தமது நிலங் களை மீட்கும் சம்பவங்கள் தொடங்கியுள் ளன. இந்த மோதல்களில் பல விவசாயிகள் கடும் தாக்குதல்களை சந்தித்துள்ளனர். எனினும் அவர்கள் தமது நிலத்தை மீட்க உறுதி பூண்டுள்ளனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் ஒருகோடியே 59 இலட்சம் பணி நாட்களை உருவாக்கியதை ஒரு சாதனை யாக மம்தா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இடது முன்னணி மூன்று மாதங்களில் 15 கோடி பணி நாட்களை உருவாக்கியது. இடது முன்னணியின் பணியோடு ஒப்பிடும் பொழுது மம்தா அரசாங்கம் 10 சதவீத பணி நாட்களையே உருவாக்கியுள்ளது. ஆனால் இதனை சாதனை என்று மார்தட்டிக்கொள் வது மேற்குவங்க மக்களை ஏமாற்றும் செய லாகும்.

மாநிலத்தின் ஒருமைப்பாடு

டார்ஜிலிங் பிரச்சனை தீர்ந்துவிட்டதாக வும் அங்கு அமைதி திரும்பி விட்டதாகவும் மம்தா அரசாங்கம் கூறிக்கொள்கிறது. எனி னும் இந்த ஒப்பந்தம் இடைக்கால கட்டம் தான்; கூர்க்கா மாநிலம் அடைவதே எங்களது இலட்சியம் என கூர்க்கா பிரிவினைவாதிகள் கூறுகின்றனர். கூர்க்காலாந்து எனும் கோட் பாட்டை ஒப்பந்தத்தில் பதிவு செய்ததன் மூலம் மாநிலத்தின் பிரிவினைக்கு மம்தா வழி வகுத்துள்ளார். சிலிகுரி, டெரை போன்ற பகுதிகளை கூர்க்காலாந்தில் இணைப்பது எனும் முடிவிற்கு அப்பகுதி மக்கள் கடும் ஆட்சேபணை தெரிவித்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்திவிடுமோ எனும் கவலை உருவாகியுள்ளது. கூர்க்கா ஒப்பந்தம் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலான சூழலையே உருவாக்கியுள் ளது. இந்த சிக்கல் மம்தாவின் சாதனையாக கூறப்படலாம்! ஆனால் மேற்குவங்கத்தின் ஒருமைப்பாட்டுக்கு வேதனை என்பதே உண்மை!

இடது முன்னணியை குறிப்பாக மார்க் சிஸ்ட் கட்சியை முடக்கிட மாவோயிஸ்டு களுடன் மம்தா பானர்ஜி அமைத்துள்ள கூட்டு அனைவரும் அறிந்த உண்மை! ஒரு பக்கம் பிரதமர், மாவோயிஸ்டுகளை உள்நாட் டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் பங்கேற் றுள்ள மம்தா பானர்ஜியின் கட்சியோ சிறை யில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்திட திட்டமிட்டு வருகிறது. இடது முன்னணி ஆட்சியில் தனிமைப்படுத் தப்பட்ட மாவோயிஸ்டுகள் மீண்டும் ஜங்கல் மஹால் பகுதியில் காலூன்ற அனுமதிக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினரின் நட வடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மாவோ யிஸ்டுகளை இடது முன்னணிக்கு எதிராக களமிறக்கிவிடுவதே மம்தாவின் திட்டமாகும். இது ஆபத்தான திட்டம்! மேற்கு வங்கத்தின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சீர் குலைக்கும் செயலாகும்.

மேற்குவங்கத்தின் அமைதிக்கும் ஒரு மைப்பாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் வேத னையான பாதையில் அரசாங்கம் பயணிக் கிறது என்பதே மம்தாவின் நூறு நாள் ஆட்சி வெளிப்படுத்தும் உண்மை ஆகும்.

பொய்களை சாதனைகளாகக் கூறும் ஆட்சி

இந்தியாவின் வரலாற்றிலேயே முதன் முதலாக பட்ஜெட்டை சமர்ப்பிக்காமலேயே பட்ஜெட் சட்டமன்றக் கூட்டத்தை நடத்தி முடித்த பெருமை மம்தாவின் நிதி அமைச் சரையே சாரும். வெறும் வரவு-செலவு எவ்வளவு இருக்கும் என்பதை மட்டும் கூறிவிட்டு, இதுவே பட்ஜெட் என மம்தாவின் நிதி அமைச்சர் கூறிவிட்டார். முறையான பட்ஜெட் ஆவணங்களோ அல்லது துறை வாரியான ஒதுக்கீடு என்பதோ எதுவுமே இல்லை. மம்தா வசம் உள்ள உள்துறை உட் பட எந்த ஒரு துறை மீதும் விவாதம் இல்லை. வருவாய் எங்கிருந்து வரும் என்பது கூட விவாதிக்கப்படவில்லை. இது மம்தாவின் வரலாறு காணாத சாதனைதான்!

