காங்கிரஸ் ‘ஐந்தாம் தர டீ’ போன்றது!

“காங்கிரஸ் ‘ஐந்தாம் தர’ டீ போன் றது”. இது விசித்திரமான தலைப்பாகத் தோன்ற லாம். காங்கிரஸ் கட்சி பற்றி மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் எப்பொழுதுமே குறை சொல் பவர்கள் தான்! ஆனால் காங்கிரஸை இவ்வ ளவு மோசமானதாக வர்ணித்த சிறப்புக்குரிய வர்கள் இடதுசாரிகள் அல்ல. கலைஞர் நாள் தோறும் பேச்சிலும், எழுத்திலும் யாரைத் தன் னுடைய ஆசான் என்று குறிப்பிடுகிறாரோ, அந்த ஆசான் தான், அதாவது திமுக தலை வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் காங் கிரஸைப் பற்றி 1.2.1962 ல் ‘நம் நாடு’ இதழில் வெளிவந்த தனது உரைக்கு இந்தத் தலைப் பைக் கொடுத்திருக்கிறார்!

ஆனால் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப் பேற்ற கலைஞர் 1971ல் இருந்து தன்னு டைய உயிரி னும் மேலான தோழமைக் கட்சியாக காங்கிர ஸைக் கருதி வருகிறார். மத்தியில் ஆட்சி சுகம் கிடைப்பதற்காக, ‘அண்ணா வழிதான் என் வழி!’ என்று சொல்லிக் கொண்டே, “மத் தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று முழங்கிக் கொண்டே, அதற்கு நேரெதி ரான காங்கிரஸ் கட்சியின் தொண்டரடிப் பொடி யாழ்வாராக மாறி, இன்று மாநிலத்தில் கூட்டாட்சி என்ற இடத்திற்கு காங்கிரசைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

இதுவரை மற்றவர்களைத் திணறடித் துக் கொண்டிருந்த திமுக இந்த முறை காங்கிர சிடம் சிக்கிக் கொண்டது. திமுகவையும், அதன் தலைவரையும் காங்கிரஸ் திணறடித்துத் திக்குமுக்காடச் செய்து கொண்டிருக்கிறது.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன் றுக்கு அளித்த பேட்டியில் கலைஞர், ‘தமிழ்நாட்டு மக்களும், மற்றவர்களும் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தான் கருது வார்கள் என எண்ணு கிறேன். ஒருவேளை ‘ஓட்டுப் போடும் முறை’ என்று சொல்வார் களே அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் ஒரு அரசு நிலைத் திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்!’ என்று சொல்லியிருக்கிறார்.

அடடா, என்ன நெளிவு, என்ன சுளிவு! 119 தொகுதியில் போட்டிப் போட்டு தனியாட்சிக்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிந்தும் கூட அப்படி ஒரு தனியாட்சி அதிமுக தலைமை யில் தான் ஏற்படப் போகிறது என்பதைப் புரிந் திருந்தும் கூட இப்படிச் சொல்கிறார். இவ்வள வுக்கும் காரணம், அண்ணா, காங்கிரஸைப் புரிந்திருந்த புரிதல் என்பது வேறுஇ கலை ஞரின் பாதை வேறு. இது அண்ணாவின் பாதையே அல்ல. இது திமுகவுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்திய பாதை. இன்னும் பாதகங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாதையில்தான் 1971ல் இருந்து இன்று வரை கலைஞர் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

சரி, அண்ணா அப்படி என்னதான் காங் கிரசைப் பற்றிச் சொன்னார்.

“.. ‘டீ’ கடைக்குப் போய் ‘டீ’ கேட்ட தும் கடைக்காரன், புதிய தேயிலையாய்ப் போட்டு கொதிநீரை ஊற்றி ‘டிக்காஷ னை’ இறக்கி அதில் பாலும், சர்க்கரையும் கலந்து டீயாகத் தருகிறான். அதை வாங்கிக் குடித்ததும், உண் மையிலேயே ஒரு சுறுசுறுப்பு - விறுவிறுப்பு ஏற்படுகிறது. பாட நினைப்பவர்களைப் பாடத் தூண்டுகிறது. எழுத நினைப்பவர்களை எழுதத் தூண்டுகிறது. இன்னும் சிலர் தூக் கத் தில் நோக்கம் உள்ளவர்கள் - அந்த டீயைக் குடித்துத் தூங்கவும் செய்கிறார்கள். இது முதல் டீயின் பலன்.

மூன்றாவது வந்து டீயைக் குடிப்பவன் அதில் ருசி இருக்காததைக் காண்பான். அதில் ஒரு முடக்குக் குடித்து விட்டு ‘இது டீயா?’ என்று இவன் கேட்க, ‘நீ கொடுக் கும் காசைக் குப்பையிலே போடு’ என்று அவன் சொல்ல, இப்படி மூன்றாவது டீயிலேயே சண்டை வந்துவிடும்.

