சொன்னதைச் செய்தாரா கலைஞர்?

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களி லும் பரவி, படர்ந்து, விரிந்து, வளர்ந்துள்ள தொழில் நூற்பாலைத் தொழில் பஞ்சாலை.

ஏறத்தாழ 2400க்கும் மேற்பட்ட பஞ்சா லைகள், ஒன்றேமுக்கால் கோடி கதிர்கள், இந்திய நூல் உற்பத்தியில் 40சதவிகிதத்துக் கும் மேல்! தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமாராக 5 லட்சம்.

பஞ்சாலைகளில் பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் இரு பத்து நான்கு மணி நேரமும் ஓய்வு ஒழிச்சல் இன்றி பணிபுரிகின்றனர்.

5 லட்சம் தொழிலாளர்களில் 4 லட்சம் தொழிலாளர்கள் இளம் பெண்கள் - சிறுமியர். திருமணத் திட்டம் - சுமங்கலித் திட்டம் என்ற பெயரில், ஈவிரக்கமின்றி, கசக்கிப் பிழியப் படும் இளம் பிஞ்சுகள் - நவீன கொத்தடி மைகள்.

கூண்டில் அடைக்கப்பட்டவர்கள், நட மாட சுதந்திரமற்றவர்கள், நாள் முழுவதும் 24 மணி நேரமும் நிர்வாகத்தின் கட்டளைக் கேற்ப உழைக்கும் கொத்தடிமை கூலிகள்.

“உழைப்பாளர்க்கே உழைப்பவர்” என தேர்தலுக்கு தேர்தல் முழக்கமிடும் கலைஞர் அவர்கள் பஞ்சாலைகளில் உள்ள கொத்தடி மைகளை விடுவித்தாரா? அவர்கள் மீதான கொடும் உழைப்புச் சுரண்டல் மட்டுமல்ல, பாலியல் கொடுமைகளை, தடுத்தாரா?.... இல்லை....இல்லை என்பதுதான் பதில்!

கடந்த 21.6.2006ம் நாள் மாலையில், முதல்வர் கலைஞர் அவர்களோடு தமிழக பஞ்சாலைத் தொழிலாளர் மத்திய சங்க கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர் செ.குப்பு சாமி எம்.பி. (அன்று), பி.எம். குமார், ஏ. சுப்பி ரமணியன், எம்.ஆறுமுகம், ஜி.சீனிவாசன், ஏ.பழனிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித் தோம்.

அப்போது, திருமண உதவித் திட்டம், கேம்ப் கூலி முறை பற்றி விரிவான கோரிக்கை கொடுத்தோம்.

முதல்வர், “உடனடியாக இதன் மீது நட வடிக்கை எடுக்கிறேன்” என்றார் நிதி அமைச்சர் அன்பழகன் கோரிக்கையின் நியாயம் குறித்து, தான் ஆங்கில இதழில் கட்டுரை வாசித்தேன் என்றார்.

ஆண்டுகள் ஐந்து ஆகிவிட்டது. 60 மாதங் களாகியும் கேம்ப் கூலி முறையை அகற்று வதாக சொன்னாரே முதல்வர். செய்தாரா? பெண்கள் கேம்ப் கூலி முறை தமிழகத்தில் இல்லை என்று நெஞ்சறிய கூறுவாரா, கலைஞர்.

“சொன்னதை ஏன் செய்யவில்லை என் றால், அவரது அமைச்சர் ஐ. பெரியசாமி, தனது மருமகன் பெயரில் நவீன நூற்பாலை நடத்துகிறாரே! இன்னும் எத்தனை? ஆலை முதலாளிகளின் கொள்ளைலாபத்திற்கும் கொடும் சுரண்டலுக்கும் துணை போகும் திமுக ஆட்சி அகல வேண்டும், அகற்றப்பட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்க வேண் டும் என்பது கோரிக்கை.... பஞ்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம், முதல்வர் ஏற்றார். எதுவும் நடக்க வில்லை. கேம்ப் கூலி பெண் தொழிலாளர்கள் நிலை பற்றி சென்னை உயர்நீதிமன்றம் விசா ரித்து அளித்த தீர்ப்பில், அப்ரண்டீஸ் என்ற பெயரில், கேம்ப் கூலி, பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண் டும் என உத்தரவிட்டது.

