திரிபோலியில் ஓர் அட்டூழியம்

மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது.
மேற்கத்திய அரசாங்கங்களின் தலை வர்களுக்கும், நேட்டோவுக்கும் லிபியா மீதான தங்கள் ராணுவத் தலையீட்டிற்கான உண்மையான நோக்கத்தைச் சொல்வ தற்குக் கொஞ்சமும் தைரியம் கிடையாது. 1973ஆம் ஆண்டு ஐ.நா.பாதுகாப்பு கவுன் சில் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பது போல “குடிமக்களைப் பாதுகாப்பதற் காக” அது நடைபெறவில்லை. மாறாக ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்துள் ளனர். இவ்வாறு கிட்டத்தட்ட இரு மாதங்களுக் கும் மேல் வான் வழியே தாக்குதலைத் தொடுத்த பின்னரும், அங்குள்ள கலகக் காரர்களுக்கு ஆதரவு அளித்தபோதிலும், லிபியாவில் இன்னமும் இக்கட்டான நிலையே நீடிக்கிறது. நேட்டோ கூட்டணி நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு முர ணாக, லிபிய ஆட்சி நிலை குலையவில் லை. எனவே அந்நாட்டின் தலைவரை எப்படியாவது படுகொலை செய்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று அவர் களால் கருதப்படுகிறது.

மூன்று குழந்தைகள் உட்பட நான்கு அப்பாவி உயிர்களைக் கொன்று குவித் துள்ளது குறித்து சிறிதும் வருத்தமோ அல்லது மன உளைச்சலோ மேற்கத்திய நாடுகளின் தலைவர்களிடம் இல்லை. உண்மையில், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், “குறிப்பிட்ட சில தனிநபர் களைத் தாக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு தாக்குதல் தொடுக்கப் பட்டது” என்று கூறி அதனை நியாயப் படுத்தி இருக்கிறார். 

இளம் குழந்தைகள் மீது நேட்டோ வினால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த அட்டூழியத்தை அடுத்து, அடுத்த நாள் இரவு ஒசாமா பின்லேடன் கொல்லப் பட்ட சம்பவம் நடைபெற்றது. பெரும் வர்த் தக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச ஊடகங்கள், இந்தக் கிரி மினல் நடவடிக்கையை கண்டுகொள் ளாமல் விடுவதற்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, பின்லேடன் கொல்லப்பட்டதன் மீது மக்களின் கவனத்தைத் திசை திருப்பியது. ஆனால், இது லிபியாவில் “மனிதாபிமானத் தலை யீடு” என்று நியாயப்படுத்துபவர்களால் மேற்கொள்ளப்படும் கிரிமினல் நட வடிக்கைகளின் வெங்கொடுமையையும் அராஜகத்தையும் தணித்துவிடப் போவ தில்லை. கடாபியின் ஆட்சி எப்படி யெல்லாம் தன் சொந்த மக்களைக் கொன்று கொண்டிருக் கிறது என்ற கடுந் தாக்குதலுடன் ஊடகங்கள் “மனிதாபி மானத்திற்காக” தலையிடு கிறோம் என்கிற தங்களுடைய பிரச்சாரத் தைத் தொடங்கின. அங்கு ஒரு பனிப் போர் நடைபெறுகிறது என்கிற உண்மை யையும், அதில் மேற்கத்திய ஆட்சியாளர் கள் கலகக்காரர்களை ஆதரிக்கிறார்கள் என்பதையும் அவை சவுகரியமாகக் கண்டுகொள்ளவில்லை. பனிப் போரில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், நேட்டோவின் தலையீட்டின் காரணமாக அப்பனிப்போரானது மேலும் நீட்டிக் கப்பட்டு, மிகுந்த உயிரிழப்புகளை ஏற் படுத்திக் கொண்டிருக்கிறது.

