தலித்துகளுக்கு எதிராக நீடிக்கும் ஒடுக்குமுறைகள்

* திருச்செந்தூர் தாலுகா நாலு மூலைக் கிணறு கிராமத்தில் தலித்துகள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு-ஒன்றரை வயது, 3 வயது குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்.

* ஒட்டப்பிடாரம் தாலுகா கொடியங்குளம் கிராமத்திற்குள் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நுழைந்து தலித் மக் கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக் குதல்-வீடுகளையும், விலை உயர்ந்த பொருட்களையும் உடைத்து நொறுக்கு தல், கால்நடைகளையும் விட்டுவைக்க வில்லை. குடிதண்ணீர் கிணற்றில் மண் ணெண்ணெய் ஊற்றி விஷமாக்குதல்.

* நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட் டத் தொழிலாளர்கள் (தலித் உழைப்பாளி கள்) நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட் டத்திற்காக கூடியபோது, காவல்துறை யின் மிருகத்தனமாக தடியடி தாக்குதல்- தாமிரபரணி ஆற்றுக்குள் விரட்டி 17 தலித்துகளை படுகொலை செய்தல்.

* விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் ஆலய நுழைவிற்காகச் சென்ற தலித் மக்கள் மீது காவல்துறையின் கொடூரமான தடியடி -சட்டமன்ற உறுப்பினர் லதாவை கீழே தள்ளி பூட்ஸ் காலால் ஏறிமிதித்த னர். கோவிலுக்கு சென்றவர்களை சிறைக்கு அனுப்பினர்.

* மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில், அரச மர- ஆலய வழிபாடு நிழற்குடை அமைத்தல், தலித் குடியிருப்பை நோக் கிச்செல்லும் சாக்கடையை வேறு பாதைக்கு திருப்புதல் போன்ற கோரிக் கைகளுக்காகப் போராடிய தலித் மக்கள் மீது காவல்துறை அட்டூழியம், நள்ளிரவில் போலீசார் புகுந்து, பெண்கள், முதியவர் கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோ ரை தாக்குதல், கைது செய்தல் - பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாயம் கேட்டு குரல் கொடுத்த டி. கே.ரங்கராஜன் எம்.பி., பி.சம்பத், கே. சாமுவேல்ராஜ் ஆகிய தலைவர்கள் உட் பட பல நூற்றுக்கணக்கான தலித்துகள் மீது காவல்துறை தடியடி தாக்குதல்-தலைவர்களையும் தலித் மக்களையும் அடித்து உதைத்து காவல்துறை வேன் களில் தூக்கி எறிதல்.

* வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் 36 தலித் மற்றும் இஸ்லாமியக் குடும்பங்கள் ஒரு ரியல் எஸ்டேட் பேர்வழியால் சமூக விரோதிகளைக் கொண்டு தாக்கி அப்புறப் படுத்துதல்-அவர்களின் குடியிருப்பு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து நியாயம் கேட்டதற்காக பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் எல்லாம் முடிந்தபிறகு தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்து காவல்துறை யின் அத்துமீறிய கைது நடவடிக்கைகள், சிறையில் அடைத்தல்.

கடந்த பல ஆண்டுகளில் தலித் மக்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய தாக்குதல் களின் சில நிகழ்வுகளே இவை.