திமுக அரசு பயிற்சியாளர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஊதிய ஆணையை நிர்ண யித்து ஆணை பிறப்பித்தது. அப்ரண்டீஸ் தொழிலாளர் - குறைந்தபட்ச ஊதியம் - காகி தத்தோடு உள்ளது. எந்த ஆலையும் செயல் படுத்தவில்லை.

“காகிதப் பூவானது அரசாணை... மணக்க வும் மலரவும் இல்லை... தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியம் நாளொன்றுக்கு ரூ.80/-100/- என்பதே!

பசியாலும், பட்டினியாலும் பரிதவிக்கும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் எதற்காக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்?

தொழில் ரீதியான ஊதிய உயர்வும், தொடராத பேச்சுவார்த்தைகளும்.....

மாண்புமிகு முதல்வரை சந்தித்த அதே நாளில், பல்லாண்டுகளாக இன்றுவரை 12 ஆண்டுகளுக்கு மேலாக பஞ்சாலைத் தொழி லாளர் தொழில் ரீதியான ஊதிய உயர்வைத்தர, பேசித் தீர்வுகாண ஆலை அதிபர்கள் மறுக் கிறார்கள். முதல்வர்தான் இந்த பிரச்சனை யில் தலையிட்டு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றோம்.

முதல்வர், “தானே தலையிட்டு மூன்று மாதங்களில் தீர்வு ஏற்படுத்தித் தருவதாக கூறினார். ஐந்து ஆண்டுகள், 60 மாதங்கள், 800 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் முதல்வர் நாட்காட்டியில் இன்னும் 21.6.2006 முதல் மூன்று மாதங்கள் ஆகவில்லை. அவரது அலு வலக கடிகார முட்கள் நகர மறுக்கிறது... ஏன்?

ஆலை அரசர்கள் லாபத்தை பாதுகாக்கும் இன்றைய முதல்வருக்கு, ஏழைகள் படும் பாட்டை எடுத்துச்சொல்லி, தனது வாழ்வை, தனது குடும்ப வாழ்வை சொகுசாக்கிக் கொண்டவருக்கு, பஞ்சைத் தின்று வாழும் 5 லட்சம் தொழிலாளர்களின் பட்டினியும், வேத னையும், பராதியாய் வாழும் நிலை தெரியாமல் போனதில் வியப்பில்லை. தொன்னூறு நாட்கள், மூன்று மாதங்களில் முடிப்பேன் என்று சொன்னாரே.... செய்தாரா? கலைஞர்.

பஞ்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர் கள் இல்லை. பயிற்சியாளர்களே உள்ளனர். கடும் சுரண்டல் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க இதோ சட்டமன்றத்தில் சட்டம் என்றார்கள். பின்னர்... பஞ்சாலைகளில் மட்டு மல்ல, அனைத்து தொழிலிலும் பரவும் இந்த விஷப் போக்கை நிறுத்துகிறோம் என்றார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.5.2008ல் எல்.ஏ.பில் 47 டீகு 2008 என்ற சட்டமுன் வடிவு தொழிலியல் வேலைவாய்ப்பு (நிலை ஆணை கள்) தமிழ்நாடு திருத்த சட்டம் 2008ல் ஒரு மனதாக நிறைவேறியது.

மூன்று ஆண்டுகள் முழுதாய் ஓடிவிட் டது. சட்டம் செயலாகவில்லை. அமலாக வில்லை... சட்டமன்றத்தில் உரத்த குரலில் சொன்னாரே கலைஞர்... செய்தாரா? செய்ய வில்லை....ஏன்? ஆலை அதிபர்களாக வலம் வரும் அமைச்சர்கள்... ஆட்சியை, அதிகாரி களை, அதிகாரத்தை, சட்டத்தை வளைக்கும் திறமை பெற்ற முதலாளிகள் முன்னால்... கலைஞர் என்ன ஆனார்... ஏன் சொன்னதை மட்டுமல்ல; சட்டமன்றம் நிறைவேற்றிய தைக் கூட, ஆட்சியிருந்தும், அதிகாரமிருந் தும் அந்த சட்டம் தானாகவே... மரணக்குழி நோக்கி பயணிக்கச் செய்த மர்மம் என்ன? கலைஞர் விளக்குவாரா? சொன்னதை செய் யாதது மட்டுமல்ல, சொல்லாமலே இந்த சட்ட மன்றம் நிறைவேற்றியதையும் சாகடித்த பெருமை யாருக்கு?

