“செப்படி வித்தைகள்” கண்டு ஆசிரியர்கள் ஏமாறமாட்டார்கள்!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘அரசியல் களம்’ சூடு பிடித்துள்ளது.

‘கருத்துக் கணிப்புகள்’ மக்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

‘செப்படி வித்தைகள்’ செய்யும் வேலையும் தொடங்கியுள்ளது.

உண்மை, துணிவு, உறுதி என்று தன்னை பறைசாற்றிக் கொள்ளும் வாரஇதழ் ஒன்று ‘கற்பனை பேட்டி’ ஒன்றை உருவாக்கி தன் மனதிலுள்ள கருத்தை கொட்டியுள்ளது. இதற்கான காரணங்கள் உண்டு.

வாக்குவங்கி

தமிழ்நாட்டில் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 12 இலட் சம். ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 3 இலட்சம். இவர்களது குடும்ப உறுப் பினர்களின் எண்ணிக்கையில் வாக் காளர்கள் சற்றேறக்குறைய 1 கோடி. அதனால்தான் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் ‘மன நிலை’ என்று கற் பனைப் பேட்டிகள் வலம் வருகின்றன.

அகவிலைப்படி முடக்கமும், ஊதிய வீழ்ச்சியும்

1957-58ம் ஆண்டுகளில் தமிழ் நாட்டிலுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அகில இந்திய சராசரி யைவிட 30 சதவீதம் அதிக ஊதியம் பெற்றிருந்தார்கள். ஆனால் 1985 இல் இந்த விகிதம் தலைகீழாக மாறியது. அகில இந்திய சராசரியைவிட தமிழக ஆசிரியர்களின் ஊதியம் 25 சதவீதம் குறைவாக அமைந்தது. மத்திய அரசு நியமித்த சவாண் தலைமையிலான எட்டாவது நிதிக்குழு தெரிவித்த தகவல் இது. காரணம் என்ன? 1973ம் ஆண்டில் பெரும்பான்மை பலத்துடன் அமைந்த அன்றைய திமுக அரசு, ஆசிரியர்கள்-அரசு ஊழி யர்களுக்கு வழங்கவேண்டிய அக விலைப்படி உயர்வை, 8 தவணைகள் முடக்கியதன் எதிரொலிதான் இந்த ஊதிய வீழ்ச்சிக்கான காரணம். தங் களது உரிமை இழப்பை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியாகும். 1985 இல் ஜேக்டீ, 1988ல் ஜேக்டீ பேரமைப்பு நடத்திய போராட்டத்தின் விளைவே இன்று தமிழக ஆசிரியர்களும் அரசு ஊழியர் களும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைப் பெற்று வருகின்றனர்.

மத்திய அரசின் 5-வது ஊதியக்குழு

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 5-வது ஊதியக்குழு, தனது பரிந்துரை யை 1996-ம் ஆண்டு வெளியிட்டது. மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிதி அமைச்சராக பதவி வகித்தவர். “செட்டி நாட்டு அரசர்” ப.சிதம்பரம் ஊதியக்குழு வின் பரிந்துரையை அமல்படுத்தி னால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றும், அதனால் பரிந்துரைகளை முழுமையாக ஏற்க முடியாது என்றும் கூறினார். அமைச்சரவைக் கூட்டத் தில் பங்கேற்காது. காரைக்குடியில் வந்து அமர்ந்து கொண்டார். இடது சாரிக்கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அதுசமயம் ப.சிதம்பரம் உதிர்த்த வாசகம் இது தான்-“குரங்குகளுக்கு வேர்க்கட லையை விட்டெறியுங்கள்”.

தமிழ்நாட்டின் அன்றைய முதல்வர் கலைஞர், ஊதியக்குழு பரிந்துரை வெளியானவுடன் தமிழக அரசு, “எள் அளவும், எள் முனையளவும் குறையா மல் ஊதியத்தை வழங்கும்” என தெரி வித்தார். ஆனால் நடந்தது வேறு. இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ரூ.4500 க்கு பதிலாக ரூ.4000 என ஆணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப- நடு நிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் ஒன்றிணைந்து “டிட்டோஜேக்” என்ற அமைப்பை உரு வாக்கி பலகட்டப்போராட்டங்கள் நடத்தி, இறுதியில் சென்னையில் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு கைதான பிறகே கோரிக்கை ஏற்கப்பட்டது.

ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம்

சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர் கள், வல்லுநர்கள், தலைவர்கள், கலை ஞர்கள், படைப்பாளிகள், உழைப்பாளி கள் என ஒரு சமூகம் பூத்துக்குலுங்க கடைக்கால் அமைப்பது ஆரம்பக்கல் வியே! அதில் ஏற்படும் ஊனமும், காட் டப்படும் அலட்சியமும் இன்றைய பிரச் சனை மட்டுமல்ல, நாளைய சமூகப் பிரச்சனையாகும். தொலைநோக்கு பார்வை கொண்ட கடந்த கால தலை வர்கள் குக்கிராமங்களுக்கெல்லாம் ஆரம்பக்கல்வியை அமல்படுத்தினார் கள். ஆனால் 1998 ம் ஆண்டு அர சாணை 525ன் மூலம் ஆசிரியர்-மாண வர் விகிதாச்சாரம் 1:20 என்பதிலிருந்து 1:40 ஆக உயர்த்தப்பட்டது. அதன் விளைவாக 60 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஆசிரியர் பணியிடங்கள் குறைக் கப்பட்டன. 5 ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளில் 60 சதவீத பள்ளிகள் ஈரா சிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளாக மாறின. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி தனிச்சங்க நடவடிக்கையாக ஆணை எரிப்பு போராட்டத்தை மேற் கொண்டதன் விளைவாக 2000ம் ஆண்டில் சென்னை நேரு விளையாட் டரங்கில் நடைபெற்ற ‘டிட்டோஜேக்‘ மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதல்வரி டம்தான் கோரிக்கைகள் வைப்பார்கள். மாநாட்டில் கலந்து கொண்ட அன்றைய முதல்வர் கலைஞர், ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கைகளோடு வந்துள்ளீர் கள்; வெறுங்கையோடு திரும்ப வேண் டாம்; நம்பிக்கையோடு திரும்புங்கள் என்று தன் சொற்புலமையை வெளிப் படுத்தி, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்பொழுது கோரிக்கை நிறைவேற் றப்படும் எனக் கூறினார். இன்றளவும் ஆசிரியர், மாணவர் விகிதம் மாற்றிய மைக்கப்படவில்லை.

கரடிகளிடமும் காளைகளிடமும் ஓய்வூதிய நிதி

ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா வினை சட்டமாக்குவதற்கு 22.01.2007 அன்று மாநில முதல்வர்களின் மாநாட் டினை கூட்டி பிரதமர் மன்மோகன்சிங் ஆதரவு திரட்டினார். இம்மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் “தற்போது ஓய்வூதியம் வழங்கி வரும் நடைமுறையில் மத்திய, மாநில அரசு கள் பெரும் நிதிச்சுமையை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. எனவே தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண் டும் என்று ஆதரவு கோரினார். இம்மா நாட்டில் பங்கேற்ற மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா முதலமைச் சர்கள் ஓய்வூதியத்தை தனியார் மய மாக்கப்படுவதை எதிர்த்தனர். தமிழ் நாட்டின் சார்பில் பங்கேற்ற கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, கருத் தொற்றுமை அடிப்படையில் முடி வெடுக்கலாம் என்று மாநாட்டில் கூறி விட்டு, சென்னையில் பத்திரிகையாளர் களிடம் “தி.மு.க அரசு எதிர்க்கிறது” என பேட்டியளித்தார். ஒய்வூதியத் திற்கு ஓய்வு கொடுக்கும் மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் திமுகவின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு விட்டது.

வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்

மத்திய அரசின் ஆறாவது ஊதியக்குழு இடைநிலை ஆசிரியர் களுக்கு ரூ.9300+தர ஊதியம், ரூ.4200 ஆக ரூ.13,500 என நிர்ணயம் செய்தது. தமிழ்நாட்டில் தி.மு.க அரசால் ரூ.5200, ரூ.2800 என நிர்ணயம் செய்யப்பட்டது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்டத்தால் “டிட் டோஜேக்;” உருவாகி போராட்டத்திற்கு பின் ரூ.5200, ரூ.2800+தனி ஊதியம் ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுநிலை சிறப்புநிலைக்கு தனி ஊதிய விகிதங்கள் இல்லை. இடை நிலை ஆசிரியர்கள் மாதந்தோறும் ரூ. 8000க்கு மேல் இழந்து வருகிறார்கள். சுதந்திர தின உரையில் தமிழக முதல் வர் “எள் அளவும் எள் முனைஅளவும்” குறையாமல் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார். சொன்னது ஒன்று! செய்தது ஒன்று! வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மன நிலை கொதிநிலையில் உள்ளது.

சாய்மானங்கள் முடிவு செய்வ தில்லை! கொதிநிலைகள்தான் முடிவு செய்யும் !!

கட்டுரையாளர், முன்னாள் பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

இன்றைய கார்ட்டூன்