இந்த அனைத்துச் சம்பவங்களிலும் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலையிட்டுள்ளன. இது போன்ற ஏராள மான இன்னும் பல சம்பவங்களைக் குறிப்பிட முடியும். தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட் டாலும் தலித் மக்கள் மீதான காவல்துறை யினரின் அணுகுமுறையிலும் தாக்குதலிலும் எவ்வித மாற்றமும் இல்லை. ஆதிக்க சக்தி களும், சாதி வெறியர்களும் தலித் மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல்களை தொடர்ச்சி யாக நடத்தி வரும் வேளையில், தமிழக காவல்துறையும் அவர்கள் மீது வெஞ்சினத் தோடும் வன்மத்தோடும் தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் ஏவி வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சட்டத்தையும் நியாயத்தையும் காக்கவேண்டிய காவல்துறையினரையும் சமூகத்தில் நிலவும் சாதிய உணர்வுகள் விட்டுவைக்கவில்லை. காவல்துறையின ரின் ஒரு பகுதியினரும் சாதிய வன்மத்தோடு தாக்கிய பல சம்பவங்களைப் பட்டியலிடமுடி யும். நேர்மையான காவல்துறையினரும் இருக்கிறார்கள். மிகக் கணிசமான தலித் மக்களைப் பொறுத்தவரை வர்க்கம் என்ற முறையில் கூலி உழைப்பாளிகளாக உள்ள னர். மறுபுறம் சாதி என்ற முறையில் இவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் உள்ளனர். எனவே சாதி ஆதிக்க சக்திகளின் தாக்குதலையும், ஆளும் வர்க்க அரசின் தாக்குதலையும் எதிர்கொண்டு, இரண்டு வித மான ஒடுக்குமுறைகளை அனுபவிப்பவர் களாக தலித்துகள் உள்ளனர்.

நடைபெற்ற சம்பவங்களும், முதல்வரின் விளக்கமும்

இப்பின்னணியிலேயே தியாகி இமானு வேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை யொட்டி நடைபெற்ற சம்பவங்களைக் கவ னிக்க வேண்டியுள்ளது. 9.9.11அன்று இரவில் பழனிக்குமார் தங்கவேல் என்ற தலித் மாணவன் சாதி ஆதிக்கவெறியர்களால் படு கொலை செய்யப்படுகிறான். 11.9.11 அன்று நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். இரண்டு தரப்பினருடைய தாக்குதலுக்கும் தலித் மக்கள் இரையாகிஉள்ளனர் என்பது வேதனையான உண்மையாகும். இந்த இரு சம்பவங்களுக்கும் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் கூறியுள்ள விளக்கம் நியாய மானதாக இல்லை.

பழனிக்குமார் தங்கவேல் என்ற 16 வயது மாணவன் எந்தத் தவறும் செய்யவில்லை. தலித் பிரிவைச் சார்ந்தவன் என்ற ஒரே கார ணத்திற்காக அப்பிரிவினரை மிரட்டி அச் சுறுத்தும் நோக்கத்துடன் சாதிவெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதலுக்கு அவன் பலியானான். இம்மாணவனின் படுகொலைக்கு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அளித்த விளக்கத்தை நியாய உணர்வு உள்ள எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதோடு, அது சம்பவத்தை திசை திருப்பும் வகையிலேயே அமைந்தது. அதே வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினரின் கொடூரச் செயலுக்கு அவர் நியாயம் கற்பிக்க முயன் றுள்ளார்.

கேள்விக்கு என்ன பதில்?

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சிக்கு உணர்வுப்பூர்வமாக பல்லா யிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என் பது காவல்துறைக்குத் தெரியாதா? இச்சந்தர்ப் பத்தில் எந்த ஆத்திரமூட்டல் நிகழ்ச்சிக்கும் இடம் தராதபடி செயல்பட வேண்டும் என்ற சாதாரண புரிதல் கூட காவல்துறைக்கு இல் லாமல் போய்விட்டதா? ஜான்பாண்டியனை பரமக்குடிக்குச் செல்லவிடாமல் தடுத்து, அன்றைய தினம் கைதுசெய்வது நினைவு தின நிகழ்ச்சியை அமைதியாகக் கொண்டு செல்ல உதவும் நடவடிக்கையா? விரும்பத்த காத சம்பவங்களுக்கு இடம் தரும் வகையில் காவல்துறையின் அணுகுமுறை அமைய லாமா? பல நூற்றுக்கணக்கான வாகனங் களில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த வரும்போது, அந்நிகழ்ச்சி தடையின் றியும் அமைதியாகவும் நடைபெறும் வகை யில் காவல்துறையின் செயல்பாடும், பாதுகாப்பு அணுகுமுறையும் இருக்கவேண்டாமா?

