கிராமங்களை கைகழுவும் ஆட்சியாளர்கள்

இந்தியா வாழ்வது கிராமங்களில் என் றார் மகாத்மா காந்தி. ஆனால் இன்றைய தினம் கிராமங்கள் எந்த நிலையில் இருக்கின் றன என்பதைப் பார்த்தால், இந்தியா வாழ் கிறதா அல்லது சாகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் வேலைவாய்ப்பில் 57 விழுக்கா டும், கிராமப்புற வேலைவாய்ப்பில் 73 விழுக் காடும் அளித்து வருவது விவசாயத் துறை தான். ஆனால் அது இன்றைக்கு எந்த நிலை யில் இருக்கிறது? ஒரு சில குடும்பங்களைத் தவிர பெரும்பான்மையான விவசாயிகள் துண்டு துக்காணி நிலங்களுக்குச் சொந்தக் காரர்களாக மாறிவிட்டனர். இதன் விளைவாக பெரும்பகுதி விவசாயக் குடும்பங்கள் - சுமார் 60 விழுக்காடு குடும்பங்கள் - தங்களுடைய இரண்டு வேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்குக் காரணம் என்ன என்பது பற்றி அரசாங்கம் ஏராளமான ஆய்வுகளை நடத்தி இருக்கிறது. ஒவ்வொரு வரவு-செலவுத் திட்டத்தின் போதும், குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய வரவு-செலவுத் திட்டங்களில், விவசாயி களைப் பற்றி கண்ணீர் வடியப் பேசுவதும் அவர்கள் பிரச்சனையைத் தீர்க்காமல் விட மாட்டோம் என்று சபதம் ஏற்பதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இன்றைய தினம் விவசாயத்தில் ஈடுபடு வோர் ஒரு நாளைக்கு 50 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது மணிக்கு 2 பேர். இவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்குக் காரணம், அவர்கள் கந்துவட்டிக்காரர்களிடமும், வங்கிகளிடமும் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடி யாததுதான். இதுதான் பிரதான காரணம் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி கடனாளியானதற்கு என்ன காரணம்? விவசாயம், விவசாயிகளை வாழ வைக்கக் கூடியதாக இல்லை. வேறு வகையில் சொன் னால், வேளாண் இடுபொருள்களின் விலை கள் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. உற் பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு உரிய விலை இல்லை. ஆகவே, செலவிட்ட தொகையைப் பெற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடைய விளை வாக இன்று விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 42 விழுக்காட்டினர் ‘விவசாயத்தை விட்டே வெளியேறப் போகிறோம்’ என்று ஆய்வு களின்போது தெரிவித்திருக்கிறார்கள். அவ் வாறு விவசாயத்தைவிட்டு வெளியேறிக் கொண்டும் இருக்கிறார்கள்.

இது விவசாயிகளின் நிலை என்றால், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம். அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைக்கு கனம் அதி கம் என்பது போல அவர்களுடைய வாழ்க்கை அனைத்துச் சங்கடங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பட்டினிச் சாவுகளில் கணிசமான பகுதி விவசாயத் தொழிலாளர் களே என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கின்ற உண்மைகளாகும்.

இவற்றிற்கான காரணங்கள் என்ன? அறு வடைக் காலங்களில் அவர்களுக்கு ஓரள வுக்கு வேலை கிடைக்கிறது. ஆண்டின் கணிசமான பிற பகுதி நாட்களில் அவர் களுக்கு வேலை எதுவும் இல்லை. வேலைக் காக அவர்கள் நகர்ப்புறத்தை நோக்கிப் புலம் பெயர்ந்து செல்கிறார்கள். நகர்ப்புறத்தில் ஏற் கனவே இருக்கக்கூடிய திண்டாட்டங்க ளோடு இதுவும் சேர்ந்து, மேலும் பெரிய அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டமாக மாறிக் கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.

கிராமப்புறத்தில் வாழ்கிற விவசாயிகள் குறித்து இன்றைய ஆட்சியாளர்கள் எவ்விதம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் வரவு-செலவுத் திட்டத்தில் ஒவ் வோராண்டும் விவசாயத்திற்காக, விவசாய வளர்ச்சிக்காக ஒதுக்கிடும் தொகையை ஆராய்ந்தால் அவை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருவதைத் தெரிந்து கொள்ள முடியும். கடந்த மூன்றாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பினை ஆய்வு செய்தோமானால், 2008-09ஆம் ஆண்டு அது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 15.7 விழுக்காடாகவும், 2009-10இல் அது 16.6 விழுக்காடாகவும் இருந்தது, இந்த நிதி ஆண்டில் அது 14.2 விழுக்காடாகக் குறைந்துவிட்டதைக் காணும் போது இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத் தில் வசதி படைத்தவர்களுக்கு விதிக்கப்ப டும் நேரடி வரியில் (னசைநஉவ வயஒ) 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வரி விலக்கு அளித்து விட்டு, சாமானிய மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரி (iனேசைநஉவ வயஒ) யில் 11 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டிருக் கிறது. விவசாயத்துறையில் உரங்களுக்கு அளித்து வந்த மானியத்தில் 9 விழுக்காடும், உணவுக்கான மானியத்தில் 9.4 விழுக்காடும், எண்ணெய்க்கு அளித்து வந்த மானியத்தில் 38.5 விழுக்காடும், மொத்தத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வெட்டப்பட்டுள்ளது.

இப்படி விவசாயத்திற்கான முக்கியத்து வம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே இருக்கும்போது, இன்னொரு பக்கம் பற்பலப் பெயர்களில் புதிது புதிதாகத் திட்டங்கள் அறி வித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, தேர்தல் வந்தால் திட்டங்கள் அறிவிப்புக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் உண்மை நிலை என்ன?

