ஆட்சி மாற்றமும்! விலைவாசி உயர்வும்!

1967-ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முதன்மையான காரணங்களில் விலைவாசி உயர்வும் ஒன்றாகும். 1964-ல் தமிழ்நாட்டில் உண வுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற் றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வை முன்வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி’ ‘காமராஜ் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி’ ‘கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண் டடிப்பட்டு செத்தான் அத்தான்’ ‘கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தோற்று, திமுக வெற்றியும் பெற்றது. ஆனால் இன்று அதே திமுக அதே காங்கிரஸமூடன் கூட்டணி சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வை நியா யப்படுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அன் பழகன் விலைவாசி ஏற்றத்திற்கு ஆட்சி யாளர்கள் பொறுப்பில்லை என்றும், பூகம் பம், வெள்ளம் வருவதைப் போன்றுதான் விலைவாசி உயர்வும் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார்.

முன் எப்பொழுதும் கண்டிராத விலை வாசி உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு இன்று ஆளாகியுள்ளனர். திமுக, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவதாக சொல் லிக்கொண்டாலும் 100 ரூபாய்க்கு பருப்பு விற்பதையும், சர்க்கரை, சமையல் எண் ணெய் போன்ற உணவுபொருட்களின் விலை யானை விலைக்கு விற்பதையும்; மறைக்க முடியாது. ஏன் வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது? எப்படி விலை குறைக்கப்பட்டது? இடையில் கொழுத்த இலாபம் யார் பெற்றது? என்பதை நாடே அறியும். வெளிநாடுகளுக்கு வெங்காயத் தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்த தும், மாடுகள் ஓடிய பிறகு பட்டியை சாத் தியதும், திமுக பங்கேற்றுள்ள, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் என்பதை அனைவரும் அறிவார்கள்..

விலைவாசி உயர்விற்கு மூல காரண மாக உள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். அதை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசில் திமுக பங்கேற்றுள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள நிறுவனங்களுக்கே அதிகாரத்தை வழங் கும்போது, அதற்கு ஆமாம் போட்ட திமுக, இதுவரை மவுனமாக இருந்துவிட்டு, இனி விலைவாசியை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தப் போகிறதாம்!

தற்போது திமுக தேர்தல் அறிக்கை யில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந் தால் (!) விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் ஊகவணிகத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. யார் மத்திய அரசில் ஆட்சி செய்வது? யார் யாரை வலியுறுத்துவது? தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் ஏமாந்து விடுவார்கள் என திமுக தப்புக்கணக்கு போடுகிறது. சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டு கேட்டு காங்கிரஸ் கட்சி திமுகவை வற்புறுத்தினால், மத்திய அரசிலிருந்து விலகி விடுவோம் என மிரட்டும் திமுக, ஏன் ஊக வணிகத்தை தடை செய்யா விட்டால் ஆட்சியிலிருந்து விலகிவிடு வோம் என மிரட்டக்கூடாது ? தமிழ் நாட்டு மக்கள் எதையும் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில்தானே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக, மத்திய அரசை வலியுறுத்துவோம் என வெற்று வாக்குறுதியை தந்துள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மற்றொரு வேடிக்கை, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை திமுக வலியுறுத் தப் போகிறதாம். பட்டிதொட்டிகளிலெல் லாம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சில் லரை வர்த்தகத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அப்பளம் முதல் குடிக்கும் நீர் வரை அந்நியநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு இனி அந்நிய முதலீடுகளை எதிர்க்கப்போகிற தாம். கேட்பவர்கள் இ-னா வா-னாவாக இருந்தால் இதையும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணத் தை தேர்தலுக்கு தேர்தல் சத்தம் போடா மல் குறைத்துவிட்டு, தேர்தல் முடிந்த வுடன் வினோதமான பெயர்களை பேருந்துகளுக்கு சூட்டி கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் பணம் பறிக்கும் திமுக அரசின் நயவஞ்சகத்தனம் அம் பலப்பட்டுவிட்டது. இனியம் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.

நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற ஆசைக் கனவை தகர்த்தது திமுக ஆட்சி அல்லவா? செங்கல் விலை மூன்று மடங்காகவும், கம்பி விலை குதிரை விலையாகவும் யார் ஆட்சியில் உயர்ந்தது? மணல் விலை மலையாக உயர்ந்ததற்கும் யார் காரணம்? ஆற்றில் மணல் எடுத்து கோடி கோடியாக பணம் சேர்த்தவர்களின் பின்னால் யார் உள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துவிட்டார்கள் போலும். கட்டுமானப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததால் பாதியில் நின்று போன வீடுகள் இன்று திமுக ஆட்சியின் அவலத்தை பறைசாற்றிக்கொண்டுள் ளன. இதனால் வேலைவாய்ப்பை இழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும் பங்கள் பட்டினியால் வாடிக்கொண்டுள் ளன. ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட அவர்கள் காத்துக்கொண்டுள் ளனர்.

மத்திய அரசின் கொள்கையால், மாநில அரசின் கண்டும் காணாதப் போக் கால், இன்று நூல் விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நூல் வியாபாரிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பங் கள் இன்று நடுத்தெருவிற்கு வந்துவிட் டன. விசைத்தறி உரிமையாளர்கள் வங்கி யில் வாங்கிய கடனை கட்ட முடியால் பரி தவிக்கின்றனர். விசைத்தறி தொழி லாளர்கள், ஷிப்ட் குறைக்கப்பட்டு அரை வயிற்று கஞ்சிக்கு ஆளாய் பறந்துகொண் டுள்ளனர். போதாக்குறைக்கு தமிழக அரசின் மின்வெட்டு காரணமாக பஞ்சா லைகளும் விசைத்தறிகளும் விழி பிதுங்கி விக்கித்து நிற்கின்றன. இதுதான் திமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனையாகும்,

யார் சென்றாலும் வேலை கிடைக்கும் என்ற தமிழகத்தின் மான்செஸ்டர் திருப்பூர் இன்று சோகக் கடலில் மூழ்கிக் கிடப்பதற்கு யார் காரணம்? சாயப்பட் டறை கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத் தை பொறுப்பற்ற முறையில் தமிழக அரசு அணுகிய காரணத்தால் இன்று இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழந்து வாடிக்கொண்டுள்ளனர். சிறு தொழில் நிறுவன உரிமையாளர்களிலி ருந்து பெரும் தொழில்நிறுவன உரிமை யாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று திருப்பூர் தொகுதியில் நூற்றுக் கணக்கானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளனர். திருப்பூரின் இன்றைய அவலநிலைக்கு காரணமான மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு மக்கள் தக்க தீர்ப்பு எழுத காத்துக் கொண்டுள்ளனர்.

எல்லா பொருட்களின் விலையும் உயரும். ஆனால் பால் கொள்முதல் விலை மட்டும் ஏன் உயராது? பால் கொள்முதல் விலை உயர்வு கேட்டுப் போராடிய பால் உற்பத்தியாளர்களை, எங்களுக்கும் போராட்டம் நடத்த தெரியும் என மிரட்டியவர்தான் இன்று வாக்கு கேட்டு தமிழக மக்கள் மத்தியில் வலம் வந்துகொண்டுள்ளார்.

எந்த விலைவாசியை வைத்து 1967ல் திமுக காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதோ அதே விலைவாசி உயர்வு இன்று திமுக-காங்கிரஸ் கூட் டணியை வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய கார்ட்டூன்