மக்கள் எழுச்சிக் காலத்தில், எகிப் தில் காவல்துறையினராலும் பாதுகாப்புப் படையினராலும் 846 பேர் கொல்லப்பட் டார்கள் என்ற உண்மையிலிருந்து, இவர் கள் ராணுவத் தாக்குதலுக்காக அளித்தி டும் அற்பத்தனமான காரணங்களை அறிந்து கொள்ள முடியும். லிபியாவில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவதற் காக, பாதுகாப்பு கவுன்சில் அனுமதி யைப் பெறத் தீர்மானித்தபோது, இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. லிபியா வில் தலையீட்டிற்குப் பிறகும், எப்படி பஹ்ரைன் ஆட்சியாளர்கள், பஹ்ரை னில் நடைபெற்ற அமைதி வழியிலான கிளர்ச்சியை சவுதி அரேபியாவின் உதவி யுடன் நசுக்கினர் என்பதை நாம் பார்த் தோம். ஏமனில் நடைபெற்ற கிளர்ச்சி இயக்கத்தில் நூற்றுக்கணக்கானவர் கள் மடிந்தார்கள். இரு சம்பவங்களிலும் அமெ ரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ, தாங்கள் தலையிடுவது சரியல்ல என்று நினைத்தன. சிரியாவைப் பொறுத்தவரை, அங்கு நடை பெறும் கிளர்ச்சிகள் மேலும் உக்கிரமடைந்து தாங்கள் தலையிடு வதற்கான வாய்ப்பினை நல்கிடும் என மேற்கத்திய நாடுகள் நம்பின. லிபியா நாட்டின் மீதான தலையீடு, லிபியா மக் களின் விதியுடன் எவ்விதத்திலும் சம்பந் தப்பட்டதில்லை. அரபு நாடுகளில் அதிக ரித்து வரும் மக்கள் கிளர்ச்சிகளைத் தடுத்து நிறுத்திடவும், தங்கள் நலன் களைக் கொண்டு செல்லவும்தான் மேற் கத்திய நாடுகள் இவ்வாறு நடந்துகொள் கின்றன என்பதே இதன் பொருளாகும்.

ஐசிசி எனப்படும் சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தின் தலைவர் (யீசடிளநஉரவடிச டிக வாந ஐவேநசயேவiடியேட ஊசiஅiயேட ஊடிரசவ (ஐஊஊ)), போர்க்குற்றங்க ளுக்காக மூன்று மூத்த லிபிய அதிகாரிகள் மீது குற்றஞ் சாட்டி, அவர்கள் மீது புலன் விசார ணை மேற்கொள்ள இருப்பதாகத் தீர்மானித்தி ருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் இலக் கணப்படி, கடாபியின் மகனையும் பேரக் குழந்தைகளையும் கொன்றது ஒரு போர்க் குற்றமாகக் கருதப்பட வேண்டும். மக்கள் அதிகமாகப் பணிபுரியும் அரசாங்கக் கட்டிடங்களையும் அலுவலகங்களையும் விமானத்திலிருந்து குண்டுகளை வீசித் தகர்த்ததும் இந்த குற்றத்தின் கீழ்தான் வரும். ஆனாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றமானது மேற்கத்திய நாடுக ளுக்கு விரோதமாக உள்ள “போர்க் குற்ற வாளிகளுக்கு” எதிராக மட்டுமே செயல் படுகிறது. யுகோஸ்லேவியாவைச் சேர்ந்த ஸ்லோபோதான் மிலோசேவிக் என்ப வர்தான் முதல் பலியாள். இதில் குறிப் பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஐசிசி-யின் கட் டளையை அமெரிக்கா சரி என்று ஒப்புதல் அளித்து உறுதி செய்திடவில்லை. ஆயினும் அமெரிக்க நலன்களுடன் ஒத்துப்போகாதவர் களுக்கு எதிராக வலுவானதொரு கருவி யாக இது பயன்படுத்தப்படுகிறது. கடாபி கொல்லப் பட வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும் மற்றும் ஐசிசி முன்பாக, இனப்படுகொலைகளையும் போர்க்குற்றங்களையும் புரிந்தவர் என்று ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும். 

