திரிணாமுல் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி

திரிணாமுல் காங்கிரஸ் நல்லாட்சி தருவோம் என வாய்கிழிய முழங்குகிறது. ஆனால் அதன் வேட்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அது தரப்போவது நல்லாட்சியா அல்லது பேயாட்சியா என சந்தேகம் எழும். இதோ சில வேட்பாளர்களின் பின்னணி:

பிரத்யா பாசு

இவர் டம்டம் தொகுதி யின் திரிணாமுல் வேட்பா ளர். “சூலை 17” எனும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி னார். இது எனது சொந்த படைப்பு எனவும் கூறினார். ஆனால் உண்மை என்ன?

வங்காளத்தின் தலை சிறந்த நாடகக்கலைஞரான உத்பல்தத்தின் ‘’மக்களின் உரிமைக்காக’’ எனும் நாட கத்திலிருந்து திருடியே இவர் தனது சொந்த கற் பனை எனக் கூறிக் கொண் டார் என ஆனந்தபசார் பத் திரிகை செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

இவர் கொல்கத்தா நக ரின் ஒரு அரசு கல்லூரியில் உதவி விரிவுரையாளர். தில்லி பல்கலைக்கழகத் தில் ஒரு ஆராய்ச்சி படிப்பிற் காக சேர்ந்தார். தில்லி பல் கலைக்கழகத்தின் விதிகள் படி அவர் அங்கேயே தங்கி படிக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாதது மட்டுமல்ல; இரயில்வே யிலிருந்து ஊதியம் பெற்றார். இதற்காக கொல்கத்தா பல் கலைக்கழகம் இவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இத்தகைய பின்னணி கொண்டவர் தான் டம்டம் தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர்.

ஜாவேத்கான்

கஷ்பா தொகுதியின் வேட்பாளரான இவர் மம்தா பானர்ஜியாலேயே “மஃபியா கும்பல் தலைவன்” என வர்ணிக்கப்பட்டவர். ரிஸ் வானுர் ரஹ்மான் எனும் முஸ்லிம் இளைஞர் தற் கொலை செய்து கொண்டார். இது மேற்குவங்கத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பி யது. ரிஸ்வானுர் தன்னை எவரெல்லாம் தற்கொ லைக்கு தூண்டினார்கள் எனும் ஒரு பட்டியலை எழு தி வைத்து மரணம் அடைந் தார். அப்பட்டியலில் உள்ள பெயர்களில் ஒன்றுதான் ஜா வேத்கான். இவரது பெயரை ஏன் குற்றப்பத்திரிகையில் இணைக் கவில்லை என சிபிஐயிடம் நீதிமன்றம் கடிந் து கொண் டது.

அந்த ஜாவேத்கான் தான் கஷ்பா தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர்.

திலிப் மொண்டல் - ஜெயந்தா நஷ்கார்

திலிப் மொண்டல் பிஷ்னுபூர் தொகுதி வேட் பாளர். குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் இவர் மீது பாலியல் பலாத்காரம் செய் ததாக வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது.

ஜெயந்தா நஷ்கார், கொஷாபா தொகுதியின் திரிணாமுல் வேட்பாளர். இந்திய குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இவர் மீது கொலை வழக்கு உள்ளது.

பார்த்தா டே

இவர் திரிணாமுல் காங் கிரசின் பிரச்சார குறுந்த கடை வெளியிடும் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டவர். “கிரீன் கான் கிரீடெக்ஸ்” எனும் நிறு வனத்தின் இயக்குநர். இவர் கொல்கத்தா பெரு நகராட் சிக்காக கட்டிய கட்டிடத் தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது. எனவே அந்த உள்ளாட்சி அமைப்பு, கட்டிட வேலையை நிறுத் திட உத்தரவு போட்டுவிட் டது. மேலும் இந்த நபர் கொல்கத்தாவில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டிடங் களை பெருநகர குழுமம் சமீபத்தில் இடித்து தள்ளி யது. இந்த குற்றங்களுக்காக இவர் மீது காவல் துறை யிடம் பெரு நகர் குழுமம் இந்த ஆண்டு பிப்ரவரியில் புகார் செய்தது. அப்பொழு திருந்தே பார்த்தா டே தலை மறைவாக உள்ளார்.

கொல்கத்தா பெருநகர குழுமம் திரிணாமுல் வசம் உள்ளது என்பது இதில் குறிப்பிடத்தக்கது. காவல்துறையால் தேடப் பட்டு வரும் ஒரு நபர் திரி ணாமுல் காங்கிரசின் பிரச் சார குறுந்தகடுச் செலவை ஏன் ஏற்றுக் கொள்ள வேண் டும்? திரிணாமுல் அதற்கு ஏன் இசைவு தெரிவிக்க வேண்டும்?

இப்படி திரிணாமுல் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி நீண்ட நெடியது. இவர்கள் எப்படி நல்லாட்சி தர முடியும்? இவர்கள் வென்றால் பேயாட்சி தான் உருவாக்குவர் என்பதை மேற்குவங்க மக்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

இன்றைய கார்ட்டூன்