கடமையைத் தட்டிக் கழிக்கும் அரசுகள்

தினமும் அலைகடலில் உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்வதற் காக பயணம் செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலவாணியைப் பெற்றுத் தருபவர்கள் மீனவர்கள். மீனவர்களின் வாழ்க்கை யைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டிய ‘செம்மீன்’ என்ற மலையாளத் திரைப்படமும், ‘படகோட்டி’ திரைப்பட பாடலும் காலம் கடந் தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. 

இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்த பின்னர் தமிழக மீனவர்களின் கடல் வாழ்க்கை நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அன்றாடம் மீனவர்கள் காரணமின்றி இலங் கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் படுவதும், சித்ரவதைச் செய்யப்படுவதும், மீன வர்கள் குடும்பங்கள், குடும்பத் தலைவனை இழந்து, தந்தையை இழந்து பரிதவிக்கும் நிலையும் தொடர்கதையாகவே இருந்துள் ளன. அப்போதெல்லாம் இலங்கையில் உள் நாட்டுப் போர் நடந்து வந்ததால் கடலில் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவே, இலங்கை கடற்படை கடலில் எல்லை மீறிச் செல்லும் மீனவர்களையும் அடையாளம் தெரியாமல் சுட்டுவிடுகிறது என்று காரணம் கூறப்பட்டு வந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடி வுக்கு வந்து விட்டது. இனியாவது தமிழக மீன வர்களின் துயர வாழ்வுக்கு முடிவு ஏற்படும் என அனைவரும் நம்பினோம். ஆனால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் இறப்பதும், உடலுறுப்புகளை இழந்து குற்றுயிரும், குலை உயிருமாகத் திரும்புவதும் நின்றபாடில்லை. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குடும்ப உறுப்பினர் களுக்கு எதிராகச் சட்டப்படியான நடவடிக்கை வரும் சூழ்நிலையிலும், குடும்பத்தின ருக்கு மத்திய அமைச்சரவையில் விரும்பிய அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் போதும் மத்திய அரசுக்கு நெருக்கடியும், நிர்ப்பந்தமும் செலுத்த தயங்காத தமிழக முதல்வர், தங்கள் கட்சியும் பங்கேற்றுள்ள மத்திய அரசின் மெத்தனத்தால் மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்து, மீன வர்கள் குடும்பங்கள் துயரத்திற்கு உள்ளாகும் போதெல்லாம், மக்களின் கவனத்தைத் திசை திருப்ப பிரதமருக்குக் கடிதம் எழுதுவது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதுவது என்பதோடு தனது கடமை முடிந்து விட்டது என இருந்து விடுகிறார். மத்திய அரசு அதிகாரிகளும் இனி மேல் இத்தகைய தாக்குதல் சம்பவம் நடக் காது என்று சப்பைக்கட்டு கட்டி, தங்கள் கட மையை முடித்து விடுகின்றனர். ஆனால் துயரச் சம்பவங்களோ தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