மத்திய அரசு மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கொண்டு வந்த பிறகு, ஏற்கனவே அமலில் இருந்த திட் டங்களை ரத்து செய்வது என்ற ஏற்பாடும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த பல திட்டங்களை அழித்து விட்டு, அதற்கு ஒதுக்கப்படும் தொகைகளை யும் ரத்து செய்துவிட்டு அல்லது மிகவும் குறைத்துவிட்டு, இந்தத் திட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தையும் நாடு முழுவதும் முழுமையாக அமலாக்க வேண்டும் என்றால் 63 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் வெறும் 40 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கியிருக் கிறார். இது கடந்த ஆண்டு அறிவித்ததை விட நூறு கோடி ரூபாய் குறைவாகும். உதாரணமாக, தேசிய தொற்றுநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை 23 விழுக் காடும், தடுப்பூசித் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை 17 விழுக்காடும், தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை 11 விழுக் காடும், பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்தி டும் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த தொகை யை 4 விழுக்காடும் குறைத்துவிட்டு, இவற் றைப் புதிய சாதனைகள் மாதிரி காட்டப்படுகிறது.

முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் போது மொத்தத் திட்டச் செலவினத்தில் 22.5 விழுக்காடு நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது படிப்படியாகக் குறைந்து 8வது ஐந்தாண்டுத் திட்டக்காலத் தின்போது 6.7 விழுக்காடாகக் குறைந்துவிட் டது. இதனால் 1950களில் துவங்கப்பட்ட பல திட்டங்கள் இன்னமும் முடிக்கப்படாமல் நிலுவையிலேயே நிற்கின்றன. நாடு முழுவ தும் மொத்தம் 292 பெரிய அளவிலான நீர்ப்பா சனத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. 8வது ஐந்தாண்டுத் திட்டக்கால முடிவில் 130 நீர்ப் பாசனத் திட்டங்கள் மட்டுமே முடிக்கப்பட் டன. ஆரம்பத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்டங்கள் முடிக்கப்படாததன் காரணமாக, 9ஆவது ஐந் தாண்டுத் திட்டக் காலத்தில் அவற்றில் முடிக்கப்படாத 162 பெரிய திட்டங்களுக்கு மேலும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 133 கோடி ரூபாய் 1996-97ஆம் ஆண்டின்போது தேவைப் பட்டது. அடுத்து 11-வது திட்டக்காலத்தில் இவற்றை முழுமையாக முடித்திட மேலும் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப் பட்டது. ஆட்சியாளர்களின் நவீன தாராள மயக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் இந்தக் காலத்தில் இதே விகிதத்தில் திட்டச் செலவினங்களுக்குத் தொகைகள் ஒதுக்கப் படுமானால் இத்திட்டங்கள் 2050-ஆம் ஆண்டில்கூட முடிவடையாது.

விவசாயத்தின் உயிர்மூச்சான நீர்ப்பாச னம் பற்றிய பார்வையே இது என்றால், விவ சாயத்தின் இதர முக்கிய பிரச்சனைகளான விதை, உரம், பூச்சி மருந்து - இவை அனைத் தும் அந்நிய நாட்டுக் கம்பெனிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு தன் பொறுப்பை கைகழுவி விட்டது. இதனுடைய விளைவு, பூச்சி மருந்துகள் பூச்சிகளைக் கொல்வதற்குப் பதிலாக, மனிதர் களைக் கொல்கின்றன என்ற அனுபவம் பல கட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் எண்டோசல்பான் பாதிப்பை நாடு அனுபவித் துக் கொண்டிருக்கிறது.

விவசாயிகளுக்குக் கடன்கள், கடன் நிவா ரணங்கள் போன்றவைகளும் பெரும் பகுதி விவசாயிகளுக்குச் சென்றடையவில்லை. விவசாயத்தின் பெயரைச் சொல்லிக் கொள் ளையடிக்கும் ஒரு சில நிறுவனங்களுக்கும் கிராமப்புறத்தில் வசதிபடைத்த ஒரு சில ருக்கு மட்டுமே அவை சென்றடைந்திருக் கின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை என்று கடந்த பதினைந்து ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள கொள்கைகள் நிலை மையை மேலும் மோசமானதாக மாற்றிவிட் டது. சமீபத்தில் தேர்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், விலைவாசி உயர்வுக்கு அரசாங்கம் பொறுப்பு அல்ல, விலைவாசியைத் தீர்மானிப்பது அரசாங்கங் கள் அல்ல, சந்தைகள்தான் என்று பகிரங்க மாகவே அறிவித்திருப்பது, இந்தக் கொள்கை களின் வெளிப்பாடேயாகும். வேறு வகையில் சொன்னால், இன்றைய கிராமப்புறத்தை, கிரா மப்புறத்தின் தலையீட்டையே அரசாங்கங்கள் நிறுத்திக் கொண்டு, கை கழுவி விட்டு, அவற் றை பன்னாட்டு நிறுவனங்களிடமும், தனி யார் நிறுவனங்களிடமும் ஒப்படைத்து விட்டன.

இந்தக் கொள்கைகள் மாறாமல் இந்தியா மாறாது. இந்தியக் கிராமப்புறங்கள் வாழாது என்பது அனுபவம் காட்டும் உண்மை. ஆக இந்தக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும், இந்தக் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகள் அரசியல் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்பது நாட்டின் தேவை. இந்தத் திசை வழியில் முன்னேற அனைவரும் உறுதி ஏற்போம்.

இன்றைய கார்ட்டூன்