தென்னகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்

தென்னகத்தின் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சியை (சி.எஸ்.பி) கட்டி வளர்க்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். அவ்வமயம் சி.எஸ்.பி. தென்னிந்தியாவில் எப்படி இருந்தது? “சென்னையில் ஒரு சிறிய சி.எஸ்.பி இருந் தது. ஆந்திராவில் வலுவுள்ள சி. எஸ்.பி கட்சிக்கிளை இயங்கிற்று. கேரளத்தில் சி.எஸ்.பி இருந்தது; ஆனால் வலிமை பொருந்தியதாக இல்லை” என்று எஸ்.வி காட்டே குறிப்பிட்டுள்ளார். ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்தப் பகுதியில் சி.எஸ்.பி அப்படி ஒன்றும் வலுவாக, அன்று அந்த 1936ல் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட தொருகட்சியை வளர்த்தெடுப்ப தில்தான் கம்யூனிஸ்டுகள் அன்று உளப்பூர்வமாகப் பாடுபட்டனர். அதிலும் சி.எஸ்.பி.யிலே இருந்த எம். ஆர். மசானி போன்ற கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களிடமிருந்து வந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும் இந்தப் பணியில் இறங்கினர் கம்யூ னிஸ்டுகள்.

ஆந்திராவிலிருந்த சி.எஸ்.பி. கிளையின் மாநாடு 1935 பிப்ரவரி யில் நடைபெற்றதாகவும், அங்கே முதன் முதலாக எம். பசவ புன்னை யாவைச் சந்தித்ததாகவும் இ. எம்.எஸ். எழுதியுள்ளார். அப்பொ ழுதே பசவ புன்னையா ஒரு கம்யூ னிஸ்டாக மாறியிருந்தார். அந்த மாநாட்டில் கலந்து கொண்ட மசானியிடம் சி.எஸ்.பி யின் கொள்கைகள் பற்றிப் பல்வேறு ஐயப்பாடுகளைக் கிளப்பியிருக்கி றார் பசவ புன்னையா. அவற்றிற்கு மசானி அளித்த விளக்கங்கள் திருப் திகரமாய் அமையவில்லை. குறிப் பாக காங்கிரஸ் பற்றி சி.எஸ்.பி. தலை மைக்கு இருந்த மயக்கங்களை கேள்விக்குறியாக்கினர் கம்யூனிஸ்டு கள். இந்தக் கேள்விக்கணைகளின் காரணமாக காங்கிரசை சோஷலிச அமைப்பாக மாற்றுவதே சி.எஸ். பியின் நோக்கம் என அதன் அதிகா ரப்பூர்வ ஆவணங்கள் குறிப்பிட்டு வந்ததற்குப் பதிலாக, ஒரு கட்டத்தில் காங்கிரசை ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக மாற்றுவதே தனது நோக்கம் எனக் குறிப்பிடத் துவங்கி யது என இ.எம்.எஸ் குறிப்பிட்டுள் ளார்.

அன்றைய சென்னை மாகாணத் தில் கட்சிக்குப் புதியவர்களைக் கொண்டு வந்ததில் அமீர் ஹதர்கா னுக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது. 1931 லேயே ஆந்திரத்தின் பி. சுந்த ரய்யா பற்றிக் கேள்விப்பட்டு அவ ரைச் சந்தித்தார். பின்னர் 1934 ல் மீண்டும் அவரைச் சந்தித்து தென்ன கத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்பொழுது இருந்த கட்சியின் மத்தியக்குழுவிலும் சுந்தரய்யா இணைக்கப்பட்டிருந்தார். பம்பா யிலிருந்த மையத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்.

