இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்? ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது.சாதி எதிர்ப்பு போராட்டமும் காலனியாதிக்கப்போராட்டமும் தொடர்புடையவையே!

இந்தியாவில் ஜனநாயகப் புரட்சி என்பது இந்த இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அளவிலே, இதுவரை வரலாறு காணாத வகை யிலே அலை அலையாக எழுந்த எழுச்சி யின் காரணமாக ஏற்பட்டதாகும். சுரண்டலுக் கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக பெரியா ரும், அம்பேத்கரும் நடத்திய சமூக இயக்கங் கள் மிகப் பெரிய அரசியல் போராட்டங்களாக பல்வேறு அவதார மாற்றங்களை இந்த கால கட்டத்தில் அடைந்துள்ளன. சாதி எதிர்ப்பு சமூகப் போராட்டங்களை நடத்திய தலைவர் கள் தங்களை இந்தியாவின் காலனி ஆதிக் கத்திற்கு எதிரான இயக்கங்களில் ஈடுபடுத் திக் கொள்ளவில்லை என்பதும், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்திய தலைவர்கள் இந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் போதுமான அளவிற்கு அனுதாபம் காட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் ஒடுக்கப் பட்ட மக்களிடையே இந்த இரண்டு இயக் கங்களிலும் அதிக ஆர்வமுள்ள பங்களிப்பு இருந்தது. அவர்கள் இந்த இரண்டு போராட் டங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடை யவை என்பதை மிகச் சரியாக புரிந்து கொண் டிருந்தனர். உண்மையில் காலனியாதிக்கத் திற்கு எதிரான போராட்டத்தின் வீச்சு என்பது போதுமான அளவு விரிவடையத் துவங்கியது என்பதே இப்படி அனைத்து விதமான குணாம்சங்களையும் உள்ளடக்கிய போராட் டமாக உருமாறிய பிறகுதான் என்பதும் மறுக்க முடியாது ; குறிப்பாக மேலே கூறப்பட்ட அனைத்து விதமான கட்டமைக்கப்பட்ட அசமத்துவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக் கும் முயற்சிகள் இணைக்கப்பட்ட பிறகுதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் கார ணமாக சுதந்திர இந்தியாவின் அரசியல மைப்புச் சட்டத்திலும் இதற்குரிய சரியான அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதும் நாம் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் ஏற்பட்ட இந்த எழுச்சியானது சோவியத் ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சியினால் தாக்கம் பெற்று, எளிதில் அழிக்க முடியாத அளவிற்கு வலிமை பெற்றது. இதன் காரணமாகவும், சோவியத் யூனியன் கட்டமைக்கப்பட்ட வீர காவியம் உருவாக்கிய தாக்கத்தின் காரணமாகவும், ஒரு எழுச்சி இயக்கம் தோன்றியது. இந்த எழுச்சி இயக்கத்தில் இருந்து பிரிக்க முடி யாத அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பல செயல்வீரர்கள் மிகவும் அதிகமாக உருவாகினர். அவர்கள் அனைவரும் இணைந்து இடதுசாரி அமைப்பினை உருவாக்கினர்.

ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

இந்த ஜனநாயகப் புரட்சியானது தொடர் ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டி யது அவசியமாகும். இல்லையென்றால், இதில் ஒரு தொய்வு அல்லது சறுக்கல் ஏற் படுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். புரட்சிகள் அசைவற்று நிற்பது இல்லை, நின்றும் போகாது. ஒன்று அவை தொடர்ந்து முன்னேறிச் செல்லும், அல்லது அவற்றிற்கு எதிரான எதிர்ப்புரட்சி சக்திகளால் நசுக்கப் பட்டுவிடும். இந்திய ஜனநாயகப் புரட்சி யானது இன்று நசுக்கப்படும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது. ஜனநாயகப் புரட்சிக்கு எதிராக எதிர்ப்புரட்சி பலமடைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பாட்டாளி வர்க்கத் திற்கெதிரான முதலாளித்துவ சக்திகளின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.

