கோடீஸ்வர முதலமைச்சர்கள்

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய் யும்போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்து மதிப்பு குறித்து உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என 2003-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படை யில் பெறப்பட்ட தகவல்களே முதல மைச்சர்களின் சொத்து குறித்து கிடைத் துள்ள தகவல்கள் ஆகும். ஆனால் இந்த தகவல்களே குறைத்து கொடுக்கப்பட் டுள்ளன என்றும் இது குறித்து வரு மானவரித்துறை ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரு கருத்து உள்ளது. ஏனெனில் தற்போது மேற்கண்ட முதலமைச்சர்கள் கொடுத் துள்ள தகவல்களில் பெரும்பான்மை யோருக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் அவர்களின் வங்கி இருப்புத் தொகை சொற்பத் தொகையாகவும் காட் டப்பட்டுள்ளது. 

அண்மையில், ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கோடீஸ்வர முதலமைச் சர்களின் பட்டியலில் முதல் இடத்தை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மாயாவதி பிடித்துள்ளார். பள்ளி ஆசிரி யையாக இருந்த மாயாவதி இன்று 2010ல் ரூ.87 கோடிக்கு அதிபதியாக உயர்ந்துள் ளார். 2007-ல் இவரது சொத்து மதிப்பு ரூ.52 கோடி என இவர் கணக்கு காட்டி யுள்ளார். இந்த மூன்று ஆண்டு காலத்தில் 67 விழுக்காடு இவரது சொத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2007-2008 வரி விதிப்பு ஆண்டில் இவர் ரூ.26 கோடி வரி செலுத்தி இந்தியாவில் அதிக மான வரி செலுத்துவோர் பட்டியலில் முதல் இருபது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளவர் தமிழ்நாட்டின் முதலமைச் சர் கருணாநிதியாவார். இவரின் சொத் தின் மதிப்பு ரூ.44 கோடி ஆகும். இவரது துணைவியார் தயாளம்மாளுக்கு ரூ.17.34 கோடியும் மற்றொரு துணைவியாருக்கு ரூ.18.68 கோடியும் உள்ளது என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் இவரது மகன்கள், பேரன்கள் சொத்து மதிப்பு ஏதும் சேராது. 2010-ல் சன் டி.வியில் இருந்து தனக்கு ரூ.100 கோடி பங்கு தொகை கிடைத்ததாகவும், இதற்கு ரூ.22.50 கோடி வருமானவரி செலுத்தி யிருப்பதாகவும், இதில் தான் 10 கோடி ரூபாய் வைத்துக்கொண்டு, மீதியை தனது குழந்தைகளுக்கும் அறக்கட் டளை நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டதாகக் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இப்பட்டியலில் மூன்றாவது இடத் தைப் பிடித்துள்ளவர், காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஆவார். இவர் 2009ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின்படி இவருக்கு ரூ.23 கோடி சொத்து உள்ளது. 

இவருக்கு அடுத்ததாக, பிஜேபியை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் எடியூ ரப்பாவிற்கு 2008-ம் ஆண்டில் அவர் காட்டிய சொத்து மதிப்பு ரூ.2 கோடியாக இருந்தாலும், தற்போது அவரின் சொத்து இந்த வருடம் ரூ.11 கோடியாக உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தனது தொகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றும் உள்ளது.

சிரோன் மணி அகாலிதள தலை வரும், பஞ்சாப் முதலமைச்சருமான பிர காஷ் சிங் பாதலுக்கு உள்ள சொத்தின் மதிப்பு ரூ.9.20 கோடியாகும். (2007) ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் பஞ் சாப் முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று வந்ததற்குமட்டும் ரூ.33 கோடி செலவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கர்கோன் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள டிரிடென்ட் ‘ஹில்டன் என்ற ஹோட்டலில் இவ ருக்கு 85 விழுக்காடு பங்கு உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மற்ற கோடீஸ்வரர்கள் பட்டியல் தொடர்கிறது

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.8.11கோடி 

ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ. 7.89 கோடி, நாகலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ரூ.7.23 கோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மகாராஷ்டிர முதல்வர் பிரித்வி சவாண் ரூ.6.81 கோடியும், பாண்டிச்சேரி முதலமைச்சர் வி.வைத் தியலிங்கத்திற்கு ரூ.5.70 கோடியும், அசாம் முதலமைச்சருக்கு ரூ.4.94 கோடியும், சிக்கிம் முதலமைச்சர் பாவன் சாம்லிங்கிற்கு ரூ.3.82 கோடியும், ஹரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹமூடாவிற்கு ரூ.3.74 கோடியும், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ரூ.3.49 கோடியும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவிற்கு ரூ.3.42 கோடியும், கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் திற்கு ரூ.3.23 கோடியும், மிசோராம் முதல் வர் பு லல்தன் வாலாவிற்கு ரூ.2.29 கோடியும்,

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ரூ.1.5 கோடியும், ஜார்கண்ட் முதல்வர் அர்ஜூன் முன்டாவிற்கு ரூ.1.33 கோடியும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு ரூ.1.23 கோடியும், தில்லி முதலமைச்சர் ஷீலாதீட்ஷித்திற்கு ரூ.1.18 கோடியும், இமாச்சலப் பிரதேச முதல்வர் பி.கே.துமாலுக்கு ரூ.1.18 கோடியும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டிற்கு ரூ.1.04 கோடியும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு ரூ.1 கோடியும் சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

மற்ற முதல்வர்களின்

சொத்து மதிப்பு

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் புத்ததேவின் சொத்து மதிப்பு ரூ.46.20 இலட்சம், கேரள முதல்வர், அச்சுதானந்தன் சொத்து மதிப்பு ரூ.16.09 லட்சம், திரிபுரா முதல மைச்சர் மாணிக் சர்க்கார் சொத்து மதிப்பு ரூ.8.11 லட்சம் எனவும் தகவல்கள் வெளி யிடப்பட்டுள்ளன. பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் இரண்டு இடம் கம்யூ னிஸ்டு முதலமைச்சர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகாலம் மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் வர் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இங்குள்ள அரசி யல்வாதிகளுக்கு திகைப்பூட்டும் செய்தியாக இருக்கும்.

உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணை யமும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் தங்கள் முதலமைச் சர்கள் குறித்து அறிந்துகொள்ள ஓரள விற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் ஏழைப்பங்காளர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சிக் கும் தலைவர்களின் முழுமையான சொரூபம் இன்னும் வெளிப்படவில்லை என்பதே உண்மையாகும். வருமானவரி ஏய்ப்பவர்கள் பட்டியலிலும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டிய லிலும், கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டிய லிலும் உள்ளவர்களின் பெயர்கள் வெளி யிடப்பட்டால், இவற்றிலும் இந்நாள் முன் னாள் முதலமைச்சர்களின் பல பெயர் கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐய மில்லை.

இன்றைய கார்ட்டூன்