இடது முன்னணி ஆட்சியில் உருவாகி அமலாக்கப்பட்டு வந்த பல திட்டங்களையும் மம்தா அரசாங்கம் தனது சாதனைகளாக கூறிக்கொள்வது கேலிக்கூத்தான ஒன்று!

* ரூ.800 கோடி மதிப்புள்ள நகர்ப்புற வீட்டுவசதி திட்டம்

* சாலையோர வியாபாரிகளுக்கான நலவாழ்வுத்திட்டங்கள்

* கூச்பிகார் விமான நிலையத் திட்டம்

* ரூ.500 கோடி வேலைவாய்ப்புத் திட்டம்

போன்றவை இடது முன்னணி ஆட்சி யின்போது உருவாக்கப்பட்டு பல்வேறு நிலை களில் அமலாக்கத்தில் இருந்த திட்டங்களாகும்.

மம்தா அரசாங்கம் 2,76,000 வேலை வாய்ப் புகளை உருவாக்கியதாக அறிவித்துள்ளது. ஆனால் அதன் உள்விவரங்களை ஆராய்ந் தால் 2,00,000 வேலைகள் தனியார் துறை யில் உருவானதாக உள்ளது. ஆயினும் எந்தெந்த தனியார் நிறுவனங்கள் எவ்வளவு பேருக்கு பணிகளை அளித்தன எனும் விவரங்களை மம்தா அரசாங்கம் தெரிவிக்க மறுக்கிறது. மீதமுள்ள 76000 மாநில அரசு வேலை வாய்ப் புகளில் மிகப்பெரும்பான்மையான பதவிகள் இடது முன்னணி காலத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டு, அமலாக்கும் கட்டத்தில் இருந்த திட்டமாகும். அதனை மம்தா அரசாங் கம் தனது சாதனையாக வெட்கமின்றி கூறிக் கொள்கிறது.

ஜனநாயகம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து!

மம்தா ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஜனநாய கத்தின் மீதான தாக்குதல் மிகவும் ஆபத்தான ஒன்றாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், கல்விநிலையங்களில் உள்ள ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் மிரட்டல் மூல மாகவோ அல்லது அரசு ஆணை மூலமா கவோ முடக்கப்படுகின்றன. மாணவர் சங்கத் தின் ஊழியர்கள் பதவி விலகுமாறு மிரட்டப் படுகின்றனர். மிரட்டலுக்கு அடிபணியாதவர் கள் கல்விநிலையங்களில் நுழைந்திடவோ அல்லது தேர்வுகளை எழுதவோ அனுமதிக் கப்படுவது இல்லை. பல உள்ளாட்சி அமைப் புகள் செயல்படாத அளவிற்கு முடமாக்கப்பட் டுள்ளன.

இந்த ஜனநாயகப் படுகொலையில் முட மாவது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தானே என எண்ணி பல ஊடகங்கள் செய்திகளைக் கூட வெளியிட மறுக்கின்றன. ஆனால் இப் பொழுது காங்கிரஸ் கட்சியும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ் காரர்கள் பகிரங்க மாக புகார்கள் கூறத்தொடங்கியுள்ளனர். இதன் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக திரிணாமுல் கட்சியிலேயே பல கோஷ்டிகள் உண்டாகி தங்களுக்குள் ஆயுத மோதல்களை நடத்திக்கொள்வதும் தொடங்கியுள்ளது.

இந்த 100 நாட்களில் மம்தாவின் ஆட்சி மேற்குவங்கத்தில் எந்த நன்மையையும் விளைவிக்கவில்லை. மாறாக மேற்குவங்கத் தின் எதிர்காலம் குறித்த கவலையையே மம் தாவின் ஆட்சி ஏற்படுத்தியுள்ளது என்பதையே பல்வேறு நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மம்தாவிற்கு வாக்களித்த மக்கள் இதனை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்றைய கார்ட்டூன்