இடைக்கால நிவாரண ஊதியமும்...

2001ம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக ஆட்சியின் போது தொழிற் ரீதியான ஊழியர் கோரிக்கைக்கு இணக்கமான தீர்வுகாண ஆலை அதிபர்கள் மறுத்தபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் உள்ள 5 லட்சம் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 225/-ம், 250/-ம் இடைக்கால நிவாரண ஊதியமாக உத்தரவிட் டார்கள். ஆலை அதிபர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர்... ஆலை அதிபர்கள் ரிட்மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

திமுக அரசு, இடைக்கால நிவாரணம் வழங்கிட, 5 லட்சம் பஞ்சாலைத் தொழிலாளர் கள் பயன்பெற எந்தவொரு சிறு நடவடிக் கையாவது எடுத்ததா? இல்லை... இல்லை... இல்லை.

ஏன்? இவர்களே பினாமிகள் பெயரில் ஆலை அதிபர்கள்... அமைச்சர்கள் “பேயரசு செய்கிறது...பிணந்திண்ணிகள் சாத்திரம் சொல்கிறார்கள்” என்றால் மிகையாகாது.

மின்வெட்டும் - ஜவுளித் தொழில் பாதிப்பும்

தமிழகத்தில் மின்வெட்டு புதிதல்ல. திமுக ஆட்சியின் நிரந்தர சின்னம்.

நூற்பாலைகளில் 24 மணி நேரத்தில் 4 மணி நேரம் `பீக் அவர்ஸ்’ என்ற பெயரால் மின் தடை. மேலும் மேலும் 3 மணி நேரம் `சட் டவுன்’ என்ற பெயரால் மின் சப்ளை கிடையாது. ஆக மீதமுள்ள 17 மணி நேரத்தில் இன்று முதல் 30 சதவிகித மின்வெட்டு. ஆக 5 மணி நேரம் 10 நிமிடம் போனால் மீதமிருப்பது, 12 மணி நேரம்.

இதனால் உற்பத்தி இழப்பு 50 சதவிகிதம், தொழிலாளர் வேலை இழப்பு 50 சதவிகிதம், பொருளாதார வர்த்தக இழப்புகள் என ஏராளம்.

ஆனால் இந்த மின்வெட்டு, சென்னை யைச் சுற்றியுள்ள அந்நிய முதலாளிகளின் ஆலைகளுக்கு உண்டா? இல்லை... ஏன் இல்லை... அவர்களுக்கு இவர்கள் செல்லப் பிள்ளைகள் என்பதாலா?

சொந்த உள்நாட்டு பஞ்சாலை, விசைத் தறி, பனியன், கைத்தறி தொழிலை அழித்து விட்டு, அல்லலுக்கு ஆளாக்கிவிட்டு, “வந் தாரை வாழவைக்கும்” தமிழகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது திமுக ஆட்சி.

தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை உண்டா? கோரிக்கைகளுக்காக அமைதியான அறவழியில் இயக்கம் நடத்த உரிமை உண்டா? தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம் பல்லாண்டுகளாக பரிசீலனையில்; மீளாத் தூக்கத்தில் மெரினாவில் புதையுண்டு கிடக்கிறது திமுக ஆட்சியில்!

மீண்டு எழுமா...தொழிலாளர் உரிமை?

“ஏன் என்றால் சிறை! எதற்கு என்றால் கைவிலங்கு!”

அதற்கு மேல் பொய் வழக்கு...

இந்த நிலை நீடிக்கவா... தொழிலாளி வர்க்கம் வாக்களிக்க வேண்டும்!

அந்தோ என்று வீழ வேண்டிய கொடுங் கோல் ஆட்சி திமுக...

அதனை கோடிக்கால் பூதமென தொழி லாளர்கள் வீழ்த்துவார்கள்.

இன்றைய கார்ட்டூன்