நில வளத்தைச் சூறையாடுவதை நிறுத்துக

உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சால் கிரா மத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் பாதைக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு மிகவும் அநீதியான முறையில் நிலம் கையகப் படுத்தியதை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக் கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு காவல்துறையினர் உட்பட நால்வர் இறந்திருக்கிறார்கள். 
மாயாவதி அரசாங்கமானது, கிரேட்டர் நொய்டாவிலிருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, ஜே.பி.அசோசியேட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதற்காக கவுதம் புத் நகரிலிருந்து ஆக்ரா வரை 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலங்கள் விவசாயி களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டிருக் கின்றன. ஆனால், கையகப்படுத்துதல் என்பது இத்துடன் முடிந்துவிடவில்லை. யமுனா எக்ஸ்பிரஸ்பாதை தொழில் வளர்ச்சிக் குழுமம் (கூாந லுயஅரயே நுஒயீசநளளறயல ஐனேரளவசயைட னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல), எக்ஸ்பிரஸ் பாதையைச் சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களையும் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தி, அதன் பின்னர் அவற்றை பத்திலிருந்து இருபது மடங்கு விலை வைத்து ரியல் எஸ்டேட் கம் பெனிகளுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது. வீடுகள் கட்டும் கட்டிடக்காரர்களும் (ரெடைனநசள), ரியல் எஸ்டேட் கம்பெனிகளும் அவ்வாறு பெற்ற நிலங்களை ஐம்பதி லிருந்து நூறு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கின்றன. 2010 டிசம்பரில் உத்தரப்பிரதேச மாநில அர சாங்கமானது ஓர் அறிவிக்கை வெளி யிட்டது. அதன்படி யமுனா எக்ஸ்பிரஸ் பாதை செல்லும் ஆறு மாவட்டங்களில் உள்ள 1187 கிராமங்களை, யமுனா எக்ஸ்பிரஸ்பாதை தொழில் வளர்ச்சி அதிகாரக் குழுமத்தின்கீழ் கொண்டு வந்தது. இப்பகுதியில் நகர்ப்புற மையங் களும் (ரசயெn உநவேசநள) தொழிற்பேட்டை களும் (iனேரளவசயைட யசநயள) கட்ட வேண்டும் என்பதே இக்குழுமத்திற்குக் கொடுக்கப் பட்டுள்ள பணியாகும்.


நொய்டாவிற்கும் கிரேட்டர் நொய்டா விற்கும் இடையில் உள்ள நிலங்கள் கையகப்படுத்துதலில் என்ன நடைபெற் றது என்பதை விளக்கினால் வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இப்பகுதியில் நிலத்தைக் கையகப் படுத்தும்போது, ஒவ்வொரு 300 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலத்திற்கும் விவ சாயிகளுக்குத் தலா 50 ரூபாய் என்கிற முறையில் தரப்பட்டது. ஆனால் இன்று, அதே இடத்தில் ஜே.பி.கம்பெனி 2500 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கிறது. இக் கம்பெனி இங்கே மனைகளை ஒரு சதுர மீட்டர் 15 ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் விற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 50 ரூபாய்க்கு விவசாயிகளிட மிருந்து வாங்கி, அதே நிலத்தை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறது. 


இதுதான் விவசாயிகளைக் கோப மடைய வைத்திருக்கிறது. யமுனா எக்ஸ் பிரஸ் பாதை நெடுக, இவ்வாறு கடந்த ஓராண்டு காலமாக நிலங்களை விற்ற விவசாயிகள் தற்போது கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அலிகார் மாவட்டத்தில் தப்பால் என்னுமிடத்தில் 2010 ஆகஸ்டில் விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டம் நடத்திய சமயத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு மூவர் பலியாகினர். மதுரா, ஆக்ரா மற்றும் கவுதம் புத் நகர் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டங் கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