நான்காவது, ஐந்தாவது டீயில் சுவையே இருக்காது - சக்கைதான் இருக்கும். குப்பை யில் கொண்டுபோய்க் கொட்டக் கூடியதாக இருக்குமே ஒழிய, குடிப்பதற்கு ஏற்றதாகாது. அப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் இன் றைய காங்கிரஸ் ஐந்தாவது டீயைப் போன்றதாகும்.

முதல் கப் டீ காந்தியார் தயாரித்து அதைப் பருகியதும், மோதிலால் நேருவுக்கு நாட்டு விடுதலை மீது நாட்டம் வந்தது. வ.உ.சிதம் பரனாருக்குச் செக்கிழுக்கத் தோன்றியது. திருப்பூர் குமரனுக்குக் கொடிக்காக உயிர்விட உறுதி வந்தது.

இரண்டாவது கப் டீயைக் காங்கிரஸ் தயா ரித்தபோது, மயிலை சீனிவாச அய் யங்கார், கோபாலரத்தினம், சத்தியமூர்த்தி அருந்திப் பணியாற்றினர்.

மூன்றாவது கப் டீ தயாரித்தபோது, சில சில நேரங்களில் மட்டும் தியாகம் செய்யக் கூடியவர்களே உண்டானார்கள்.

நான்காவது கப் டீ தயாரிக்கப்பட்ட நேரத் தில் கட்சிக் கூட்டங்களுக்குக் கதர்ச்சட்டையும், விருந்து வைபவத்திற்கு சில்க் சட்டையும் ஆக இரண்டு விதச் சட்டைகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் காங்கிரசில் சேர்ந்தார்கள்.

ஐந்தாவது கப் டீயாகிய இன்றைய காங் கிரசு சத்து போய் - சாறு போய் - குப்பைக்குப் போக வேண்டிய நிலையில் இருக்கிறது. (நம் நாடு’ 1.2.1962).

இப்போது புரிகிறதா ஐந்தாவது கப் டீ என் றால் என்ன என்பது? அதுவும் 1962லேயே அண்ணா அவர்கள் குப்பைக்குப் போக வேண்டிய சக்கை என்ற சொன்ன அந்த காங் கிரஸ் இந்த ஐம்பது ஆண்டுகளில் என்ன கதிக்கு ஆளாகியிருக்கிறது தெரியுமா?

1975ல் அவசரக்காலக் கொடுமையை நிகழ்த்தி, ராஜீவ்காந்தி காலத்தில் போபர்ஸ் பீரங்கி ஊழல் செய்து, நரசிம்ம ராவ் காலத்தில் ஊறுகாய் வியாபாரி லக்குபாய் பதக் ஊழல், சுக்ராம் ஈடுபட்ட பழைய தொலைத்தொடர்பு ஊழல், ஹவாலா ஊழலில் பிரதமருக்கே கோடி கள் கொடுத்ததாக ஹர்ஷத்மேத்தா சொல் லும் அளவுக்கு வெட்கித் தலைகுனிய வைத்த ஊழல் என புதிய, புதிய பரிமா ணங் களைத் தொட்டு, இன்று ஊழல்க ளின் உச்சக்கட்டமாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன் வெல்த் ஊழல், விண்வெளித் துறை அலைக் கற்றை முறைகேடாக விற்பனை செய்ததில் ஊழல் என அழுகி நாற்றமெடுக்கும் நிலைக் குச் சென்றுவிட்டது.

காந்தியார் தயாரித்த முதல் தர டீயைப் பருகி மோதிலால் நேரு நாட்டு விடுத லைக்கு நாட்டம் கொண்டார் என்றால், இன்று சொந்த மனைவியின் பெயரில் தொகுதியைப் பெற்று மோசடியாக வேட்பாளராக மாறிய தங்கபாலுவில் வந்து நிற்கிறது காங்கிரஸ்! இன்று அவரோடு கை கோர்க்கிறார் கலைஞர்.

அமரர் அண்ணா அவர்களே இன்று இருந்திருப்பாரானால் ‘ஐந்தாம் தர டீ’ என்று சொன்னதை மாற்றி ‘ஐம்பதாம் தர டீ’ என்று சொல்லி இருப்பார். அதாவது சக்கை மக்கிப் போய் மண்ணாகி விட்டது என்றும் விளக்கம் கொடுத்திருப்பார்!

அந்த அண்ணாவின் பாதையில் தொடர்ந்து செல்வதில் கலைஞருக்கு ஏற்பட்ட தடுமாற் றம் இன்று திமுகவையும் ‘ஐந்தாம் தர டீ’யாக மாற்றி விட்டது!

இன்றைய கார்ட்டூன்