வெட்கக்கேடான நிலை

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக் கும் எவரும் காவல்துறையின் தவறான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டவே செய்வார் கள். எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையில் காவல்துறையின் செயல்பாட்டை முதிர்ச்சியற்ற அணுகுமுறை என்றும், கண்டிக்கத்தக்கது என்றும் சாடியுள் ளது. ஆனால் இப்பிரச்சனையில் நியாயமான நிலை எடுப்பதைவிட, காவல்துறையின் தவ றான போக்கைப் பாதுகாப்பதற்கே தமிழக முதல்வர் முன்னுரிமை அளித்துள்ளார். காவல்துறையின் செயல்பாடு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. 7பேர் கொல்லப்பட்ட சம் பவத்தில் காவல்துறை அதிகாரி எவரும் சஸ் பெண்ட் செய்யப்படவில்லை என்பது வெட் கக்கேடான நிலையாகும்.

அரசின் பொறுப்பு

அடுத்து இச்சம்பவங்கள் அனைத்தை யும் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ(எம்) மற்றும் பல இயக்கங்கள் அழுத்தமான கோரிக்கையை முன்வைத்த பின்பு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலையீட் டிற்கு பிறகு தான், பரமக்குடி சம்பவத்தை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிப்பார் என முதல்வர் அறிவித்தார். உயிரிழந்தவர் களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரணமும் போதுமான தல்ல. தலா ரூ.5 லட்சம் என நிவா ரணத்தை உயர்த்துவது அவசியமாகும். காய மடைந்தவ களுக்கு சிறந்த சிகிச்சையும் அறிவித்ததைவிட கூடுதலான நிவாரணத் தையும் வழங்கு வது அரசின் கடமையாகும்.

வினோத, விரோதமான நிலை

அடுத்து இப்பிரச்சனையில் தேமுதிக வைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டசபையில் தெரிவித்த கருத்து வினோத மானதாகவும் வெறுப்பூட்டும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்தக் கொடூரமான துப் பாக்கிச்சூடு பற்றி எந்த நீதிவிசாரணையும் வேண்டியதில்லையாம். இதனைக் கேட்டு தேமுதிகவின் இளம் தொண்டர்கள் நெஞ்சம் கொதித்திருப்பார்கள். ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு காட்டப்படும் சமூக அநீதியாகும் பண்ருட்டி ராமச்சந்திரனின் பேச்சு. சட்டப் பேரவையில் புதனன்று மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, புதிய தமிழ கம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வன்கொடுமைக்கு எதிராக அணிதிரள்வோம்

மொத்தத்தில் 11.9.2011 தேதிய இச்சம்ப வங்கள் தலித் மக்கள் மீது தமிழகக் காவல் துறை நடத்திய மற்றொரு வன்கொடுமைத் தாக்குதலேயாகும். சிபிஐ(எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மட்டுமல்ல, பல ஜனநாயக இயக்கங்களும் மனிதஉரிமை அமைப்புகளும் இயல்பாகவே இத்தாக்குத லுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த கண்டனம் மேலும் மேலும் பலப்பட்டு, இப்பிரச்சனையில் தலித் மக்களுக்கு நியாயம் கிடைக்க அரசை நிர்ப்பந்திக்கவேண்டும்.

தலித் மக்கள் மீது ஆதிக்க சக்திகள் மற் றும் அதிகாரவர்க்க ஒடுக்குமுறைகள் தொடர அனுமதியோம். தீண்டாமைக்கொடுமைக ளுக்கு முடிவு கட்டுவோம். சமூக சமத்துவம் உருவாகவும் அதன் அடிப்படையில் சமூக நல்லிணக்கம் ஏற்படவும், உழைக்கும் வர்க்க இயக்கங்களும், ஜனநாயக இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் இணைந்து செயலாற்றுவோம். வர்க்க நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்.

இன்றைய கார்ட்டூன்