ஏப்ரல் மாதம் 2 ம் தேதி, வழக்கம் போல் இராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். ஒரு படகில் அதன் உரிமையாளரும், மீன்பிடி தொழிலாளியுமான விக்டஸ் என்பவருடன் மாரி முத்து, அந்தோ ணிராஜ், ஜான்பால் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கின்றனர். சாதா ரணமாக அவர்கள் அனைவரும் மீன்களுடன் 3 ம் தேதி பகலில் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 3ம் தேதி வரை கரைக்கு வரவில்லை. மறுநாளும் வராததால் குடும் பத்தினர் பதட்டம் அடைகின்றனர். அவர் களும், அங்குள்ள பிற மீனவர்களும் காணா மல் போன மீனவர்களைத் தேடிச் செல்ல முற்படுகின்றனர். ஏதேனும் விபத்தினாலோ, அல்லது கடல் சீற்றத்தினாலோ கடலில் சிக்கியிருந்தால் அவர்களை மீட்டு வரலாம் என மீனவர்கள் கடலுக்குள் விரைகின்றனர். ஆனால் கடலில் ஒரு பகுதியே இந்திய கடல் எல்லை. கடல் சீற்றம், புயல் உட்பட ஏதேனும் காரணத்தால் எல்லைத் தாண்டினால் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று தான் தேட வேண்டும். ஆனால் அதற்கு அனுமதி பெறுவது என்பதே மிகவும் சிரமமான ஒன்று. தமிழக மீனவர் நல உதவி இயக்குநர் அலுவ லகத்தில் அனுமதி பெற்றாலும் இந்திய கட லோரக் காவல்படை அனுமதிப்பதில்லை. எல்லை தாண்டினால் இலங்கை கடற்படை யினரின் ரோந்து. அவர்களது துப்பாக்கியின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். காணாமல் போன மீனவர்களைத் தேடிச் செல்லவோ, அவர்களைக் கண்டுபிடித்துத் தரவோ இந் திய கடலோரக் காவல்படை எவ்வித உதவி யும் செய்வதில்லை என்று குமுறுகின்றனர் மீனவர்கள். ஒரு வாரம் கடந்த பின்னர் தான் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ஒரு தகவல் கிடைக்கிறது. இலங்கை டெல்ப் தீவின் அருகில் ஒரு உடல் கரை ஒதுங்கியதாகவும், அதனை அடையாளம் காண வேண்டும் என்றும் கூறப்பட்ட அடிப் படையில், ஒரு மீனவர் குழு இலங்கை செல் கிறது. ஆனால் அவர்கள் அங்கு சென்று அந்த உடலைக் காண்பதற்கு முன்னர் கடும் இடர்பாடுகள், சோதனைகள். இலங்கை கடற்படையினரின் கடுமையான நெருக்கு தல்கள். இதன் பின்னரே அந்த உடலைத் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. அந்த உடல் விக்டஸ் என்ற மீனவரின் உடல் தான் என்று அடையாளம் காணப்பட்டது. ஆனால் அந்த உடல் மிகவும் உருக்குலைந்து காணப் பட்டது. மேலும் கடுமையான காயங்களும் காணப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவர்களால் பிரேத பரிசோதனைச் செய்யப்பட்டு அங் கேயே இறுதிச் சடங்கு நடந்தது. பிரேத பரி சோதனை செய்த மருத்துவர்கள், சித்ர வதைச் செய்து, கொன்று கடலில் வீசப் பட்டிருக்க வேண்டும் என்று தங்களது அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதர மீனவர்கள் குறித்து தகவல் இல்லை. ஆனால் அங்கு சென்ற மீனவர்கள் அங்கு மேலும் 3 உடல்கள் இருப்பதாக பேசிக் கொண்டார்கள் என்றும், ஆனால் தாங்கள் கேட்ட போது மறுத்துவிட்டதாகவும் கூறு கின்றார், அங்கு சென்ற ராபின் என்ற மீனவர். 12ம் தேதி அந்தோணி ராஜ் என்பவரின் உடல் சோலியாக்குடியிலும், 14ம் தேதி ஜான்பால் என்பவரின் உடல் காசிப்பட்டினத்திலும் , ஏப்ரல் 16 ம் தேதி மாரிமுத்து என்ற மீனவரின் உடல் கோட்டைப்பட்டினத்திலும் கரை ஒதுங்கின. இந்த உடல்கள் அனைத்தும் கடு மையான சித்ரவதைக்கு உள்ளாகி உருக் குலைந்த நிலையில் தான் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இதில் மாரிமுத்து என்ப வரின் உடல் தலையில்லாமல் தான் கரை ஒதுங்கியுள்ளது.

இச்செய்திகள் வந்தவுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு மீனவர்களை இழந்த குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறவும், விபரங்களை அறிந்து வரவும் ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்தது. அந்த குழுவில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகம்மது, கோயம்புத்தூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர். அக்குழுவினருடன் மீன்பிடி தொழிலா ளர் சங்க (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் வழக் கறிஞர் செலஸ்டின், மாநில பொதுச் செய லாளர் கருணாநிதி, செயலாளர் எஸ். அந் தோணி, மாவட்ட செயலாளர் கருணா மூர்த்தி, கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சிவாஜி, முத்துராமு, இராமநாதபுரம் தாலுகா செயலாளர் கருணா கரன் உட்பட பல தோழர்கள் வந்திருந்தனர்.