அமெரிக்கா, ஐசிசி-யையோ அல்லது வேறெந்த அமைப்பையுமோ தங்கள் விவகாரங்களில் தலையிட அனுமதிக் காது. அதன் ராணுவத்தினர், அவர்கள் புரிந்திடும் அனைத்துவிதமான குற்றச் செயல்களுக்கும் எதிராக வழக்குத் தொடுக்கப்படாமல் விலக்களிக்கப் பட்டவர்கள் ஆவர். அது இராக் அல்லது ஆப்கானிஸ்தானத்தில் புரிந்த போர்க் குற்றங்களாக இருந்தாலும் சரி அல்லது வேறெதுவாக இருந்தாலும் சரி. அமை திக்கான நோபல் பரிசு பெற்ற அதிபர் ஒபாமா ஆட்சியின் கீழ், எந்த நாட்டின் இறையாண்மை மீதும் தாக்குதல் தொடுக்கவும் அல்லது எந்தத் தலை வரையும் படுகொலை செய்யவும் அமெ ரிக்காவிற்கு உரிமை உண்டு. சர்வதேசச் சட்டங்களை மீறி ஒசாமா பின்லேட னைக் கொன்றது இதன் ஒரு பகுதியே. 

கடாபியின் குடும்பத்திற்குச் சொந்த மான வீட்டின் மீது விமானங்கள் ஏவுக ணைத் தாக்குதலைத் தொடுத்தது யாருக் காக? அவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக இருந்தார்களா அல்லது பிரிட்டிஷாரா? கடாபி மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் குறிவைத்திட அனுமதி கொடுத்தது யார்? சர்கோஸி, கேமரூன் மற்றும் ஒபாமா ஆகியோரில் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் யார்? இவை எது குறித்தும் மனித உரிமைகளின் காவலர்கள் என் றும், உலகில் சுதந்திரத்தைத் தாங்கள் தான் அக்கறையுடன் கண்காணித்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் என் றும் கூறிக்கொள்ளும் மேற்கத்திய ஆட்சி யாளர்கள் கவலைப்பட மாட்டார்கள். 

ஒபாமா நிர்வாகம் மற்ற நாடுகளின் இறையாண்மையை மிதித்துத் துவைப் பதையும், தன்னுடைய நலன்களை முன் கொண்டு செல்வதற்காக ராணுவத்தைப் பயன்படுத்து வதையும் தொடந்து செய்து கொண்டிருக்கிறது. இதற்காகத்தான் அது லிபிய ஆட்சியை அரக்கத்தனமான ஆட்சி என்று வர்ணிக்கும் வழக்கமான உத்தியைப் பயன்படுத்துகிறது. ஐ.நா. அவையில் அமெரிக்கப் பிரதிநிதியாக வுள்ள சூசன் ரைஸ், “லிபியாவின் ராணு வத்தினருக்கு, அவர்கள் கூட்டாக வன் புணர்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என் பதற்காக வயாகரா விநியோகிக்கப்படு கிறது” என்கிற ஓர் அபத்தமான குற்றச் சாட்டை லிபிய ராணுவத்தினர் மீது சுமத்தி இருக்கிறார். 

நேட்டோவின் கூற்றுப்படி, மார்ச் 31க்கும் மே 7க்கும் இடையே மொத்தம் 5,510 வான்வழித் தாக்குதல்கள் நடை பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கையில் மார்ச் 19க்கும் 30க்கும் இடையே நடை பெற்ற தாக்குதல்கள் கணக் கில் சேராது. உலகத்தின் கண்களுக்கு முன்னாலேயே லிபியா இவ்வாறு வேட்டையாடப் பட்டு வருகிறது. 2010 ஐ.நா.மனிதவள வளர்ச்சி அட்டவணையின்படி, ஆப்பிரிக்காவில் முதல் நாடாக லிபியா விளங்கி வந்தது. நேட்டோ, லிபியாவை இவ்வாறு துண்டு துண்டாக்கி சின்னாபின்னமாக்குவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதன் நோக்கம் எல்லாம், லிபியாவின் எண்ணெய் வளங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதேயாகும். 

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தன்னு டைய 1973 தீர்மானத்தின் மூலமாக மேற் கத்தியக் கொள்ளையர்களுக்கு அனுமதி அளித்திருக்கும் மடத்தனத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், இத்தீர்மா னத்திற்கு ஆதரவு அளிப்பதிலி ருந்து ஒதுங்கிக் கொண்ட நாடுகள், இத்தகைய சட்டவிரோதமான மற்றும் அநீதியான யுத் தத்தினைத் தடுத்து நிறுத்திட அறை கூவல் விடுக்கக்கூடிய அளவிற்கு வல்லமையைப் பெற்றிருக்கின்றனவா?
-பிரகாஷ் காரத்

இன்றைய கார்ட்டூன்