உத்தரப்பிரதேச மாநில அரசாங்க மானது விவசாயிகளிடமிருந்து மிகப் பெரிய அளவில் நிலங்களை கையகப் படுத்தி, அவற்றை ஜே.பி.அசோசியேட்ஸ் போன்று தங்களுக்கு வேண்டிய கம்பெனி களிடம் எக்ஸ்பிரஸ்பாதை அமைப்பதற் காக மட்டுமல்ல, நகரக் குடியிருப்புகள் (வடிறளோiயீள) மற்றும் பெரும் வணிக வளா கங்கள் (அயடடள) கட்டுவதற்கும் ஒப் படைத்துக் கொண்டிருக்கின்றது. தப்பால் கிளர்ச்சிகள் இவ்வாறு கையகப்படுத்தப் பட்ட நிலங்களை நகரக் குடியிருப்புகள் கட்டுவதற்காக, கம்பெனி ஒன்று பயன் படுத்த முன்வந்ததை அடுத்தே நடை பெற்றுள்ளன. கிரேட்டர் நொய்டாவுக்கும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் பால்லி யாவுக்கும் இடையேயான 1,047 கிலோ மீட்டர் தூரத்தில் அமையவுள்ள கங்கா எக்ஸ்பிரஸ் பாதை மற்றொரு மாபெரும் திட்டமாகும். இப்பாதையின் இரு மருங் கிலும் நகரக் குடியிருப்புகளும், தொழிற் பேட்டைகளும் கட்டப்படவிருக்கின்றன. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டு, ஜே.பி. அசோசியேட்சுக்கும் மற்றும் பல தனியார் கம்பெனிகளுக்கும் ஒப் படைக்கப்படவிருந்தன. சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை இதற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்த இருந்தனர். இதில் மொத்தம் 1250 கிரா மங்கள் பாதிக்கப்படவும் அக்கிராமங்களி லிருந்த மக்கள் காலி செய்யப்பட்டு விரட்டியடிக்கப்படவும் இருந்தார்கள். இத்திட்டம் தொடர்பாக மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் ஆட்சேபணைகள் தாக் கல் செய்திருப்பதால் இத்திட்டம் இன் னமும் தொடங்கப் படவில்லை. 


இவ்விரு திட்டங்களிலுமே, சட்ட விரோத மூலதனம் (உசடிலே உயயீவையடளைஅ) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் விரு திட்டங்களையுமே மாயாவதி அர சாங்கம் ஒரேயொரு கம்பெனியிடம்தான் ஒப்படைத்திருக்கிறது. யமுனா எக்ஸ் பிரஸ் பாதையைப் பொறுத்தவரை, இந்தக் கம்பெனியானது அடுத்த 35 ஆண்டுகளுக்கு சுங்கம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய அளவில் நகரக் குடியிருப்புகள் கட்டுவதற்கும், விளை யாட்டு நகரம் அமைப்பதற்கும் நிலங்கள் இக்கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட் டிருக்கின்றன. 


விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரித்து, பெரும் வர்த்தகச் சூதாடிக ளிடமும், ரியல் எஸ்டேட் முதலை களிடமும் ஒப்படைத்திடும் இந்தச் செயல் பட்டவர்த்தனமான பகற்கொள் ளையாகும். இவ்வாறு கையகப்படுத் தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு விவசாயிகளுக்குக் கிடைப்பதும், அவர்கள் உரிய முறையில் மீளக் குடிய மர்த்தப்படுவதும், அவர்களின் மறுவாழ் வுக்கு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்வதும் மட்டுமல்ல, அவர்களின் நிலங்கள் கடைசியாக விற்கப்படுவதன் மூலம் கிடைத்திடும் லாபத்திலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டியதும் அவ சியமாகும். 


ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமானது இதுநாள்வரை நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கான திருத்தச் சட்டமுன் வடிவையும்,(டுயனே ஹஉளூரளைவைiடிn ஹஉவ ஹஅநனேஅநவே க்ஷடைட) மறுவாழ்வு மற்றும் மீளக்குடியமர்வுச் சட்டமுன்வடிவையும் (சுநாயbடைவையவiடிn யனே சுநளநவவடநஅநவே க்ஷடைட) நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் தவறிவிட்டது. இது உடனடியாக செய்யப்பட வேண்டும். ஆனால் அதுமட்டும் கார்ப்பரேட் நிறு வனங்கள் அடித்திடும் நிலப்பறிக் கொள் ளையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்த்துவிடாது. மாயாவதி அரசாங்கம் பின்பற்றும் இதே கொள்கையைத்தான் இடதுசாரி அல்லாத வேறு பல மாநில அரசாங்கங்களும் பல்வேறு படிநிலை களில் செயல்படுத்திக் கொண்டிருக்கின் றன. விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, மாநில அரசாங்கங்கள் அவற்றை ரியல் எஸ் டேட் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கும் நடைமுறைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.

இன்றைய கார்ட்டூன்