முதலில் விக்டஸ் என்பவரின் வீட்டிற் குச் சென்றிருந்தோம். அவர் தான் படகின் உரிமையாளர். அவரும் மீன்பிடிதொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் தான் மற்ற மூன்று மீன்பிடி தொழிலாளர்களையும் அழைத்துச் சென்றவர். எனவே மீனவர்களைத் தேடும் பணியில் அவரது குடும்பத்தினரே ஈடுபட வேண்டி வந்தது. ரூ.10 லட்சத்திற்கும் அதிக மான மதிப்புள்ள படகு இது வரையிலும் கிடைக்கவில்லை. அது குறித்த எந்த தகவ லும் இல்லை. தேடும் பணியில் பல லட்சம் ரூபாயைச் செலவழித்துள்ளனர். அவரது மனைவி 30 வயது விங்கிஸ்டா துக்கத்தில் வாயடைத்து நின்றார். எதுவும் கூறும் நிலை யில் அவர் இல்லை. குடும்பத் தலைவரையும், வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த படகையும், பணத்தையும் இழந்து நிற்கிறது இந்தக் குடும்பம். அவருக்கு பெரில் எனும் 5 வயது பெண் குழந்தை உள்ளது. தந்தையை இழந்த சோகத்தைக் கூட புரிந்து கொள்ள இயலாத பருவம். அடுத்து ஜான்பால் வீட்டிற்குச் சென்றோம். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம். மனைவி ஜெனிஸ்டா கதறினார். அவருக்கு 8 முதல் 1 வயது வரையுள்ள நான்கு குழந்தைகள். இவர்களை எப்படி வளர்க்கப் போகிறேன் என்ற கதறல் அனைவரையும் கலங்கச் செய்தது. நாங்கள் அங்கு சென்ற போது ஒரு குழந்தை தரையில் அமர்ந்து, தங்கள் குடிசையின் முன் ஒரு குவளையில் வெறும் சாதத்தை அள்ளி சாப்பிட்டுக் கொண் டிருந்தது. கல்லையும் கரையச் செய்யும் காட்சி அது. ஜான்பால் உடல் ஆண் உறுப்பு இன்றியே கிடைத்ததாகக் கூறினர். அடுத்து அந்தோணி ராஜ் என்பவரின் வீட்டிற்குச் சென்றோம். அவரது மனைவி சாலியா 4 வயது மகள் ரெமிலாயுடன் கடும் சோகத்தில் உறைந்து கிடந்தார். ஆட்சியாளர்கள் அளித்த நிவார ணமோ, வேறு சிலர் வழங்கிய உதவியோ அந்த குடும்பங்களின் சோகத் துக்கு மருந்தா காது. இழப்புக்கு ஈடாகாது. மாறாக அனைத் தையும் இழந்து கையறு நிலையில் தான் இக் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கிக் கிடந்தன. 

சக மீனவர்கள் கூறிய சம்பவங்கள் மிகவும் பரிதாபம். நீண்ட காலமாக இத்தகைய தாக்குதல்களுக்கு மத்தியில் தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான மீன்பிடி தொழிலைச் செய்து வருகின்றனர். மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களுக்கு எவ் வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்து, மக்கள் மத்தியில் கோபமும், ஆத்திரமும் எழும் போது, ஏதோ சில நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறுவ தோடு சரி. எவ்வித உத்தரவாதமும் இல்லாத வாழ்க்கையைத் தான் அவர்கள் நடத்தி வரு கின்றனர். எனவே தான் கடலில் மீன்பிடிக் கச் செல்லும் மீனவர்களின் உயிருக்கு மத்திய-மாநில அரசுகள் உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் கடலோரக் காவல்படையும், இலங்கையில் உள்ள இந்தியதூதரகமும் இந்திய மீனவர்களுக்கு அனுசரணையான அணுகுமுறையைக் கையாள வேண்டும். படகை இழந்துள்ள குடும்பத்திற்கு அதற்கான உரிய இழப்பீட்டை வழங்குவதோடு, வருவாய் ஈட்டித் தந்த கணவரை இழந்து கைக்குழந்தைகளுடன் கண்ணீரில் கரைந்து வரும் இளம் விதவை களுக்கு அரசுப்பணி வழங்கப்பட வேண்டும். வெறும் வெத்து வேட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் வழக்கத் தைக் கைவிட்டு, மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் கண்ணீரை நிரந்தரமாகத் துடைக்கும் வகையில் உருப்படியான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

இன்றைய கார்ட்டூன்