1935 பிற்பகுதியில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்திற்கு முன்னால் முற்போக்கு மாநாடு என ஒரு மாநாடு நடைபெற்றது. அங்கேதான் கேர ளத்தின் இ.எம்.எஸ் மற்றும் கிருஷ் ணபிள்ளை, சுந்தரய்யாவை முதன் முதலாகச் சந்தித்தனர். தங்களுக் கிடையே பல்வேறு விஷயங்களில் கருத்தொற்றுமை நிலவுவதை உணர்ந்தனர். இவர்களுக்கிடை யேயான தொடர்பும் தொடர்ந்தது. 1936 ல் நடந்த தேசிய காங்கிரசின் லக்னோ மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் வேண்டுகோள்களை காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் விநி யோகிக்க சுந்தரய்யாவிற்கு உதவி செய்தார் இ.எம்.எஸ். அதே ஆண் டில் கம்யூனிஸ்டு கட்சியிலும் உறுப் பினரானார். 1937ல் கிருஷ்ண பிள்ளை, இ.எம்.எஸ், கே. தாமோ தரன், என்.சி. சேகர் எனும் நால் வரைக் கொண்ட கம்யூனிஸ்டு கட்சி யின் கிளையொன்று கேரளத்தில் அமைக்கப்பட்டது. கிளையின் அமைப்பாளராக கிருஷ்ணபிள்ளை இருந்தார். இக்குழுவோடு விரைவி லேயே ஏ.கே. கோபாலனும் இணைந்துவிட்டார்.

தென்னகத்தில் கட்சியை வளர்ப் பதில் சுந்தரய்யாவோடு பொறுப் பிலே இருந்த மற்றொருவர் எஸ்.வி. காட்டே. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த அவர் இக்கா லத்தில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்படுமாறு பணிக் கப்பட்டார். பி. ராமமூர்த்தி, பி. சீனி வாசராவ், ப. ஜீவானந்தம் ஆகி யோரோடு சுந்தரய்யாவும், காட்டே யும் தொடர்பு கொண்டனர்.

சி.எஸ்.பியின் பம்பாய் மாநாட் டில் கலந்து கொண்டு இணைந்து திரும்பிய பி. ராமமூர்த்தி, பி. சீனிவா சராவோடு இணைந்து சென்னை யில் அக்கட்சியை வளர்க்க முயன் றார். சென்னையில் உருவான சி.எஸ். பிக்கு சீனிவாசராவ் செயலாளராக ஆனார். ‘சென்னைத் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ என்ற ஒன்றை இந்தத் தலைவர்கள் தொடங்கினர். சென்னை மூக்குப்பொடி தொழி லாளர் சங்கத்தையும் அமைத்தனர். இவர்களின் முன் முயற்சியினால் அகில இந்திய அச்சகத் தொழி லாளர் மாநாடு ஒன்றும் சென்னை யில் நடைபெற்றது.

இதற்கிடையில் சுயமரியாதை சமதர்மக் கட்சியை நடத்தி வந்த ஜீவானந்தம் அதை சி.எஸ்.பி.யோடு இணைத்திட ஒப்புக் கொண்டார். இதற்கென திருச்சியில் 1936 நவம் பரில் மாநாடு ஒன்றும் கூட்டப்பட் டது. அங்கே சுயமரியாதை சமதர் மக் கட்சி சி.எஸ்.பி.யோடு ஒன்றாகக் கலந்தது. சி.எஸ்.பியின் பொதுச் செயலாளராக ஜீவாவும், கூட்டுக் காரியதரிசிகளாக சீனிவாசராவும் நீலாவதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சோஷலிஸ்டுகளாக இருந்த ராமமூர்த்தி, சீனிவாசராவ், ஜீவா னந்தம் ஆகியோர் இக்காலத்தி லேதான் கம்யூனிஸ்டுகளாகப் பரி ணமித்தனர். 1936 ஆம் ஆண்டிலே இம் மூவரோடு கே. முருகேசன், அச் சகத் தொழிலாளி மாணிக்கம் ஆகி யோரும் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி யின் கிளையொன்று சென்னை யிலே உருவெடுத்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் தடை செய்யப் பட்டிருந்த கம்யூனிஸ்டு கட்சியின் முடிவின்படி சி.எஸ்.பியை தென்ன கத்திலே வளர்த்தெடுக்கும் முயற்சி யில் உற்சாகமாக இறங்கினர்.

(இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு நூலிலிருந்து)

இன்றைய கார்ட்டூன்