புராதன சமூக சக்திகள், மேலே குறிப் பிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட அசமத்துவ நிலைகளை பாதுகாப்பதிலும் உருக்கொடுப் பதிலும் முக்கிய பங்கு ஆற்றின என்பதும், அவை தீர்மானமாக சிதறடிக்கப்படும் விதத் தில் ஓங்கியடிக்கப்படவில்லை என்ற உண் மையும் நாம் அறிந்ததே. ஒடுக்கப்பட்ட மக்க ளுடைய பொருளாதார பலம் மற்றும் அதன் மூலம் பெறப்படும் சமூக பலம் என்பது, முக் கிய ஆதாரமான நிலத்தின் மீதான அவர்க ளுடைய உரிமையைப் பொறுத்தே அமையும். ஆனால், நிலத்தின் மீதான அவர்களுடைய உரிமையானது போதுமான அளவில் கொடுக் கப்படாமல் அவர்கள் நசுக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை நில உரிமை என்பது கிடைக்கப் பெற்றாலும், பழைய கட்டமைப்புகளை மாற்றுவது என்பது இன்னும் சாதிப்பதற்கரிய ஒரு இலக்காக உள்ளது என்பதோடு, அது சிறிது தாமதமாகத்தான் நிகழும் என்பதும் உண்மையே. ஆனால், இந்த நில உரிமைக் கான போராட்டம் என்பது நடைபெறாவிட் டால், ஜனநாயகப் புரட்சிக்கு எதிரான எதிர்ப் புரட்சி சக்திகளின் பலமானது தடையின்றி எந்தக் குறைவுமின்றி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். இருந்த போதும், முதலாளித்துவ சக்திகள் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தையும் மீறி தன்னுடைய தலைமையை தக்கவைத் துக் கொண்டுள்ளன. அதோடு மட்டுமல்லா மல் கூடவே, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் அரசாங்கக் கட்டுப்பாடு என்பது உத்திரவாதப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின் பற்றத் துவங்கியுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றத் துவங்கிய கால கட்டம் முதல் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு பல படிகள் ஏகாதிபத்தியம் முன்னேறிச் செல்லவும் வழிவகுத்துள்ளனர். இதன் காரணமாக மிகக் குறுகிய கால கட் டத்திலேயே இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம், பொருளாதார ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுள்ளது. மத்தியதர வர்க்கத்தின் ஆதரவு பெற்றுள்ள மிகச் சிறிய எண்ணிக்கை யிலான நிதி மற்றும் கார்ப்பரேட் முதலாளி களுக்கும், இந்த நாட்டில் மிகப்பெரும் எண் ணிக்கையிலுள்ள தொழிலாளர்கள், விவசாயி கள், சிறு உற்பத்தியாளர்கள், விவசாயக் கூலி கள், கை வினைஞர்கள் மற்றும் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள அத்தனை மக்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அகன்று போயுள்ளது. அவர்களுடைய வாழ்நிலை தாழ்த்தப்பட்டு வறுமையும் பசியும் பஞ்சமும் அதிகமாகிக் கொண்டே செல்வதை காண முடிகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தீவிரமடையும் சமூக இடைவெளியும்

இந்த இடைவெளியே, நாட்டிலுள்ள மிகப் பெரிய முதலாளித்துவ சக்திகள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் ஒன்று சேர்க்கவும் செய்கின்ற முயற்சியை தடுக்க முடியாததாக செய்துவிடுகிறது. அதே நேரம் இந்த முத லாளித்துவ சக்திகளால் வெகுகாலம் சுயாட்சி யுடன் இருக்க முடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம். தற்போது சர்வதேச நிதி மூலதனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண் டுள்ள ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்து ஆட்சி புரிய இவை முயன்று வருகின்றன. இது அடிப்படையிலேயே இந்திய ஜனநாயகத் திற்கு விரோதமானதாக மாறும். நம்முடைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டியமைக்கப்பட்டுள்ள ஜனநாயக அமைப் பிற்குள் இந்த இடைவெளியை புகுத்தும் முயற்சியானது, நமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளை தகர்ப்பதற்கு வழிவகுக்கும். அதாவது இந்தியாவில் மிக நீண்ட நாட்களாக நடைபெற்ற ஜனநாயகப் புரட்சிக்கு எதிரான எதிர்ப்புரட்சிக்கு வழிவகுக்கும்

இன்றைய கார்ட்டூன்