சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு

திருச்சி,மார்ச்.22-

திருச்சியில் நடைபெற்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர் கள் பட்டியலை மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகளில் போட் டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களைத் தேர்ந்தெடுப்பதற்காக திருச்சிராப்பள்ளியில் மாவட் டக்குழு அலுவலகத்தில் செவ்வாயன்று மாநிலக்குழுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம். என்.எஸ்.வெங்கட்டராமன் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மத்தியக் குழு உறுப்பினர்கள் ஆர்.உமாநாத், என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சட்டமன்றத்தேர்தலில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12 வேட்பாளர்கள் பட்டி யலை . கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலில் கடந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப் பினர்களாக இருந்த எஸ்.கே.மகேந் திரன், என்.நன்மாறன் ஆகியோர் விடு விக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள கே.பாலபாரதி, பி.டில்லிபாபு, ஆர். லீமாறோஸ் ஆகிய மூன்று பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள் ளது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கள் 12 பேரில் 8 பேர் பட்டதாரிகள் ஆவார்கள். 1 வழக்கறிஞர், 4 மாநில செயற்குழு உறுப்பினர்களும்,4 மாவட்டச் செயலாளர்களும் இத்தேர் தலில் போட்டியிடுகின்றனர். மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட் டுள்ள 12 வேட்பாளர்களும் மக்கள் நலனுக்காக பல போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைசென்றவர் கள் ஆவார்கள். 12 தொகுதிகளில் 3 தனித்தொகுதிகளாகும். மதுரவாயல் பொதுத்தொகுதியில் தலித் வேட் பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியுள்ளது.

பெரம்பூர் அ.சவுந்தரராசன்

மாநில செயற்குழு உறுப்பினர்

சிதம்பரம் கே.பாலகிருஷ்ணன்

மாநில செயற்குழு உறுப்பினர்

திருப்பூர்(தெற்கு) கே.தங்கவேல்

மாநில செயற்குழு உறுப்பினர்

பெரியகுளம்(தனி) ஏ.லாசர் மாநில செயற்குழு உறுப்பினர்

திண்டுக்கல் கே.பாலபாரதி

மாநிலக்குழு உறுப்பினர்

அரூர்(தனி) பி.டில்லிபாபு

தர்மபுரி மாவட்டச்செயலாளர்

விளவங்கோடு ஆர்.லீமாறோஸ்

குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்

விக்கிரவாண்டி ஆர்.ராமமூர்த்தி

மாநிலக்குழு உறுப்பினர்

பாளையங்கோட்டை வீ.பழனி

நெல்லை மாவட்டச்செயலாளர்

மதுரை (தெற்கு) இரா.அண்ணாதுரை

மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர்

மதுரவாயல் க.பீம்ராவ்

தென்சென்னை மாவட்டச் செயலாளர்

கீழ்வேளூர்(தனி) நாகை மாலி(எ) வி.பி.மகாலிங்கம் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்

இன்றைய கார்ட்டூன்